இன்று காலை வெளியான வெடி:
கையளவில் பாதி வெடிக்க எழுந்த பேரொலி (5)
அதற்கான விடை: முழக்கம் = முழம் + க்க
முழம் = கையளவு
க்க = "வெடிக்க" என்பதில் பாதி
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments