Skip to main content

விடை 4084


இன்று காலை வெளியான வெடி:
பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5) 
அதற்கான விடை: தொடக்கம் = தொக்க + டம்
டம் = மாடம் ‍- மா (பெருமை)
தொக்க = மறைந்திருக்க‌
பளிங்கு மாளிகை = பளிங்கால் கட்டிய மாளிகை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; " ..ஆல் கட்டிய .." என்பது மறைந்து, (தொக்கி) இருக்கிறது.


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
************************
தொக்கி என்பது மறைந்து என பொருள் தரும் சொல்.
இதிலிருந்து மறைந்திருக்க என்பது தொக்க என வரும்.
தொக்க எனும் சொல் இலக்கணத்தில் வேற்றுமைத் தொகை பற்றி குறிப்பிடும்போது, மறைந்து வரும் உருபுகளை தொக்கி வரும் உருபு என கூறுவது வழக்கம்.

உடன் தொக்க தொகை என்பது இலக்கணத்தில் பயன்பாட்டில் உள்ள சொற்றொடர்.
************************

பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)  
பெருமை = மா
பெருமையிழந்த மாடம்
= மாடம்-மா
= டம்
மறைந்திருக்க= தொக்க
வேறுவிதமாய் = தொ+ட+க்க+ம்
= தொடக்கம்

ஆரம்பம்
= தொடக்கம்
************************
வேற்றுமைத் தொகை அல்லது தொகைநிலைத் தொடர்: 

இத்தொடர்களில் வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வரும். 

உதாரணங்கள்: 

நீர்க் குடித்தான் (இது நீர் + ஐ + குடித்தான் என்ற பொருள்படும், ஐ என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.) 

கல்லெறிந்தான் (இது கல் + ஆல் + எறிந்தான் என்ற பொருள்படும். ஆல் என்ற வேற்றுமை உருபு மறைந்து வந்திருக்கிறது.) 

உருபும் பயனும் உடன் தொக்க தொகை: 

சில சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். 

உதாரணங்கள்: 

நீர்க்குடம். இது நீர் + ஐ + உடைய + குடம் என்று விரியும். எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. 

பொன் குடம். (பொன் + ஆல் + செய்யப்பட்ட + குடம்) 
************************
Raghavan MK said…
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
மெய்யின்றி கோவிந்தா கலங்கி விஷ்ணுவிடம் புகுந்தால் கிறிஸ்தவர் அவ்விடம் வருவர் (5)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
மெய்யின்றி கோவிந்தா கலங்கி விஷ்ணுவிடம் புகுந்தால் கிறிஸ்தவர் அவ்விடம் வருவர் (5)

மெய்யின்றி கோவிந்தா
= கோவிந்தா- ந் (ந் --> மெய்யெழுத்து)
= கோவிதா
விஷ்ணு = மால்
கோவிதா கலங்கி = தாகோவி
விஷ்ணுவிடம் புகுந்தால்
= தாகோவி inside மால்
= மா+தாகோவி+ல்
= மாதாகோவில்
= கிறிஸ்தவர் அவ்விடம் வருவர்
************************
மாதா கோவிலுக்கு இன்று வருகை தந்தவர்கள்!

[4/27, 06:18] balakrishnan: மாதாகோவில்

[4/27, 06:24] N T Nathan: தென்றல் புதிர் விடை: மாதாகோவில்

[4/27, 06:36] sridharan: மாதாகோவில். கோவி(ந்)தா+ திருமால்

[4/27, 06:39] Dhayanandan: மாதாகோவில்

[4/27, 06:37] Venkat UV: மாதாகோவில்

[4/27, 08:42] prasath venugopal: மாதாகோவில்

[4/27, 07:09] sathish: மாதாகோவில்

[4/27, 10:30] Meenkshi:
Sunday night வெளியிட்ட வெடியின்விடை: மாதாகோவில்
மீனாக்ஷி.

[4/27, 11:06] +91 94431 65127: புதிர் விடை மாதாகோவில்

[4/27, 09:05] joseph amirtharaj: மாதா கோவில்

[4/27, 13:02] Rajalakshmi Krishnan: Maathaakovil

[4/27, 12:36] Bharathi: மாதாகோவில்

[4/27, 15:30] sankara subramaiam: மாதாகோவில்
**************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
இசை உலகைத் துறந்த பாணர் இந்த இடத்தில் அடக்கம் (4)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
இணங்கு

1. v. i. agree, consent, submit, yield, comply, be brought over or drawn in, 
உடன்படு.
இசை(தல்)

அதற்கு அவர் இணங்கவில்லை
noun
2. இணங்கு-. 1.Union, friendship; இணக்கம்
3.Match,fitmate; ஒப்பு  4.Devil; பேய் 
***********************
இசை உலகைத் துறந்த பாணர் இந்த இடத்தில் அடக்கம் (4)

உலகம் = பார்
உலகைத் துறந்த பாணர்
= பாணர் - பார்
= ண
இந்த இடத்தில்
= இங்கு
அடக்கம் = ண inside இங்கு
= இணங்கு
= இசை
***********************
*ஆத்திசூடி*
இணக்கம் அறிந்து இணங்கு

நற்குணமும், நற்செய்கையும் உடையவர் என்பதை உறுதியாகப் புரிந்து கொண்டு ஒருவரோடு நட்பு செய்.
***********************
*உலகநீதி*
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்.

கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது.
************************
இசைந்து விடையளித்த இனியவர்கள்!

[4/28, 06:03] akila sridharan: இணங்கு
[4/28, 06:04] prasath venugopal: இணங்கு
[4/28, 06:05] Rajijingle: இணங்கு - ராஜி ஹரிஹரன்
[4/28, 06:10] Dhayanandan: இணங்கு
[4/28, 06:20] N T Nathan: இணங்கு
[4/28, 06:44] +91 94431 65127:
விடை: இணங்கு
[4/28, 07:08] Bharathi: இணங்கு
[4/28, 07:08] Meenkshi:
to day's answer:இணங்கு
[4/28, 10:03] Nagarajan Appichigounder .இணங்கு is the answer for today's riddle.
[4/28, 10:07] sankara subramaiam: இணங்கு
[4/28, 10:20] joseph amirtharaj: இணங்கு
************************
புதிராடுகளம்.

வாஞ்சியின் உதிரிவெடிகள் வெடித்து சிதறும்
புதிராடுகளம்!

வெடி ஒலி சவால் எழுப்ப
புதிர் சிலம்பெடுத்து ஆட
தமிழ் வெற்றி பெறும் களம்!

Whatsapp --> 9008746624
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
29-04-20
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
தம்பியின் குற்றத்திற்கு மாமன்களின் தலைகளை எடுப்பது நியாயந்தானா? (3)
***********************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
29-04-20
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
தம்பியின் குற்றத்திற்கு மாமன்களின் தலைகளை எடுப்பது நியாயந்தானா? (3)

தலைகளை எடுப்பது = indicator for removing first letters from the words " தம்பியின் குற்றத்திற்கு மாமன்களின் "
= தகுமா
= நியாயந்தானா?
************************
தகுந்த விடையயளித்தோர் ...

[4/29, 06:01] sathish: தகுமா?
[4/29, 06:04] Dhayanandan: ￰தகுமா
[4/29, 06:31] N T Nathan: தகுமா
[4/29, 06:35] akila sridharan: தகுமா
[4/29, 06:51] மீ.கண்ணன்.
விடை : தகுமா
[4/29, 06:51] Rajijingle: தகுமா - ராஜி ஹரிஹரன்
[4/29, 06:54] Meenkshi: இன்றைய புதிர் விடை :தகுமா?
[4/29, 06:55] balakrishnan: தகுமா
[4/29, 06:55] sankara subramaiam: தகுமா
[4/29, 07:17] chithanandam: தகுமா
[4/29, 07:19] nagarajan: தகுமா
[4/29, 07:45] Bharathi: *தகுமா*
[4/29, 08:05] prasath venugopal: தகுமா
[4/29, 08:16] siddhan submn: தகுமா
[4/29, 08:32] Ramki Krishnan: Thagumaa?
Acrostic clue
[4/29, 09:52] shanthi narayanan: தகுமா
Raghavan MK said…
Just omitted in the solvers list!

[4/29, 17:24] Rajalakshmi Krishnan: Thagumaa
💐👏🏼🙏🏼
Raghavan MK said…
A peek into today's riddle
************************
30-04-20
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
உடலை விற்பவளை விலக்கிப் போராடிய கள வணிகர் கை பெருகட்டும் (4)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
30-04-20
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
*வாழ்க தமிழ் வளர்க தமிழ்*
************************
உடலை விற்பவளை விலக்கிப் போராடிய கள வணிகர் கை பெருகட்டும் (4)
உடலை விற்பவளை
= கணிகை (யை)
விலக்கி
= கள வணிகர் கை - கணிகை
= [க]ள வ[ணி]கர் [கை]
= ளவகர்
போராடிய = anagram indicator for
ளவகர்
= வளர்க
= பெருகட்டும்
************************
வாழ்க! வளர்க வென்று வாழ்த்திய நெஞ்சங்கள் !!

[4/30, 05:53] sathish: வளர்க

[4/30, 05:58] Dhayanandan: வளர்க
[
[4/30, 06:06] akila sridharan: வளர்க

[4/30, 06:09] nagarajan: வளர்க

[4/30, 06:26] மீ.கண்ணண்.:
விடை: வளர்க

[4/30, 06:41] N T Nathan: வளர்க

[4/30, 07:02] balakrishnan: Valarga
வளர்க

[4/30, 07:08] chithanandam: வளர்க

[4/30, 07:58] Ramki Krishnan: VaLarga
(KaLa vaNigar kai - kaNigai)*

[4/30, 09:52] joseph amirtharaj: வளர்க

[4/30, 13:06] sankara subramaiam: வளர்க
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
பல்லுடைந்த பகையால் கெட்ட காதலா! இந்நிலையில் எதுவும் செய்ய முடியாது (5)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*
from "Vanchi's archive (தென்றல்)
************************
பல்லுடைந்த பகையால் கெட்ட காதலா! இந்நிலையில் எதுவும் செய்ய முடியாது (5)
பல்லுடைந்த பகையால்
= பகையால் - பல்
= [ப]கையா[ல்] = கையா
கெட்ட = anagram indicator for கையா+காதலா
= கையாலாகாத
இந்நிலையில் [எதுவும் செய்ய முடியாது]
= கையாலாகாத (நிலையில் எதுவும் செய்ய முடியாது]
****************************
விடை காண கையாலாகதவர் நாங்கள் இல்லை என ஆர்ப்பரித்து வந்தவர்களை வாழ்த்துவோம்!

[5/1, 06:01] Dhayanandan: கையாலாகாது
அல்லது கையாலாகாத
[5/1, 06:04] balakrishnan: கையாலாகாத
[5/1, 06:07] sathish: கையாலாகாத
[5/1, 06:10] joseph amirtharaj: கையாலாகாத
[5/1, 06:12] sridharan: கையாலாகாத
[5/1, 06:24] மீ.கண்ணண்.: இன்று விடை: கையாலாகாத
[5/1, 06:25] chithanandam: கையாலாகாத
[5/1, 06:28] prasath venugopal: கையாலாகாத
[5/1, 06:47] N T Nathan: கையாலாகாத
[5/1, 06:49] usha: கையாலாகாத
[5/1, 06:55] Bharathi: கையாலாகாத
[5/1, 06:57] nagarajan: கையாலாகாத
[5/1, 07:10] akila sridharan: கையாலாகாத
[5/1, 07:10] shanthi narayanan: கையாலாகாத
[5/1, 07:37] Meenkshi: இன்றைய புதிர் விடை. கையாலாகாத.
[5/1, 08:17] Ramki Krishnan: Kaiyaalaakaatha
[5/1, 11:39] Rajalakshmi Krishnan: Kaiyaalaagaatha
[5/1, 11:53] suba srinivasan: Hello sir, கையாலாகாத
[5/1, 16:16] bala: கையாலாகாத
****************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
*இன்றைய புதிர்!*( 02-05-20)
from "Vanchi's archive (தென்றல்)
************************
முதலில் சுட்ட காயத்தின் அடையாளம் மண்ணில் பதிந்தது (3)
************************
உங்கள் விடைகளை பதிவிட whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
************************
Raghavan MK said…
A peek into today's riddle
************************
முதலில் சுட்ட காயத்தின் அடையாளம் மண்ணில் பதிந்தது (3)
முதலில் சுட்ட = first letter of சுட்ட
= சு
காயத்தின் அடையாளம்
= வடு
மண்ணில் பதிந்தது
= சு+வடு
= சுவடு
************************
*இந்த உலகம் நமக்கெல்லாம் வாடகை வீடுதான். சுவடு அற்றுப் போகும் வாழ்க்கை. ‘ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா?’*
(கண்ணதாசன்.)
************************

இன்று சுவடு பதித்து
அசத்திய ஆர்வலர்கள்...
[5/2, 06:00] sathish: சுவடு
[5/2, 06:01] balakrishnan: சுவடு
[5/2, 06:01] N T Nathan: சுவடு - நாதன் நா தோ
[5/2, 06:03] prasath venugopal: சுவடு
[5/2, 06:14] akila sridharan: சுவடு
[5/2, 06:28] Dhayanandan: சுவடு
[5/2, 06:33] Venkat UV: சுவடு?
[5/2, 06:41] sridharan: சுவடு
[5/2, 06:43] chithanandam: சுவடு
[5/2, 06:46] ஏ.டி.வேதாந்தம் இன்றைய புதிருக்கு விடை= சுவடு
[5/2, 06:52] Meenkshi: 2-05-20விடை: சுவடு
[5/2, 06:57] மீ.கண்ணண்.: சுவடு
[5/2, 07:00] shanthi narayanan: சுவடு
[5/2, 07:13] nagarajan: சுவடு
[5/2, 07:23] suba : Hello sir, சுவடு
[5/2, 07:27] Ramki Krishnan: SUVADU
[5/2, 07:48] joseph amirtharaj: சுவடு
[5/2, 08:07] senthil: சுவடு
[5/2, 08:27] siddhan submn: Suvadu
[5/2, 08:29] Bharathi: சுவடு
[5/2, 09:38] sankara subramaiam: சுவடு
***************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்