Skip to main content

விடை 3425

இன்றைய (9/9/2018) வெடி:

இலவசமான தவிலை வைத்து ஒரு மிருகத்தை அடக்குபவன் நல்லவனில்லை (4)
இதற்கான விடை:  பாதகன்  = பாகன் + த (விலை)
விடையளித்தோர் பட்டியல் 10 மணிக்குப் பிறகு வெளியிடப்படும்.

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle ......👇🏽.........
************************
*தவில்* மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
_ஏங்க_
_கொடி பறக்குது_
_வெடி வெடிக்குது_
_குலுங்க குலுங்க கிளி சிரிக்கிது_
_பறை அடிக்குது *தவில் அடிக்குது*_
_மனசுக்குள்ள மணி அடிக்குது_
_நாங்க செம்ம வாலு_
_செய்யும் சேட்டைக்கு_
_கிடையாது ரூலு_
_சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு_
_வருத்தபடாத வாலிபர் சங்கம்........!_
🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽
*************************
_இலவசமான தவிலை வைத்து ஒரு மிருகத்தை அடக்குபவன் நல்லவனில்லை (4)_

_இலவசமான தவிலை_
= (விலை தராவிட்டால் இலவசம் தானே! தவிலை யில் விலை நீக்கினால் இலவசம்! 😃)
= த ~விலை~
= *த*

_ஒரு மிருகத்தை அடக்குபவன்_
= *பாகன்* (யானைப் பாகன்)

_வைத்து_ = *த* வை *பாகன்* உள்ளே வைக்க
= *பாதகன்*

_நல்லவனில்லை_
= *பாதகன்*
***********************
_கல்லினை யொத்த_ _வலிய மனங்கொண்ட *பாதகன்* சிங்கன்_
_கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு_ _இரையிட்ட வேலவா!_
_பல்லினைக் காட்டிவெண் முத்தைப்_ _பழித்திடும் வள்ளியை -_ _ஒரு_
_பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!_
(பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/3. வேலன் பாட்டு)

.💐🙏🏼💐
Muthu said…
*பாதகஞ்* செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா, -- பாப்பா பாட்டு (மூலம்: https://ta.wikipedia.org/wiki/ஓடி_விளையாடு_பாப்பா_(பாரதியார்_பாடல்)))
Muthu said…
தாமதித்த மேலுதவி/புதிர் புரிய வழி: *இலவசமான (விலை இல்லாத) தவிலை(1)* வைத்து ஒரு (குறிப்பிட்ட) மிருகத்தை அடக்குபவன் (3)= நல்லவனில்லை (4)
Ambika said…
சரியான விடையளித்த 52 பேர்:
1) 6:46:25 ராஜா ரங்கராஜன்
2) 6:47:24 முத்துசுப்ரமண்யம்
3) 6:47:54 KB
4) 6:48:35 எஸ்.பார்த்தசாரதி
5) 6:53:02 திருமூர்த்தி
6) 6:54:16 ரவி சுப்ரமணியன்
7) 6:54:30 மீ கண்ணன்
8) 6:55:07 ஶ்ரீதரன்
9) 6:57:02 வி ன் கிருஷ்ணன்
10) 6:57:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 7:02:38 Siddhan Subramanian
12) 7:02:50 கி மூ சுரேஷ்
13) 7:03:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 7:04:10 ராமராவ்
15) 7:08:15 ஆர்.நாராயணன்.
16) 7:14:20 சங்கரசுப்பிரமணியன்
17) 7:16:48 கோவிந்தராஜன்
18) 7:21:18 மாலதி
19) 7:21:53 கேசவன்
20) 7:22:03 உஷா
21) 7:23:58 ராஜி ஹரிஹரன்
22) 7:27:32 கு.கனகசபாபதி, மும்பை
23) 7:33:11 பா நிரஞ்சன்
24) 7:34:11 மீனாக்ஷி கணபதி
25) 7:34:16 லட்சுமி மீனாட்சி, மும்பை
26) 7:34:44 எஸ் பி சுரேஷ்
27) 7:42:07 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
28) 7:42:57 மீனாக்ஷி
29) 7:50:01 வி சீ சந்திரமௌலி
30) 8:01:44 தி. பொ. இராமநாதன்
31) 8:05:27 லக்ஷ்மி ஷங்கர்
32) 8:24:06 மீ.பாலு
33) 8:50:46 சுந்தர் வேதாந்தம்
34) 8:56:29 K.R.Santhanam
35) 8:57:02 கலாராணி
36) 9:15:56 மாதவ்
37) 9:23:25 மு.க.பாரதி
38) 9:23:54 தேன்மொழி
39) 9:48:43 மடிப்பாக்கம் தயானந்தன்
40) 9:57:39 ஆர். பத்மா
41) 10:35:53 அம்பிகா
42) 10:50:16 மு.க.இராகவன்.
43) 11:24:53 ரங்கராஜன் யமுனாச்சாரி
44) 11:46:00 பானுமதி
45) 11:50:57 வானதி
46) 11:51:24 லதா
47) 11:55:15 ராதா தேசிகன்
48) 12:49:54 திருக்குமரன் தங்கராஜ்
49) 16:04:11 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
50) 17:53:19 எல்வீ
51) 19:03:44 பாலா
52) 21:00:27 suba srinivasan

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...