நேற்றிரவு நேற்றைய உதிரிவெடிக்கான விடையயைம், சரவெடிக்கான விடைகளையும் இரு வேறு இடுகைகளில் வெளியிட்டேன்.
அதில் சில கடினமானவற்றுக்கு விளக்கங்களைக் கருத்துரையில் அளிக்குமாறு
கேட்டிருந்தேன். அதை எழுதுவதற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பதற்காக இன்றைய வெடியை தாமதமாக அளிக்கிறேன். புது வெடி வந்துவிட்டால் அதை விடுக்க மனம் சென்றுவிடுமே!
இதோ இங்கே சென்று விளக்கங்களைக் கருத்துரையாக இடுங்கள்.
Comments
*************************
8. மாட்டு நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ஆட்டி உருவாக்கும் அமைப்பு (6)
நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது= கனம்
ஆட்டி =anagram of கனம்+ மாட்டு
= கட்டுமானம்
9. கொடிய திட்டம் சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
சந்ததி
கொடிய திட்டம்= சதி
சூழ்ந்த பின் பாதி!= [சூழ்]ந்த= ந்த
-= சந்ததி
11. நடு வாயில் பல்லில் சிக்கிய கல் (3)
நடு வாயில்= யி
பல்லில் சிக்கிய!= பல் +யி
=பயில் =கல் (கற்க)
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)
=வில்
பரிமாறிக்கொள்ளும்=போர்
வியாபாரிகள்!= விற்போர்
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
அண்ணன் ஆரம்பிக்காமல்
= ண்ணன்
திணற= முக்க
நக்கீரன் பார்த்தவன்
= முக்க+ண்ணன்
=முக்கண்ணன்
21. ___ ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)
கிணறு தோண்ட பூதம் பழமொழி