Skip to main content

விடை 3437

விடை 3437

இன்று (21/9/2018) காலை வெளியான வெடி:
தகுந்த அகலம் விட்டுப்போக விட்டுப்போக உயர்வு (4)

இதற்கான விடை: ஏற்றம் = ஏற்ற (தகுந்த)  + ம் (அகலம் - அகல)

இதற்கு சரியான விடையளித்தவர்கள் 47 பேர்:
 1)  6:01:20    லட்சுமி சங்கர்
 2)  6:02:05    திருமூர்த்தி
 3)  6:04:56    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
 4)  6:06:16    லதா
 5)  6:08:59    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
 6)  6:08:59    ரவி சுப்ரமணியன்
 7)  6:10:19    எஸ்.பார்த்தசாரதி
 8)  6:12:17    மீனாக்ஷி கணபதி
 9)  6:12:38    மீ கண்ணன்
10)  6:15:00    கேசவன்
11)  6:16:17    இரா.செகு
12)  6:21:53    முத்துசுப்ரமண்யம்
13)  6:24:59    மாலதி
14)  6:28:40    உஷா
15)  6:29:43    தி. பொ. இராமநாதன்
16)  6:33:55    மீனாக்ஷி
17)  6:37:48    கே.ஆர்.சந்தானம்
18)  6:40:03    ரவி சுந்தரம்
19)  6:44:41    கு. கனகசபாபதி, மும்பை
20)  6:46:04    சதீஷ்பாலமுருகன்
21)  6:48:05    ராமராவ்
22)  6:51:19    ராஜா ரங்கராஜன்
23)  6:58:20    நங்கநல்லூர் சித்தானந்தம்
24)  6:58:26    Siddhan Subramanian
25)  6:59:38    மடிப்பாக்கம் தயானந்தன்
26)  7:06:55    கி மூ சுரேஷ்
27)  7:14:39    ரமணி பாலகிருஷ்ணன்
28)  7:22:49    ஆர்.நாராயணன்.
29)  8:17:41    பிரசாத் வேணுகோபால்
30)  8:19:33    வானதி
31)  8:52:03    ஆர். பத்மா
32)  8:53:03    மு க பாரதி
33)  9:03:35    மயிலை வெங்கு
34)  10:11:18    விஜயா ரவிஷங்கர்
35)  10:15:59    ராஜி ஹரிஹரன்
36)  10:23:24    கோவிந்தராஜன்
37)  11:14:50    பூமா பார்த்த சாரதி
38)  11:16:32    மாதவ்
39)  11:37:35    தேன்மொழி
40)  11:41:44    சுபா ஸ்ரீநிவாசன்
41)  12:04:00    சாந்தி நாராயணன்
42)  12:32:52    ஸௌதாமினி
43)  13:32:26    ராதா தேசிகன்
44)  14:02:32    மு.க.இராகவன்.
45)  17:13:00    பாலா
46)  18:29:04    மைத்ரேயி
47)  19:19:11    சுந்தர் வேதாந்தம்
48)  20:49:02    V.R.Balakrishnan

-->

Comments

Raghavan MK said…



A peek into today's riddle!

*************************
*முதலைகள் ஐந்திடம் மாட்டிக் கொண்டால் ..*
திரு ஏகம்பத்தில் அப்பர் பாடிய ‘நம்பனை’ எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் பாடல் (4ஆம் திருமுறை):
_ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறை உடைத்தாய்_
_அரை முழம் அதன் *அகலம்* அதனில் வாழ் முதலை ஐந்து பெருமுழைவாய்தல்_ _பற்றிக் கிடந்து நான் *பிதற்றுகின்றேன்*_ _கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே_

ஒரு முழம் நீளமும் அரை முழம் *அகலமும்* கொண்டுள்ள உடல் என்னும் குளத்தில் ஐந்து முதலைகள் வாழ்கின்றன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகள் ஒன்பது. அதாவது ஒன்பது துவாரங்கள். இதில் அகப்பட்டுள்ள நான் ஐம்பொறிகளுக்கும் பயந்து பெரிய குகை போன்று காணப்படும் நீர் வரும் வழியைப் பற்றிக் கொண்டு எப்படித் தப்புவது என்ற பயத்தில் வாய்க்கு வந்தபடி பிதற்றுகின்றேன். கருமுகில் தவழ்கின்ற மாடங்களை உடைய கச்சி ஏகம்பத்தில் உறையும் ஏகம்பனே, என்னை ஐந்து முதலைகளிடமிருந்து (ஐம்பொறிகளிலிருந்து) காப்பாற்றுவீராக! 🙏🏼
🌺🌺🌺🌺🌺🌺🌺
_பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று_
_தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு_
_பாட்டெடுப்போம் வா வா... பூத்திருப்போம் பூவா.._
_கட்டுக்காவல் *விட்டுப்போக*_ _பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்_
(திரைப்பாடல்)
*************************
_தகுந்த அகலம் விட்டுப்போக விட்டுப்போக உயர்வு (4)_
_விட்டுப்போக_ = _அகல_ ( _நீங்க_ )
_விட்டுப்போக விட்டுப்போக_ = _அகல_ _நீங்க_
_அகலம் விட்டுப்போக விட்டுப்போக_ = _அகலம்-அகல_ = *ம்*
_உயர்வு_ = *ஏற்ற* + *ம்*
= *ஏற்றம்*
*************************
_காணாமல் போன *ஏற்றம்*_
_கவலை ஏற்றம்_ என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதில் இரண்டு முறை உண்டு.ஒன்று கிளி மரம் கட்டி அதில் ஒருவா் ஏறி இறங்கவும், மற்றொருவா் அந்த தொட்டியினை கிணற்றுக்குள் செலுத்தி தண்ணீர் எடுக்கும் முறை.மற்றொன்று காளை மாடுகளை கயிற்றுடன் கட்டி முன்னும், பின்னும் நடக்க வைத்து தண்ணீா் இறைக்கும் முறை .
*************************
_ஆற்றங் கரையின் மரமும் அரசறிய_ _வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே_--
*_ஏற்றம்_*
_உழுதுண்டு வாழ்வதற்கு_ _ஒப்பில்லை கண்டீர்_
_பழுதுண்டு வேறோர் பணிக்கு_
ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.
( ஒளவையார் )
*************************
*ஏற்றம்* உண்டானால் இறக்கமும் உண்டு
EVERY TIDE HAS ITS EBB
(Proverbs)
*************************
Chittanandam said…
Excellent explanation, Raghavan Sir.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்