இன்று காலை வெளியான வெடி:
நடுப் பள்ளம் மறைய உப்புத் தன்மை கொண்டு இருப்பவர் (5)
அதற்கான விடை: உள்ளவர் = ள்ள + உவர்
ள்ள = நடுப் பள்ளம்
உவர் = உப்புத் தன்மை
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
நடுப் பள்ளம் மறைய உப்புத் தன்மை கொண்டு இருப்பவர் (5)
அதற்கான விடை: உள்ளவர் = ள்ள + உவர்
ள்ள = நடுப் பள்ளம்
உவர் = உப்புத் தன்மை
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
********************
உவர்
உரிச்சொல்
உப்புத்தன்மை, உப்புச் சுவை
உவர்... உரைப்பவர்...
உவர்ப்பு தன்மை
********************
உவர் நிலம் (Dryland salinity) என்பது உவர்ப்புத் தன்மையை கொண்ட நிலத்தைக் குறிக்கும். ஒரு சில இடங்களில், நிலங்களுடன் உப்புத்தன்மையுள்ள நீர்வளங்களையும் உவர் பிரதேசம் என்று கூறுவார்கள். இது போன்ற உவர் நிலங்கள், உவர் நீர் நிலைகளை பல நாடுகளில் காணலாம். இப்படியான பிரதேசங்கள் கடற்கரைக்கு அருகில்தான் இருக்கும் என்பது சொல்ல முடியாது, ஒரு நாட்டின் நிலப்பரப்புகளுக்கு நடுவில் கூட இப்படியான உவர் நிலங்களைக் காணலாம்.
&&&&&&&&&&&&&&&&&&
உவர் நீர் (Brackish water) என்பதுநன்னீரும் கடல் நீரும் கலந்து உவர்ப்புத் தன்மை கொண்ட நீராகும். உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். நன்னீர் ஆறுகள், உப்புத் தன்மை கொண்ட கடலில் கலக்குமிடமான முகத்துவாரங்களில் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படும் சிறப்பு உயிரினப்படிவங்கள் வளர்கிறது.
********************
நடுப் பள்ளம் மறைய உப்புத் தன்மை கொண்டு இருப்பவர் (5)
நடுப் பள்ளம்= ள்ள
உப்புத் தன்மை = உவர்
மறைய = insertion indicator for ள்ள inside உவர்
= உள்ளவர்
= இருப்பவர்
********************
நற்றிணை - 138. நெய்தல்
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; தங்கள் பண்டி முறிந்த விடத்திலே போகட்டொழிந்த இயல்பு அழிந்த பழைய பாரின்கண் வெளிய நாரை தன் சினையை ஈனாநிற்கும்;
*******************
*இன்றைய உதிரிவெடி!*( 15-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
எப்போதோ உடுத்திய ஆடை கனி, அஞ்சாதே (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*அண்ணன்மார் சுவாமி கதை*
புடவைதனை மாற்றி தாமரையாள் போட்ட நகை நீக்கி
*பழந்துணி* கந்தைகளை தாமரை பார்த்து அணிந்துகொண்டு
வீசி நகையெறிந்துவிட்டு தாமரை வெளியிலே தானும் வந்து
ஆசாரவாசலிலே அழகுமயில் வந்துநின்று
கூசாமல் கேட்கலுற்றாள் குன்றுடையான் தன்னுரிமை
என் அத்தைமகனிருக்க எனக்கு அயல்நாட்டான் வந்ததென்ன!
என் மாமன் மகனிருக்க எனக்கு மறுநாட்டான் வந்ததென்ன?
ஆனைமேல் வந்தவனை அடிப்பேன்நான் மாற்றாலே!
குதிரைமேல் வந்தவனைக் கொண்டை பிடித்தடிப்பேன்!
பெண்கொள்ள வந்தவனைப் பிரம்பாலடிப்பேன்நான்
என்றுமே தாமரையாள் இந்தவிதம் சொல்லையிலே
பங்காளிக் கவுண்டர்கள் பறந்தோடிவிட்டார்கள்
(சக்திகனல்)
**********************
*எப்போதோ உடுத்திய ஆடை கனி, அஞ்சாதே (5)*
_கனி_ = *பழம்*
_அஞ்சாதே_
= *துணி* (வு)
_எப்போதோ உடுத்திய ஆடை_
= *பழம் + துணி*
= *பழந்துணி*
**********************
*நேர்மை வளையுது*
தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!
சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா - அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)
*பழந்துணி* அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா
கவிஞர் : பாரதிதாசன்
********************** *பொருநராற்றுப்படை*
பொருநர் என்ற சொல் இரு பொருள் தரும். போர் வீரர்களையும் கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடி ஆடும் கலைஞர்களையும் குறிக்கும். பாடும் பொருநர் ஏர்க்களம்பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இப்பாட்டில் இடம் பெறுபவர்கள் தடாரிப் பறை கொட்டிப் போர்க்களம் பாடும் பொருநர் ஆவர்.
சோழன் கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் பொருநன், பெறாதவனுக்கு வழி கூறி அனுப்புவதாக அமைந்த இப்பாட்டு 248 அடிகளை உடையது. இதனை இயற்றியவர் முடத்தாமக்கண்ணியார்.
*_பழைய ஆடையும் புதிய ஆடையும்_*
பொருநன் அணிந்திருந்த பழைய ஆடையில் “ஈரும் பேனும் இருந்து அரசாள்கின்றன. அது, வேர்வையில் நனைந்து அழுக்கில் திரண்டு, கிழிசல்களை மீண்டும் மீண்டும் தைத்ததால் வேறு நூல் நுழைந்த கந்தலாகி விட்டது. அதனால் துணி நெய்தது போல் இல்லை, தைத்தே செய்ததுபோல் இருக்கிறது”.
இந்தப் *பழந்துணியை* நீக்கி விட்டு உடுத்துக்கொள்ளக் கரிகாலன் கொடுத்த ஆடை எப்படி இருந்தது தெரியுமா?
நூல் இழை ஓடிய வழி எது என்று கண்பார்வை கூட நுழைந்து கண்டுபிடிக்க முடியாதாம். அவ்வளவு நுண்மை! பூ வேலைப்பாடு கனிந்து இருக்கிறதாம். பாம்பு உரித்த தோல்போல் மென்மையாய் உள்ளதாம்.
*_நோக்கு நுழைகல்லா_* *_நுண்மைய பூக்கனிந்து_*
*_அரவுரி அன்ன அறுவை நல்கி... (82-83)_*
(அரவுரி = பாம்பு உரித்த தோல்;
அறுவை = ஆடை)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/15, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பழந்துணி
[
[12/15, 07:01] sathish: பழந்துணி
[
[12/15, 07:06] akila sridharan: பழந்துணி
[
[12/15, 07:07] V N Krishnan.: பழந்துணி
[
[12/15, 07:07] A Balasubramanian: பழம்துணி
A.Balasubramanian
[
[12/15, 07:11] மீ.கண்ணண்.: பழந்துணி
[12/15, 07:12] பாலூ மீ.: பழந்துணி.
[
[12/15, 07:15] A D வேதாந்தம்: விடை= பழந்துணி/ வேதாந்தம்.
[
[12/15, 07:18] balakrishnan: 🙏பழந்துணி
[12/15, 07:23] Meenakshi: விடை:பழந்துணி
[
[12/15, 07:34] கு.கனகசபாபதி, மும்பை: பழந்துணி
[12/15, 07:41] Dr. Ramakrishna Easwaran: பழந்துணி
கனி= பழம்
அஞ்சாதே= துணி
[
[12/15, 07:48] siddhan subramanian: பழந்துணி
[
[12/15, 08:08] nagarajan: *பழந்துணி*
[12/15, 08:12] Bharathi: பழந்துணி
[12/15, 08:15] N T Nathan: பழந்துணி
[12/15, 08:48] Sucharithra: பழந்துணி
என்ன பால் கசக்கிறதா?' என அன்புடன் கேட்டார். புலவரோ மெல்லிய குரலில், 'பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை (துவைக்கவில்லை)' என்றார்.
[
[12/15, 09:03] ஆர். நாராயணன்.: பழந்துணி
[
[12/15, 11:26] வானதி: *பழந்துணி*
[
[12/15, 11:45] Viji - Kovai: பழந்துணி
[12/15, 12:58] ஆர்.பத்மா: பழந்துணி
[
[12/15, 14:39] Dhayanandan: பழந்துணி
[
[12/15, 18:30] மாலதி: பழந்துணி
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
வாலறுந்த குதிரையிடமும் போட்டியில் கலந்து கொள்ளும் அருகதை யிருக்கிறது (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*அருகதை*
சின்னதும், பெரியதுமாய்
அளவுகளில் மட்டுமே
வித்தியாசப்பட்டு,
அனைவருக்குள்ளும்
விரவிக் கிடக்கிறது ஆசைகள்!
ஆசைப்பட்டதை
அடையும் *அருகதை* ,
இருக்கிறதோ, இல்லையோ
ஆனாலும்,
ஆசைப்பட *அருகதை* தேவையில்லை!
பெண்ணின் மீது ராவணனும்,
மண்ணின் மீது துரியோதனனும்
ஆசைப்படாது போயிருந்தால்...
இரு பெரும் காவியங்களேது!
முற்றும் துறந்த போதும்,
விட்டு வைத்ததா ஆசை
விசுவாமித்திரரை!
துன்பத்திற்கு காரணமாகவும்,
அனுபவங்களுக்கு ஆதாரமாகவும்
நல்லதும், கெட்டதும்
ஆசைகளின்றி
சிருஷ்டிக்கப்படவில்லை
இப்பிரஞ்சம்!
— கா.இளையராஜா
**********************
_வாலறுந்த குதிரையிடமும் போட்டியில் கலந்து கொள்ளும் அருகதை யிருக்கிறது (3)_
_வாலறுந்த குதிரையிடமும்_
= Answer hidden in the words
_வாலறுந் *த குதி* ரையிடமும்_
= *தகுதி*
= _போட்டியில் கலந்து கொள்ளும் அருகதை யிருக்கிறது_
**********************
*தகுதி*
_அன்பே காதலிக்கும் தகுதி_
_எனக்கு வந்துவிட்டது_
_உன்னை காத்லிக்கிறேன்_
_காதலிக்கப்படும் தகுதி என்னிடம் இருக்கிறதா?_
_உன்னிடம் கேட்கிறேன்_
(Elakkiyan)
**********************
உங்களிடம் காதல் மட்டும் இருந்து காதலிக்கப்படும் தகுதி இல்லாதிருந்தால், காதல் மிகவும் ஆபத்தானது.
(கிரிகோரி)
**********************
*_வெற்றி பெற தகுதி உள்ளவர்கள் மட்டுமே தோல்வி அடைகிறார்கள் -_*
(சிவக்குமார் தனபாலன்)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
விடை : இன்னார்
[12/16, 07:00] திரைக்கதம்பம் Ramarao: தகுதி
[12/16, 07:00] Usha Chennai: தகுதி
[12/16, 07:00] Sucharithra: தகுதி
[12/16, 07:01] P V Raman: தகுதி
[12/16, 07:01] Dr. Ramakrishna Easwaran: *தகுதி*
[12/16, 07:01] balakrishnan: 🙏தகுதி
வீ.ஆர். பாலகிருஷ்ணன்👍
[
[12/16, 07:03] V N Krishnan.: தகுதி
[
[12/16, 07:09] A D வேதாந்தம்: விடை= தகுதி/ வேதாந்தம்.
[12/16, 07:11] பாலூ மீ.: தகுதி
[
[12/16, 07:15] Bharathi: தகுதி
[
[12/16, 07:17] மாலதி: தகுதி
[12/16, 07:17] மீ.கண்ணண்.: தகுதி
[12/16, 07:20] Meenakshi: விடை:தகுதி
[
[12/16, 07:22] A Balasubramanian: தகுதி
A.Balasubramanian
[
[12/16, 07:28] Dhayanandan: தகுதி
[
[12/16, 07:35] prasath venugopal: தகுதி
[12/16, 07:54] nagarajan: *தகுதி*
[
[12/16, 07:56] stat senthil: தகுதி
[12/16, 08:22] Bhanu Sridhar: தகுதி
[
[12/16, 08:23] siddhan subramanian: தகுதி
[
[12/16, 08:27] N T Nathan: தகுதி
[
[12/16, 08:33] akila sridharan: தகுதி
[
[12/16, 08:43] கு.கனகசபாபதி, மும்பை: தகுதி
[12/16, 08:58] ஆர். நாராயணன்.: தகுதி
[12/16, 09:36] வானதி: *தகுதி*
[
[12/16, 09:45] chithanandam: தகுதி
[12/16, 09:45] G Venkataraman: தகுதி
[
[12/16, 12:04] shanthi narayanan: தகுதி
[12/16, 14:28] Viji - Kovai: தகுதி
[12/16, 14:51] ஆர்.பத்மா: தகுதி
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
ஒளிய வேண்டாம் பதற்றம் தொடங்கினாலும் படபடத்துத் தேங்காது (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*தோற்றுப் போனால் அழாதே!*
_தோற்றுப் போனால் அழாதே!_
_அனுபவம் பெறுவாய்!_
_தோற்றுப் போனால் அழாதே!_
_அறிவைப் பெறுவாய்!_
_தோற்றுப் போனால் அழாதே!_
_அன்பைப் பெறுவாய்!_
_தோற்றுப் போனால் வருந்தாதே!_
_வலிமை பெறுவாய்!_
_தோற்றுப் போனால் பயப்படாதே!_
_பலம் பெறுவாய்!_
_தோற்றுப் போனால் *பதுங்காதே!*_
_பகுத்தறிவினைப் பெறுவாய்!_
_தோற்றுப் போனால் அணையாதே!_
_அனைத்தையும் பெறுவாய்!_
(கி.அன்புமொழி)
**********************
நண்பனே!😃
தொடங்கும் முன் தயங்காதே!😕
தொடங்கிய பின் நடுங்காதே!😲
இடையில் உறங்காதே!😔
வேதனை கண்டு *பதுங்காதே* !😒
சோதனை வரும் துவளாதே!😞
சாதனை செய்வாய் கலங்காதே!😢
நிச்சயம் ஒரு நாள் விடியும்.💫
அது உன்னால் மட்டுமே முடியும்.👉🙌
- Hari prakash
**********************
_ஒளிய வேண்டாம் பதற்றம் தொடங்கினாலும் படபடத்துத் தேங்காது (5)_
_பதற்றம் தொடங்கினாலும்_
= _*பதற்றம்* தொடக்க எழுத்து_
= *ப*
_படபடத்து_ = anagram indicator for *ப+தேங்காது*
= *பதுங்காதே*
= _ஒளிய வேண்டாம்_
**********************
*வித்தைப் பாடிப்*
*பணிவோமே!*
தத்தத் தானத் தனதானா
தத்தத் தானத் தனதானா!
ஒற்றுக் கேயொற் றெனநோயா
யுற்றக் கோரக் கொ ரொனாவே!
சுற்றித் தேடித் துணிந்தோமே
சொக்கிப் போயிப் பதுங்காதே!
தொற்றுக் கேதொற் றெனவேலால்
கொற்றத் தைவிட் டழிவாயே
வெற்றிக் கேபட் டொளிர்வானை
வித்தைப் பாடிப் பணிவோமே!
(பாவலர்
அருணா செல்வம்)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/17, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பதுங்காதே
[12/17, 07:01] balakrishnan: பதுங்காது🙏
[12/17, 07:02] prasath venugopal: பதுங்காதே
[
[12/17, 07:04] N T Nathan: பதுங்காதே
[
[12/17, 07:04] Dhayanandan: பதுங்காதே
[12/17, 07:07] balagopal: Good morning.
பதற்றம் தொடங்கினாலும். ப
படபடப்பு தேங்காது.
ப+ தேங்காது. பதுங்காதே
ஒளியாதே.பதுங்காதே
[12/17, 07:07] மீ.கண்ணண்.: பதுங்காதே
[
[12/17, 07:08] Ramki Krishnan: பதுங்காதே
[
[12/17, 07:10] siddhan subramanian: பதுங்காதே
[
[12/17, 07:11] chithanandam: பதுங்காதே
[
[12/17, 07:13] sankara subramaiam: பதுங்காதே
[12/17, 07:20] Meenakshi: விடை:பதுங்காதே
[12/17, 07:20] பாலூ மீ.: பதுங்காது
[
[12/17, 07:28] akila sridharan: பதுங்காதே
[
[12/17, 07:29] Bhanu Sridhar: பதுங்காதே
[
[12/17, 07:34] stat senthil: பதுங்காதே
[
[12/17, 07:53] nagarajan: *பதுங்காதே*
[
[12/17, 07:55] ஆர். நாராயணன்.: பதுங்காதே
[12/17, 07:59] G Venkataraman: பதுங்காதே
[
[12/17, 08:15] Dr. Ramakrishna Easwaran: *பதுங்காதே*
[
[12/17, 08:24] Bharathi: பதுங்காதே
[
[12/17, 08:30] கு.கனகசபாபதி, மும்பை: பதுங்காதே
[
[12/17, 08:47] sathish: பதுங்காதே!
[
[12/17, 08:50] V N Krishnan.: பதுங்காதே
[12/17, 09:39] மாலதி: பதுங்காதே
[
[12/17, 10:29] A D வேதாந்தம்: விடை= பதுங்காதே/ வேதாந்தம்
[
[12/17, 11:53] shanthi narayanan: பதுங்காதே
[12/17, 14:03] வானதி: *பதுங்காதே*
[
[12/17, 18:45] ஆர்.பத்மா: பதுங்காதே
[12/17, 19:18] Usha Chennai: பதுங்காதே
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
சன்னதி தேவியையா சிகண்டிக்கு முற்பட்டவள் வாளையால் வாலறுத்தாள்? (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*அம்பா* இந்திய இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருத்தி. இவள் காசிஅரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர்.
இவள் அடுத்த பிறவியில் துருபதனுக்கு மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர்
*சிகண்டி* என்பதாகும். குருச்சேத்திரப் போரில் போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.
**********************
_சன்னதி தேவியையா சிகண்டிக்கு முற்பட்டவள் வாளையால் வாலறுத்தாள்? (5)_
_சிகண்டிக்கு முற்பட்டவள்_
= *அம்பா*
_வாலறுத்தாள்_
= _வால் அறுத்தாள்_
= _indicator to remove வால் from வாளையால்_
= *ளையா*
_சன்னதி தேவியையா_
= *அம்பா+ளையா*
= *அம்பாளையா*
**********************
குருச்சேத்திரப் போரின்போது, பீஷ்மர் அம்பாவின் மறுபிறவியே *சிகண்டி* என்பதனை அறிந்தவராக இருந்ததால் ஒரு பெண்ணிடம் போர் புரிதல் ஆண்மைக்கு இழுக்கு என்ற நிலையில், சிகண்டியுடன் போரிட மாட்டார் என்பதை அருச்சுனன்அறிந்தான்.அவரை நேரிடையாக வெற்றிகொள்ள முடியாத அருச்சுனன்,சிகண்டியை முன்னிறுத்தி பின்னால் இருந்து அம்பு மழை பெய்தான். இவ்வாறே சிகண்டியின் உதவியால் யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அருச்சுனன் வீழ்த்தினான்.
போரின் பதினெட்டாம் நாள் இரவில் அசுவத்தாமன் சிகண்டியை கொன்றான்.
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/18, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அம்பாளையா
[
[12/18, 07:04] Ramki Krishnan: அம்பாளையா
[
[12/18, 07:04] Bhanu Sridhar: அம்பாளயா
[
[12/18, 07:14] பாலூ மீ.: அம்பாளையா?
[
[12/18, 07:15] prasath venugopal: அம்பாளையா
[
[12/18, 07:17] sridharan: அம்பாளையா
[12/18, 07:17] Meenakshi: விடை: அம்பாளையா?
[
[12/18, 07:21] akila sridharan: அம்பாளையா
[12/18, 07:31] balakrishnan: 🙏அம்பாளையா
[
[12/18, 07:34] ஆர். நாராயணன்.: அம்பாளையா
[12/18, 08:00] nagarajan: *அம்பாளையா*
[
[12/18, 08:03] stat senthil: அம்பாளையா
[
[12/18, 08:09] Dr. Ramakrishna Easwaran: *அம்பாளையா*
[12/18, 08:23] மீ.கண்ணண்.: அம்பாளையா
12/18, 08:47] N T Nathan: அம்பாளையா
[
[12/18, 09:29] V N Krishnan.: அம்பாளையா
[12/18, 10:28] G Venkataraman: அம்பாளையா?
[
[12/18, 11:20] shanthi narayanan: அம்பாளையா
[12/18, 16:13] sankara subramaiam: அம்பாளையா
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
பாவம், இனிமை ஒன்றிரண்டு குறைந்த ராகம் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*பாவனி* கருநாடக இசையின் 41வது மேளகர்த்தா இராகமாகும்.
**********************
*கந்த கானாமுதம்*
ஒவ்வொரு ராகமாகக் கையைப் பிடித்து இழுத்து வந்து “இதோ பார்த்துக்கொள்” என்று காட்டும் அனுபவம் *எஸ்.ராஜம்* அவர்கள் பாடி ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘கந்த கானாமுதம்’ என்ற இசைத்தொகுப்பைக் கேட்டால் கிடைக்கிறது. மொத்தம் 72 ராகங்களை இத்தொகுப்பில் ஒரு சிறு ஆலாபனையாகவும், ஒரு எளிய கீர்த்தனையாகவும் பாடியிருக்கிறார் எஸ்.ராஜம். தேர்ந்த ஓவியரும், மிகச்சிறந்த பாடகருமான எஸ்.ராஜம், ஒவ்வொரு ராகத்தைக் குறித்தும் ஒரு தெளிவான, அழுத்தமான சித்திரத்தைத் தன்னுடைய ராக வெளிப்பாட்டில் தருகிறார். தன்னுடைய சங்கீத மேதைமையை முன்வைக்காமல், ராகத்தைப் பற்றிய தெளிவான புரிதலையும், வடிவத்தையும் கேட்பவர்களுக்குத் தருகிறார்.
இந்த இசைத்தொகுப்பிலுள்ள பாடல்கள் 1930-ஆம் ஆண்டு *திரு.கோடீஸ்வர ஐயர்* அவர்களால் எழுதப்பட்டவை.
தன் குலதெய்வமான முருகன் மீது இப்பாடல்களை இவர் எழுதியதால் இப்புத்தகத்துக்கு ‘ *கந்த கானாமுதம்* ’ என்று பெயர் வைத்தார்.
**********************
_பாவம், இனிமை ஒன்றிரண்டு குறைந்த ராகம் (3)_
_ஒன்றிரண்டு குறைந்த_
= _ஒன்று இரண்டு குறைந்த_
= *பாவம்* இதில் ஓரெழுத்தும், *இனிமை* இதில் இரண்டெழுத்தும் குறைய
= *பாவ[ம்] +[இ]னி[மை]*
= *பாவனி*
= _ராகம்_
**********************
இத்தொகுப்பை வாங்கியவுடன் நான் ஏற்கனவே ஒரே ஒரு முறையோ, இல்லை திரைப்பாடல்களிலோ மட்டுமே கேட்டிருந்த ராகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். முதலில் கேட்டது ‘ *பாவனி* ’ ராகம். ‘ *குணா* ’ திரைப்படத்தில் வரும் *‘பார்த்தவிழி பார்த்தபடி’* என்ற பாடல் மட்டும்தான் இந்த ராகத்தில் நான் கேட்ட ஒரே ஒரு படைப்பு. ராஜம் இந்த ராகத்தை ஆரம்பித்தவுடனேயே மனதில் ஒரு திகைப்பும், ஆச்சரியமும் உண்டானது. மெல்ல மெல்ல காரிருள் மறைந்திருக்கும் உருவத்தின் கோட்டுருவம் சிறு மெழுகுவர்த்தியால் கொஞ்ச கொஞ்சமாகக் கண்ணுக்குத் தெரிவது போன்ற உணர்வு. கொஞ்ச கொஞ்சமாக என் பிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போனது. ‘கவி குஞ்சரதாசன் உன்னுள் இருக்க….’ என்னும் வரிகளில் நிஜமாகவே கண்ணில் நீர் கோர்த்து விட்டது. பெரிய அருவியை வெகு அருகிலிருந்து
பார்ப்பது போன்ற உணர்வு என்னை விட்டு அகல வெகு நேரமானது. அந்த ராகத்திலிருந்தும், வசீகரமான ராஜத்தின் குரலிலிருந்தும் மீண்டு அடுத்த பாடலைக் கேட்க வெகு பிரயத்த்தனப்பட்டு மனதைத் தயார் செய்ய வேண்டியிருந்தது.
சேதுபதி அருணாசலம்
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/19, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பாவனி
[12/19, 07:07] prasath venugopal: பாவனி
[
[12/19, 07:10] கு.கனகசபாபதி, மும்பை: பாவனி
[12/19, 07:14] Dhayanandan: பாவனி
[
[12/19, 07:16] Meenakshi: விடை:பாவனி
[
[12/19, 07:22] பாலூ மீ.: பாவனி.
[12/19, 07:28] Ramki Krishnan: பாவனி
[12/19, 07:54] nagarajan: *பாவனி*
[12/19, 08:14] Usha Chennai: பாவனி
[12/19, 08:43] Dr. Ramakrishna Easwaran: *பாவனி*(paavani)
*பாவ* ( ~ம்~ ) ( ~இ~ ) *னி*( ~மை~ )
பாவனி= 41வது மேளகர்த்தா. விவாதி ராகம் என்பதால் அதிகம் பாடப்படாத ராகம். கோடீஸ்வர ஐயரின் 72 மேளகர்த்தா கீர்த்தனத்தைத் தவிர, எனக்குத் தெரிந்து இந்த அபூர்வ ராகத்தை இளையராஜா மட்டும் குணா திரைப்படத்தில் "பார்த்த விழி" என்ற பாடலில் உபயோகித்துள்ளார்
[
[12/19, 10:01] வானதி: பாவனி
இது 41வது மேளகர்த்தா.
குணா என்னும் படத்தில் வரும்
பார்த்த விழி பார்த்த படி என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்தது.😜😜😜
[
[
[12/19, 12:55] shanthi narayanan: பாவனி
[12/19, 10:26] ஆர். நாராயணன்.: பாவனி
[
[12/19, 12:07] மாலதி: பாவனி
[12/19, 14:34] G Venkataraman: பாவனி
****************************