Skip to main content

விடை 4113

இன்று காலை வெளியான வெடி:
இன்னொருமுறை வால்களோடு கன்று விரும்ப அணைத்து செத்துப்போ (4)
அதற்கான விடை: மறுபடி = மடி (செத்துப்போ) + று, ப (கன்று. விரும்ப இவற்றின் கடை எழுத்துகள்)

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle !*
********************
_இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? *மறுபடி* வந்து இருக்கீங்களே, எதற்கு?_

*இப்ப மருந்து கொட்டிடுச்சி.*
😂😂😂😂😂
**********************
_இன்னொருமுறை வால்களோடு கன்று விரும்ப அணைத்து செத்துப்போ (4)_

_வால்களோடு_ (pl)
= indicator to pick up last letters from the words _கன்[று] விரும்[ப]_
= *றுப*

_செத்துப்போ_ = *மடி*

_அணைத்து_
= indicator to denote to enclose " *றுப* " inside *மடி*
= *மறுபடி*

= _இன்னொருமுறை_
**********************
*மறுபடி திரும்பியே பார்த்தாள்!*

எனை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ம்...

அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மணம்
இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்
அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்

அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வரம்
மீண்டும் மீண்டும் அவளின் பின்னே
காதல் கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை எதும் உதிர்த் திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்

(படம் நண்பேன்டா 2015)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
சமய சடங்கு முடிவடைய வாய்க்காலில் கதவு (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
_சமய சடங்கு முடிவடைய வாய்க்காலில் கதவு (3)_

( _சமயம் = மதம்_ )
_சமய_ = *மத*

_சடங்கு முடிவடைய_
= _Last letter in சடங்கு_
= *கு*

_வாய்க்காலில் கதவு_
= *மத+கு*
= *மதகு*
**********************
*மதகு* என்பது குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவாகும். இது மரம் அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். கைகளால் இவற்றைத் திறக்கவும் அல்லது மூடவும் இயலும்.
**********************
*தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை*

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில் புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

_பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி_
_இரும்பெரு நீத்தம் புகுவது போல_
_அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்_
_உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூம். (_ 79-82)

என்கிறார்.

சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துக்கள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருளாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் *மதகு* அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்த குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும். 

(தினமணி)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/7, 07:09] திரைக்கதம்பம் Ramarao: மதகு

[12/7, 07:10] thiru subramanian: மதகு

[12/7, 07:10] மீ.கண்ணண்.: மதகு
[12/7, 07:10] G Venkataraman: மதகு
சமய= மத

[12/7, 07:10] Dhayanandan: மதகு
[
[12/7, 07:13] A Balasubramanian: மதகு
A.Balasubramanian
[
[12/7, 07:17] V N Krishnan.: மதகு

[12/7, 07:19] N T Nathan: மதகு

[12/7, 07:20] A D வேதாந்தம்: விடை= மதகு/ வேதாந்தம்

[12/7, 07:20] Meenakshi: விடை மதகு

[12/7, 07:24] பாலூ மீ.: விடை மதகு
[
[12/7, 07:25] prasath venugopal: மதகு

[12/7, 07:30] balakrishnan: மதகு. 🙏
[
[12/7, 07:30] stat senthil: மதகு

[12/7, 07:37] வானதி: *மதகு*

[12/7, 07:37] akila sridharan: மதகு
[
[12/7, 07:38] Bhanu Sridhar: மதகு
[
[12/7, 07:42] sankara subramaiam: மதகு
[
[12/7, 07:45] Dr. Ramakrishna Easwaran: *மதகு*

சிலப்பதிகார வரிகள் நினைவுக்கு வந்தது

உழவர் ஓதை, *மதகு* ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
*நடந்தாய்; வாழி, காவேரி!*
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!-

[12/7, 07:48] nagarajan: *மதகு*
[
[12/7, 08:07] மாலதி: மதகு
[
[12/7, 08:32] Bharathi: மதகு
[
[12/7, 08:43] Viji - Kovai: மதகு

[12/7, 08:43] chithanandam: மதகு

[12/7, 08:44] sathish: மதகு
[
[12/7, 09:07] sridharan: மதகு
[
[12/7, 09:47] கு.கனகசபாபதி, மும்பை: மதகு
[
[12/7, 09:47] ஆர். நாராயணன்.: மதகு
[
[12/7, 11:53] shanthi narayanan: மதகு
[






Raghavan MK said…

********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
காட்டு பெரு நகரம் திரும்ப துளசி மாலையுடன் கண்ணன் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*லிமா* (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள *பெரு* நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் *மிகப்பெரிய நகரமும்* ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.
*********************
_காட்டு பெரு நகரம் திரும்ப துளசி மாலையுடன் கண்ணன் (4)_

_காடு_ = *வனம்*
_காட்டு_ = *வன*

_பெரு_
= _தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு_

_பெரு நகரம்_
= *லிமா* _(பெரு தலை நகரம்)_

_திரும்ப_
= *லிமா* .. _திரும்ப -->_ *மாலி*

_துளசி மாலையுடன் கண்ணன்_
= _வன+மாலி_
= *வனமாலி*
********************
*வனமாலியை வணங்குவோமா!*

வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா 

பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |

வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா 

வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா  | |
🙏🙏🙏
*********************
காடும் காடும் சார்ந்த முல்லை நிலத்துக்குரிய தெய்வம் திருமால். எனவே தான், காட்டுப்பகுதியில் அதிகம் விளையும் துளசி இவருக்குரியதானது. *திருமாலுக்கு வனமாலி என்ற பெயரும் உண்டு.* இதற்குகாட்டுப் பூக்களால் ஆன மாலையைச்சூடுபவர் என்று பொருள். இம் மாலையில் பலவித நிறங்களைக் கொண்ட மலர்கள் இடம் பெற்றுஇருக்கும். இதனால் தான் தெய்வங்களுக்கு கதம்பம் (பல நிற பூக்களாலான மாலை) சூடும் பழக்கம் வந்தது

துளசி , மற்றும் கதம்ப மலர்களால், கட்டப்பட்ட மாலையை வனமாலை என்றும் சொல்வார்கள். இந்த மாலையை அணிந்திருப்பவர் என்பதனால் திருமாலுக்கு வனமாலி என்றும் ஒரு பெயர் ஏற்பட்டது.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/8, 07:03] மீ.கண்ணண்.: வனமாலி

[12/8, 07:09] balakrishnan: 🙏வனமாலி
[
[12/8, 07:24] பாலூ மீ.: வனமாலி.
[
[12/8, 07:42] Meenakshi: விடை:வனமாலி
[
[12/8, 08:29] akila sridharan: வனமாலி

[12/8, 08:29] Sucharithra: வனமாலி
[
[12/8, 08:31] V N Krishnan.: வனமாலி

[12/8, 08:31] nagarajan: *வனமாலி*

[12/8, 08:31] sankara subramaiam: வனமாலி
[
[12/8, 08:33] thiru subramanian: வனமாலி
[
[12/8, 08:42] N T Nathan: வனமாலி
[
[12/8, 08:42] திரைக்கதம்பம் Ramarao: வனமாலி
[
[12/8, 08:45] ஆர். நாராயணன்.: வனமாலி

[12/8, 09:15] *Dr. Ramakrishna Easwaran* : *வனமாலி*
காட்டு= வன
பெருநகரம்= பெரு என்ற தென்னமெரிக்க நாட்டு நகரம்= லிமா --> மாலி

*வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி*
*ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது."*

' *வனமாலி* என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால் என்னைக் காக்க வேண்டும்'


[12/8, 09:21] Dhayanandan: வனமாலி

[12/8, 10:25] *siddhan subramanian:* *வனமாலி (வன + மாலி (லிமா திரும்ப)*

[12/8, 10:34] chithanandam: வனமாலி
[
[12/8, 11:34] shanthi narayanan: வனமாலி

[12/8, 14:40] *G Venkataraman:*
*வன மாலி*
*Lima Peru city*

[12/8, 15:44] ஆர்.பத்மா: வனமாலி
[
[12/8, 16:35] Viji - Kovai: வனமாலி
[
[12/8, 17:53] கு.கனகசபாபதி, மும்பை: வனமாலி

[12/8, 18:01] வானதி: *வனமாலி*

[12/8, 19:50] Usha Chennai: வனமாலி

*************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
கருங்காளை முதல் வாரம் சென்றபின் இராசேந்திரன் வென்றான் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*கெடா* , மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். *கடாரம்* என்பதே இதன் தமிழ்ப் பெயர்.
பண்டைய காலத்தில் கெடா,
*காழகம்* , என இந்தியர்களால் அழைக்கப்பட்டது.
கெடா பற்றிய (பூஜாங் பள்ளாத்தாக்கு) முதல் குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது.
2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்துப்பாட்டு தொகுதியில் உள்ள *பட்டினப்பாலை* , கெடாவைக் *காழகம்* எனக் குறிப்பிடுகிறது.

_“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்_

_வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,_

_குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்_
_தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,_ _கங்கை வாரியும் காவிரிப் பயனும்_
_ஈழத்து உணவும்  *காழகத்து* ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி_
_வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு"_

இப்பாடலிலிருந்து நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள்,
தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், _*காழகத்தில்* உற்பத்தி செய்யப்பட்டவை_ (பெரும்பாலும், உலோகப்பொருளாக இருக்க வேண்டும்) , பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய அரிய மற்றும் பெரிய பொருள்களும் புகார் (காவிரிப்பட்டினம்) துறைமுகம் வந்து சென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலை பெற்றிருந்ததை அறியமுடிகிறது. 
**********************
_கருங்காளை முதல் வாரம் சென்றபின் இராசேந்திரன் வென்றான் (4)_

_கருங்காளை_ = *கடா*

_முதல் வாரம்_ = first letter in
_வாரம்_
= _வா_

_சென்றபின்_
= indicator to remove _வா_ from _வாரம்_
= *ரம்*

_இராசேந்திரன் வென்றான்_
= *கடா+ரம்*
= *கடாரம்*
**********************
*_வாஞ்சியாரின் கடாரம் கண்ட மற்ற புதிர்கள்_*
*1.*
*_கையில் அடங்குமடா கடைசியாய் ஒரு நாடு (4)_*

*2.* *_குலோத்துங்கனுக்கும் முற்பட்டவன் கையகப்படுத்திய அரை குடா நாடு (4)_*

**********************
ராஜேந்திர சோழனின் ஒரு பட்டம் *“கடாரம் கொண்டான்”.* கடாரத்தை வென்றவன் என்பது இதன் பொருள். ஏனெனில் கடாரம்தான் பண்டைய மலாக்காவின் நுழைமுகமாக தலையாய இடம் பெற்றிருந்தது. கடாரத்தின் மீது ராஜேந்திர சோழன் நடத்திய படையெடுப்பு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டதால்தான் வேலூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லூர் அருகில் இந்த வெற்றியைக் கொண்டாட கடாரம் கொண்ட சோழபுரம் அமைக்கப்பட்டது. அதே போன்று சிவனுக்கான ஒரு கோயிலையும் கட்டி அதற்குக் கடாரம் கொண்ட சோழேஸ்வரம் (இப்போது பூமிஸ்வரா கோயில்) என்றும் பெயர் வைத்தார். திருவாரூர், அரியலூர் நகரங்களுக்கும் கடாரம் கொண்டான் என்றே பெயரிட்டார்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/9, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கடாரம்
[
[12/9, 07:01] மீ.கண்ணண்.: கடாரம்
[
[12/9, 07:02] balakrishnan: 🙏. கடாரம்
[
[12/9, 07:02] Dhayanandan: கடாரம்

[12/9, 07:03] Bhanu Sridhar: கடாரம்

[12/9, 07:04] V N Krishnan.: கடாரம்

[12/9, 07:06] chithanandam: கடாரம்
[
[12/9, 07:06] Sucharithra: கடாரம்

[12/9, 07:07] பாலூ மீ.: கடாரம்.

[12/9, 07:08] sankara subramaiam: கடாரம்

[12/9, 07:08] A Balasubramanian: கடாரம்
A.Balasubramanian

[12/9, 07:09] akila sridharan: கடாரம்

[12/9, 07:19] thiru subramanian: கடாரம்
[
[12/9, 07:23] stat senthil: கடாரம்
[
[12/9, 07:29] Venkatesan M: இன்றைய விடை = கடாரம்
வெங்கடேசன் மீ

[12/9, 07:36] Meenakshi: விடை : கடாரம்
[
[12/9, 07:39] prasath venugopal: கடாரம்

[12/9, 07:42] ஆர். நாராயணன்.: கடாரம்
[
[12/9, 07:45] sridharan: கடாரம்.
[
[12/9, 07:50] sathish: கடாரம்

[12/9, 07:51] nagarajan: *கடாரம்*
[
[12/9, 08:21] siddhan subramanian: *கடாரம்*
*(கடா + (வா)ரம் ))*
[
[12/9, 09:35] வானதி: *கடாரம்*
[12/9, 09:02] Dr. Ramakrishna Easwaran: *கடாரம்*

_தற்போது மலேசியாவில் உள்ள பினாங்கு அருகே உள்ள துறைமுகம் தான் *கடாரம்* எனச் சோழர் காலத்தில் அழைக்கப் பட்டது. பட்டினப்பாலையில் *காழகம்* என வழங்கப்படும் துறைமுக நகரம் இதுவே_

[12/9, 11:13] shanthi narayanan: கடாரம்
[
[12/9, 11:41] கு.கனகசபாபதி, மும்பை: கடாரம்
[
[12/9, 11:46] G Venkataraman: கடாரம்
[
[12/9, 14:16] ஆர்.பத்மா: கடாரம்

*************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
நேர்மை தவறிய பெரிய இழப்பில் சாந்தமாய் மாறிவிடு (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
சாய்ந்து சாய்ந்து - நீதானே என் பொன்வசந்தம்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்

சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய்

விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்

(நீதானே என் பொன்வசந்தம் : 2012)
**********************
_நேர்மை தவறிய பெரிய இழப்பில் சாந்தமாய் மாறிவிடு (4)_

_பெரிய_ = *மா*
_இழப்பில்_ = indicator to remove *மா* from *சாந்தமாய்*
= *சாந்தய்*
_மாறிவிடு_ = anagram of *சாந்தய்*
= *சாய்ந்த*
= _நேர்மை தவறிய_
********************
*சாய்ந்தது ஏன்... நிமிர்ந்தது எப்படி... பைசா கோபுரத்தின் சுவாரஸ்யங்கள்!*

இத்தாலியின் பைசா கோபுரத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு கட்டடம் *சாய்ந்தாலும்* பல நூறு ஆண்டுகளாக கீழே விழவில்லை என்றால் அது ஆச்சர்யம்தானே. ஆனால், நாம் இதுவரை அது ஏன் *சாய்ந்தது* , சாய்ந்தும்கூட இன்னும் ஏன் கீழே விழவில்லை என்று யோசித்ததுண்டா?

முதலில் பைசா கோபுரம் என்று ஒன்று அமைக்கப்பட்டது பைசா நகரில் உள்ள ஓர் ஆலயத்துக்கு மணிகூண்டு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காகதான். 

இந்த பைசா கோபுரம் கட்டப்பட்ட இடம் களிமண் கலவை நிறைந்த இடம்.
அடித்தளமும் வெறும் 3 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே அமைக்க, கட்டடத்தின் எடையைத் தாங்காமல் மண் சரிய கட்டடமும் ஒரு புறமாய் சாய்வது தெரியவந்தது. 

1990-ம் ஆண்டு 5.5 டிகிரி *சாய்ந்த* பைசா கோபுரத்தைக் கண்ட இத்தாலிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் கோபுரத்தை மூடிவிட்டது. பைசா கோபுரம் 1990-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மூடிதான் வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை கீழே விழுந்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதாலே பைசா கோபுரம் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் மூடப்பட்டே இருந்தது.

பைசா கோபுரத்தின் பக்கவாட்டில் மண்ணைப் பறித்து எடுத்ததன் மூலம் *சாய்ந்து* இருந்த கட்டடத்தின் கோணம் சிறிது குறைக்கப்பட்டது. அதாவது 1990 களில் 5.5 டிகிரி என்ற கோணத்தில் சாய்ந்திருந்த கட்டடம் 2001-ம் ஆண்டில், இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம், 3.99 டிகிரி எனக்
குறைக்கப்பட்டது. மூடி வைக்கப்பட்டிருந்த பைசா கோபுரம் ஒருவழியாக பார்வையாளர்கள் வசதிக்காக 2001-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டது. 

*_சரித்திரம் படைக்க வலிகள் பல கடக்க_* *_வேண்டும் என்பது பைசா கோபுரத்துக்கும் பொருந்தும்._*
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/10, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சாய்ந்த
[
[12/10, 07:11] Meenakshi: விடை:சாய்ந்த

[12/10, 07:12] Ramki Krishnan: சாய்ந்த
[
[12/10, 07:15] பாலூ மீ.: சாந்தமாய் மைனஸ் மா (பெரிய)
விடை: சாய்ந்த

[12/10, 07:48] chithanandam: சாய்ந்த?

[12/10, 07:50] N T Nathan: சாய்ந்த
[
[12/10, 07:52] ஆர். நாராயணன்.: சாய்ந்த

[12/10, 08:25] nagarajan: *சாய்ந்த*
[
[12/10, 12:15] balakrishnan: சாய்ந்த🙏
[
[12/10, 13:40] வானதி: சாய்ந்த
[
[12/10, 15:40] siddhan subramanian: சாய்ந்த (சாந்தமாய் - மா) மாறல்

[12/10, 17:01] G Venkataraman: அடங்கு
*************************
Raghavan MK said…

********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
ஜாங்கிரி, ஜாங்கிரி என்று ஜபித்தால் தாட்சாயணி தோன்றுவாள் (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
கல்யாணம்........கல்யாணம்......
வேணும் வாழ்வில் கல்யாணம்......

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்

ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே அன்றைய தினமே…
சரோஜா, *கிரிஜா*, ஜலஜா, வனஜா.
மாலினி, லோசனி, மஞ்சுளா, பாஷிணி.

யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி

கல்யாணம்........கல்யாணம்......
வேணும் வாழ்வில் கல்யாணம்

(Movie: Penn
Music: R. Sudharsanam Year:1954
Lyrics: Udumalai Narayana Kavi Singers: J. P. Chandrababu)
********************
*தாட்சாயிணி* 
என்பவர் 
சிவபெருமானின் 
மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென 
சிவமகாபுராணம்
கூறுகிறது.  
பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட 
பிரஜாபதி தட்சனுக்கும், முதல் மனிதர்களான 
சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளின் மகளான பிரசூதி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாக கருதப்படுகிறார்.
********************
_ஜாங்கிரி, ஜாங்கிரி என்று ஜபித்தால் தாட்சாயணி தோன்றுவாள் (3)_

Hidden clue in the words _ஜாங்கிரி, ஜாங்கிரி_
= _ஜாங் கிரிஜா ங்கிரி_
= *கிரிஜா*
= _தாட்சாயணி_
**********************
*கிரிஜா*
பரமசிவனின் பத்தினி பார்வதி.

பரமசிவனின் பத்தினியைக்குறிக்கும் சொல்
கிரிஜா...புறமொழிச்சொல்...வடமொழி

_கிரிஜா...._
*கிரி* என்றால் மலைகள்....
*ஜ* என்றால் ஜன்மித்தவள்...அதாவது மலையில் பிறந்தவள் என்று பொருள்...

_பார்வதி மலையில் பிறந்தவள் ஆனதால்  *கிரிஜா* எனப்பட்டாள்._
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[12/11, 07:02] திரைக்கதம்பம் Ramarao: கிரிஜா

[12/11, 07:02] Sucharithra: கிரிஜா
[
[12/11, 07:03] V N Krishnan.: Girija. கிரிஜா
[
[12/11, 07:03] balakrishnan: 🙏கிரிஜா

[12/11, 07:04] Usha Chennai: கிரிஜா

[12/11, 07:04] Bhanu Sridhar: கிரிஜா

[12/11, 07:04] sankara subramaiam: கிரிஜா

[12/11, 07:05] thiru subramanian: கிரிஜா
[
[12/11, 07:05] கு.கனகசபாபதி, மும்பை: கிரிஜா
[
[12/11, 07:08] akila sridharan: கிரிஜா

[12/11, 07:09] மீ.கண்ணண்.: கிரிஜா

[12/11, 07:16] chithanandam: கிரிஜா

[12/11, 07:18] N T Nathan: கிரிஜா
[
[12/11, 07:24] Ramki Krishnan: கிரிஜா
[
[12/11, 07:27] balagopal: Good morning sir!.விடை.கிரிஜா.

[12/11, 07:28] பாலூ மீ.: கிரிஜா.
[
[12/11, 07:28] prasath venugopal: கிரிஜா
[
[12/11, 07:37] ஆர்.பத்மா: கிரிஜா
[
[12/11, 07:47] ஆர். நாராயணன்.: கிரிஜா

[12/11, 07:47] Dr. Ramakrishna Easwaran: *கிரிஜா*

[12/11, 07:49] nagarajan: *கிரிஜா*
[
[12/11, 07:55] Meenakshi: விடை; கிரிஜா
[
[12/11, 07:55] sathish: கிரிஜா

[12/11, 08:21] siddhan subramanian: கிரிஜா

[12/11, 08:24] Viji - Kovai: கிரிஜா
[
[12/11, 08:36] Revathi Natraj: கிரிஜா

[12/11, 10:58] G Venkataraman: கிரிஜா
[
[12/11, 11:17] stat senthil: கிரிஜா

[12/11, 11:35] வானதி: *கிரிஜா*

[12/11, 12:33] shanthi narayanan: கிரிஜா
[
[12/11, 14:32] Bharathi: கிரிஜா
[
[12/11, 15:20] மாலதி: கிரிஜா
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
நாதியற்ற கணையோ? (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************

*"அம்போ என்று"* என்பதன் தமிழ் விளக்கம்

_அம்போ என்று:_
*ஆதரவு அற்ற நிலை.*
**********************
*இந்த கேள்விக்கு என்ன பதில் ?*

காலையில் ஒரு நாட்டில் மாலை 
வேறு ஒரு நாட்டில் என்று விண்ணில் 
சுற்றி சுற்றி பறந்து வந்தேன்,
நான் சுதந்திரப் பறவையாக !

இன்று சிறகு ஒடிந்த பறவையாக 
“ஜம்போ ” ஜெட்  நான் *அம்போ* 
என்று மண்ணில் !

சிறகடித்துப் பறக்கும் ஓரு சின்னப் 
பறவை என் முதுகில் இப்போ !
நீ பறப்பது எப்போ என்று என்னைப் 
பார்த்து கேக்குது ஓரு கேள்வி ?

இந்த  கேள்விக்கு என்ன பதில் 
நான் சொல்ல ? ,
கொரானா 
அய்யா ! 

விட்டு விடுங்கள் எங்களை …நீங்கள் 
வேண்டுமானால் நிலவிலும் ,வேற்று 
கிரஹத்திலும் கால் பதித்துக் கொள்ளுங்கள் !
மனிதர் நாங்கள் அந்த பக்கமே எட்டிப் பார்க்க 
மாட்டோம் இனி !

(கந்தசாமி நடராஜன்)
**********************
_நாதியற்ற கணையோ? (_ 3)

_கணை_ = *அம்பு*
_கணையோ_
= *அம்போ*

_நாதியற்ற_
= *அம்போ*
**********************
*பழமொழி* 

**சொல் அம்போ*
*வில் அம்போ?**

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக சொல்லும் வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும்.
**********************
_சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ_ 

_வெல்கம் ஓ மை சையில்ட்_
_மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம்_
_ஓ மை லவ் வெல்கம்_ 

_சிட்டுக்கள் எப்போதும் பட்டுக்குள் சிக்காமல்_
_கொட்டங்கள் போடும் பழக்கம்_
_ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்_
_என் நெஞ்சில் என்னென்ன_
_இன்பங்கள் உண்டென்று_
_எண்ணங்கள் தேடி பறக்கும்_ 

_சங்கர சங்கர சம்போ_
_உன் சங்கதம் எல்லாம் அம்போ_

(deeplyrics.in/welcomesong)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அம்போ

[12/12, 07:01] மீ.கண்ணண்.: அம்போ
[
[12/12, 07:02] V N Krishnan.: அம்போ!

[12/12, 07:08] Bhanu Sridhar: அம்போ
[
[12/12, 07:10] Dhayanandan: அம்போ

[12/12, 07:11] Dr. Ramakrishna Easwaran: *அம்போ*
[
[12/12, 07:16] prasath venugopal: அம்போ

[12/12, 07:19] akila sridharan: அம்போ
[
[12/12, 07:21] பாலூ மீ.: அம்போ.
[
[12/12, 07:23] Venkatesan M: இன்றைய விடை = அம்போ
[
[12/12, 07:23] Ramki Krishnan: அம்போ
[
[12/12, 07:28] G Venkataraman: அம்போ
[
[12/12, 07:31] sankara subramaiam: அம்போ
[
[12/12, 07:34] Meenakshi: விடை: அம்போ?
[
[12/12, 07:40] stat senthil: அம்போ
[
[12/12, 07:49] ஆர். நாராயணன்.: அம்போ
[
[12/12, 07:53] nagarajan: *அம்போ*
[
[12/12, 08:06] மாலதி: அம்போ

[12/12, 08:20] N T Nathan: அம்போ
[
[12/12, 10:10] கு.கனகசபாபதி, மும்பை: அம்போ
[
[12/12, 10:52] balakrishnan: அம்போ😇
[
[12/12, 11:43] வானதி: *அம்போ*

[12/12, 12:55] shanthi narayanan: அம்போ

[12/12, 19:12] Usha Chennai: அம்போ
[
[12/12, 19:19] Sucharithra: அம்போ

****************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்