Skip to main content

விடை 3420

விடை 3420
இன்று காலை வெளியான வெடி:
கூட வந்தவன், கடைசியாக வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன் (3)

 இதற்கான விடை :  சேரன் = சேர + ன் (வந்தவன், கடைசியாக)

சேரர்களின் சின்னமான வில்,  அவர்களது கொடியில்  இடம்பெற்றிருக்கும்.

(இன்று  10க்கும் மேற்பட்டவர்கள் "சகலை" என்ற விடையளித்திருந்தனர். காற்புள்ளியை இட்டது நன்றாக வேலை செய்து அவர்களைத் திசை திருப்பியுள்ளது. )

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (19):

1) 6:07:29 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:49 வதா
3) 6:18:56 மீ சேஷாத்ரி
4) 6:23:59 மீனாக்ஷி
5) 6:25:30 மு.க.இராகவன்.
6) 6:25:54 லட்சுமி சங்கர்
7) 6:42:56 மீனாக்ஷி கணபதி
8) 6:49:58 மாலதி
9) 7:34:40 வானதி
10) 7:42:23 கு. கனகசபாபதி, மும்பை
11) 7:48:57 அம்பிகா
12) 8:10:06 கேசவன்
13) 8:48:04 மீ பாலு
14) 11:16:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 13:28:56 இரா.செகு
16) 14:06:45 மடிப்பாக்கம் தயானந்தன்
17) 15:53:33 ரவி சுப்ரமணியன்
18) 17:17:24 ராதா தேசிகன்
19) 17:37:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..............👇🏽................
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே *_சேரர்கள்_* எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி *_விற்கொடி_* ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். .
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
---------------------------------------
_கூட வந்தவன், கடைசியாக வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன் (3)_

_கூட_ = *சேர*

(கூடி =சேர்ந்து------ _ஓடி விளையாடு பாப்பா, - நீ_
_ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,_
*_கூடி_* _விளையாடு பாப்பா_ !_
***
*கூடி* வாழ்ந்தால் கோடி நன்மை! )

_வந்தவன், கடைசியாக_
= *ன்* ( வந்தவன் கடைசி எழுத்து)

_வில்லை உயர்ந்த இடத்தில் வைத்தவன்_
=வில்லை கொடியாக ( _விற்கொடி_ ) உயர பறக்க விட்டவர்கள்.
= *சேர+ன்*
= *சேரன்*
*************************
_எங்கள் திராவிட பொன்னாடே_
_கலை வாழும் தென்னாடே!_
................
.......................
_சிங்களத்தீவின் கடற்கரையை_
_எங்கள் செந்தமிழ் தோழர் அழகு செய்தார்!_

_எகிப்திய நாட்டின் நதிக்கரையில்_
_எங்கள் இளந்தமிழ் வீரர் பவனிவந்தார்!_

*_வில்லவன் சேரன்_*
_பாண்டிய நாட்டின்_
_வேல்விழி மகளை_ _கூட_ = *சேர*

(கூடி =சேர்ந்து------ _ஓடி விளையாடு பாப்பா, - நீ_
_ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,_
*_கூடி_* _விளையாடு பாப்பா_ !_
***
*கூடி* வாழ்ந்தால் கோடி நன்மை! )
_மணமுடித்தான்!_

_விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்_
_திசைதோறும் இசைபாடும் தாய்நாடே!_

_எங்கள் திராவிட பொன்னாடே_
_கலை வாழும் தென்னாடே!_
🏇🏼🏇🏼🏇🏼🏇🏼🏇🏼🏇🏼
Chittanandam said…
நானும் சகலையுடன் நீண்ட நேரம் போராடினேன். பொருந்வில்லையே!
Chittanandam said…
நாளைய புதிர் எளிமையாக இருக்கும் எ நம்புகிறோம்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்