Skip to main content

விடை 4076

இன்றைய வெடி:

கொடி போலிருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியிலிருக்கும் வீடோ? (5)
அதற்கான விடை:   செவ்வகம்  = (கம்பத்தில் பறக்கும்) கொடியின் வடிவம்
 செவ்வகம் = செவ் + அகம் = சிவந்த வீடு! ("செம்மை + அகம்" என்பதுதான் சரியோ? அப்படியென்றால் "வ்" எப்படி வந்தது?  மையீற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி ஈறு கெட ஈற்றயல் திரிந்து ....?)

 இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

Comments

You can change your profession and be a Magician
Muthu said…
ஈறு கெட ஈற்றயல் திரிந்ததோ திரியவில்லையோ தெரியாது. விடை தேடியா நான் மெனக்கெட வீட்டுக்குள்ளேயே மேலும் கீழும் திரிந்தேன்!
Ramiah said…
சிவப்பு வீடோ மட்டுமே போதுமாயிருந்தது. அதுகூட வேண்டாம், சிவப்பு வீடு மட்டுமே இருந்தி்ருந்தால் எளிதாக இருந்திருக்கும். அதிகமான வார்த்தைகள் இருந்ததால் குழப்பம் தான் ஏற்பட்டது.
Vanchinathan said…
@ராமையா: "சிவப்பு வீடு (5)" என்று கொடுத்திருந்தால் அது புதிராகுமா? வெறும் கேள்வி பதில்தான்

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்