Skip to main content

விடை 3430

இன்று (14 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
மரியாதைக்குரியவர் கடைசியாக ஓடிப்போனார், நடக்கவில்லையா? (3)

இதற்கான விடை: கனவா?  ( நடக்கவில்லையா? அதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லையா, கனவா, கற்பனையா என்ற பொருளில் )

 கனவா = கனவான்  (மரியாதைக்குரிய நபர்) -ன்

(16 விதமான தவறான விடைகள் வந்துள்ளது ஆச்சாரியத்தையளிக்கிறது. அதில் மூன்று பேர்தான் முதன்முறையாக விடையளிப்பவர்கள்)

 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (19):

1) 6:17:01 கேசவன்
2) 6:19:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:25:45 உஷா
4) 6:27:09 வி ன் கிருஷ்ணன்
5) 6:46:47 மடிப்பாக்கம் தயானந்தன்
6) 7:08:57 ஸௌதாமினி
7) 7:23:17 பாலா
8) 7:45:24 லட்சுமி மீனாட்சி , மும்பை
9) 7:46:47 கு.கனகசபாபதி, மும்பை
10) 8:44:58 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 8:53:52 சங்கரசுப்பிரமணியன்
12) 9:31:33 கு. கனகசபாபதி, மும்பை
13) 9:44:20 பினாத்தல் சுரேஷ்
14) 11:17:13 ராஜி ஹரிஹரன்
15) 17:07:28 மு.க.இராகவன்
16) 18:21:54 ஏ.டி.வேதாந்தம்
17) 18:22:37 பத்மாசனி
18) 18:23:19 அனுராதா ஜெயந்த்
19) 19:33:08 மு க பாரதி

**********************
Raghavan MK said…
A peek into today's riddle !
🌺🌺🌺🌺🌺🌺
" *கனம்* பொருந்திய கோர்ட்டார் அவர்களே! "
என்ற வசனத்தை பழைய திரைப்படங்களில் நம்மில் பலர் கேட்டிருப்போம் . பின்னர் இதுவே கனம் நீதிபதியவர்களே என மாறியது.
*கனம்* என்பது
நீதிபதியை அழைக்கும்போது ‘மரியாதைக்கு உரிய’ என்ற பொருளில் பயன்படுத்தும் ஒரு சொல்.
இது நினைவுக்கு வந்ததும் பளிச்சிட்டது மனதில் விடை! 😌

oxford dictionaries
தமிழ் *_கனவான்_* யின் அர்த்தம்
*கனவான்*
பெயர்ச்சொல்
அருகிவரும் வழக்கு
_மதிப்பிற்கு உரியவர்; கண்ணியம்_ _நிறைந்தவர்_ .
🌺🌺🌺🌺🌺🌺
_மரியாதைக்குரியவர் கடைசியாக ஓடிப்போனார், நடக்கவில்லையா? (3)_

_மரியாதைக்குரியவர்_
= *கனவான்*
_கடைசியாக ஓடிப்போனார்,_
= _கடைசி எழுத்து ஓடிப்போனது_ 😀
= *கனவான்- ன்*
= *கனவா*
_நடக்கவில்லையா?_
= *கனவா* ?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நவராத்திரி திரைப்படம்
மறக்க இயலாத பாடல்

நடிகையர் திலகம்:-

தங்க சரிகை சேலை
எங்கும் பளபளக்க.....
.............
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா! ..

நடிகர் திலகம் :-

ஆஹா ..!
நான் கான்பது *கனவா* அல்லது நினைவா?
என் எதிரில் நிற்பது மண்ணுலக மங்கையா அல்லது விண்ணுலக நங்கையா?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_நான் தூங்கியும்_
_தூங்காத உன்_ _நினைவுகள்_
_எனக்குள்_ _வாயாடிக்கொண்டே_ _இருக்கிறது,_
_இது *கனவா* இல்லை_ _நினைவா_
_என புரியாத புதிரா?_
😌🌺🌺🌺🌺🌺🌺🙏🏼
Chittanandam said…
நல்ல வேளை, நீங்க (நீங்கள் -ள்) என்கிற பதிலை அனுப்பிவிட்டு அதில் குறை இருப்பதை உணர்ந்து கனவா என்று திருத்தி அனுப்பினேன்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்