இன்றைய வெடி:
முதலுக்கு மோசம் நாட்டியம் (4)
இதற்கான விடை: நட்டம் (நஷ்டம்)
நாட்டியம் = நாட்டிய + ம்
நாட்டுதல் = நடுதல் (இமயம் வரை சென்று வெற்றிக்கொடியை நாட்டிய அரசன்)
நாட்டிய = நட்ட
இன்று வந்த தவறான விடைகளில் பெரும்பாலோர் (17 பேர்) அளித்தது: "ஆட்டம்" . மூன்று பேர் "தலுக்கு"
முதலுக்கு மோசம் நாட்டியம் (4)
இதற்கான விடை: நட்டம் (நஷ்டம்)
நாட்டியம் = நாட்டிய + ம்
நாட்டுதல் = நடுதல் (இமயம் வரை சென்று வெற்றிக்கொடியை நாட்டிய அரசன்)
நாட்டிய = நட்ட
இன்று வந்த தவறான விடைகளில் பெரும்பாலோர் (17 பேர்) அளித்தது: "ஆட்டம்" . மூன்று பேர் "தலுக்கு"
Comments
1) 6:02:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2) 6:03:58 கி மூ சுரேஷ்
3) 6:05:12 சுந்தர் வேதாந்தம்
4) 6:05:19 செந்தில் சௌரிராஜன்
5) 6:06:00 ராஜா ரங்கராஜன்
6) 6:06:11 சதீஷ்பாலமுருகன்
7) 6:08:02 ரவி சுப்ரமணியன்
8) 6:10:36 K,R,Santhanam
9) 6:11:52 KB
10) 6:11:57 ஆர்.நாராயணன்.
11) 6:18:14 முத்துசுப்ரமண்யம்
12) 6:19:26 மீனாக்ஷி கணபதி
13) 6:23:24 பிரசாத் வேணுகோபால்
14) 6:30:57 சுபா ஸ்ரீநிவாசன்
15) 6:39:07 ரவி சுந்தரம்
16) 6:46:29 Siddhan Subramanian
17) 7:00:14 மீனாக்ஷி
18) 7:01:14 மீ கண்ணன்
19) 7:03:40 மைத்ரேயி
20) 7:09:10 லட்சுமி சங்கர்
21) 7:15:31 மீ.பாலு
22) 7:19:59 பா நடராஜன்
23) 7:56:21 ராஜி ஹரிஹரன்
24) 8:34:12 கு.கனகசபாபதி, மும்பை
25) 8:55:44 மாலதி
26) 9:32:30 V.R. Balakrishnan
27) 9:45:31 மாதவ்
28) 10:20:03 கோவிந்தராஜன்
29) 10:59:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 12:05:21 ரமணி பாலகிருஷ்ணன்
31) 12:57:01 சங்கரசுப்பிரமணியன்
32) 13:28:14 விஜயா ரவிஷங்கர்
33) 14:14:53 ராமராவ்
34) 17:47:37 ரா. ரவிஷங்கர்...
35) 20:49:47 ஏ.டி.வேதாந்தம்
36) 20:50:11 பத்மாசனி
**********************
*************************
(திரைப்படப் பாடல் -Remix)
_என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்!_
_நான் உன்னை நினைத்தேன்!_
_என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய்!_
_*முதலுக்கு மோசம்*_ _என உணர்ந்தேன்!_
😂😂😂😂
சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதீர் (சதிர்)என்றும் சதீர்கச்சேரி(சதிராட்டம்) என்றும் அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து _பரதநாட்டியமாக_ விளங்கி வருகிறது. பல்வேறு கலை அம்சங்களை முழுமையாக விளக்கும் ஒரு நூல் தான் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரமாகும்.
_பரத நாட்டியம்_
‘ *_நாட்டியம்_* ’ என்ற சொல் ‘ஆடல்’ என்னும் பொருளைத் தரும். ப,ர,த என்ற மூன்று
எழுத்துகள் தனித்தனி மூன்று பொருளைத் தரும். இதோ பாருங்கள் இந்த விளக்கத்தை:
‘ப’ என்னும் எழுத்து :
பாவகம் (Bhaava/ expression of emotions)
‘ர’ என்னும் எழுத்து : ராகம் (Raagam)
‘த’ என்னும் எழுத்து : தாளம் (Thaalam)
ஆக பாவகம், ராகம், தாளம் ஆகிய மூன்றும் (ப+ர+த) சேர்ந்து பரத என்று ஆகிறது. பரத நாட்டியம் என்னும் பொழுது பாவ ராக தாளம் ஆகிய மூன்று தன்மைகளும் ஆடலோடு சேர்கின்றன. எனவே இசையும் தாளமும் அபிநயமும் சேர்ந்த *_நாட்டியம்_* " _பரதநாட்டியம்_ " ஆகிறது.
*************************
_முதலுக்கு மோசம் நாட்டியம் (4)_
_முதலுக்கு மோசம்_
= *நட்டம்*
_நாட்டியம்_
= _நாட்டிய+ம்_
= *நட்ட+ம்*
*************************
ஒரு புலி 🐅தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.
அந்த இடத்தில் ஒரு எலி 🐀சந்தோசமாக *நாட்டியமாடுவதைப்* பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
🐅'' _என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ *நாட்டியம்* ஆடுவாய்?''_ என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
🐀எலி சொல்லியது,
_' சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'_
😂😂😂
💐🙏🏼💐
*************************b
நட்டம் என்பதற்கு நாட்டியம் என்ற நேரடிப் பொருளும் உண்டு.
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
முதலுக்கு மோசம் (வியாபாரத்தில்) = நட்டம் (நஷ்டம்)
நட்டம்
naṭṭam n. Pkt. naṭṭa. Dance,dancing; *நடனம்* நட்டம்பயின் றாடுநாதனே (திருவாச. 1, 89). https://agarathi.com/word/நட்டம்
முதலுக்கு மோசம் (வியாபாரத்தில்) = ஆட்டம் (நஷ்டம்)
ஆனாலும் நட்டம் என்பது not directly substituting the words "முதலுக்கே மோசம் " as in நாட்டியம் = நட்டம்.
Similarly நாட்டியம்= ஆட்டம் direct meaning
and முதலுக்கே மோசம் = ஆட்டம் roundabout meaning as நட்டம்
"Business ஆட்டம் கண்டது " . Indirectly referring முதலுக்கே மோசம்.
But all said and done the explanation of spilliting நாட்டியம் as நாட்டிய +ம் may not hold water.
And the riddle is also not cryptic category.
I agree with your expressed!
Thank you!
நாட்டியம் = நட்டம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை!
My point is the answer for first part of the clue whether it is நட்டம் Or ஆட்டம் , both are only
hypothetical derivation!
Ofcourse , When compared to ஆட்டம் , நட்டம் seems to fit in .
இது முழுமனதான கருத்து! !🙏