Skip to main content

விடை 3519

இன்றைய வெடி:
பைத்தியம் பலகூறுகளாக்கி ஒரு ஸ்வரத்தை நீக்கியது (3)

இதற்கான விடை:  பித்து =  பி (ரி) த்து 

(விடையளித்தோர் பட்டியல் 10 மணி வாக்கில் வெளியிடப்படும்).

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*_பித்தா பிறை சூடி_*
பெருமானே அருளாளா_

_எத்தால் மறவாதே நினைக்கின்றேன்_
_மனத்து உன்னை__

_வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்_

_அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே_

_சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - இறைவா_
_சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை_

_சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே_
_சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே_
**********************
_பைத்தியம் பலகூறுகளாக்கி ஒரு ஸ்வரத்தை நீக்கியது (3)_  

_பலகூறுகளாக்கி_
= *பிரித்து*

_ஒரு ஸ்வரத்தை நீக்கியது_
= *பிரித்து - ரி*
= *பித்து*

_பைத்தியம்_ = *பித்து*
**********************
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையர், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அதை வாங்கிப்படித்த சுந்தரர் ,

” _இது பொய் என் பாட்டனார் எழுதிகொடுத்தது செல்லாது_ _உனக்கென்ன *பித்தா* ?_ _என்ன உளருகிறாய்_"

என அந்த ஓலையை கசக்கிக் போட்டார். _"இனி உன்னிடம் ஆதாரம் இல்லை போ “;_
என்றார்.

உடனே முதியவர்,
_” நான் கொண்டுவந்தது படி ஓலை. அசல் அங்கு வைத்திருக்கிறேன். இவன் இந்த படி ஓலையை நறுக்கிப் போட்டப்பவே, தெரிந்திருக்கலாம் உண்மையை மறைக்கிறான் என்று !ஆகவே இந்த அடிமையை என்னை கேட்காமல் திருமணம் செய்யக்கூடாது! “;_

என்றார். அங்கிருந்தவர்களும்,

_” ஆமாம் முதியவர் சொல்வதில் ஞாயம் உள்ளது”_ என்றனர்.

சரி *பித்து* ப் பிடித்தவனே எங்கே மூலப் படி என சுந்தரமூர்த்தி கேட்க, அதை நான் அங்கு வைத்திருக்கிறேன் வா என்னுடன், என சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தாராம். அசரீரியாக தன்னைப்பற்றிப் பாட சொல்ல, என்னபாடுவது என கேட்க தன்னைப் பித்தனே என்று சொன்னாயே அதையே பாடு என்றாராம்.

சுந்தரர், *_“பித்தா பிறை சூடி”_* என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
💐🙏🏼💐
**********************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (55):

1) 6:00:46 ரவி சுப்ரமணியன்
2) 6:00:47 லட்சுமி சங்கர்
3) 6:00:49 பாலா
4) 6:00:54 எஸ்.பார்த்தசாரதி
5) 6:00:59 திருமூர்த்தி
6) 6:01:15 சதீஷ்பாலமுருகன்
7) 6:03:03 Suba Srinivasan
8) 6:03:08 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:03:24 உஷா
10) 6:05:35 பாலா
11) 6:11:13 ராமராவ்
12) 6:11:26 K.R.Santhanam
13) 6:11:33 ரமணி பாலகிருஷ்ணன்
14) 6:12:49 எஸ் பி சுரேஷ்
15) 6:13:48 மாயா & சுந்தர் வேதாந்தம்
16) 6:15:33 மடிப்பாக்கம் தயானந்தன்
17) 6:21:19 ஹரி பாலகிருஷ்ணன்
18) 6:21:43 KB
19) 6:22:18 கேசவன்
20) 6:23:26 மு.க.இராகவன்.
21) 6:25:14 வி ன் கிருஷ்ணன்
22) 6:26:15 முத்துசுப்ரமண்யம்
23) 6:26:41 ராஜா ரங்கராஜன்
24) 6:27:48 சங்கரசுப்பிரமணியன்
25) 6:36:28 ரவி சுந்தரம்
26) 6:36:54 கி மூ சுரேஷ்
27) 6:45:24 Siddhan
28) 6:46:38 மு க பாரதி
29) 6:47:52 ஶ்ரீவிநா
30) 6:51:10 ஆர்.நாராயணன்.
31) 7:05:20 நாதன் நா தோ
32) 7:10:07 மீ கண்ணன்
33) 7:14:11 கோவிந்தராஜன்
34) 7:14:56 பாலு மீ
35) 7:38:13 மீனாக்ஷி
36) 7:43:50 கலாராணி
37) 8:01:08 பினாத்தல்
38) 8:24:04 மாதவ்
39) 8:33:19 அம்பிகா
40) 8:41:58 தி. பொ. இராமநாதன்
41) 8:58:52 Sandhya
42) 9:56:34 மாலதி
43) 10:22:10 வானதி
44) 10:22:36 லதா
45) 10:23:44 பானுமதி
46) 10:26:51 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
47) 10:51:46 கு.கனகசபாபதி, மும்பை
48) 10:58:45 வி.ஜயா
49) 11:01:50 ருக்மணி கோபாலன்
50) 11:07:21 சாந்தி நாராயணன்
51) 12:16:45 கோவிந்தராஜன்
52) 13:26:22 ராதா தேசிகன்
53) 14:15:48 பிரசாத் வேணுகோபால்
54) 18:22:35 மீனாக்ஷி கணபதி
55) 21:10:19 கேசவன்
**********************
Muthu said…
வாஞ்சி அவர்கள் புதிர்களில் எனக்குப் பெரும் பித்து! திரைப் பாடல்களில் பொருள் நயம் பொதிந்த பாடல்கல் என்றால் எனக்குப் பைத்தியம். பாதை தெரியுது பார் திரைப் படத்தில் வரும் "சின்னச் சின்ன மூக்குத்தியாம்" என்று தொடங்கும் பாடல் அப்படி ஒன்று. "நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு நெஞ்சை இழுத்து எனை மயக்கும்..*பித்து*ப் பிடிச்சவனென்னு சொல்லி என்னைப் பேசிபேசி இந்த ஊர் சிரிக்கும்...சின்னச் சின்ன மூக்குத்தியாம். முழுப் பாடல் வரிகளும் படித்து அனுபவிக்க இங்கு செல்லவும்: https://goo.gl/UNQhs1 பாடலை திரு. டி. எம். எஸ் குரலில் கேட்டு அனுபவிக்க: https://goo.gl/7Rn396

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்