Skip to main content

விடை 4083

விடைக்கு வருமுன்:    உதிரிவெடியை வழக்கம்போல் தினசரி அளிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன்  இன்று  கருத்துரைப் பகுதியிலும், தனியாக என்னுடன் தொடர்பு கொண்டும்  கேட்டவர்கள் எல்லோருக்கும்  நன்றி.

  சொற்கள் ஒவ்வொன்றிலும்  சுவையான பல விஷயங்கள்  ஒளிந்துள்ளன. அதை ரசிக்கும் ஆர்வலர்களான உங்களை இந்த வலைப்பக்கங்களின்  மூலம் தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உதிரிவெடி என்பது  சொல்லழகை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்ள ஒரு  வழி.

 அதைத் தவிர வேறு வழிகளில் சொற்களோடு விளையாட முடியுமா என்று    தோன்றியது.   காசா, பணமா?  அந்த விபரீத ஆசையைப் பரீட்சை செய்து பார்த்துவிடுவோமே!
  ஆனால் அவையெல்லாம் பதினைந்து நிமிடத்தில் உதிரிவெடிபோல் தயாரிக்க முடியுமா, தெரியவில்லை.  அதனாலேயே வாரமொரு பதிவு என்று ஜாக்கிரதையாகக்  வைத்துக் கொள்வோம்.  வரும் ஞாயிறு காலை வழக்கம் போல் ஆறு மணிக்கு இங்கே எட்டிப்பாருங்கள்.


*****
சரி இன்றைய புதிருக்கு வருவோம்.


 பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவன் முன்னிருப்பது மக்களே (6)

இதற்கான விடை: ஜனமேஜயன்  (ஜனமேஜெயன்) = ஜனமே + ஜயன்

இவன் அபிமன்யுவின் பேரன். ஒரு பாம்பு மூலம் தனது தந்தை பரீக்‌ஷித்
மரணமடைந்ததால் எல்லா பாம்புகளையும் அழிக்க வேள்வி தொடங்கினான்.

இன்று வந்த விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.



Comments

Raghavan MK said…
Dear Mr Vanchi,

We did have memorable time solving uthirivedigal daily during the last three years.

Its 365*3 = 1095 வெடிகள்.!!Congrats!

Its really a commendable task you did by setting the puzzle and posting it by 6.00 a.m., and again posting the answers by night.
This way, not only you entertained us but also enriched our knowledge.

Behind the scene, how much you would have toiled, how many times you would have raced against time to keep up the schedule, sacrificing your valuable time, etc., with the only motive to entertain us, could not be taken lightly and we would not be excused if we fail to appreciate your exercise in promoting our cherished Tamil language thro your riddles.

However, your sudden decision to curtail the no of riddles posted in this blog, shocked many of us.

It has become a habit to search for my mobile kept beside my bed at early morning to open Uthirivedi blog.

Ofcourse, l could understand ,the difficulties you would have faced in performing this tiring task and l have a suggestion.

You can as usual post the riddle daily in the blog. The google format for answering may be dispensed forthwith. The evening edition of விடை and solvers list may be stopped. Instead the answer may be posted along with next day's riddle.

The solvers need not submit their answers but can check up next day in the blog.

You may please consider this as an alternative proposal.

Thank you!
M.K.Raghavan
(புதிராடும் களம் - Whatsapp group)
Vanchinathan said…
நன்றி ராகவன் அவர்களே: நேரம் அதிகம் செலவிடாமல் புதிரக்கு நீங்கள் நல்ல யோசனை கூறியுள்ளீர்கள். ஆமாம், திடீரென்று நிறுத்தியது
பழகிப் போனவர்களுக்கு முதலில் சிறிது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனக்கும் செக்குமாடு மாதிரி ஒரே வழியில் சென்று புதிரமைக்கின்றேனோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதனால் இந்த மாற்றம். கொஞ்சம் இடைவெளி தேவை, அது நல்ல பலனளிக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் ஆர்வம் எனக்கு உந்துசக்திதான்.
Raghavan MK said…

From
புதிராடும்களம் Whatsapp group

[4/23, 04:29] V N Krishnan.: I have pleasure in informing you that
Sri Vanchi’s old puthirs from Thendral will appear every day at the usual time in Puthiradukalam.
I request Sri Raghavan to give his narration at 9 pm so that the
Vacuum is filled up to some extent.
I hope you will welcome this move.
[4/23, 05:56] V N Krishnan.: திரு. வாஞ்சி புதிர்கள் இரண்டு
[4/23, 05:57] V N Krishnan.: 1.ஊதுவதை கைப்பிடித்து முன்னுரை(3)
[4/23, 05:58] V N Krishnan.: 2. எண்ணி முறுக்க எதிரே வா(3)
I will put the Answers at 9 pm IST
Joseph said…
Mr Raghavan Sir, will you be kind enough to add me to the புதிராடும்களம் Whatsapp group?

Thank you.

Regards,
Joseph Amirtharaj. A.
Raghavan MK said…
Please send msg to my mobile 9008746624
Thank you
Raghavan MK said…
A peek into today's riddle
************************
1.ஊதுவதை கைப்பிடித்து முன்னுரை(3)

ஊதுவதை
= பீடி
கைப்பிடித்து
= பீடி+ கை
= பீடிகை
= முன்னுரை
************************
2. எண்ணி முறுக்க எதிரே வா(3)

முறுக்க = திருக
எதிரே வா = indigator for reverse order of திருக
= கருதி

எண்ணி
= கருதி
************************

This posting here is for today only!
Raghavan MK said…
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
*ஆரமின்றித் தொடக்கம் உள்ளே பொருத்தமான வீரர்களுக்குப் பரிசு (5)*
************************
உங்கள் விடைகளை பதிவிட தேவையீல்லை .இரவு 9.00 மணிக்குமேல் இங்கு சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
ஆரமின்றித் தொடக்கம் உள்ளே பொருத்தமான வீரர்களுக்குப் பரிசு (5)

தொடக்கம்
= ஆரம்பம்

ஆரமின்றி
= ஆரம்பம் - ஆரம்
= பம்

பொருத்தமான
= தக்க

உள்ளே பொருத்தமான
= பம் உள்ளே தக்க
= ப+தக்க+ ம்
= பதக்கம்
= வீரர்களுக்குப் பரிசு
************************
From whatsapp group
9008746624
************************
Raghavan MK said…
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
ஒழுங்குகெட்ட கந்தலை உதறிவிடு (4)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
ஒழுங்கு கெட்ட கந்தலை உதறிவிடு (4)

கந்தலை உதறிவிடு = indicator for shuffling letters in கந்தலை
= கலைந்த

ஒழுங்கு கெட்ட
= கலைந்த
************************
கந்தலை உதறி விடை கண்ட வித்தகர்கள்.!

[4/25, 06:11] shanthi narayanan: கலைந்த

[4/25, 06:19] sathish: கலைந்த

[4/25, 06:26] Dhayanandan: கலைந்த

[4/25, 06:34] balakrishnan: கலைந்த

[4/25, 08:03] usha: கலைந்த

[4/25, 08:08] chithanandam: கலைந்த

[4/25, 11:56] sridharan: கலைந்த

[4/25, 13:31] prasath venugopal: கலைந்த

[4/25, 10:59] Bharathi: *கலைந்த*
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்