Skip to main content

விடை 3515

இன்று காலை வெளியான வெடி:
தமிழீழ தேசிய மலரின் வசீகர இதழ்கள் ஓரம்? (4)
இதற்கான விடை:  காந்தள் = காந்த (வசீகர)  + ள் (இதழ்கள் ஓரம்)

ஈழதேசியக்கொடியாக அறிவிக்கப்பட்டுள்ள மலர். சங்கப்பாடல்களில் அதிகம் இடம்பெறும் காந்தள் மலர் (காந்தள் மலர் போன்ற விரல்கள் உடையவளே!) விக்கிபீடியா இதன் ஆங்கிலப் பெயர் Flame Lily என்றும் அறிவியல் பெயர் Gloriosa Superba என்றும் கூறுகிறது

சென்னையையொட்டிய, கோவிலஞ்சேரியில் (வேளச்சேரியிலிருந்து 15 கி மீ தூரத்தில்)  நேற்று எடுக்கப்பட்ட புகைப்படம். கார்த்திகை மாதத்தில் பூப்பதால் இலங்கையில் கார்த்திகைப்பூ என்கிறார்கள்.  தீக்கதிர் செய்திக்குறிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில்  இது பயிரிடப்படுகிறது என்று தெரிவிக்கிறது.  (கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்குச் செடி என்றும் இதற்குப் பெயராம்).


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (28):

1) 6:03:32 சதீஷ்பாலமுருகன்
2) 6:03:33 எஸ்.பார்த்தசாரதி
3) 6:05:14 அம்பிகா
4) 6:08:28 ரவி சுப்ரமணியன்
5) 6:12:02 முத்துசுப்ரமண்யம்
6) 6:16:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:17:12 ரவி சுந்தரம்
8) 6:23:15 ஶ்ரீதரன்
9) 6:23:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:23:37 கேசவன்
11) 6:33:23 மீ கண்ணன்
12) 6:36:22 Siddhan Subramanian
13) 6:43:31 வானதி
14) 7:04:27 கு.கனகசபாபதி, மும்பை
15) 7:24:51 ஆர்.நாராயணன்.
16) 7:26:06 ராஜா ரங்கராஜன்
17) 7:30:19 மீனாக்ஷி
18) 7:59:28 ராஜி ஹரிஹரன்
19) 8:01:56 ரமணி பாலகிருஷ்ணன்
20) 8:02:53 ருக்மணி கோபாலன்
21) 8:35:19 மடிப்பாக்கம் தயானந்தன்
22) 8:40:44 ஆர். பத்மா
23) 8:58:48 எஸ் பி சுரேஷ்
24) 11:51:15 பானுமதி
25) 13:03:49 மு.க.இராகவன்.
26) 14:36:08 மு க பாரதி
27) 15:41:45 கோவிந்தராஜன்
28) 16:27:33 பினாத்தல்
**********************
Raghavan MK said…
A peek into today's Tamil riddle!
*************************

*குறுந்தொகை* ( *185* )

*தலைவி கூற்று*
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.

கூற்று: தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை, “வேறுபட்டாயால்” என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

கூற்று விளக்கம்: தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்கிறான். அவன் இரவில் வருவதால் அவனுக்கு இன்னல்கள் நேருமோ என்று தலைவி வருந்துகிறாள். இவ்வாறு இரவில் வருவதைத் தவிர்த்துத் திருமணம் செய்துகொண்டால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று தலைவி எண்னுகிறாள்.  சில நாட்களாகவே இது போன்ற சிந்தனைகளால் அவள் வருந்தியதால், அவள் உடல் மெலிந்தது. அவள் உடலில் தோன்றிய வேறுபாடுகளைக் கண்ட தோழி, “ தலைவர்தான் இரவு நேரங்களில் தவறாது உன்னைக் காண வருகிறாரே! இருந்தாலும், நீ வருத்தத்தோடு இருக்கிறாயே! உன் வருத்தத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்கிறாள். அதற்குத் தலைவி, “நான் இவ்வாறு வருத்தத்தோடு இருப்பதைப் பற்றி அவரிடம் நீ விளக்கமாகக் கூறினால் என்ன?” என்று தலைவி கேட்கிறாள். தன் நிலையைத் தோழி தலைவனுக்கு விளக்கமாகக் கூறினால், அவன் இரவில் வருவதை நிறுத்திவிட்டுத் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

*************************
_தமிழீழ தேசிய மலரின் வசீகர இதழ்கள் ஓரம்? (4)_ 

_வசீகரம்_ = *காந்தம்*
_வசீகர_ = *காந்த*
_இதழ்கள் ஓரம்_ = *ள்*
_தமிழீழ தேசிய மலர் (ன்? )_ =
*காந்த +ள் = காந்தள்*
******
வசீகரம்,  பொருள்:
பெயர்ச்சொல்(கவர்ச்சி, ஈர்ப்பு, மோகனம்)
கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை; 
************************

185. குறிஞ்சி - தலைவி கூற்று

_"நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி_
_நெடுமென் பணைத்தோள் சாஅய்த்_ _தொடி_ _நெகிழ்ந்_
_தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்_
_சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்_
_பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்_
_கொண்டலிற் றொலைந்த_ _வொண்செங் *காந்தள்*_
_கன்மிசைக் கவியு நாடற்கென்_
_நன்மா மேனி யழிபடர் நிலையே."_

உரை:
தோழி! பல வரிகளையுடைய பாம்பினது படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கீழ்க்காற்றால் வீழ்த்தப்பட்ட, ஓளிபொருந்திய *செங்காந்தள்* மலர், பாறையின்மேல், கவிழ்ந்து கிடக்கும் நாட்டையுடைய தலைவனுக்கு, எனது நல்ல கருநிறமான உடல், மிகுந்த துயரத்தால் வாடும் நிலையை, ”தலைவி, நெற்றியில் பசலை படர்ந்து, தேமல் ஒளியிழந்து, நெடிய மெல்லிய, மூங்கிலைப் போன்ற தோள்கள் மெலிந்து, வளையல்கள் நெகிழ்ந்து காணப்படுகிறாள். அவள் இந்நிலையை அடைந்தது உம்மால்தான் ஆகியது” என்று அவரிடம், நீ விளங்கச் சொன்னால் என்ன குற்றமாகும்?

சிறப்புக் குறிப்பு: தலைவனுடைய மலைநாட்டில் *செங்காந்தள்* மலர் அடைந்த நிலையைத் தானும் அடைந்த்தாகத் தலைவி உள்ளுரையாகக் கூறுகிறாள்.

(முனைவர். பிரபாகரன் )
💐🙏🏼💐
*************************
Raghavan MK said…


நளவெண்பா
(புகழேந்தி)

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப் பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால் காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தளைக் காணென்றான் வேந்து." -

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான். அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது"

இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்