இன்று காலை வெளியான வெடி:
பரபரப்பின்றி இரு ஸ்வரங்களுக்குட்பட்ட ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா? (5)
அதற்கான விடை: நிதானமாக = நி +தானமா + க
நி, க = இரு ஸ்வரங்கள்
தானமா = ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா (ராகம், தானம் , பல்லவி என்ற வரிசை). (dhaanam, வேறு thaanam வேறு என்று யாரும் ஆட்சேபிக்க வேண்டாம். இந்த dha/tha, ka/ga, ta/da, pa/ba/bha மயக்கம் தமிழில் பல புதிர்களை உருவாக்க உதவுகிறது!)
விடைப் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.
Comments
************************
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் ராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது ராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனசுவரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.
************************
பரபரப்பின்றி இரு ஸ்வரங்களுக்குட்பட்ட ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா? (5)
ராகத்தைத் தொடர்ந்து
= ராகம், ---> தானம், பல்லவி
= தானம்
பாடுவதா? = தானமா (?)
இரு ஸ்வரங்கள் = நி , க
இரு ஸ்வரங்களுக்குட்பட்ட
= நி(தானமா)க
= நிதானமாக
= பரபரப்பின்றி
************************