Skip to main content

சரவெடிக்கான விடைகள்

விடைகளைக் கூற வேண்டிய நேரம் இது. தினமும்  ஒற்றை வெடிக்கு  விடைகளுக்கு விளக்கம் எழுத படிவத்தில் இடம் ஒதுக்க முடிந்தது. ஆனால்  இச்சரவெடிகளுக்கு அதைச் செய்ய முடியவில்லை.
சிலவற்றுக்கும்  மட்டும் விளக்கம் கொடுக்கிறேன். விடுபட்ட  7 வெடிகளுக்கு உங்களைக் கருத்துரையில் விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன்.  விளக்கம் தேவைப்படும் அந்தவிடைகளை சிவப்பு நிற எழுத்துகளில் காட்டியிருக்கிறேன்.

குறுக்காக‌
1. கணவன்-மனைவி  பந்தம் பதினைந்தில்  முகிழ்த்தது (4) தம்பதி [ஒளிந்திருக்கும் விடை]
3. பெரிய தடை சிக்க தடுமாறுவது கையில் காசு குறைவாக
     இருக்கும் சமயம் (6)  மாதக்கடைசி = ( பெரும் =) மா + தடை சிக்க
 8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி
     உருவாக்கும்  அமைப்பு (6)   கட்டுமானம்
 9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)  சந்ததி
11.  நடு  வாயில் பல்லில் சிக்கிய  கல் (3) பயில்
12. கவனமாக  வாத்து தலை சீவி  இன்னொரு பறவையிடம் புகுந்தது (6) கருத்துடன்  = கருடன் + (வா)த்து
14. பாரதியார் தலை சீவி மயக்க  விதேசி மயங்கினாள் (6)  தேசியக்கவி = (ம)யக்க + விதேசி
16. ரேவதிக்கு ஐந்து, லலிதாவுக்கு ஆறு (3)  சுரம் (அப்பெயருடைய ராகங்களிலுள்ள சுரங்களின் எண்ணிக்கை. "சுரங்கள்: என்ற விடைக்குதான் இது பொருத்தமாயிருக்கும். இந்த வெடி அவ்வளவு  சுகமில்லை.).
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)  விற்போர்
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6) முக்கண்ணன்
21.  ___  ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)  கிணறு தோண்ட
22.  இரவோடிரவாகப்  பாடு! (4)  அல்லல் = அல் + அல் [பாடு = துன்பம்]

நெடுக்காக
 1. புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)  தங்கப்பல்!
 2. உயர்ந்த இழை உரசி புத்தகம் (3, 2) பட்டு நூல்
 4. ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2) தளை
 வஞ்சிப்பா என்ற பாவகையில் ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்ற இருவகையான தளைகள் இடம்பெறும். புடவையின் வண்ணத்திலே மேட்சிங் ப்ளவுஸ் (ஒன்றிய வகை) அல்லது contrastஆக வேறு வண்ணத்தில் ப்ளவுஸ் இருந்தால் ஒன்றாத வகை, அது போல.

 5. ஒழுங்கு மாற  ஆரம்பமின்றி  காந்தி கடலை வறுத்தார் (5) கலைந்திட
 = (கா) ந்தி + கடலை
 6. தொலைக்காட்சித்  திரைக்கு வந்த ஒரு நட்சத்திரம் (4)  சித்திரை [ஒளிந்திருக்கும் விடை]
 7. வாய்பாடு தெரிந்தவர்களால் போட முடியும் நெஞ்சில் ஒரு திட்டம் (7) மனக்கணக்கு
10. இலட்சணமான பெண்  இதுபோல் இருப்பாள் என்று   கத்தியைப்  பிரயோகித்து  விவரி (3, 4) குத்து விளக்கு! 
13. _____ சிறைவாசம்  ஏனென்றால் வனவாசம் (6)  "இம்மென்றால்", இது பொது அறிவுக் கேள்வி, புதிர் இல்லை. பாரதியார் ரஷ்யப்புரட்சி பற்றி எழுதியதில் இடம்பெற்ற வரி.
15.  அசையாமல்  இடையொடியப்  போகவில்லை சிறுவன் காலின்றித்   தடுமாற்றம் (2, 3) சிலை போன்று (அதாவது அசையாமல்) =  போலை + (சி) றுவன்
16.  பணத்தாசையில் முதலாளிகள் செய்வது  துளி ரசம் கலந்து   கடலையால் செய்தது (5)  சுரண்டல் = சுண்டல் + ர (சம்)
17.   காற்றில் கரைந்து முதல்வர்கள் ஆண்டவனிடம் விண்ணப்பித்தால்  யாருக்கும் கிடைக்கும் (4)  ஆவியாகி  (முதலெழுத்துகளின் திரட்டு)
20.  திருவள்ளுவருக்கு ஒரு கண் (2) எண் ( எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்/ கண்ணென்ப வாழும் உயிர்க்கு)
_______________________
முதல் நாள்  கட்டங்கள் வெளிவராத போதே விடை கண்டு பிடித்தவர்கள்:
1. பா. நடராஜன்
2. கேசவன் 
3. ராம்கி கிருஷ்ணன்
4. எஸ் பி சுரேஷ்  
______________________

கட்டங்கள் வந்தபின்  இந்த இரண்டு நாட்களில் விடையனுப்பியவர்கள். எல்லா விடைகளையும், சரியாகக் கண்டுபிடித்தவர்கள் பெயர் மட்டும். (உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள் நாளை காலை திருத்தம் வெளிடுகிறேன்).
5. லதா
6.  எஸ் பார்த்தசாரதி
7. எஸ் ஆர் பாலசுப்ரமணியம்
8. ஶ்ரீகிருபா
9. வானதி
10. ராமராவ்
11. கதிர்மதி
12. எஸ் பி சுரேஷ் 
13. சங்கரசுப்ரமணியன்
14. ஜோசப் அமிர்தராஜ்
15. முத்து சுப்ரமண்யம்
16. அகிலா
17. ஜிகே சங்கர்
18. கி.பா.
19. மாதவ் மூர்த்தி
20. பத்மா
21. அம்பிகா
22. ராஜலக்ஷ்மி கிருஷ்ணன்
23.  சங்கரசுப்ரமணியன்
24 & 25  கனகசபாபதி & லட்சுமி மீனாட்சி
26. ஆர் நாராயணன்
27.  சிங்கப்பூர் பானு 

(ஆர் நாராயணன் என்று இரு வேரு நபர்கள் இருக்கலாம், தெரியவில்லை)

Comments

Raghavan MK said…
Some highlights from சரவெடி!
********************************
சரவெடியில் நான் மிகவும் இரசித்த புதிர்கள்!
********
மிகவும் கடினமான புதிர்கள்!

16. ரேவதிக்கு ஐந்து, லலிதாவுக்கு ஆறு (3)
ரேவதியும் லலிதாவும் ராகங்கள் என கண்டுபிடிப்பதற்குள்
சுரம் வந்துவிட்டது!
விடை :சுரம்

4. ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)
விடை: தளை

22.  இரவோடிரவாகப்  பாடு! (4)
விடை: அல்லல்
(அல் = இரவு)

மற்றும் நகைச்சுவையானவை!

8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி உருவாக்கும்  அமைப்பு (6)
விடை: கட்டுமானம்

12. கவனமாக  வாத்து தலை சீவி  இன்னொரு பறவையிடம் புகுந்தது (6)
விடை: கருத்துடன்

21.  ___  ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை
 (3, 3)
விடை: கிணறு (வெட்ட)தோண்ட

 5. ஒழுங்கு மாற  ஆரம்பமின்றி  காந்தி கடலை வறுத்தார் (5)
விடை: கலைந்திட

16.  பணத்தாசையில் முதலாளிகள் செய்வது  துளி ரசம் கலந்து கடலையால் செய்தது (5)
விடை: சுரண்டல்

மற்றும் அருமையான சொல்லாடல் கொண்டபுதிர்கள்!

3. பெரிய தடை சிக்க தடுமாறுவது கையில் காசு குறைவாக இருக்கும் சமயம்(6)
விடை: மாதக்கடைசி

 9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
விடை: சந்ததி
[சதி+(சூழ்)ந்த]

19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
விடை: முக்கண்ணன்
[முக்க+(அ)ண்ணன்]

13. __இம் என்றால்__ சிறைவாசம்  ஏனென்றால் வனவாசம் (6)
விடை: இம்மென்றால்

*மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்பு*
இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்பது ருஷ்ய நாட்டில் ஜார் மன்னன் நடத்திய கொடுங்கோல் ஆட்சி கண்டு கொதித்தெழுந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுப்பிய அனல் கக்கும் கவிதை வரிகள்.

இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம், இவ்வாறங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில் அம்மை மனம் கனிந்திட்டாள்’’
 ******************************
 
This comment has been removed by the author.
R. Padma said…

It was quite challenging. My head was spinning with all the 24 puzzles. Thanks Vanchi for keeping us engaged. I could not solve 18. So my name appeared only in 23 list. When i saw the grid, i filled up that part first. I came up to போர் and வில் but could not connect வியாபாரி with விற்போர். We had a great time. Thanks once again.
Padma
Vanchinathan said…
@ராகவன்:
உங்களுடைய விரிவான கருத்துகளுக்கு நன்றி. மாட்டு டாக்டர் இருக்கும்போது மாட்டு நீதிபதி இருக்கக் கூடாதா?

@பத்மா: விற்போர் = arms dealer என்று நினைத்துக்கொள்ளலாமோ?
Muthu said…
விளக்கம்:
மாட்டு நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ஆட்டி
உருவாக்கும் அமைப்பு (6) கட்டுமானம்
நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ==> மகா [கனம்] பொருந்திய கனம்+மாட்டு {ஆட்டி ==> anangram} ==>க-ட்டு-மா-னம்
Muthu said…
கொடிய திட்டம் சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4) சந்ததி சதி (கொடிய திட்டம்) + ந்த (பாதி "பிற ந்த")==> சந்ததி = குழந்தைகள்
11. நடு வாயில் பல்லில் சிக்கிய கல் (3) பயில்==> ப-யி-ல் (கல் (learn/study)
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4) விற்போர் வில் யுத்தம் = விற் போர் = விற்பனை செய்வோர்!
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6) முக்கண்ணன்
(எ)ண்ணன்+ முக்கிய (=திணற) = முக்கண்ணன் (தருமி-நக்கீரன்- சிவபெருமான் - திருவிளையாடல்)
21. ___ ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3) கிணறு தோண்ட
பூதம் வந்தது (பழமொழி) நினைத்த பூதம் (தண்ணீர் ==> ஐம்பூதங்களில் ஒன்று)வரவில்லை (3, 3) கிணறு தோண்ட
Ambika said…
கொடிய திட்டம் சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)

கொடிய திட்டம் = சதி

பின் பாதி பிறந்த =ந்த

சதி சூழ்ந்த ந்த

ச(ந்த)தி
உஷா said…
முதலில் 22 விடைகளும் கட்டம் வெளியான அரைமணியில் மொத்தமும் பூர்த்தி செய்து அனுப்பினேன். என்னை(பெயரை)க் காணவில்லையே...
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************


 8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி உருவாக்கும்  அமைப்பு (6)

நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது= கனம்
ஆட்டி =anagram of கனம்+ மாட்டு
= கட்டுமானம்

 9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
சந்ததி
கொடிய திட்டம்= சதி
சூழ்ந்த பின் பாதி!= [சூழ்]ந்த= ந்த
-= சந்ததி

11.  நடு  வாயில் பல்லில் சிக்கிய  கல் (3)
நடு  வாயில்= யி
பல்லில் சிக்கிய!= பல் +யி
=பயில் =கல் (கற்க)


18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)
=வில்
பரிமாறிக்கொள்ளும்=போர்
வியாபாரிகள்!= விற்போர்


19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
அண்ணன் ஆரம்பிக்காமல்
= ண்ணன்
திணற= முக்க
நக்கீரன் பார்த்தவன்
= முக்க+ண்ணன்
=முக்கண்ணன்

21.  ___  ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)
கிணறு தோண்ட பூதம் பழமொழி

Muthu said…
விளக்கம்:
மாட்டு நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ஆட்டி
உருவாக்கும் அமைப்பு (6) கட்டுமானம்
நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ==> மகா [கனம்] பொருந்திய கனம்+மாட்டு {ஆட்டி ==> anangram} ==>க-ட்டு-மா-னம்
விளக்கம்:
மாட்டு நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ஆட்டி
உருவாக்கும் அமைப்பு (6) கட்டுமானம்
நீதிபதிக்கு மரியாதையாகப் பொருந்துவது ==> மகா [கனம்] பொருந்திய கனம்+மாட்டு {ஆட்டி ==> anangram} ==>க-ட்டு-மா-னம்

3 April 2020 at 06:07 Delete
Blogger Muthu said...
கொடிய திட்டம் சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4) சந்ததி சதி (கொடிய திட்டம்) + ந்த (பாதி "பிற ந்த")==> சந்ததி = குழந்தைகள்
11. நடு வாயில் பல்லில் சிக்கிய கல் (3) பயில்==> ப-யி-ல் (கல் (learn/study)
18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4) விற்போர் வில் யுத்தம் = விற் போர் = விற்பனை செய்வோர்!
19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6) முக்கண்ணன்
(எ)ண்ணன்+ முக்கிய (=திணற) = முக்கண்ணன் (தருமி-நக்கீரன்- சிவபெருமான் - திருவிளையாடல்)
21. ___ ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3) கிணறு தோண்ட
பூதம் வந்தது (பழமொழி) நினைத்த பூதம் (தண்ணீர் ==> ஐம்பூதங்களில் ஒன்று)வரவில்லை (3, 3) கிணறு தோண்ட
Vanchinathan said…
கு. கனகசபாபதி மின்னஞ்சல் வழியாக விளக்கங்கள் அனுப்பியுள்ளார். இங்கே அவர் இடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்:
அனுப்புவது கு.கனகசபாபதி & லட்சுமி மீனாட்சி

கட்டுமானம் மாட்டு+கனம் (கனம் நீதிபதி அவர்களே)

சந்ததி சதி +ந்த

பயில் பயில்= கல்; பல் +யி= வாயில்--வால்

விற்போர் வில்லுடன் நடத்தப்படும் சண்டையில் அம்புகள்தானே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன

முக்கண்ணன் சிவன் நக்கீரன் பார்த்தவன்
முக்க= திணற +அண்ணன் ---அ ண்

கிணறு தோண்ட: நினைத்த தண்ணீர் பூதம் வரவில்லை
சங்கரசுப்பிரமணியன் said…
கிணறு வெட்ட பூதம் என்பது தான் சொலவடை என்று எண்ணிக் கொண்டிருந்த நான் முதலில் அவ்வாறே பூர்த்தி செய்து துருவள்ளுவர் கண் ட் என்று எப்படி முடியும் என எண்ணித் திணறிக் கொண்டிருந்து விட்டு, பின்னர் கிணற்றை வெட்டாமல் தோண்டப் புறப்பட்டேன்.

ரேவதி, லலிதா - ஔடவ, ஷடவ ராகங்கள் என்ற சங்கீத பாடம் நினைவில் இருந்ததால் உடனே பொறி தட்டி விட்டது.

தங்கம் விலை உயர்வால் கொஞ்சம் பொன்னகைக்க நேரம் எடுத்துக் கொண்டேன்.

காந்தி கடலை வறுத்த கதை படித்து வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ந்தேன். வறுத்த கடலையை ருசிக்க முடியாமல் பொக்கை வாயர் பாவம். தங்கப்பல் கட்டிக் கொண்டிருந்திருக்கலாம்!
சித்‌தானந்தம் said…
எனக்கு மிகவும் பிடித்த சுவாரஸ்யமான புதிர்கள் வியாபாரிகள், திருவள்ளுவர்.

பாராட்டுகளும், நன்றியும்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்