Skip to main content

Posts

Showing posts from January, 2018

விடை 3204

இன்று (31/01/2018)  காலை வெளியான வெடி கனமான ராகம் ஒன்று பண் பாதி கொண்ட குடம் (3) இதற்கான விடை: தோண்டி = தோடி (ஒரு ராகம்) + ண் வலையில் இருக்கும் பலவிதமான புதிர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா ? இதைப் படியுங்கள்

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

விடை 3203

இன்று (30/01/2018) காலை வெளிவந்த வெடி: மக‌தியாழ் வைத்திருப்பவன் நான், திருப்பித் தர உட்படுகிறேன் (4) இதற்கான விடை: நாரதன்  = நான்  +  ரத (திருப்பித் தர) (அதனால் நாரதர் என்பது தவறு) கலகம் விளைவிப்பவன் என்றுதான் முதலில் எழுதினேன். யோசிக்காமலே உடனே விடை எல்லோருக்கும் கிடைத்து சப்பென்று ஆகிவிடுமே. ஆனால் வேறு வழி புலப்படவில்லை.  எடு அபிதான சிந்தாமணியை, புரட்டு அதன் ஏடுகளை.   நாரதர் கையில் வத்திருப்பது கொட்டங்கச்சி வயலின் என்று நினைத்திருந்தேன். அது பேர் மகதியாழாம். பிடி, எடுத்துப்போடு.  படிக்கிறவர்கள் தலைவலி எப்படியாவது தடவிக் கண்டு பிடிக்கட்டும்.

உதிரி வெடி 3203

இன்றைய (30/01/2018)  வெடி வாஞ்சிநாதன் ********************** மகதியாழ் வைத்திருப்பவன் நான், திருப்பித் தர உட்படுகிறேன் (4) . . . .

விடை 3202

இன்று காலை வெளியான வெடி குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் உதாரணங்களாக ச, ரி, க, ம, ப, த, நி (3) இதற்கு சற்றே குறைவாக எழுதியிருந்தாலும் விடை கண்டுபிடித்திருக்கலாம். குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் (3). ஏதோ கொஞ்சம் உதாரணம் கொடுத்து  விளக்கி மக்களுக்கு இன்னும் கொஞ்சம் கஷ்டமாக்கலாம் என்ற எண்ணத்தில்  ச, ரி, க, ம, ப, த, நி சேர்த்தேன். இப்போது விடை கொடுத்துவிடுகிறேன்: குறில் .  சரியான விளக்கத்தை நீங்கள் எவரேனும் கருத்துரையாக அளிக்கலாம்.

உதிரிவெடி 3202

இன்றைய (29/01/2018) வெடி வாஞ்சிநாதன் குறைவான நேரம் ஒலிக்கும் குழல் முடியும் முன் அடையாளம் உதாரணங்களாக   ச,ரி,க,ம,ப, த, நி  (3) . . . .

விடை 3201

இன்று (28/01/2018) காலை  வெளியான புதிர்:  சுழியுடன்  குதிரையைக் கூடுதல் ? (3) இதற்கான விடை: உபரி = உ + பரி சுழியுடன் குதிரை என்றாலே உபரி என்று வந்துவிடும். ஆனால்  சேர்தல் என்ற பொருள் நோக்கி உங்களைத் திசை திருப்ப "குதிரையை" என்று எழுதினேன்.   இதை எச்சரிக்கவே கேள்விக்குறி. கூடுதலான குழப்பத்தை அளிக்கத் திட்டமிட்டிருந்தாலும் 45 பேர் சுதாரித்துக் கொண்டு சரியான  விடையைக்  கண்டுபிடித்துவிட்டார்கள்.

விடை 3200

இன்று காலை வெளியான வெடி தைத்ததோ தைக்காததோ கை வைக்க தைரியம்  (5) இதன் விடை :  துணிகரம். இன்றைய பட்டியலை ராஜி ஹரிஹரன் வெளியிடுவார்.

விடை 3199

இன்று காலை வெளிவந்த வெடி 3199 பொம்மை சுமப்பவன் முதலில் காலில்  காலில் அணிவது (3) இதற்கான விடை:  கொலுசு = கொலு (பொம்மை)  + சு கொலு என்றால் பொம்மைதானா என்று  சிலர் கேள்வி கேட்கிறார்கள்.  கொலு மாதிரி  அசையாமல்  உட்கார்ந்திருக்கிறாயே என்று பேசுவதைக் கேட்டு நான் இதை  அமைத்தேன்.  அகராதியில்   கொலு மண்டபம் என்றால் royal court  என்றும்  கொலுவீற்றிருத்தல்  என்றால் பொம்மையுடன் தொடர்பில்லாத   பொருளளையும்  கொடுத்திருப்பதால்  இது விவாதத்திற்குள்ளாகலாம்.  விஷயம் அறிந்தவர்கள் கருத்துரையில்  சொல்லலாம்.

உதிரிவெடி 3199

இன்றைய (26/01/2018) உதிரி வெடி 3199 வாஞ்சிநாதன் (புதிருக்குச் செல்லும் முன்:  நேற்றைய புதிருக்கு விடையளிக்கும் பதிவு  விடை 3198க்கு வந்துள்ள கருத்துரைகளையும் பாருங்கள்) பொம்மை சுமப்பவன் முதலில் காலில் அணிந்து கொள்வது (3) . . .  .

விடை 3198

இன்று காலை (25/01/2018) வெளியான வெடி: உயிரை எடுப்பவன்   சொன்ன சொல்  புல‌வன் பிற்பாதி சேர்த்துக் கொண்டான் (5) இதற்கான விடை:  கூற்றுவன் = கூற்று (சொன்ன சொல்)  +  வன் (புலவனில் பாதி) கூற்றுவன் என்பது எமனுக்கு மற்றொரு பெயர்

உதிரிவெடி 3198

இன்றைய (25/01/2018) வெடி வாஞ்சிநாதன் உயிரை எடுப்பவன்   சொன்ன சொல்  புல‌வன் பிற்பாதி சேர்த்துக் கொண்டான் (5)   ......

விடை 3197

இன்றைய (24/01/2018)  வெடி: பெண்ணின் தலை சீவ முடியும் நேரம் நாலே முக்காலாக இருக்கலாம் (4) இதை  மூன்று பகுதியாக உடைக்கலாம்: பெண்ணின் தலை சீவ | முடியும் நேரம் | நாலே முக்காலாக இருக்கலாம் (4) முதல் பகுதியை "பின்ன" என்று கொள்ளலாம். இரன்டாம் பகுதியை "ம்" என்று கொள்ளலாம். இவை சேர்ந்தால் கிடைப்பது பின்னம், உதாரணமாக நாலே முக்கால். (இருக்கலாம் என்று சொன்னது பின்னத்திற்கு உதாரணம் இதுவும் ஒன்று என்று உணர்த்தவே). எனவே விடை: பின்னம்

உதிரிவெடி 3197

இன்றைய (24/01/2018) வெடி   3197 வாஞ்சிநாதன் பெண்ணின் தலை சீவ முடியும் நேரம்  நாலே முக்காலாக இருக்கலாம் (4) . . .

விடை 3196

இன்று (23/01/2018) வெளியான வெடி: கவிஞன் சூழ்ச்சியைக் கைவிட வசதி கொண்ட சிறுவன் (4 ) இதை முதலில் இப்படி உடைக்க‌லாம். கவிஞன் | சூழ்ச்சியைக் கைவிட வசதி | கொண்ட | சிறுவன் (4) சூழ்ச்சி = சதி,  அதைக் கைவிட்டால், வசதி "வ" என்றாகிவிடும் சிறுவன் = பாலன் "வ" கொண்ட பாலன்  = பாவலன் = கவிஞன் விடை:  பாவலன்

உதிரிவெடி 3196

இன்றைய (23/01/2018) வெடி: வாஞ்சிநாதன்   கவிஞன் சூழ்ச்சியைக் கைவிட வசதி கொண்ட சிறுவன் (4) வெடியைப் பற்ற வைக்க . . .

விடை 3195

இன்றைய (22 ஜனவரி 2018) வெடி:   ஒரு சுரங் கொண்ட உடல் செய்த செயல் (4)  இதன் விடை: காரியம்   =  காயம் + ரி

உதிரிவெடி 3195

இன்றைய (22/01/2018)  வெடி: வாஞ்சிநாதன் ஒரு சுரங் கொண்ட உடல் செய்த செயல் (4)  வெடி 3195.  

விடை 3194

இன்றைய (21/01/2018) வெடி அன்னம் களையெடுத்த புனல்  உண்ட கருவி (4) இதற்கான விடை: சாதனம்   = சாதம் (அன்னம்)   + ன  ( புல் நீக்கப்பட்ட புனல்)

உதிரிவெடி 3194

இன்றைய (21/01/2018) வெடி : வாஞ்சிநாதன் அன்னம் களையெடுத்த புனல் உண்ட கருவி (4) இதற்கான விடையைக் கீழ்க்கண்ட படிவத்தில் நிரப்பவும் வெடி 3194

விடை 3193

இன்றைய (20/01/2018) வெடி: எதற்காக மகுடம்? திரௌபதியின் சூளுரை (4) இதற்கான விடை: முடியேன் = முடி + ஏன்?=  (கூந்தலை) முடியேன்

விடை 3192

* இன்று (19/01/2018) வெளியான வெடி: கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர்   (5) இதற்கான விடை: புரோகிதர்   காலம் ரொம்பவும்தான் கெட்டு போச்சு. ஏதோ கல்யாணம், கருமாதிக்கு அய்யரைக் கூப்புட்டு  மொறையா செய்ய வேண்டியத செஞ்சு போடுங்கன்னு  சொன்னால், வந்து மந்திரம் ஓதிட்டு  தச்சணைய வாங்கிட்டுப் போகாமல் இப்படி அரிவாளோட வந்து தலைய சீவிட்டுப் போறாங்களே.  வெட்டின தலைய வேற  எங்க  ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு தெரியலையே.  ஒங்களுக்குத் தெரிஞ்சுதுன்னா கருத்துரைல எழுதிப் போடுங்க. மும்பை கனகசபாபதி,  நல்லா வெவரமா எழுதிட்டாரு, மு.க. ராகவன், முரளி மாதவன் இவங்கள்ளாமும் சுருக்கமா எழுதிருக்காங்க. நீங்களும் ஆரம்பிங்க.

உதிரிவெடி 3192

 இன்றைய (19/01/2018) வெடி 3192:  வாஞ்சிநாதன்  கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர்   (5) உதிரிவெடி.

விடை 3191

*இன்று (18 ஜனவரி 2018) காலை வெளியான வெடி: கண்ணியமானவர் மனம் காணும் கற்பனையா? நான் பேசுவதற்கானது இல்லை (4) இதற்கான விடை: கனவான். இந்தவிடை வெடியுடன் எப்படிப் பொருந்தும் என்பதை யாராவது இதன் கீழே கருத்துரையாக இடுங்கள். பொதுவாக முதல் நாளிரவே அடுத்த நாள் காலைக்கான புதிரை யோசித்து வைத்துத்  தயார் செய்தும் வைத்திருப்பேன். அது மாதிரி  நேற்றிரவு செய்யாமல் காலை எழுந்து ஐந்தேமுக்கால் மணிக்குக் க்ரியா அகராதியை ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து ஒரு சொல்லை எடுத்து அவசரக் கோலமாகச் செய்தது இன்றைய புதிர். க்ரியா பதிப்பகத்தார் மெனக்கட்டு அழகாக‌த் தயாரித்திருக்கின்றனர் இந்த அகராதியை. நான் 2001இல் வாங்கியது இந்த அகராதி. இன்று புத்தகக் கண்காட்சியில் புதிய பதிப்பைப் பார்த்தேன். புதிர் ஆர்வலர்கள் இதை வாங்கிவைத்துக் கொள்ளலாம். இமையம் எழுதிய வீடியோ மாரியம்மன் போன்ற அழகான கிராமியக் கதைகள் நடுவே  புத்தகக் காட்சியில் இந்த அகராதியை வாங்கலாம்.

உதிரிவெடி 3191

 18  ஜனவரி  2018, உதிரி வெடி 3191 -- வாஞ்சிநாதன் கண்ணியமானவர் மனம் காணும் கற்பனையா? நான் பேசுவதற்கானது இல்லை (4) உதிரி வெடி 3191

விடை 3190

* இன்றைய (17 ஜனவரி 2018) வெடி: செடியோ கொடியோ அருள் புரிய வேண்டும் இதற்கான விடை: தாவரம் = தா + வரம் (வரம் தரவும்)

விடை 3189

** இன்று (16/01/2018) காலை வெளியான வெடி: பெண்கள் கழுத்தில் இருப்பது பொய் இதற்கான விடை: சரடு (தாலிச்சரடு & சரடு விடுதல்) தாலிக் கயிறு & கயிறு திரித்தல் என்பதும் பொருந்தி வருகிறது. புதிரில் இது எது சரியானது என்பதற்கான தகவல் இல்லாததால் இரண்டும் ஏற்கப்படுகிறது.

பொங்கல் சரத்தின் விடைகள்

* பொங்கல் 2018 வெடிச் சரத்திற்கான விடைகள்: குறுக்காக:  5. வாடியபயிர் , 6. ருசி, 7. அவலம், 9. புறங்கை, 10. உகந்த, 12. தளும்பி, 13. ஐயா, 14. மருத்துவம் நெடுக்காக:  1. கோடி, 2. உபயம், 3. ஈர்ப்பு, 4. மிருதங்கம், 8. வக்கணையாக,  11. தருமன், 12. தனித்து, 15. வலி இப்புதிர்  1989ல் செய்தது.   அப்படியே மாற்றாமல் போட்டுவிட்டேன். இன்று சிலவற்றை வேறுமாதிரிச் செய்திருப்பேன். புதிரில் இருக்கும் ஓட்டைகளைக் கருத்துரையாகச்  சொல்லலாம்.  இந்த சர வெடியில் உள்ள 16 புதிர்களுக்கும்  விளக்கங்களையும் நீங்களே கருத்துரையில்  எழுதலாம்.

விடை 3187 & 3188

 *இன்று காலை வெளியான வெடிகள் 2. முதல் வெடி: வெளியூர் செல்பவர் யாரது? வாலை நறுக்கிய குழப்பத்தில் நோயில் வீழ்ந்து விட்டீரே! (4) இதற்கான விடை: பிரயாணி = பிணி + ரயா (யாரது - து = ரயா) பொங்கலுக்கு அடுத்த  நாள் மாட்டுப் பொங்கல் என்றால் மார்கழி 29க்கு அடுத்த நாள் பாடப்படும் ராகம் எது? (3) இதற்கான விடை: ஆபோகி = ஆ (மாடு) + போகி! ஆபோகி என்பது கர்நாடக இசையின்  ராகத்தில் ஒன்று.  

உதிரிவெடி 3187,3188

ஹேவிளம்பி மாட்டுப் பொங்கல் (15/01/2018 ) வெடிகள் இரண்டு    வாஞ்சிநாதன் நேற்று பொங்கல் கட்டு வெடிக்கு இதுவரை 29பேர் விடையளித்திருக்கிறார்கள். இதெல்லாம் கட்டோடு பிடிக்காது என்று நினைப்பவர்கள் ஒரு மணிக்கு ஒரு உதிரியாக வெடித்து விடைகளை அனுப்ப அவகாசம் இருக்கிறது. இன்றைய வெடியோடு இரவு 9 மணி வரை அனுப்பலாம். பட்டியலில் மூன்று ரகம் எல்லா விடைகளையும் கண்டவர்கள், ஒரு தவறோடு, மற்றும் இரு தவறுகளோடு கண்டவர்கள் என்று  வெளியிடப்படும். இன்றைக்கு வழக்கம்போல் வரும் வெடியுடன் கொசுறாக ஒரு மாட்டு வெடி, பழங்கால, விடுகதை போல் அமைத்திருக்கிறேன். ஒன்றை நீங்களும் மற்றதை  நீங்கள் வளர்க்கும் மாட்டிடமும் பங்கு போட்டு விடையளித்து அனுப்பலாம்! வெளியூர் செல்பவர் யாரது? வாலை நறுக்கிய குழப்பத்தில் நோயில் வீழ்ந்து விட்டீரே! (4) பொங்கலுக்கு அடுத்த  நாள் மாட்டுப் பொங்கல் என்றால் மார்கழி 29க்கு அடுத்த நாள் பாடப்படும் ராகம் எது? (3) சென்னை புத்தக் கண்காட்சிக்குச் செல்லவிருக்கிறீர்களா? அப்படியென்றால் கீழே சொடுக்கிப் படித்துவிட்டுச் செல்லுங்கள்: ராமானுஜன் பற்றிய நூல் இரட்டை வெடி...

உதிரிவெடி 3186 இல்லை பொங்கல் சரம்

**இன்றைக்கு உதிரி வெடி கிடையாது.  அதற்கு பதிலாக   ஒரு கட்டுவெடி கீழே. விடையளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் உண்டு. திங்கள் கிழமை  இரவு  பட்டியல் வெளியிடப்படும். மாட்டுப் பொங்கலுக்கு உதிரியாய் வெடி வழக்கம் போல் வரும். சரவெடி.

விடை 3185

** இன்று காலை (13/01/2018)  வெளிவந்த வெடி விசேஷமான நாள் விரோதம் கொண்ட சண்டி தலை சீவு (4) இதற்கான விடை: பண்டிகை = பகை +  (ச) ண்டி இதைக் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்: ராமானுஜன் பற்றிய நூல்

அனந்தத்தை அறிந்தவன் (ராமானுஜன்)

ராபர்ட் கனிகல் (www.robertkanigel.com) என்ற  அமெரிக்கர் விஞ்ஞானியில்லை, அவர் ஓர் எழுத்தாளர்.  பல ஆய்வுகள் செய்து அறிவியல் தொடர்பான செய்திகள் கொண்ட புத்தகங்கள் பல எழுதியுள்ளார். இந்தியாவின் கணித மேதை ராமனுஜன் சரிதையை  1991ல் அவர்  The Man Who Knew Infinity   என்ற  400 பக்கங்களுக்கும் மேற்பட்ட நூலாக  எழுதினார். அது  பிரெஞ்சு, ஜெர்மனி, இதாலி, கொரியா, ஜப்பான், சீனா,  தாய்லாந்து நாட்டினர்  மொழிகளில் மொழிபெயர்த்து பெரிதும் போற்றப்பட்டது.  (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்தது). ஐந்து வருடங்களுக்கு முன் இந்திய மொழிகள் பத்திலாவது (அஸ்ஸாமி, ஒதிஷா, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்கம் , தமிழ் ...) மொழிபெயர்க்கப்பட்டது. தமிழாக்கம் செய்யும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. எல்லா மொழிகளிலும் நேஷனல் புக் ட்ரஸ்ட் என்னும் அரசு நிறுவனத்தால்  வெளியிடப்பட்டது. இப்போது பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள பள்ளியில் நடை பெற்று வரும்   சென்னைப் புத்தக்கக் கண்காட்சியில் அதை வாங்கலாம். கடை எண் 207,208. ஜனவரி 22 வரை....

போகிக்கான குறள் புதிர் விடை இதோ

இன்று போகி விசேஷத்திற்கான இலவச வெடி, குறளாக அமைக்க வேண்டும்   என்று வலிந்து  செய்ததால் இயல்பான புதிரின் சுருக்கம் இருக்காது. எரித்த கரியில் எழுந்தாடும் காற்றில் முறித்துண்பது கையில் முடி (5) இதன் விடை:  கரும்புகை. முதல் வரியை  "எரித்த கரியில் எழுந்து காற்றில் ஆடும்" என்று சற்றே மாற்றி அமைத்துக் கொண்டால் "கரும்புகை" என்பது தெளிவாகும். இச்சொல்லையே கரும்பு + கை என்று முறித்தால் இரண்டாம் அடிக்கு விளக்கமாகும். கரும்புகை ஏந்தி கடித்ததன் சாறுண்டு கரும்புள்ளைக் கூவிக் கவளங்கள் ஈந்து கரும்புகை தோன்றிடக் கந்தலைத்தீக் கிட்டோர்க் கரும்பும் அகத்தில்  களிப்பு சுயமாக எழுதிய கோனார் உரை: முதலடியின் கரும்பு  முறித்துத் தின்பது. இரண்டாமடியின் கரும்பு (கரும்புள்) கரிய பறவையான காகம்.  விசேஷ நாட்களில்  மனிதர்கள் கூவியழைத்து காக்கைக்கு  உணவிடுவதைச் சொல்கிறது. மூன்றாமடியில் இருக்கும் கரும்பு  (கரும்புகை) போகிக்கு எரிக்கும் போது தோன்றும்  கரிய புகை மண்டலத்தைக் குறிக்கிறது. நான்காமடியில் இருப்பது போலியான கரும்பு:  உகரத்தில் முடிய...

உதிரிவெடி 3185

** இன்றைய (13/01/2018) வெடி: --வாஞ்சிநாதன் விசேஷமான நாள் விரோதம் கொண்ட சண்டி தலை சீவு (4) விசேஷமான நாளென்பதால் இலவசமாய் இன்னொரு குறள் வெடி: எரித்த கரியில் எழுந்தாடும் காற்றில் முறித்துண்பது கையில் முடி (5) குறள் வெடிக்கு பகல் 1 மணிக்கு விடை வெளியிடப்படும். ஒரு விடை தெரியாவிட்டால் உங்கள் பெயரையே விடையாக  சமர்ப்பித்து பின்னர் மீண்டும் முயலலாம் இரண்டு வெடிகள்.

விடை 3184

இன்று (12/01/2018) காலை வெளியான வெடி:   ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4) இதற்கான விடை: கூட்டணி =  கூட்ட + ணி ஒரு கணக்கு போட = கூட்ட கணினி, பழத்தைப் பிடுங்க = கணினி - கனி = ணி கூட்டணி ஆட்சி என்றால் பல கட்சிகளின் ஆட்சி தேர்தலில்   வென்றிடத் தெளிப்பார் பணக்கட்டை நாற்காலி பெற்றதும் நம்மை மறப்பார் பழுத்த  பழங்கள் பறித்திடும்  பண்பால் கொழுத்துப் பெருகினார்  கொல்

உதிரிவெடி 3184

** இன்றைய (12 ஜனவரி  2018) உதிரி வெடி -- வாஞ்சிநாதன் முதலில்  நேற்றைய வெடி கதையை முடித்து விடுவோம். மொத்தம் வந்த 50க்கும் மேற்பட்ட விடைகளில் 30 பேர் அவலம் என்ற தவறான விடையளித்திருந்தனர்.  சரியான விடை வந்ததும் இப்படி ஒருவர் அப்பீலே இல்லை. பாதகம் தான் சரியான விடை. ஆத்தா இன்னிக்கு பெயில் ஆயிட்டேன், இந்த அவலத்தை எங்க போயி சொல்லுவேன்? என்று கருத்துரை அளித்திருந்தார்: சரியாக விடையளித்தவர்களில் ஐந்தாறு பேர் முதலில் அவலம் என்று விடையனுப்பி அப்புறமாக மாற்றினார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கும் அதே போல் நினைத்து வெளியில் சொல்லாதவர்க்கும் இந்த சிந்தியல் வெண்பா: தோற்ற துயரில் துவண்டிட்ட ஆர்வலரே மாற்றி விடைகண்ட மாந்தரும் உண்டங்கே நூற்றுக்கு நூறில்லை காண். சரி இன்றைய வெடிக்கு வருவோம்: ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4) புதிர்

விடை 3183

** இன்று (11 ஜனவரி 2018) காலை வெளியான வெடி: அடி முதல் கடவுளைச் சுற்றுவது  நல்லதல்ல (4)  இதற்கான விடை: பாதகம் = பாதம் + க;   பாதம் = அடி; க = முதல் கடவுள். (சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல/பாதகம்) இப்புதிருக்கு 30 பேர்   விடையாக அவலம் = அ + வலம்  என்ற சொல்லை (  அ= அடி முதல்;  வலம் = கடவுளைச் சுற்றுவது) என்ற விளக்கத்துடன் அனுப்பியிருந்தனர்.  இதில் கடவுள் என்ற சொல் புதிரில் வருவதற்கு வலுவான காரணம் இல்லை. அதோடு அவலம் என்பதற்கு நல்லதல்ல என்ற பொருள் அவ்வளவு நெருங்கி வராது.

விடை 3182

** இன்றைய (ஜனவரி 10, 2018) வெடி: ஒரு தாளம் அடித்துக் காட்டக் கேட்கிறான்  நாகரிகமற்றவன் (4) இதற்கான விடை:  ஆதிவாசி = ஆதி  வாசி என்று பிரித்தால் ,   ஆதி  என்ற கர்நாடக இசையின் தாளத்தை வாசிக்கக்  கேட்பதாகப் பொருள் கொள்ளலாம்!

உதிரிவெடி 3182

** இன்றைய (10 ஜனவரி 2018) வெடி: வாஞ்சிநாதன்   ஒரு தாளம் அடித்துக் காட்டக் கேட்கிறான் நாகரிகமற்றவன் (4 ) Loading...

விடை 3181

** இன்று காலை வெளியான வெடி (3181): சத்தியமாய் அடிக்கப்படும் மலர் அணிய இறுதி விருப்பம்  (3) இதற்கான விடை:  சூடம் = சூட + ம்; சூட = மலர் அணிய;  ம்  = இறுதி விருப்பம். சூடம் அடித்து சத்தியம் செய்வது தமிழ்நாட்டில் ஒரு வழக்கம் .

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...

உதிரிவெடி 3181

** 09/01/2018 புதிர்: வாஞ்சிநாதன் சத்தியமாய் அடிக்கப்படும் மலர் அணிய இறுதி விருப்பம்  (3) Loading...

விடை 3180

**  ஜனவரி 8, 2018 இன்று காலை வெளியான புதிர் 3180:   இன்னமும்  மலராதது ஆண்டு  வடத்தை  உருவித்  தைத்த கணை (4) இதற்கான விடை:  அரும்பு = அம்பு  + ரு  ;  (ரு = வருடம் - வடம்)

உதிரிவெடி 3180

** 08/01/2018 உதிரிவெடி 2018 -- வாஞ்சிநாதன் இன்னமும் மலராதது ஆண்டு வடத்தை  உருவித்  தைத்த கணை   (4) Loading...

விடை 3179

** இன்று ஜனவரி  7, 2018 காலை வெளியான வெடி: மாடு கட்டும் மரத்துண்டில் வள்ளலைக் கட்டி  கல்யாணச் சடங்கிற்கான பாண்டம் (5) இதற்கான விடை: முளைப்பாரி = முளை + பாரி கோவலன் கண்ணகித் திருமணத்தில் முளைப்பாலிகை (இப்போது முளைப்பாரி என்று ஆகிவிட்டது) இடம்பெற்றதாகத் தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  திருமணமச் சடங்கில் மட்டுமின்றி  ஊரே கூடி நடத்தும் திருவிழாவாகவும் இது இருக்கிறது. மண் சட்டியில் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்து இருட்டில் நான்கைந்து நாளில் வைத்து முளைகட்டவைத்து ஆடி/பங்குனி மாதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது சில மாரியம்மன் கோயில்களில் நடக்கிறது. பாரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன்; முளை என்பது சமதரையில் நட்டு வைத்து அடித்து வைக்கப்பட்ட மரக் குச்சி. மாடுகளை இதில் கட்டலாம்.  ("எலே ஆறுமுவம், கெழக்கால ஒன்னொரு முளைக் குச்சி அடிச்சு வை, காளைக் கன்னை கொட்டாய்ல கட்ட வேண்டாம் வெளியிலே கட்டுவோம்".) முளைக்குச்சியில் கயிற்றால் கட்டப்பட்ட எருமை   கூடாரம் அடிப்பதற்கும் இது போல் முளையடித்து அதில் கயிற்றால் கூடாரத் துணியை இழுத்துக் கட்டுவார்கள்.  ஆங்...

சாய் சதுரங்கள்: 2

 சாய் சதுரங்கள் (rhombus) பற்றிய  முந்தைய கட்டுரையில் அதன் மூலை விட்டங்கள் (diagonals) இரண்டில்  ஒன்றின் அளவை மாற்றாமல் மற்றது எவ்வளவு பெரிதாக வருமாறும் அமைக்க முடியும் என்று பார்த்தோம். அவற்றை அமைக்கும் விதத்தையும் பார்த்தோம். இன்று  சாய்சதுரத்தின் பக்க அளவை மாற்றாமாலே எத்தனை வடிக்கலாம் என்று அலசுவோம். அப்படி மாற்றினால் கோணங்கள் மட்டும் மாறும்.  இது கற்பனை செய்வதற்கு எளிதானதுதான் ஒரு சதுரத்தையே எடுத்துக் கொள்வோம் நான்கு சம அளவுள்ள இரும்புப் பட்டைகளை மூலைகளில் திருகாணி கொண்டு இணைத்து உருவாக்கப் பட்ட சட்ட்த்தை  நினைத்துக் கொள்வோம். திருகாணியின் இறுக்கத்தைக் குறைத்தால் சட்டத்தை அதன் மூலைகளில் அசைத்துக்  கோணங்கள் மாறும். ஆனால் பக்க அளவு மாறாது (அதே இரும்புப் பட்டைதானே, மந்திரத்தால் நீண்டு வளரப் போவதில்லையே!) சட்டைகளை  மாட்டுவதற்கு இது போன்ற மரச்சட்டங்கள் ஒரு காலத்தில் இருந்தன. இதோ அதன்  படம். இதோ 5 செமீ அளவுள்ள பக்கங்களைக் கொண்ட எல்லா சாய்சதுரங்களையும்  கண்டறியும்   வரைகணித வழிமுறையைக் காண்போம். முதலில் 5 செம...

உதிரிவெடி 3179

** 07/01/2018  உதிரிவெடி 3179 -- வாஞ்சிநாதன் மாடு கட்டும் மரத்துண்டில் வள்ளலைக் கட்டி  கல்யாணச் சடங்கிற்கான பாண்டம் (5)  Loading...

விடை 3178

இன்று காலை வெளி வந்த வெடி  எண் 3178: குத்தகைக்கு முன்பு  துளையிட்ட துளையிட்டு   துளை (4 ) அதற்கான விடை :  துவாரம் = து + வாரம்.  து = துளையிட்ட துளை. வாரம் என்றால் குத்தகை (lease)  (எங்கள் வண்டியையும் மாட்டையும் வாரத்துக்கு விட்டிருக்கோம்).  

பழம் புதிர்கள் சில

வார இறுதிக்கு சில  அதிகப் படியான விஷயங்கள். உதிரிவெடி முதலில் வாட்சப் குழுவாய்த் தொடங்கிய முதல் இரு வாரங்களில்  வந்த சில புதிர்கள்: சுழி தொடர்ந்த சுடர் படர்ந்த‌ கொடி எத‌னோடும் சேராத் தனி (3) கையொடிந்த இளம்பெண்  போர்முனை வர முடிந்தது (5) கடவுள் முன்பு ஆட்சி புரிந்தவன் (5) மன்னர் தலைக்  கும்பம்   மன்னர் தலையிலிருக்கும் (4)

உதிரிவெடி 3178

** 06/01/2018 உதிரி வெடி 3178: குத்தகைக்கு முன்பு  துளையிட்ட துளையிட்டு   துளை (4 )  Loading...

விடை 3177

** இன்றைய வெடி: *சுமை சுமந்த தமிழக முதல்வர் நாடு (4)* இதன் விடை: *பாரதம்* = பாரம் + த (மிழக)

விடை 3176

** ஜனவரி 4, 2018  காலை வெளியான வெடி: வாசனை பார்க்காத நாசி முனை அதிர்ஷ்டம் (4) இதற்கான விடை: முகராசி = முகரா + (நா)சி

விடை 3175

** இன்று காலை (03 ஜனவரி, 2018) வெளியான வெடி (3175): மனைவி சேலைத் தலைப்பு வெட்ட பொருள் நஷ்டம் (3) இதைப் பின்வருமாறு பாகம் பிரித்து  உடைக்க  வேண்டும்:  மனைவி = சேலைத் தலைப்பு;  வெட்ட;  பொருள் நஷ்டம் (3) பொருள் நஷ்டம் = சேதாரம் சேலைத் தலைப்பு = சே வெட்ட ---> சேதாரம் - சே = தாரம் = மனைவி அதனால் விடை: தாரம் ----- விடையளித்தவர்கள் பட்டியல் கீழே "கருத்துகள்" என்று இடம் பெறும்.

விடை 3174

இன்று காலை (02 ஜனவரி 2018) வெளியான உதிரிவெடி 3174: சைவர்கள் வணங்கும் தென்னமெரிக்க நாட்டு மிருகம் ? (4) இதற்கான விடை: பெருமான் (பெரு, ஒரு தென் அமெரிக்க நாடு) "பெருமான்"  பெரும்பாலும் சிவன் பெயருடனும் சில சமயம் முருகன் பெயர் பின்னும்  பயன்படுத்தப்படுகிறது.

உதிரிவெடி 3174

*02/01/2018 உதிரிவெடி 3174: சைவர்கள் வணங்கும் தென்னமெரிக்க நாட்டு மிருகம் ? (4) விடையளிக்க  இங்கே சொடுக்கவும் :

விடை 3173

01/01/2018 உதிரிவெடி 3173: வெடி பத்திரம் சுருட்டைத்தலையில் வை (4)   இதற்கான விடை: பட்டாசு = பட்டா (பத்திரம்)  + சு ( சுருட்டைத்தலை)

சாய் சதுரங்கள் 1

சாய் சதுரம் (rhombus) என்பது சதுரத்தைப் போல் நான்கு பக்க அளவுகளும் சமமாக இருக்கும் நாற்கர வடிவம். ஆனால், அதன் நான்கு கோணங்களும் செங்கோணங்களாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. சாய் சதுரத்தில் மூலை விட்டங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்கோண இருசம வெட்டிகளாக அமையும் (diagonals are perpendicular bisectors of each other). இப்பண்பை அடிப்படையாகக் கொண்டு மூலை விட்டம் ஒன்றின் அளவை மாற்றாமல் பல சாய் சதுரங்களை அமைக்கலாம். இதோ அதற்கான வழிமுறை. ஒரு செவ்வகத்தை எடுத்துக் கொண்டு அதன் நான்கு பக்கங்களிலும் நடுப்புள்ளிகளைக் குறித்துக் கொள்வோம். அந்த நடுப் புள்ளிகளை வரிசையாக இணைத்தால் அக்கோடுகள் அனைத்தும் ஒத்த அளவாய் அமைந்து நாம் ஒரு சாய் சதுரத்தைப் பெறுவோம். செவ்வகத்தின் அகலம் b என்றும், உயரம் a என்றும் கொண்டால் இந்த நடுப்புள்ளிகளின் மூலம் அமைக்கப்பட்ட நான்கு கோடுகளும் a/2, மற்றும் b/2 அளவுகள் கொண்ட செங்கோண முக்கோணத்தின் கர்ண அளவுடையதாய் இருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட நாற்கரத்தில் பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் நான்கு பக்கங்களும் $\sqrt{ (a/2)^2 + (b/2)^2}$ நீளத்துடன் அமைந்து சாய்...