இன்று காலை வெளியான வெடி
தில்லையில் தலை சாய்த்து மயங்கியிருக்கையில் அடைந்த பக்குவம் (3)
இதற்கான விடை: பதம் (சிதம்பரம் - சிரம்)
தில்லையில் தலை சாய்த்து மயங்கியிருக்கையில் அடைந்த பக்குவம் (3)
இதற்கான விடை: பதம் (சிதம்பரம் - சிரம்)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:04:11 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:33 ரவி சுப்ரமணியன்
3) 6:05:44 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:07:32 முத்துசுப்ரமண்யம்
5) 6:07:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:07:39 சுந்தர் வேதாந்தம்
7) 6:08:07 செந்தில் சௌரிராஜன்
8) 6:09:00 V.R. Balakrishnan
9) 6:09:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10) 6:10:05 KB
11) 6:11:11 ராஜி ஹரிஹரன்
12) 6:11:56 மடிப்பாக்கம் தயானந்தன்
13) 6:14:26 மீனாக்ஷி கணபதி
14) 6:18:45 விஜி ஶ்ரீனிவாசன்
15) 6:20:01 சங்கரசுப்பிரமணியன்
16) 6:23:27 மீனாக்ஷி
17) 6:37:15 சாந்தி நாராயணன்
18) 6:37:51 Siddhan Subramanian
19) 6:40:43 ஆர். பத்மா
20) 6:41:16 ரவி சுந்தரம்
21) 6:41:58 லக்ஷ்மி ஷங்கர்
22) 6:45:12 K.R.Santhanam
23) 6:45:57 தி. பொ. இராமநாதன்
24) 6:46:00 கோவிந்தராஜன்
25) 6:48:30 வானதி
26) 6:48:55 மாதவ்
27) 6:55:26 மு க பாரதி
28) 6:57:35 ஸௌதாமினி
29) 7:00:08 லதா
30) 7:08:01 ஶ்ரீதரன்
31) 7:10:06 கேசவன்
32) 7:17:47 தேன்மொழி
33) 7:19:46 ரமணி பாலகிருஷ்ணன்
34) 7:21:29 அம்பிகா
35) 7:23:35 பா நிரஞ்சன்
36) 7:31:04 மீ பாலு
37) 7:53:21 பூமா பார்த்த சாரதி
38) 7:53:23 வி ன் கிருஷ்ணன்
39) 7:59:50 மாலதி
40) 8:10:47 ஆர்.நாராயணன்.
41) 8:32:13 ரா. ரவிஷங்கர்...
42) 8:49:25 இரா.செகு
43) 8:52:54 ஏ.டி.வேதாந்தம்
44) 9:01:42 அனுராதா ஜெயந்த்
45) 9:02:06 பத்மாசனி
46) 9:08:10 எஸ் பி சுரேஷ்
47) 9:20:27 ம.தணிகாசலம்
48) 9:53:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
49) 10:08:42 சதீஷ்பாலமுருகன்
50) 10:36:42 மயிலை வெங்கு
51) 11:07:59 கி மூ சுரேஷ்
52) 11:41:31 மு.க.இராகவன்.
53) 13:10:22 சுபா ஸ்ரீநிவாசன்
54) 13:43:30 மீ கண்ணன்
55) 15:14:35 விஜயா ரவிஷங்கர்
56) 19:16:03 மைத்ரேயி
**********************
A peek into today's riddle!
**********************
_*தலை சாய்த்து* பக்தர் வழிபாட்டை ஏற்ற ஈசன்!_
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது காவிரிக் கரையோரமுள்ள இத்தேவாரத் தலம் திருப்புகலூர்.
கர்ப்பகிருகத்தில் *அக்னீஸ்வரர்* திருக்காட்சி வழங்குகிறார்.
அக்னி பகவான் தவம் செய்து வணங்கிய பெருமான் என்பதால் அக்னீஸ்வரர் எனப் பெயர். பாணாசுரன் தன் தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களை எல்லாம் பெயர்த்து எடுத்துச் சென்றான். அந்த வகையில் இந்த அக்னீஸ்வரரைப் பெயர்க்க முயற்சித்தபோது அவர் அவனுக்குச் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. உடனே தன்னையே பலியிட்டுக்கொள்ள முனைந்திருக்கிறான். அதனைத் தடுத்த சிவபெருமான், அவனுடைய தாயாரின் வழிபாட்டைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டார். அதற்காக சற்றே *தலை* *சாய்த்திருக்கிறார்* . அந்த லிங்கத் திருவுருவம் இன்றும் கோணிய நிலையில், வளைந்தே இருக்கிறது.
அதனால் அவர் *_கோணபிரான்_* என்றும் பெயர் பெற்றார். 🙏🏼
**********************
_தில்லையில் தலை சாய்த்து மயங்கியிருக்கையில் அடைந்த பக்குவம் (3)_
_தில்லையில் தலை சாய்த்து_
= _சிதம்பரத்தில் சிரம்_ _நீக்கி_
= _சிதம்பரம்_ - _சிரம்_
= *தம்ப*
_மயங்கியிருக்கையில்_ = தம்ப மயங்கியுள்ளது.
மயக்கம் தெளிந்ததால்
_*தம்ப* அடைந்தது_
= *பதம்* ! 😀
_பக்குவம்_ = *பதம்*
**********************
` *பக்குவம்* ’ என்பது என்ன?
ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன?
அடைந்த பின் காணும் நிலை என்ன?
*_பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்_* , சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.
_ஒன்று_ :
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்’ கென்று சத்தம் உண்டாகிறது.
குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.
_இரண்டு_ :
தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும்.🐝🐝
ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.🌸
_மூன்று_ :
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது, உருத் தெரியாத `ஓ’ என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான்.
ஆனால், அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்.🍆🥔🍆🥔
_நான்கு_ :
சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் முதலில் `பட்பட்’ என்ற சத்தம் உண்டாகும்.
அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்.
முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.
பக்குவமற்ற நிலைக்கும், பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகவான் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்!
💐🙏🏼💐