Skip to main content

Posts

Showing posts from 2020

உதிரிவெடி 4116

உதிரிவெடி 4116 (டிசம்பர் 20, 2020) வாஞ்சிநாதன் ************************* இரண்டாம் அணிக்கு பதிலாக வந்த கட்சித் தலைவரின் இறுமாப்பு (6) Loading…

Krypton 254

Krypton 254 (20th December, 2020) Vanchinathan ****************** This week an additional responsibility given to me at my university has been to organize some online events on 22nd December, the birthday of mathematician Ramanujan. It was a pleasure to see the work of some of the participants in the preliminary round. I am looking forward to the actual day's events. While translating Kanigel's MAN WHO KNEW INFINITY, besides learning about Ramanujan, I learnt so much about life in India at the times around 1900. I can write about a few of those things here. But I am undecided about it. In this blog along with my own attmpts at puzzle-making I wanted to expand to other things. In that way introduced Afterdark's (kaariravu) Tamil puzzle , two weeks ago and Dr X's wonderful clue last week etc. But what make me hesitate is Reader's response from the time the French were captured (7) Loading...

விடை 4115

இன்று காலை வெளியான வெடி: நடுப் பள்ளம் மறைய உப்புத் தன்மை கொண்டு இருப்பவர் (5) அதற்கான விடை: உள்ளவர் = ள்ள + உவர் ள்ள = நடுப் பள்ளம் உவர் = உப்புத் தன்மை இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 253

A few days back, 3rd December 2020 to be precise, Dr X had given an excellent and very memorable clue in THE HINDU Crossword. Divorce lawyer perhaps — one producing a definite result at court (3-7) I liked the technique used in it very much and wanted to imitate that. So it was a a pre-determined technique looking for a word (or phrase) that would be appropriate for that device. An unusual expreience for me as I normally take a word and think of ways of writing a clue (in MS Viswanathan's terminology "matter first, meter second"!). Perhaps that is the way most people do. I don't know that for sure as I haven't had occasions to discuss with other puzzle creators. Then I thought why not think of a word from the same context as Dr X did! So Divorce Lawyer gave way to MATCH MAKER and the following clue was born on 13th December: Perhaps a worker in Sivakasi who forms unions (5,5) (Sivakasi is not just a town famous for Deepavali pattaasu , it is a

உதிரிவெடி 4115

உதிரிவெடி 4115 (டிசம்பர் 13, 2020) வாஞ்சிநாதன் ************************* நடுப் பள்ளம் மறைய உப்புத் தன்மை கொண்டு இருப்பவர் (5) Loading…

விடை 4113

இன்று காலை வெளியான வெடி: இன்னொருமுறை வால்களோடு கன்று விரும்ப அணைத்து செத்துப்போ (4) அதற்கான விடை: மறுபடி = மடி (செத்துப்போ) + று, ப (கன்று. விரும்ப இவற்றின் கடை எழுத்துகள்) இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 252

Today's clue: A wizard compiler captured heartless rascal at home (6) Loading... (6) Its solution: MERLIN = ME + R(asca)L + IN Merlin, magician and wizard appears in the stories of King Arthur. Here is the page with the list of solvers.

உதிரிவெடி 4114

உதிரிவெடி 4114 (டிசம்பர் 6, 2020) வாஞ்சிநாதன் ************************* இன்னொருமுறை வால்களோடு கன்று விரும்ப அணைத்து செத்துப்போ (4) Loading…

Solution to Krypton 251

Today's clue: State of being untrammelled from without weed headless (7) Its solution: FREEDOM = FROM + (w) EED You can visit this link to find a big tamil puzzle created by Afterdark who contributes regularly to Daily English puzzle in The HINDU. Here is the page with the list of solvers.

கி. பாலசுப்ரமணியன் சரவெடிக்கான விடைகள்

சென்ற ஞாயிறன்று கி.பாலசுப்ரமணியன் உருவாக்கிய சரவெடியை வெளியிட்டிருந்தேன். அதற்கான விடைகள் இதோ: 1. இது மத்தியிலும் இருக்கும், மாநிலத்திலும் இருக்கும் அரசு 3. சிறந்தவர்கள் பெறுவது சுரமிழந்தால் சாதுவாகும் பரிசு 5. மரியாதைக்குரிய கடவுள் மைந்தருடன் நடிகனாகிறார் சிவாஜி 7. உயிர் தப்ப சுவாசிக்க இடையே ஒரு பிராணியைப் பற்றி கேள்வி எழுகிறது பசுவா 10. காவிரி எப்படியும் இங்கிருந்துதான் கிளம்புவாள் குடகு 11. உலகம் தெரியாதவர்கள் வாழச் சிறந்த இடம் கிணறு 1. கண்ணீர் விட குட வாயில் லட்சணந்தான் அழகு 2. பசுவா? சிறுத்தையா உள் மூச்சு விடு சுவாசி 3. பெண் பார்க்க காரம் பஜ்ஜி 4. பாரதியின் அடியார்க்கடியார் சுரதா (சுப்புரத்தினதாசன்) 6. இரண்டாம் கடுகம்? காரமானது மிளகு 7. கலப்பட கும்பல் ஆற்றைக் கடக்கை வைத்திருப்பது படகு 8.கிசுகிசுவா? திரும்பினால் நாகம்! வாசுகி 9. நல்லது திருக்குறள் சொல்லும் கெடுதி மறப்பது நன்று இந்தவிடைகளைக் கண்டுபிடித்தவர்கள்: ராஜா ரங்கராஜன் மீனாக்ஷி கணபதி முத்து சுப்ரமண்யம் ஜோசப் அமிர்தராஜ் ரவி சுந்தரம் லக்ஷ்மி ஷங்கர் மீனாட்சி கேசவ

மேலும் ஒரு சரவெடி பற்றி

இந்து ஆங்கில நாளேட்டில் சுமார் பதினைந்து புதிராளிகள் தினம் ஆங்கிலத்தில் மாறி மாறி புதிர்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் Afterdark என்ற பெயரில் புதிரை வெளியிடுபவர் தமிழில் முதன் முறையாக ஆக்கியிருக்கிறார். சினிமாவில் கடைசி ஆண் பாத்திரம் (4) என்று என்று அழகாகத் தொடங்கி சுமார் 32 குறிப்புகள் கொண்ட அப்புதிரில் இன்னமும் நான்கைந்துக்கு விடைகள் வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். நமக்குப் பரிச்சயமான ஹரி பாலகிருஷ்ணனின் செயலி மூலம் வடிவமைக்கப் பட்ட புதிர் என்பதால் இங்கு வருவோர்க்கு வசதியாக இருக்கும். அந்த சுவாரசியமான புதிரைக் காண இங்கே செல்லுங்கள் .

விடை 4113

இன்று காலை வெளியான வெடி: கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4) அதற்கான விடை: விரட்டு = ர + விட்டு ர = கௌரவர்களில் இரண்டாவதெழுத்து. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4113

உதிரிவெடி 4113 (நவம்பர் 29, 2020) வாஞ்சிநாதன் ************************* கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4) Loading…

Solution to Grid Puzzle

Krypton Deepavali 2020 Special Puzzle ACROSS 8. Discontinue the background scenery (4) DROP 9. This president is not a fully true politician (5) TRUMP = TRU(e) + MP 10. Free leader of Angola captured in an invasion (4) RAID =RID + A(ngola) 11. Part of Western Europe whose Southern part is in Russia? (6) (S) IBERIA 12. Generosity with one hundred Japanese money with crooked line (8) LENIENCY 13. Irritates and establishes that it is alright to be inside (8) PROVOKES = PROVES + OK 15. Fashionable to lose an electron in order to charge (6) INDICT = IN + (E)DICT (Many submission had INDUCT?INDUCE as the answer) 17. In an almanac I'd it yielding a measure of sourness (7) ACIDITY (hidden word in) alamanC I'D IT Yielding 19. Ordered to go in red and did not take notice of (7) IGNORED = GO IN RED 22. Scattered pears thrown around after sowing initially (6) SPARSE = PEARS + S(owing) 24. Half the prison contained using revolution (8)

1985ஆம் ஆண்டின் சரவெடி

சர வெடி கி. பாலசுப்ரமணியன் ******************* கி. பாலசுப்ரமணியன் 1985 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆக்கிய புதிர். தன்னுடைய வழக்கம் போல் ஒரு செய்தித்தாளின் பக்கத்தில் காலியாக இருந்த பகுதியில் அவர் எழுதியது. "இதைப் போட்டுப் பாருங்கள்", என்று என்னிடம் கொடுத்தார். நான் அப்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் அதை எழுதிக் கொண்டேன். அதுதான் இது.

தீபாவளிச் சர வெடி விடைகள்

தீபாவளிச் சரவெடிக்கு மேலும் பத்து பேர் விடையனுப்பி மொத்தம் 30 ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் முன்புதான் ஒரு குறிப்பில் குறையிருந்ததை கவனித்தேன். வெட்டி ஒட்டும்போது விடப்பட்டது. " 5. இரு கால்களிடையே ஒரு பாதி நடக்கவிருப்பது (4) " என்பது 5. இரு கால்களிடையே ஒரு பாதி இறுதியாக வந்து நடக்கவிருப்பது (4) என்று இருக்க வேண்டும். ******************************** குறுக்காக 3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5) ஏவியவன் = ஏன் + வி ரைவாக ய மனிடம் வ ராமல் 6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4) கல்லடி = கடி + வெல்லம் - வெ ம் 7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4) லாகவம் = கலாம் + வ [ருங்கால] (லாவகம் என்றும் எழுதப்படுகிறது) 8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6) தந்திரமாக = தந்தி + கரமா 13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6) ச ெம்பரத்தை = செ [யலாளர்] + ரம்பத்தை 14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4) எண்பது = எது + பண் =

கி. பா. செய்த வெடி ஒன்று

கி.பா. நினவுக்கு அஞ்சலியாக செய்த தீபாவளிச் சரவெடியை இன்னமும் பலர் விடை கண்டு அனுப்பியுள்ளார்கள். இன்னமும் ஒரு நாள் கழித்து விடையனுப்புகிறேன். மாணவனாக 1984/85இல் வாரம் நான்கைந்து முறை கி.பா. அவர்களை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்து கணிதம் கற்றிருக்கிறேன். அப்படி அவரிடம் கற்றதால் பி எச்டி நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று எனது பயணம் இனிதாகத் தொடங்கியது. அந்த நாட்களில் அவ்வப்போது பல பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். ஹிந்து நாளிதழின் ஆங்கிலக் குறுக்கெழுத்துப் புதிரை அவர் போடுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு நாள் தமிழிலே புதிர் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அப்படி மூன்று புதிர்களை அவர் தனது வழக்கம் போல் ஏதோ அச்சடித்த துண்டு பிரசுரத்தின் மூலையில் கட்டம் போட்டு என்னிடம் விடை கண்டுபிடிக்கக் கொடுத்தார். (அவர் வைத்துக் கொள்ளவில்லை). அதை நான் எனது கணித நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டேன். அதிலிருந்து ஒற்றைக் குறிப்பு இதோ: மணி ஒன்று பல்லை விளக்கவா? (3)

தீபாவளிச் சரவெடி இதுவரை விடையளித்தவர்கள்

தீபாவளிச் சரவெடி இதுவரை விடையளித்தவர்கள், 17 பேர் இன்னும் 15 மணிநேரம் இருக்கிறது, மற்றவர்கள் முந்துங்கள் Lakshmi Shankar Kadhirmadhi Raja Rangarajan Dr Ramakrishna Easwaran S P Suresh S R Balasubramanian R Narayanan A Joseph Amirtharaj Akilandeswari Sridharan SathishBalamurugan Ramki Krishnan Meenakshi Ganapathi Padma Sankarasubramaniyan Vanathy V N Krishnan Kanagasabapathy Lakshmi Meenatchi Nagarajan Appichigounder M K Raghavan மேலும் ஐந்து பேர் ஒரே பிழையுடன் அனுப்பியுள்ளனர்.

Krypton -- GRID PUZZLE

Krypton Deepavali 2020 Special Puzzle My trouble yesterday with the crossword building tool has been is over. The authir of the tool Har Ballakrishnan stepped in, did the construction the right way and also pointed out an error and omissions. Here comes the grid with online solving aid. ACROSS 8. Discontinue the background scenery (4) 9. This president is not a fully true politician (5) 10. Free leader of Angola captured in an invasion (4) 11. Part of Western Europe whose Southern part is in Russia? (6) 12. Generosity with one hundred Japanese money with crooked line (8) 13. Irritates and establishes that it is alright to be inside (8) 15. Fashionable to lose an electron in order to charge (6) 5. Fashionable to lose an electron in order to charge (6) 17. In an almanac I'd it yielding a measure of sourness (7) 19. Ordered to go in red and did not take notice of (7) 22. Scattered pears thrown around after sowing initially (6

தீபாவளிச் சரவெடி 2020

சென்ற வாரம் கி.பா. என்ற பெயரில் இங்கே பங்கேற்று வந்த முனைவர் கே. பாலசுப்ரமணியன் காலமனார். அவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியர், பின்னர் ஆராய்ச்சிப் பாதையில் நான் அடியெடுத்து வைக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். மற்றும் என் ஒருவனுக்காகத் தமிழில் குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்கியவர். பின்னர் எனது மாமனாரும் ஆனவர். அவர் நினைவாக இன்றைய சரவெடி. விடைகள் 18/11/2020 இரவு 9 மணிக்கு. Krypton English Grid puzzle will be made available some time between 10 am and 11 am today. குறுக்காக 3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5) 6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4) 7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4) 8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6) 13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6) 14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4) 15. வெறுப்புற்ற கந்தல் ஓரங்கிழிந்து சரீரத்தின் மேல் பகுதியை மூடும் (4) 16. மழையில் தோன்றியது மழையிலிருந்து

Solution to Krypton 249

Today's clue: Loud noise resulting from kinky sex in pool (9) Its solution: EXPLOSION , anagram of SEX IN POOL. The solution is admittedly not as colourful as the clue! Perhaps if had POPULATION EXPLOSION as the solution clue and solution might have been worded equally colourful. Leave it to you think of modifying it. I am very slow to understand the device named reverse anagram employed in The Hindu crossword frequently. When I undestand that bettter I'll come up with one. Here is the page with the list of solvers.

விடை 4112

காலை வெளியான வெடி ஊர் தண்டிக்க முதல் பாண்டியன் வாலறுப்பு (3) அதற்கான விடை: தவழு = த + வழு த = தண்டிக்க, என்பதன் முதலெழுத்து வழு = வழுதி (பாண்டிய மன்னர்களுக்கான பெயர்),"தி" என்ற வாலின்றி வந்துள்ளது. ஏதோ சாண்டில்யன் கதைகளில் பெருவழுதி, இளவழுதி என்று படித்த ஞாபகம். ஊர்தல் என்றால் தவழுதல் (குழந்தை ஊர்ந்து சென்றது) இன்றைய வெடி எப்போதோ செய்திருந்த பழம்புதிரைச் சற்று மாற்றியமைத்தது. இதே சொல்லுக்கு அப்போது ஊர் தண்டித்த முதல் குற்றம் (3) என்று குறிப்பை எழுதியிருந்தேன். வழு = குற்றம்; சிறையிலடைக்கும்படியான குற்றமில்லை, இலக்கணப் பிழையெனும் குற்றங்களை வழு என்பார்கள்). இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4111

காலை வெளியான வெடி உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்தபவன் (7) அதற்கான விடை: ஆதரித்தவன் = ஆதவன் + தரித் ஞாயிறு = ஆதவன் உரித்ததை என்ற சொல்லை உரிக்க (வெளிப்புறமுள்ள எழுத்துகளை நீக்கக்) கிடைப்பது "ரித்த". இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4111

உதிரிவெடி 4111 ( நவம்பர் 1, 2020) வாஞ்சிநாதன் ************************* உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்த ப வன் (7) Loading… (5)

விடை 4110

இன்று காலை வெளியான வெடி தேவைப்படாத நாமின்றி மங்கல வாத்தியத்தைச் சூழ்ந்து தீப்பிடிக்கத் தோன்றும் (5) அதற்கான விடை: பயனற்ற = பற்ற (தீப்பிடிக்க) + நாயனம் - நாம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4110

உதிரிவெடி 4110 ( அக்டோபர் 25, 2020) வாஞ்சிநாதன் ************************* சுவராசியமாக நெட்ப்லிக்ஸில் ஒரு தொடரை இரவில் வெகு நேரம் பார்த்ததால் காலை எழுந்த பின் விட்டுப்போன வேலையில் கவனம் செலுத்திப் புதிரமைப்பதை மறந்து விட்டேன். வாட்சப்பில் பத்மா நினவூட்டிய பின்னரே அவசரப்பட்டு இதைச் செய்துள்ளேன். தேவைப்படாத நாமின்றி மங்கல வாத்தியத்தைச் சூழ்ந்து தீப்பிடிக்கத் தோன்றும் (5) Loading… (5)

Solution to Krypton 246

Today's clue: It is important to be buried and resign if I can't (11) Its solution: SIGNIFICANT = reSIGN IF I CANT Afterwards I thought of possibly a better way of formulating this clue: It is important to cover the design if I can think (11) But that is hindsight. Here is the page with the list of solvers.

விடை 4109

இன்று காலை வெளியான வெடி உணர்ச்சியில்லாத நடிகன் இரண்டாவதாக வந்து வெயிலில் நாடுமிடம் (5) அதற்கான விடை: மரத்தடி = மரத்த + டி ஆவலுடன் மீண்டும் தினசரி இப்புதிர்களை வெளியிடும்படி கேட்டவர்க்கு நன்றி. இன்னமும் சில மாதங்கள் இப்படித்தான் நேரம் நெருக்கடியாக இருக்கும். பின்னர் யோசிக்கிறேன். இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4109

உதிரிவெடி 4109 ( அக்டோபர் 18, 2020) வாஞ்சிநாதன் ************************* உணர்ச்சியில்லாத நடிகன் இரண்டாவதாக வந்து வெயிலில் நாடுமிடம் (5) Loading…

விடை 4108

இன்று காலை வெளியான வெடி எனவே பெரிய மரத்தில் ஆளுக்கொன்று (4) ) அதற்கான விடை: ஆதலால் = ஆல் + தலா ஆல் = பெரிய மரம் தலா = ஆளுக்கொன்று (?) புதிரையிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் இதில் பொருள்குற்றம் இருப்பதை உணர்ந்தேன். "தலா" என்றால் "ஆளுக்கு" என்றுதான் பொருள். தலா ஐந்து என்றால் "ஆளுக்கு ஐந்து" என்பதுதான் வழக்கு. அடுத்த வாரம் இன்னமும் கொஞ்சம் யோசித்துப் பிழையில்லாமல் செய்கிறேன். இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 244

Today's clue: Mixed rice consumed by the selflessly devoted is costly (8) Its solution is PRECIOUS PIOUS -I with with anagram of RICE inside. For an hour the puzzle was presented in an erroneous form there was no indication to omit I. I apologize for being present/presented in that way! Here is the page with the list of solvers.

விடை 4107

இன்று காலை வெளியான வெடி இவ்விடம் காண‌க் கிடைக்காத பந்து த‌லை சாய நாடு (6) அதற்கான விடை: இங்கிலாந்து = இங்கிலா (இங்கு இல்லாத) + பந்து - ப இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4107

உதிரிவெடி 4107 ( அக்டோபர் 4, 2020) வாஞ்சிநாதன் ************************* இவ்விடம் காண‌க் கிடைக்காத பந்து த‌லை சாய நாடு (6) Loading…

Solution to Krypton 243

Today's clue: Fragments from exploding mines scattered initially there inside (11) Its solution is SMITHEREENS = anagram of "MINES + S(cattered)" with THERE placed inside. Here is the page with the list of solvers.

விடை 4106

இன்று காலை வெளியான வெடி பழுதை நீக்கிப் பொலிவுறச் செய்து நேற்று வந்த மோகம் (6) அதற்கான விடை: புதுப்பித்து = புதுப்பி + த்து = புது + பித்து இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4106

உதிரிவெடி 4106 (செப்டம்பர் 27, 2020) வாஞ்சிநாதன் ************************* பழுதை நீக்கிப் பொலிவுறச் செய்து நேற்று வந்த மோகம் (6) Loading…

விடை 4105

இன்று காலை வெளியான வெடி தோழர் சாக்கிய நாயனார் வேலை செய்து நண்பகல் தூங்கினார் இறுதியாக (4) அதற்கான விடை: நண்பர் = நண்பகல் ‍கல் + ர் நாயன்மாரின் ஒருவரான சாக்கிய நாயனார் குணம் போல் கல்லெறிவது (சிவலிங்கத்தை வழிபட), நண்பகல் என்பதை "நண்ப" என்று ஆக்கும். இறுதியாகத் தூங்கினார் என்பது "ர்". போராடும் தொழிலாளர்கள் போல் கல்லெறிந்ததால் தோழர் என்று அழைக்கப்பட்டார். இந்த தோழர் செங்கொடியேந்தும் உழைக்கும் வர்க்கத்தின் நன்மதிப்பைப் பெறப்போவதில்லை. கொஞ்ச நேரம் மட்டும் வேலை செய்து பகலிலேயே தூங்கினால் தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடிய பட்டுக்கோட்டையார் எப்படி இவரை ஏற்றுக்கொள்வார்? இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4105

உதிரிவெடி 4105 (செப்டம்பர் 20, 2020) வாஞ்சிநாதன் ************************* தோழர் சாக்கிய நாயனர் வேலை செய்து நண்பகல் தூங்கினார் இறுதியாக (4) Loading…

விடை 4104

இன்று காலை வெளியான வெடி தினமும் மணக்கும் தோள் துடிக்கப் புகும் (5) அதற்கான விடை: நாள்தோறும் = நாறும் + தோள் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 241

Today's clue: What one excels in is disturbed around here consequently (9) (10) Its solution is THEREFORE . But the clue is wrong. Yet many people have been able to figure out the answer despites my mistake. Until it was pointed out Unknown commenter I did not relaise the mistake. Here is the page with the list of solvers.

விடை 4103

இன்று காலை வெளியான வெடி பின் வாங்கினால் துரத்தும் பகைவன் முன்னே (4) அதற்கான விடை: எதிரில் = எதிரி + ல் எதிரி = பகவன் ல் = "பின்" வாங்கினால் இதற்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4103

உதிரிவெடி 4103 (செப்டம்பர் 6, 2020) வாஞ்சிநாதன் ************************* பின் வாங்கினால் துரத்தும் பகைவன் முன்னே (4) Loading…</iframe

Solution to Krypton 239

Today's clue: To woo is easy without a favour (8) Its solution: COURTESY = COURT + E(a)SY 8/30/2020 6:06:09 Sandhya Courtes y 8/30/2020 6:09:58 S.Parthasarathy COURTESY 8/30/2020 6:15:46 Ravi Subramanian Courtesy 8/30/2020 7:18:11 Ramki Krishnan COURTESY 8/30/2020 7:33:53 Kesavan Courtesy 8/30/2020 10:53:53 A. Joseph Amirtharaj Courtesy (Court + easy - a) 8/30/2020 15:44:18 M K RAGHAVAN. COURTESY: To Woo= court easy without a = esy favour = court+esy = courtesy 8/30/2020 19:45:50 V N Krishnan Courtesy

விடை 4102

இன்று காலை வெளியான வெடி: பன்னிரண்டு ஊனமுற்றோரை நகரச் செய்வது சக்கரங்களின்றி நகரும் (3) அதற்கான விடை: கலம் ஊனமுற்றோரை நகரச் செய்வது = மரக்கால் ; பன்னிரண்டு மரக்கால் = ஒரு கலம் (அரை மூட்டை) கலம் = கப்பல் (சக்கரங்களின்றி நகரும்) இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் 5 மட்டுமே: 8/30/2020 7:39:34 மீனாக்ஷி ஓரடி பன்னிரண்டு=ஓரடி 8/30/2020 7:44:43 மீ கண்ணன் காலம் சக்கரங்களின்றி நகர்வது காலம் 12 மாதங்களை நகரச்செய்வது காலச்சக்கரம் 8/30/2020 11:18:17 அகிலா ஸ்ரீ தரன் பரடு பன்னிரண்டு - ன், னி, ண். சக்கரம் போல் சுழியுள்ள எழுத்துகள் 8/30/2020 11:20:52 பானுமதி நேரம் 12 மணி (முள்) நகர செய்வது 8/30/2020 19:14:42 Nagarajan Appichigounder வண்டி சக்கரவண்டி- சக்கர

உதிரிவெடி 4102

உதிரிவெடி 4102 (ஆகஸ்டு 30, 2020) வாஞ்சிநாதன் ************************* பன்னிரண்டு ஊனமுற்றோரை நகரச் செய்வது சக்கரங்களின்றி நகரும் (3) Loading…</iframe

Solution to Krypton 2308

Today's clue: Against revolutionary capturing nun, not right (8) Its solution: RESISTED = RED + SISTER-R Here is the list of solutions submitted. 8/23/2020 6:39:52 KB RESISTED 8/23/2020 6:56:09 Akila sridharan Resisted (sister + red -r) 8/23/2020 6:59:48 Ramki Krishnan RESISTED 8/23/2020 7:10:54 A. Joseph Amirtharaj Resisted (Red + Sister - r) 8/23/2020 7:29:30 S.Parthasarathy RESISTED 8/23/2020 7:34:46 Dr. Ramakrishna Easwaran RESISTED 8/23/2020 8:03:37 Suba Srinivasan Resister 8/23/2020 8:26:49 Dhayanandan Bhaskar Resisted 8/23/2020 8:38:02 S R. Balasubramaniam RESISTED 8/23/2020 14:21:38 Kesavan Resisted 8/23/2020 17:17:17 M.K.RAGHAVAN. Resisted 8/23/2020 20:24:19 Baloo M Boundless

விடை 4101

இன்று காலை வெளியான வெடி: காளை ஓட பெரிய பழுவேட்டரையரின் மனைவி பயத்தில் சூடிய மலர் (5) அதற்கான விடை: அனிச்சம் = அச்சம் + நந்தினி- நந்தி நந்தி = காளை கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையரின் மனைவி, நந்தினி. விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்: மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4101

உதிரிவெடி 4101 (ஆகஸ்டு 23, 2020) வாஞ்சிநாதன் ************************* காளை ஓட பெரிய பழுவேட்டரையரின் மனைவி பயத்தில் சூடிய மலர் (5) Loading…</iframe

Solution to Krypton 237

Today's clue: Sacred staff reportedly emphasizing the entire thing (8) Its solution: HOLISTIC ("HOLY STICK") Here is the list of solvers for this puzzle. (Please copy-paste the following web address) Thanks for the appreciation from Raghavan and the kind words from RKE. But I am nowhere near the prolific compilers like Gridman, Arden, Dr X, Hypatia and many smart people whose works appear in The Hindu. https://docs.google.com/spreadsheets/d/1VnWwTRSCb_eXC_-ypuWnjUVJbfUX5mupEy4UI3aRcwI/edit?usp=sharing

விடை 4100

இன்றைய வெடி: கணவரை இறுதியாகத் தழுவி மயங்கும் மனைவி கடுங்குளிர் காலத்தில் காணலாம் (5) அதற்கான விடை: பனித்திரை = பத்தினி + ரை; பத்தினி = மனைவி ரை = (கணவ)ரை நீங்களெல்லாம் ரசித்து இங்கே கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னமும் உங்கள் ஆர்வத்தைத் தூண்ட கோடைக்காலத்திலும் கண‌வனிடம் மயங்கும் மனைவி என்றா அல்லது மனைவியிடம் மயங்கும் கணவன் என்றா எப்படிப் புதிரமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்புதிருக்கு வெளிவந்த விடைகளை இங்கே காணலாம். (Please copy and paste the following address in your web browser) https://docs.google.com/spreadsheets/d/1vwN4vSLfQJoPgE8jlwSX5K2eSMwQviKR9uLAnbBNJ6Q/edit?usp=sharing

உதிரிவெடி 4100

 உதிரிவெடி 4100 (16 ஆகஸ்ட் 2020) வாஞ்சிநாதன் ********************* கணவரை இறுதியாகத் தழுவி மயங்கும் மனைவி கடுங்குளிர் காலத்தில் காணலாம் (5)   Loading…  

Soluton to Krypton 236

 Today's clue: What ends a sentence with setter in a state magazine (10)  Its solution : Periodical = PERIOD + I + CAL   As the Google form was not available there could be more people who could have got the answers.   8/9/2020 6:31:06        A. Joseph Amirtharaj    Periodical 8/9/2020 7:11:31        Ramki Krishnan  Periodical 8/9/2020 7:13:55        Dr.Ramakrishna Easwaran PERIODICAL 8/9/2020 8:17:32        Sandhya Periodical 8/9/2020  8.42 (by WhatsApp)   Kesavan   Periodical 8/9/2020 9:29:59        Dhayanandan Bhaskar     Periodical 8/9/2020 16:44:09       Akila sridharan Time period 9/9/20 8/9/2020 18:10:22       Ambika  Periodical (period+i+cal) 8/9/2020 20:27:53       Sundar Vedantham        Periodical        

விடை 4099

இன்று காலை வெளியான வெடி: ஊஞ்சலில் காண்பது முருகனுக்கும் பிரம்மாவுக்கும் இருக்கும் (3) அதற்கான விடை: பலகை = பல  கை (கள்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 236 (9th August 2020)

 <div style="text-align: center;"> <b>Krypton 236 (9th August 2020)</b></div> <div style="text-align: center;"> <b>Vanchinathan</b></div> <div style="text-align: center;"> <b>************************</b></div> <br /> <br /> <span style="color: #990000;"> What ends a sentence with setter in a state magazine (10) </span><br /> <br /> <iframe frameborder="0" height="604" marginheight="0" marginwidth="0" src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfpBx6nxdlN-pZ2SXO9oXXBW_uReY52tl16Z7Rt0EZ214Paww/viewform?embedded=true" width="640">Loading...</iframe><br /></div>

உதிரிவெடி 4099

 உதிரிவெடி 4099  (ஆகஸ்ட்  9, 2020) வாஞ்சிநாதன் ********************** ஊஞ்சலில் காண்பது முருகனுக்கும் பிரம்மாவுக்கும் இருக்கும் (3)   <iframe src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4GJLHm9Dz9eul4pn8kx32zftfhgPSUgtJ8Sr7o6PALOH5WQ/viewform?embedded=true" width="640" height="677" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading…</iframe>

விடை 4098

இன்று காலை வெளியான வெடி: அதிகாரத்தைத் தருவது பணிவா, தவப்பயனா, விவேகமா? எல்லாம் தலையெழுத்துதான்  (3) அதற்கான விடை: பதவி = ப, த, வி (மூன்று சொற்களின் முதல் எழுத்துகளால் அமைந்தது) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Krypton 235 (2nd August 2020)

Krypton 235 (2nd August 2020) Vanchinathan *************** Frank to organize a party without without one leader (6) <iframe src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf6SYrWMBYtpRLwgMcXqe3NRnMWa8Um06-zR3gG00YtO7P6bA/viewform?embedded=true" width="640" height="622" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading…</iframe> Notification from Blogger  : Blogger’s new interface is now available automatically. If you want to revert back to the legacy interface, use “Revert to legacy Blogger”. The legacy interface will be available until August 24. Please file any critical issues encountered. Read more. Possibly some incompatibility with updated software and the old HTML code which I have been using all along. Kindly use last week's Google form to submit your answer.

உதிரிவெடி 4098

உதிரிவெடி 4098  (ஆகஸ்ட்  2, 2020) வாஞ்சிநாதன் ********************** மூன்று மாதங்களாகத் தொடர்ந்து இப்பதிவின் கருத்துரைப் பகுதியில் பழைய தென்றல் இதழ்களில் வெளிவந்த புதிர்களை ஆர்வத்துடன் வெளியிட்டு வந்த நமது நண்பர் மு க ராகவன் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் நலமடைந்து எப்போதும்போல் இயங்க வேண்டுவோம். அதிகாரத்தைத் தருவது பணிவா, தவப்பயனா, விவேகமா? எல்லாம் தலையெழுத்துதான்  (3) [I see the form is not visible. Please use last week's form; possibly the changes in Blogger interface  has made the existing HTML code ineffective; until I learn what modifications to do, kindly use last week's form to submit your answer  ]. <iframe src="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf26dM5t4MZbySRtsbQTIOrTyhos31_XwBkcQ1xjM85_PdOjg/viewform?embedded=true" width="640" height="843" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading…</iframe>

விடை 4097

இன்று காலை வெளியான வெடி: ஏறத்தாழ ஏழு வாரங்கள்  கண்ட கமலம்  இரண்டும் ஒன்றில்லையெனில் மாற்று  (5) அதற்கான விடை: மண்டலம்  = 48 நாட்கள் (சித்த மருத்துவர்கள் "இந்த மருந்தை ஒரு மண்டலம் சாப்பிடுங்க" என்று சொல்லியபோது தெரிந்து கொண்டது)  = கண்ட + கமலம் , இரண்டு சொற்களிலும் 'க' இல்லாமல் மாற்ற விடை வரும். இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 4097

உதிரிவெடி 4097  (ஜூலை 26 , 2020) வாஞ்சிநாதன் ********************** ஏறத்தாழ ஏழு வாரங்கள்  கண்ட கமலம்  இரண்டும் ஒன்றில்லையெனில் மாற்று  (5) Loading…

Krypton 234

Krypton 234  (26th July 2020) Vanchinathan *******************   IRS  is involved  with state and central tax  planners (11) Loading...

Solution to Krypton 233

Today's clue: Headmaster is head in  first grade?  That is false (10)    Its solution:   MISLEADING = M + IS + LEAD + IN + G M = Head 'm'aster LEAD = head G  = first 'g'rade Here is the list of solutions sent for this puzzle.

விடை 4096

இன்று காலை வெளியான வெடி: மின்னல் இடையோடு காற்றில் மிதப்பது மகிழ்ச்சியான முகத்தில் தோன்றும் (4)   அதற்கான விடை:  புன்னகை = புகை + (மி)ன்ன(ல்) காற்றில் மிதப்பது புகை (சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எம்எஸ்வியே பாடிய பாடல் நினைவுக்கு வருகிறதா?) பழையபுதிர்கள் இங்கே வெளிவருவதில்  புதிர் பற்றி கொஞ்சம் விளக்கம்: தமிழக அரசுக்கு முதல்மாதம் என்ற தை என்ற குறிப்பு எப்படி இக்காலத்துக்குப் பொருந்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் சிலர். விடைகளை இங்கே காணவும். மெட்ராஸ் என்ற ஒரு நகரின் பெயரை 1997இல் வேறு பெயருக்கு அரசாங்கத்தினர் மாற்றினார்கள். அந்த மாற்றம் சில நாட்களுக்கு என்று அறிவிக்கப்படவில்லை. அதே போல்தான், அரசினர் புத்தாண்டு சித்திரையிலிருந்து தை மாதம் என்று அறிவித்தது சில காலங்களுக்கு என்று யாரும் நினைக்கவில்லை. அதுபோல் இதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தோம், சரி நான் மட்டும் நினைத்தேன்.  ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகையின் பெயர் "குமாரி கமலா" என்று வரும். அவர் ஒரு நாள்  கிழவியாகப் போகிறார் என்று தெரிந்தும் குமாரி கமலா என்று அவர்கள் எழுதியது எவ்வளவு பெரிய குற்றம்?

உதிரிவெடி 4096

 உதிரிவெடி 4096 (ஜூலை 19, 2020) வாஞ்சிநாதன் ********************* மின்னல் இடையோடு காற்றில் மிதப்பது மகிழ்ச்சியான முகத்தில் தோன்றும் (4)   Loading…  

Solution to Krypton 232

Today's clue: Approval for each young woman to behead a wild animal (10)   Its solution:  PERMISSION  = per + Miss + (L) ion Here is the list of all the solutions received today.

விடை 4095

இன்று காலை வெளியான வெடி: பாதி கூர்மை போக தலை சீவ சீப்பு கேள்விக்கு சரியால பதிலை அளிக்காதே (4) அதற்கான விடை:  மழுப்பு = மழு(ங்க) +  (சீ) ப்பு   கூர்மை போக = மழுங்க‌ தலை சீவ சீப்பு = ப்பு இதற்கு விடையளித்தவ்ர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4095

உதிரிவெடி 4095  (ஜூலை 12, 2020) வாஞ்சிநாதன் *******************     பாதி கூர்மை போக தலை சீவ சீப்பு கேள்விக்கு சரியான‌ பதிலை அளிக்காதே (4) Loading…

Solution to Krypton 231

Today's clue: Distribute  software before speech  with audience initially missing (9) Its solution: APPORTION = APP + ORATION - A (udience) Visit this page to see the solutions sent today.

விடை 4094

இன்று காலை வெளியான வெடி: தினம் தின்றால் இடை சிக்கிட பிடிவாதம் (5) அதற்கான விடை: அன்றாடம் = அடம் + (தி) ன்றா (ல்) தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு பெருத்து இடை சிக்கி உடம்ப்பைப் பிடிக்கும்படி வாதம் வரும்ம் என்பதால் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவது நல்லது! இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

விடை 4093

இன்று காலை வெளியான வெடி: நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த  உயர்ந்த குணத்தினள் (4) அதற்கான விடை:  உத்தமி   = உமி +  (பி)த்த (ளை) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

உதிரிவெடி 4093

உதிரிவெடி 4093 (ஜூன் 28, 2020) வாஞ்சிநாதன் ********************** நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த  உயர்ந்த குணத்தினள் (4) Loading…

Solution to Krypton 229

Today's clue: Friend with  inverted  nose right inside  is about body appearance (8) Its solution:  PERSONAL = PAL + NOSE + R Please visit this page to see the answers sent for this clu.

விடை 4092

விடை 4092 இன்று காலை வெளியான வெடி: உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)  அதற்கான விடை:    காவியம் = காயம் (உடல்)  + வி (விற்பவளை என்பதன் முதலெழுத்து) மஹாகவி என்ற பட்டம் ஒரு காவியம் படைத்தவர்க்கே உரியது என்பது  மரபு.  அதனால்  கல்கி, பாரதியாரை, தேசிய கவிதான், மஹாகவி என்று அழைப்பது சரியில்லை என்று வாதிட்டார்.  அதைப் பற்றிய நூல் இதோ . பின்னர் பாரதியாருக்கு எட்டயபுரத்தில்  மணி மண்டபம் கட்டும் எண்ணத்தை ஆதரித்து,  திட்டமிட்டதற்கு மேலாக நிதி சேர்த்தவரும் கல்கியே  என்பதை இங்கே சுட்டப்பட்டுள்ள  தினமணி கட்டுரையில் காணலாம். இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4092

உதிரிவெடி 4092 (21/06/2020) வாஞ்சிநாதன் **************** உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)   Loading…

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) மற்றொரு புறம் அச்சொல் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டு  அக்குக்கும்

விடை 4091

இன்று காலை வெளியான வெடி: கேட்பதற்கு ஞானமில்லா கிராமத்து மக்கள் பரதன் நிராகரித்தது (6) அதற்கான விடை: அரியாசனம் = அரியா+சனம் [அரியா  --> கேட்பதற்கு அறியா போலிருக்கும்] இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 228

Today's clue: Plaintiff initially got up confusing court and the district attorney (10) Its solution: PROSECUTOR = P (plaintiff, initially)  + ROSE (got up)                                                 + CUTOR (confused court) Thanks to the kind comment by M K Raghavan. Currently  there is no plan to do make regular clues. Yesterday  I was watching an Italian legal drama in Netflix, and the word prosecutor kept coming. As the word split so naturally an idea for the clue emerged. Visit this page for the list of  solvers .

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 4090

உதிரிவெடி 4090  (ஜூன் 7 , 2020) வாஞ்சிநாதன் **********************   ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) Loading…

விடை 4089

இன்று காலை வெளியான வெடி:  பூசாரி செய்வது நெருப்பு காணா தலை போகும் வேதனை (5) அதற்கான விடை: தீபாராதனை  = தீ +  பாரா + தனை தீ = நெருப்பு பாரா= காணா தனை = தலை போகும் வேதனை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் .

உதிரிவெடி 4089

  உதிரிவெடி 4089  (மே 31 , 2020) வாஞ்சிநாதன் **********************   பூசாரி செய்வது நெருப்பு காணா தலை போகும் வேதனை (5) Loading…

விடை 4088

இன்று காலை வெளியான வெடி: மெதுவாக இடையை வளைத்து ஓர்  ஆசாமி சாமி முன்னே தேவாரம் பாடும் உரிமை கொண்டவர் (4) அதற்கான விடை: ஓதுவார் = (மெ)துவா(க) + ஓர் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4088

உதிரிவெடி 4088  (மே 24 , 2020) வாஞ்சிநாதன் ********************** மெதுவாக இடையை வளைத்து ஓர்  ஆசாமி சாமி முன்னே தேவாரம் பாடும் உரிமை கொண்டவர் (4) Loading…

விடை 4087

இன்று காலை வெளியான புதிர்: உயர் பதவியில் இருப்பவர்க்கு உரியது வள்ளுவருக்கு  இல்வாழ்க்கையாக  இருக்கலாம் (5) அதற்கான விடை:  அதிகாரம்  ( இல்வாழ்க்கை என்பது திருக்குறளின் 133 அதிகாரங்களில் ஒன்று) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4087

உதிரிவெடி 4087 (மே 17, 2020) வாஞ்சிநாதன் *********************** உயர் பதவியில் இருப்பவர்க்கு உரியது வள்ளுவருக்கு  இல்வாழ்க்கையாக  இருக்கலாம் (5) Loading…

விடை 4086

இன்று காலை வெளியான வெடி எதிர்பார்ப்புடன்  சக்தி வந்து ஆட பக்தன் இறுதியாக மயக்கம் (5) அதற்கான விடை : ஆவலுடன் = வலு + ஆட + ன் வலு = சக்தி ன் = (பக்த)ன் சக்தி வந்து ஆட என்றாலே "ஆவலுட" என்று ஆகும். அதனால் "மயக்கம்" தேவையில்லை என்கிறார் கேசவன். சாமி வந்து ஆடி முடிந்த பின் பக்தர்கள் மயங்கி விழுவதுதானே நடக்கும் என்று எழுதிவிட்டேன். இவ்வார வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 4086

உதிரிவெடி 4086 (மே 10, 2020) வாஞ்சிநாதன் ****************** எதிர்பார்ப்புடன்  சக்தி வந்து ஆட பக்தன் இறுதியாக மயக்கம் (5) Loading…

விடை 4085

இன்று காலை வெளியான வெடி: வேடர்களின் சாதனம் வாய்விட்ட தீங்கிலாத சொல் படபடக்கும் குணத்தது (4) அதற்கான விடை: கண்ணிமை = கண்ணி + மை கண்ணி = பறவைகளைப் பிடிக்க வேடர்கள் பயன்படுத்துவது தீங்கிலாத சொல் = வாய்மை (திருவள்ளுவர்) மை = வாய்மை ‍- மை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

உதிரிவெடி 4085

உதிரிவெடி 4085  (மே 3, 2020) வாஞ்சிநாதன் ********************** வேடர்களின் சாதனம் வாய்விட்ட தீங்கிலாத சொல் படபடக்கும் குணத்தது (4) Loading…

விடை 4084

இன்று காலை வெளியான வெடி: பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)  அதற்கான விடை: தொடக்கம் = தொக்க + டம் டம் = மாடம் ‍- மா (பெருமை) தொக்க = மறைந்திருக்க‌ பளிங்கு மாளிகை = பளிங் கால் கட்டிய மாளிகை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; " ..ஆல் கட்டிய .." என்பது மறைந்து, (தொக்கி) இருக்கிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4084

உதிரிவெடி 4084  ஏப்ரல் 26 2020 வாஞ்சிநாதன் ***********************  பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)   Loading…

விடை 4083

விடைக்கு வருமுன்:    உதிரிவெடியை வழக்கம்போல் தினசரி அளிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன்  இன்று  கருத்துரைப் பகுதியிலும், தனியாக என்னுடன் தொடர்பு கொண்டும்  கேட்டவர்கள் எல்லோருக்கும்  நன்றி.   சொற்கள் ஒவ்வொன்றிலும்  சுவையான பல விஷயங்கள்  ஒளிந்துள்ளன. அதை ரசிக்கும் ஆர்வலர்களான உங்களை இந்த வலைப்பக்கங்களின்  மூலம் தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உதிரிவெடி என்பது  சொல்லழகை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்ள ஒரு  வழி.  அதைத் தவிர வேறு வழிகளில் சொற்களோடு விளையாட முடியுமா என்று    தோன்றியது.   காசா, பணமா?  அந்த விபரீத ஆசையைப் பரீட்சை செய்து பார்த்துவிடுவோமே!   ஆனால் அவையெல்லாம் பதினைந்து நிமிடத்தில் உதிரிவெடிபோல் தயாரிக்க முடியுமா, தெரியவில்லை.  அதனாலேயே வாரமொரு பதிவு என்று ஜாக்கிரதையாகக்  வைத்துக் கொள்வோம்.  வரும் ஞாயிறு காலை வழக்கம் போல் ஆறு மணிக்கு இங்கே எட்டிப்பாருங்கள். ***** சரி இன்றைய புதிருக்கு வருவோம்.   பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவன் முன்னிருப்பது மக்களே (6) இதற்கான விடை: ஜனமேஜயன்  (ஜனமேஜெயன்) = ஜனமே + ஜயன் இவன் அபிமன்யுவின் பேரன். ஒரு பாம்பு மூலம