Skip to main content

விடை 4095

இன்று காலை வெளியான வெடி:
பாதி கூர்மை போக தலை சீவ சீப்பு கேள்விக்கு சரியால பதிலை அளிக்காதே (4)
அதற்கான விடை:  மழுப்பு = மழு(ங்க) +  (சீ) ப்பு
  கூர்மை போக = மழுங்க‌
தலை சீவ சீப்பு = ப்பு
இதற்கு விடையளித்தவ்ர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's udhiruvedi!*
*************************
_இரக்கம் இல்லா அரசும் துன்பம்;_
  _இரங்கல் பாடும் தலைமையும் துன்பம்;_

_வரிகளைப் பெருக்கும் அரசும் துன்பம்;_
    _வாரிசு அரசியல் தலைமையும் துன்பம்;_

_நரித்தனம் செய்யும் அரசும் துன்பம்;_
    _நாடகம் ஆடும் தலைமையும் துன்பம்;_

_பிரிவினை வளர்க்கும் அரசும் துன்பம்;_
    _பேச்சால் *மழுப்பும்* தலைமையும் துன்பம்;_
(உத்தமபுத்திரன்)
*************************
_பாதி கூர்மை போக தலை சீவ சீப்பு கேள்விக்கு சரியான பதிலை அளிக்காதே (4)_

_கூர்மை போக_
= *மழுங்க*
_பாதி_
= *மழு[ங்க] = மழு*

_தலை சீவ சீப்பு_
= _சீப்பு இதில் முதலெழுத்தை நீக்க_
= *ப்பு*

_கேள்விக்கு சரியான பதிலை அளிக்காதே_
= *மழு+ப்பு*
= *மழுப்பு*
************************
நிலா

“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது

வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!

எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது

ஏனென்று கேட்டால் அது
சிரித்து *மழுப்புது* "
-- பரஞ்சோதி
*************************
_கோடை வெயிலில் ஒரு குளிர் காற்று_
_நிலவுக்குள் ஏன் கருப்பு ?_ 

_வெயிலில் அவள் நிற்கையில்_ 
_விழும் நிழல் அவள் முகத்தில் இருப்பு...!!_ 

_வியர்க்கும் கன்னம் - ஹையோ_ 
_விவரிக்க முடியா இனிப்பு....!! என்_ 

_விழி எதிரில் அவள் வந்தால்_ 
_விருட்டென்று வரும் என் ரசனைக்கு கொழுப்பு...!!_ 

_அய்யய்யோ மனைவி வாரா....._ 
_ஆசை மனசே எதாச்சும் சொல்லி *மழுப்பு* ....._ 

_அடி வாங்குனா தாங்காது - அப்புறம்_ 
_ஆஸ்பத்திரிலதான் நம்ம பொழப்பு......!!_
😂😂😂
(ஹரி ஹர நாராயணன்)
************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************
பெட்டையைத் தொடர்ந்த குரங்கு பாதியாய் மறைய ஓதப்படுவது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's udhiruvedi!
************************* *இன்றைய உதிரிவெடி!*( 13-07-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்)
*********************
*தாயிற் சிறந்த கோவிலும் இல்லை*
*தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை*

*ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை*
*அன்னை தந்தையே அன்பின் எல்லை*
(படம்: அகத்தியர்)
*********************
திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் பாடல்

_*வானரங்கள்* கனிகொடுத்து *மந்தியொடு* கொஞ்சும்_
_மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்_
_கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்_
_கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்_

*பொருள்*
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர்
🐒🐒🐒🐒🐒🐒
*********************
_பெட்டையைத் தொடர்ந்த குரங்கு பாதியாய் மறைய ஓதப்படுவது (5)_

_பெட்டையை_
= _பெண் குரங்கு_
= *மந்தி*
_தொடர்ந்த_
= _indicator_
_குரங்கு_ = *வானரம்*
_பாதியாய் மறைய_
= *[வான] ரம்*
= *ரம்*

_ஓதப்படுவது_
= *மந்தி+ரம்*
= *மந்திரம்*
**********************
_மந்திரம் இது மந்திரம்_
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
மந்திரம் இது
Movie : Aavarampoo ,Year1992.
*********************
ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது
என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
கனவுகளே  
வழிவிடுங்கள்
கலை மகளை வரவிடுங்கள்

மலரில் உறங்கும் பூங்காற்று
அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடை நீராவேன் அதில் தீபம் ஏற்று
ராகமே உயிராகுமே அது
பெற்றுத் தரும் முத்துச் சரம்

சந்தம் தரும் பொன் வேதமும்
இன்பம் தரும் பொன் *மந்திரம்*
பொங்கும் தீயெனை சுற்றிச் சுடுமே
எங்கும் இசை அதை வற்றிச் சுடுமே
*_இந்த வெப்பம் என்னை என்ன செய்யும் சந்தனங்கள் பூசுமோ_*

படம்
காதல் ஓவியம்: 1982                       
பாடலாசிரியர்:
வைரமுத்து   
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
மந்திரம் ஓதி விடை கண்டவர்கள்!
************************
[7/13, 07:00] திரைக்கதம்பம் Ramarao : மந்திரம்

[7/13, 07:04] sankara subramaiam: மந்திரம்

[7/13, 07:04] sathish: மந்திரம்

[7/13, 07:06] மீ.கண்ணண்.: மந்திரம்

[7/13, 07:14] chithanandam: மந்திரம்

[7/13, 07:27] Dhayanandan: மந்திரம்

[7/13, 07:29] nagarajan: *மந்திரம்*

[7/13, 07:32] akila sridharan: மந்திரம்

[7/13, 07:36] ஆர். நாராயணன்.: மந்திரம்

[7/13, 07:50] Meenakshi: விடை: மந்திரம்

[7/13, 07:50] V N Krishnan.: மந்திரம்

[7/13, 08:07] கி.பா--------மந்திரம்

[7/13, 09:15] prasath venugopal: மந்திரம்

[7/13, 09:30] Dr. Ramakrishna Easwaran: *மந்திரம்*
_பெட்டை_ = பெண் குரங்கு---> *மந்தி*
_குரங்கு_ = வானரம்
அதில் பாதி = *ரம்*
பொருள்: ஓதப் படுவது

*மந்தி என்றவுடன் நினைவுக்கு வருவது திருவையாறு சம்பந்தர் தேவாரம்:*

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு,
ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான்
அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று
அஞ்சி,
*சிலமந்தி* அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே

உரை:

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

[7/13, 09:38] கு.கனகசபாபதி, மும்பை: மந்திரம்

[7/13, 09:39] balakrishnan: Manthiram🤣👌🙏🏻

[7/13, 09:47] Viji - Kovai: 13.7.2020 விடை
மந்திரம்
பெட்டை=மந்தி
பாதி வானரம்=ரம்
மந்தி+ரம்

[7/13, 10:06] siddhan submn: மந்திரம்
மந்தி + பாதி வான(ரம்)

[7/13, 12:21] பாலூ மீ.:
மந்தி+(வான) ரம் = மந்திரம்

[7/13, 16:10] Venkat UV: மந்திரம் 🙏🏽

[7/13, 16:54] balagopal: மந்திரம்.

[7/13, 18:52] N T Nathan: மந்திரம்

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************
ஒரு கனி கொடு தாயே (2)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's udhiruvedi!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-07-20)
From *Vanchinathan's* archive- (தென்றல்)
*********************
_மாதா உன் கோவிலில்…._
_மணி தீபம் ஏற்றினேன்_

_தாயென்று உன்னைதான்_
_பிள்ளைக்கு காட்டினேன் மாதா_

_மாதா உன் கோவிலில்…._
_மணி தீபம் ஏற்றினேன்_
Movie Achchani : 1978
Music Ilaiyaraaja
**********************
*மாதா, பிதா, குரு, தெய்வம்* என்னும் இந்த வாக்கியத்தை அறியாதோர் இருக்க முடியாது. ஆனால் அதனை உண்மையாக அறிந்தவர்கள், அதாவது அதன் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் வெகு சிலரே. 

மாதா, பிதா ஆகிய இரண்டும், குரு மற்றும் தெய்வத்திற்கு முன்பாக வருவதால், பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று கூறுவோர் பலர்.

பெற்றோர்கள் தெய்வத்தைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்க முடியாது. அப்படியெனில், ஏன் இந்த வரிசை–மாதா, பிதா, குரு, தெய்வம்?
**********************
_ஒரு கனி கொடு தாயே (2)_

_ஒரு கனி_ = *மா*
_கொடு_ = *தா*

_தாயே_ = *மா+தா*
= *மாதா*
**********************
_இங்கு குறிப்பிடப்படும் நால்வரில், முதல் மூன்று_ _பிரிவினரும் ஜீவன்களாவர்,_ _நான்காவதாக இருக்கும் இறைவன்_ _எல்லாரிலும் உயர்ந்தவராவார்._

எனவே, இந்த வரிசையானது, மாதாவைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர், பிதாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர், குருவைக் காட்டிலும் கடவுள் உயர்ந்தவர் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதாவது, இந்த வரிசை ஏறு முகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்கு முகமாக அல்ல

மேலும், தாயின் பணி தந்தையைச் சுட்டிக் காட்டுதல், தந்தையின் பணி குருவைச் சுட்டிக் காட்டுதல், குருவின் பணி தெய்வத்தைச் சுட்டிக் காட்டுதல் என்ற பொருளிலும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தாயின் கடமை குழந்தையைப் பெற்றெடுத்து, பால் கொடுப்பது மட்டுமல்ல; அக்குழந்தையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, அவனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பதாகும். அதுபோலவே, தந்தையானவர் தனது மகனுக்கு போதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்து, காலப்போக்கில் ஒரு திறன்வாய்ந்த குருவிடம் தனது மகனை ஒப்படைக்கின்றார். அந்த குருவானவர் ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தை அடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார். *இதுவே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் விளக்கமாகும்.*
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
*மாதாவை வாழ்த்தி வந்தவர்கள்!*
************************
[7/14, 07:00] Ramarao. : மாதா

[7/14, 07:02] கு.கனகசபாபதி, மும்பை: மாதா

[7/14, 07:03] balakrishnan: 🙏🏻MAATHAA 👌🤣

[7/14, 07:03] V N Krishnan.: தா மா
மாதா

[7/14, 07:07] மீ.கண்ணண்.: மாதா

[7/14, 07:11] Meenakshi: விடை: மாதா
[
[7/14, 07:16] ஆர். நாராயணன்.: மா தா

[7/14, 07:20] N T Nathan: மாதா

[7/14, 07:20] Dhayanandan: மாதா

[7/14, 07:27] Suba: Hello sir, மாதா

[7/14, 07:27] nagarajan: *மாதா*

[7/14, 07:38] Chennai usha: மாதா

[7/14, 07:39] Dr. Ramakrishna Easwaran: *மாதா*
'ஒரு கனி' என்றால் ஒரு குறிப்பிட்ட கனி, தமிழில் உள்ள ஓரெழுத்து கனி --> *மா*
கொடு= *தா*
மா+தா
பொருள்: தாயே

*பாரதியாரின் நவராத்திரி பாட்டை நினைவு கூர்ந்தேன்*

*மாதா* பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

[7/14, 07:40] chithanandam: மாதா
[
[7/14, 07:41] Viji - Kovai: 14.7.2020 விடை
மாதா
ஒரு கனி=மா
கொடு=தா

[7/14, 07:43] பாலூ மீ.: மாதா.

[7/14, 07:46] sathish: மாதா

[7/14, 08:10]கி.பா ( *KB*) -------- மாதா

[7/14, 08:16] sankara subramaiam: மாதா

[7/14, 08:18] akila sridharan: மாதா

[7/14, 09:01] prasath venugopal: மாதா

[7/14, 12:59] A D வேதாந்தம்: விடை= மாதா/ வேதாந்தம்.

[7/14, 13:27] ஆர்.பத்மா: 14 July 2020 : மாதா

[7/14, 14:47] shanthi narayanan: மாதா
[
[7/14, 16:29] siddhan submn: மாதா

[7/14, 16:35] Venkat UV: மாதா 🙏🏽

[7/14, 16:55] balagopal: மாதா.

&&&&&&&&&&&&&&&&
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************
வில் முறிந்த விசேஷமான நகரின் கடைசி எல்லை முன்பு காலால் நசுக்கு (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
Peek and list will be posted late night.
Raghavan MK said…
[7/15, 21:55] M K Raghavan: A peek into today's udhiruvedi!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*******************
*வில் முறிந்த விசேஷமான நகரின் கடைசி எல்லை முன்பு காலால் நசுக்கு (3)*

காலால் நசுக்கு= மிதி

கடைசி எல்லை = லை

வில் முறிந்த விசேஷமான நகர்
= மிதிலை
**********************
மிதிலையின் தற்போதைய பெயர் ஜனக்பூர். இது நேபாள நாட்டில் உள்ளது. பீஹார் மற்றும் நேபாளத்தின் தென்பகுதி அந்தக் காலத்தில் விதேஹ தேசம் என்று அழைக்கப்பட்டது
*********
சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல் கூறும் விதேக நாட்டின் தலைநகரம் மிதிலையாகும். இங்கு குழந்தையாயிருந்த சீதையைப்பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து மன்னன் சனகன் அவளை வளர்த்ததாக இராமாயணம் கூறுகிறது. சீதையின்சுயம்வரம் இங்கு நடந்தது.
************
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பா

என்ற கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரசித்தம்
(திரைப்படம்- அன்னை)

மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி”–       (சுப்ரமண்ய பாரதி)

என்ற பாரதியின் பாடல் அதையும் விட பிரபலமானது.

*கம்பராமாயணம் –
பாலகாண்டம்  
எதிர்கொள் படலம்*

கடவுள் கதையில் மணக்கும் கம்பன் தமிழ் வளம்

*தசரதன் மிதிலையை அணுகுதல்*

ஆண்டு நின்று எழுந்து போகி,    அகன் பணை மிதிலை என்னும்,ஈண்டு நீர் நகரின் பாங்கர்    இரு நிலக் கிழவன் எய்தத்தாண்டும் மாப் புரவித் தானைத்    தண் அளிச் சனகன் என்னும்,தூண் தரு வயிரத் தோளான்    செய்தது சொல்லல் உற்றாம்.
*பதவுரை*
இருநிலக்     கிழவன் ஆண்டு நின்று எழுந்து போகி - பெரிய
நிலத்துக்குரியவனான  தசரதன்.  அக் கங்கை  நதியைக் கடந்து சென்று;
அகன்பணை  மிதிலை என்னும் - அகன்ற வயல்கள் சூழ்ந்த மிதிலை
யெனும்  பெயருடைய; ஈண்டு நீர் நகரின் பாங்கர் எய்த - நீர் வளம்
மிக்க    நகரத்தின்   அருகில்.   சேர்ந்த   அளவில்;  தாண்டும்மா
புரவித்தானை  - பாய்வதில்  பெருமையுடைய  குதிரைப்படைகளையும்;
தண்ணளிச்  சனகன்  என்னும் - (நெஞ்சில்) கருணையையும் உடைய
சனகன்   என்னும்   பெயரிய;   தூண்தரு  வயிரத்   தோளான்  -
தூண்களைப்  போன்ற  உறுதிமிக்க   தோள்களையுடையவன்; செய்தது
சொல்லல்    உற்றாம்   -    செய்த    செயல்களைச்    சொல்லத்
தொடங்குகிறோம்.

கவிக்கூற்று.     வெளியே   படைகளும்..   உள்ளே   கருணையும்
நிறைந்தான் எனச் சனகனின் வீரமும் ஈரமும் ஒரு சேரக் கூறியவாறு.

*********************
[7/15, 21:55] M K Raghavan: Solvers list tomorrow pl
Raghavan MK said…
********************
*மிதிலை எழில் கண்டர்கள்*
********************

[7/15, 07:00] Ramarao திரைக்கதம்பம்: மிதிலை

[7/15, 07:01] V N Krishnan.: மிதிலை

[7/15, 07:02] மீ.கண்ணண்.: மிதிலை

[7/15, 07:04] A D வேதாந்தம்: விடை= மிதிலை/ வேதாந்தம்.

[7/15, 07:04] Meenakshi: விடை: மிதிலை.

[7/15, 07:05] Venkat UV: மிதிலை 🙏🏽

[7/15, 07:08] sankara subramaiam: மிதிலை

[7/15, 07:08] balakrishnan: 🙏🏻 MITHILAI 🙏🏻👌

[7/15, 07:09] Ramki Krishnan: Mithilai

[7/15, 07:12] chithanandam: மிதிலை

7/15, 07:15] akila sridharan: மிதிலை

[7/15, 07:31] nagarajan: *மிதிலை*

7/15, 07:31] ஆர். நாராயணன்.: மிதிலை

[7/15, 07:54] KB:
கி.பா--- மிதிலை

[7/15, 07:54] Dhayanandan: மிதிலை

[7/15, 08:24] stat senthil: மிதிலை

[7/15, 08:31] N T Nathan: மிதிலை

[7/15, 08:43] prasath venugopal: மிதிலை

[7/15, 09:48] siddhan submn: மிதி+லை

[7/15, 09:51] Dr. Ramakrishna Easwaran: *மிதிலை*

*கம்பனின் மிதிலைக் காட்சி*


‘மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள்’ என்று செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று அழைப்பது போன்றது அம்மா!

[7/15, 13:48] ஆர்.பத்மா: 15 July 2020
மிதிலை - ஆர்.பத்மா

[7/15, 15:54] balagopal: மிதிலை.

[7/15, 16:35] Viji - Kovai: 15.7.2020 விடை
மிதிலை

[7/15, 18:07] கு.கனகசபாபதி, மும்பை: மிதிலை

[7/15, 20:11] sathish: மிதிலை

[7/15, 20:19] பாலூ மீ.: மிதிலை.
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************

வடைக்கிரைத்த குழப்பத்தில் ஒன்று போக எத்தனை வந்ததோ அத்தனை (4,2)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's udhiruvedi!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்v)
********************
*வடைக்கிரைத்த குழப்பத்தில் ஒன்று போக எத்தனை வந்ததோ அத்தனை (4,2)*

ஒன்று போக
= வடைக்கிரைத்த- க்
= வடைகிரைத்த

குழப்பத்தில் = anagram indicator for the word வடைகிரைத்த
= கிடைத்த வரை

= எத்தனை வந்ததோ அத்தனை
********************
*குழப்பமின்றி கிடைத்த வரை
விடையளித்தவர்கள்!*
********************
[7/16, 07:01] Ramarao திரைக்கதம்பம்: கிடைத்த வரை

[7/16, 07:02] prasath venugopal: கிடைத்தவரை

[7/16, 07:03] balakrishnan: 🙏🏻 KIDAITHAVARAI 🙏🏻

[7/16, 07:04] sankara subramaiam: கிடைத்த வரை

[7/16, 07:08] Dhayanandan: கிடைத்த வரை

[7/16, 07:10] V N Krishnan.: கிடைத்தவரை

[7/16, 07:12] Dr. Ramakrishna Easwaran: *கிடைத்த வரை*
க் என்ற ஒரு எழுத்து நீக்கி jumble செய்தால் வருவது

[7/16, 07:18] A D வேதாந்தம்: விடை= கிடைத்த வரை/ வேதாந்தம்

[7/16, 07:19] nagarajan: *கிடைத்த வரை*

[7/16, 07:20] மீ.கண்ணண்.: கிடைத்த வரை

[7/16, 07:26] sathish: கிடைத்த வரை

[7/16, 07:30] Ramki Krishnan: Kidaiththa varai

[7/16, 07:32] N T Nathan: கிடைத்த வரை

[7/16, 07:44] Venkat UV: கிடைத்த வரை 🙏🏽

[7/16, 08:11] பாலூ மீ.: கிடைத்த வரை.

[7/16, 08:12] ஆர். நாராயணன்.: கிடைத்த வரை

[7/16, 08:36] Meenakshi: இன்று கொஞ்சம் குழம்பி கிடைத்த விடை: கிடைத்த வரை.

[7/16, 09:45] Viji - Kovai: 16.7.2020 விடை
கிடைத்த வரை

[7/16, 09:46] KB:
கி.பா------- கிடைத்த வரை

[7/16, 10:04] siddhan submn: கடைத்த வரை

[7/16, 10:12] கு.கனகசபாபதி, மும்பை: கிடைத்த வரை

[7/16, 11:49] akila sridharan: கிடைத்த வரை

[7/16, 12:39] Bharathi: கிடைத்தவரை

[7/16, 12:55] shanthi narayanan: கிடைத்தவரை

[7/16, 14:12] chithanandam: கிடைத்த வரை.
************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************

தமிழக அரசுக்கு நான்காம் மாதம் முடியாமல் வந்த உறவினள் (3)


**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
This was posted by Vanchi in 2010 based on the order of then govt in power

Ramarao

இந்த புதிர் கருணாநிதி CM ஆக இருந்தபோது ஓகே இப்போது இந்த புதிர் சரிவராதே

Sankara subramanian

( Probably, அன்றைய தமிழக அரசுக்குப் பொருந்தியிருக்கும் க்ளூ இன்றைய நிலையில் outdated ஆகத் தோன்றுகிறது!)
Raghavan MK said…
A peek into today's udhiruvedi!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-07-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்v)
********************
This புதிர் was constructed by the author Vanchinathan in the year 2010 , which seems to be much appropriate then , when the Tamilnadu govt., announced the change.
********************
_தமிழக அரசுக்கு நான்காம் மாதம் முடியாமல் வந்த உறவினள் (3)_

_தமிழக அரசுக்கு நான்காம் மாதம்_
= The erstwhile govt.,of tamilnadu observed the tamil month *"தை"* , as the first month of Tamil calendar!
Based on that change introduced *" சித்திரை ",* becomes the fourth month.

_நான்காம் மாதம் முடியாமல்_
= *சித்தி (ரை)*
= *சித்தி*

_வந்த உறவினள்_
= *சித்தி*
********************
*_கண்ணின் மணி.. கண்ணின் மணி.._*

*மறக்க முடியாத சித்தி..* அடடா 23 வருஷம் ஆகிப் போச்சே!

_கண்ணின் மணி, கண்ணின் மணி நிஜம் கேளம்மா._ 
_கங்கை நதி, வைகை நதி பெண் தானம்மா ....._
_பெண் நதியென்பது துன்பம் துயரம் தாங்கி வரும்_

இரவு 9.30 மணி ஆயிருச்சுன்னா ஊரு ஜனமெல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து டிவி முன்பு குந்தும்..

கண்ணின் மணி.. கண்ணின் மணி என்ற பாட்டு ஆரம்பித்ததும் அப்படி ஒரு புல்லரிப்பு உண்டாகும். அந்த அளவுக்கு மக்களை வசியம் செய்து கட்டிப் போட்ட சீரியல்தான் *சித்தி* .

தமிழ் டிவி உலகின் மறக்க முடியாத நெடுந்தொடர்களில் சித்திக்கு மிக முக்கிய இடம் உண்டு. ராதிகா, சிவக்குமார் ஆகியோரின் பண்பட்ட நடிப்பு, பாடல், கதையம்சம், கேரக்டர்கள், ஒளிப்பதிவு என பல கோணங்களில் இந்தத் தொடர் இன்று வரை பெஸ்ட்டான தொடராக உள்ளது என்றால் மறுக்க முடியாது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
சித்தியிடம் உறவு கொண்டாட வந்தவர்கள்!
********************
[7/17, 07:00] Ramarao : சித்தி
*இந்த புதிர் கருணாநிதி CM ஆக இருந்தபோது ஓகே இப்போது இந்த புதிர் சரிவராதே!*

[7/17, 07:01] V N Krishnan.: சித்தி

[7/17, 07:17] Dhayanandan: சித்தி

[7/17, 07:20] Ramki Krishnan: Chiththi (Chiththirai - rai)

[7/17, 07:20] sankara subramaiam: சித்தி
*( Probably, அன்றைய தமிழக அரசுக்குப் பொருந்தியிருக்கும் க்ளூ இன்றைய நிலையில் outdated ஆகத் தோன்றுகிறது!)*

[7/17, 07:21] மீ.கண்ணண்.: சித்தி

[7/17, 07:25] chithanandam: சித்தி

[7/17, 07:27] chennai usha: சித்தி

[7/17, 07:27] பாலூ மீ.: சித்தி. (ரை). *இது முதல் மாதம் இல்லையோ🤔*

[7/17, 07:32] Meenakshi: விடை :சித்தி

[7/17, 07:37] balakrishnan: 🙏🏻Chithi

[7/17, 08:00] prasath venugopal: சித்தி

[7/17, 08:35] ஆர். நாராயணன்.: *தமிழக அரசுக்கு முதல் மாதம் தை, நான்காம் மாதம் சித்திரை* . விடை சித்தி

[7/17, 09:43] siddhan submn: சித்திரை - ரை = சித்தி

[7/17, 11:10] nagarajan: *சித்தி*

[7/17, 11:52] கு.கனகசபாபதி, மும்பை: சித்தி

[7/17, 11:57] N T Nathan: சித்தி

[7/17, 12:22] shanthi narayanan: சித்தி

[7/17, 12:44] A D வேதாந்தம்: விடை= சித்தி/ வேதாந்தம்

[7/17, 18:53] K B : கி.பா-- -------சித்தி

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 18--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************

அரும்பும் இனிமேல் வேண்டாம் (3)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Raghavan MK said…
A peek into today's udhiruvedi!
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-07-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்)
********************
சங்க இலக்கியத்தில் மலருக்கும் பருவங்களை வகுத்துள்ளனர். அரும்பு, நனை, முகை, மொக்குள், முகில், மொட்டு, போது, மலர்,  பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் போன்ற பதின்மூன்று சொற்களை மலர்களின் பல்வேறு நிலையினைச் சுட்டப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு ஆகியவற்றை மலரின் இளமைப்பருவமாகச் சுட்டுகின்றனர். மலர், வீ, செம்மல் இவற்றை மலரின் முதுமைப் பருவமாகக் குறிப்பிடுகின்றனர். அரும்பின் மூன்று நிலைகள்: நனை, முகை, மொக்குள்.
********************
அரும்பு – அரும்பும் (தோன்றும்) நிலை
நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை – நனை முத்தாகும் நிலை
மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
*போது – மொட்டு* மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் – மலரும் பூ
பூ – பூத்த மலர்
வீ – உதிரும் பூ
பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
********************
_அரும்பும் இனிமேல் வேண்டாம் (3)_

_அரும்பு_
= *போது*
(போது, 
பெயர்ச்சொல்.
மலரும்பருவத்து அரும்பு , மலர்)

_அரும்பும்_
= *போதும்*

_இனிமேல் வேண்டாம்_
= *போதும்*
********************

*ஐந்திணை ஐம்பது 22*

_போதார்வண் டூதும் புனல்வயல் ஊரற்குத்_
_தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்_
_அறிவயர்ந் தெம்மில்லுள்_
_என்செய்ய வந்தாய்_
_நெறியதுகாண்_ _எங்கையர் இற்கு.__
*********************
*போது* ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத் தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீ தான் அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்? நெறி அதுகாண், எங்கையர் இற்கு.
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது

வண்டு எல்லாப் பூக்களிலும் தேனுண்டு ஊதும் புனல் நிறைந்த வயல்களைக் கொண்ட ஊரன் அவன். பாணர் மகனே, நீ அவனுக்குத் தூதனாகத் திரிகிறாய். ஏதோ அறிவு மயக்கத்தால் என் வீட்டுக்குள் வந்துவிட்டாய் போல் இருக்கிறது. என் வீட்டில் நீ என்ன செய்ய வந்தாய்? என் தங்கையர் இல்லத்துக்கு வழி அதோ அங்கே இருக்கிறது. செல்.
பரத்தையிடம் இருக்கும் தன் கணவனுக்காகத் தூது வந்த பாணனிடம் தலைவி இவ்வாறு கூறுகிறாள். தலைவன் தன் இல்லத்துக்குள் நுழையக்கூடாது என்கிறாள்.

திணை - மருதம்
மாறன் பொறையனார் இயற்றிய ஐந்திணை ஐம்பது
சங்கம் மருவிய காலம் – கி. பி. 3 ஆம் நூற்றாண்டு
********************
💐👍🏼💐
Raghavan MK said…
*விடையளித்தோர்*
*******************
[7/18, 07:00] Ramarao திரைக்கதம்பம்: போதும்

[7/18, 07:05] Meenakshi: விடை: போதும்

[7/18, 07:10] மீ.கண்ணண்.: போதும்

[7/18, 07:19] sankara subramaiam: போதும்

[7/18, 07:36] பாலூ மீ.: போதும். போது =அரும்பு.

[7/18, 07:53] nagarajan: *போதும்*
[7/💐

[7/18, 08:10] akila sridharan: போதும்.

[7/18, 08:22] ஆர். நாராயணன்.: போதும்

[7/18, 08:40] chithanandam: போதும்

[7/18, 09:02] Dr. Ramakrishna Easwaran: *போதும்*
அரும்பு= போது
அரும்பும்--> போதும்
பொருள்: இனிமேல் வேண்டாம்

*போது என்றதும் அப்பர் திரு ஐயாறு தேவாரம் நினைவுக்கு வந்தது*

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
*போதொடு* நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.
திருப்பாதம் கண்ட பிறகு இனி வேறேதும் வேண்டாம்!!

[7/18, 09:09] மாலதி: மாலதி
இன்றைய புதிரின் விடை
போதும்.

[7/18, 11:52] N T Nathan: போதும்

[7/18, 12:33] கு.கனகசபாபதி, மும்பை: போதும்

[7/18, 07:44] Dhayanandan: போதும்

[7/18, 08:45]KB:
கி.பா ---- போதும்

[7/18, 16:07] balakrishnan: 👌podhum

[7/18, 17:32] ஆர்.பத்மா: 18 July 2020
போதும்-

[7/18, 17:41] siddhan submn: போதும்
**********************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 20--07-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்)
**********************
யோக பதிவர் தொடங்காமல் வேறுபட்டுத் திரையடைந்தோர் (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்