இன்று காலை வெளியான வெடி:
பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை மாவை துடைத்துக் கசக்கு (5)
அதற்கான விடை: விநாயகர் = நாகமா + வியர்வை - மாவை
மஹாபாரதக்கதையை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் அதை எழுதினார் என்பது வழக்கு. பெர்ரி மேசன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரம் இடம்பெறும்
கொலை வழக்குக் கதைகளின் ஆசிரியரான எர்ல் ஸ்டேன்லி கார்ட்னர் வாயால் சொல்லி ஒலிப்பதிவு செய்த பின் அதை உதவியாளர்கள் கேட்டு எழுதி/தட்டச்சிட்டு பதிப்பகத்திற்கு அனுப்புவார்களாம்.
விநாயகர் வேகமாக எழுதும் திறம் பெற்றதால் நேரடியாகவே எழுதிவிட்டாராம்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*********************
வியாசர் விநாயகரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன் நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு உடன்பட்டு வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார்
*********************
பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை மாவை துடைத்துக் கசக்கு (5)
மாவை துடைத்து
= (நாகமா? வியர்வை) யில் "மா, வை" , என்ற 2 எழுத்துக்களை நீக்க
=நாக(மா)வியர்(வை)
= நாகவியர்
கசக்க = anagram of நாகவியர்
= விநாயகர்
பாரதத்தை எழுதியது
=விநாயகர்
*********************