Skip to main content

உதிரிவெடி 4064 தாமதமாகும்


நேற்றிரவு நேற்றைய உதிரிவெடிக்கான விடையயைம், சரவெடிக்கான விடைகளையும்  இரு வேறு இடுகைகளில் வெளியிட்டேன்.

அதில் சில கடினமானவற்றுக்கு விளக்கங்களைக் கருத்துரையில் அளிக்குமாறு
கேட்டிருந்தேன். அதை எழுதுவதற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பதற்காக இன்றைய வெடியை தாமதமாக அளிக்கிறேன்.  புது வெடி வந்துவிட்டால் அதை விடுக்க மனம் சென்றுவிடுமே!

இதோ இங்கே சென்று விளக்கங்களைக் கருத்துரையாக இடுங்கள்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************


 8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி உருவாக்கும்  அமைப்பு (6)

நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது= கனம்
ஆட்டி =anagram of கனம்+ மாட்டு
= கட்டுமானம்

 9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)
சந்ததி
கொடிய திட்டம்= சதி
சூழ்ந்த பின் பாதி!= [சூழ்]ந்த= ந்த
-= சந்ததி

11.  நடு  வாயில் பல்லில் சிக்கிய  கல் (3)
நடு  வாயில்= யி
பல்லில் சிக்கிய!= பல் +யி
=பயில் =கல் (கற்க)


18. வியாபாரிகள் அம்புகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி (4)
=வில்
பரிமாறிக்கொள்ளும்=போர்
வியாபாரிகள்!= விற்போர்


19. அண்ணன் ஆரம்பிக்காமல் முன்பே திணற நக்கீரன் பார்த்தவன் (6)
அண்ணன் ஆரம்பிக்காமல்
= ண்ணன்
திணற= முக்க
நக்கீரன் பார்த்தவன்
= முக்க+ண்ணன்
=முக்கண்ணன்

21.  ___  ___ பூதம் வந்தால் நினைத்த பூதம் வரவில்லை (3, 3)
கிணறு தோண்ட பூதம் பழமொழி

21. நினைத்த தண்ணீர் பூதம் வரவில்லை

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்