Skip to main content

விடை 4108

இன்று காலை வெளியான வெடி
எனவே பெரிய மரத்தில் ஆளுக்கொன்று (4) )
அதற்கான விடை: ஆதலால் = ஆல் + தலா
ஆல் = பெரிய மரம்
தலா = ஆளுக்கொன்று (?)
புதிரையிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் இதில் பொருள்குற்றம் இருப்பதை உணர்ந்தேன். "தலா" என்றால் "ஆளுக்கு" என்றுதான் பொருள். தலா ஐந்து என்றால் "ஆளுக்கு ஐந்து" என்பதுதான் வழக்கு. அடுத்த வாரம் இன்னமும் கொஞ்சம் யோசித்துப் பிழையில்லாமல் செய்கிறேன்.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*************************
A peek into today's riddle!
*************************
_ஆலும் வேலும் பல்லுக்குறுதி_

_நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி_

என்பது முதுமொழி. 

ஆலமரத்தை *ஆல்* என்றும், வேப்பமரத்தை வேல், வேம்பு என்றும்கூறுவர். முதுமையால் ஆடி விழும் பற்களைக்கூட ஆலமரத்தின் பால் மீண்டும் உறுதியாக நிலைத்து நிற்கவைக்கும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார்.
இப்பழமொழியில் வரும் நாலும் என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது. அதுபோல் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள். பொதுமறை என்று புகழ்பெற்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையது நாலடியார் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்குகிறதல்லவா?
*************************
_எனவே பெரியமரத்தில் ஆளுக்கொன்று (4)_ 

_பெரிய மரம்_ = *ஆல்*

_ஆளுக்கொன்று_
= *தலா*

_பெரிய மரத்தில் ஆளுக்கொன்று_
= *"ஆல்"* உள்ளே *"தலா"*
= *ஆதலால்*

= _எனவே_
*************************
_ஆல்போல் தழைத்து_
_அருகு போல்வேரோடி__
_மூங்கில் போல் சூழ்ந்து_
_முடிவில்லாமல் வாழ்க"__

புதுமணை புகுவிழாக்களில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதைப் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்து!

*ஆல மரம் போல் வேறெந்த மரமும் இல்லை* என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆலமரம் நம்முடைய வாழ்க்கை நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும் நாம் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக இருக்கிறது. ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள் ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை "தழைத்து". நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம். தழைத்தல் என்றால் பெருகுதல், செழித்து வளருதல் எனப் பொருள். எவ்வளவு மங்கலகரமான வார்த்தைகளை நம் முன்னோர் உபயோகப்படுத்தி இருக்கின்றனர் ஆச்சரியமாக இருக்கிறது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
எள்ளை எண்ணெயாக்கும் கருவியை எடுத்த செந்தாமரைக்கு ஊதாப்பூ மரம் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************


Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_*மந்தாரை* உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது'_

என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை.

இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும்
**********************
_சாலையோரங்களில் காணப்படும் மூலிகை மந்தாரை._
இது, இல்லத்தில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. வெள்ளை மந்தாரை, செம்மந்தாரை, நீலமந்தாரை உள்ளிட்ட வகைகளை கொண்டது. மந்தாரையின் இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மந்தாரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூச்சிகளை அழிக்க கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மாதவிலக்கு, வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பற்களுக்கு பலம் கொடுக்க கூடியது. 

**********************
_எள்ளை எண்ணெயாக்கும் கருவியை எடுத்த செந்தாமரைக்கு ஊதாப்பூ மரம் (4)_

_எள்ளை எண்ணெயாக்கும் கருவி_ = *செக்கு*

~எடுத்த~ = deletion indicator to remove *செக்கு* from *செந்தாமரைக்கு*
= *ந்தாமரை*
= *மந்தாரை* ( anagram of *ந்தாமரை* )

= _ஊதாப்பூ மரம்_
**********************
*மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப் பதியிலும் தலமரமாக விளங்கிறது.*
*************************
ஐரோப்பிய நாடுகளுக்கு மந்தாரை இலைகளை ஏற்றுமதி செய்றாங்க, ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க. 

_இந்த மந்தாரை இலைகளைத் தைச்சு, அதுல சாப்பாடு சாப்பிட்ட பழக்கத்தை நாம மறந்துட்டோம்._

ஆனா, ஐரோப்பிய ஹோட்டல்கள்ல மந்தாரை இலையை அழகான தட்டா செஞ்சு, விதவிதமா சாப்பிடுறாங்க. ‘இந்தத் தட்டில் மருத்துவ குணம் இருக்கு. இந்தத் தட்டு மட்கும் தன்மை (Bio-Degradable) கொண்டது’னு விளம்பரம் வேற செய்றாங்க!
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மந்தாரை

[10/12, 07:01] balakrishnan: மந்தாரை🙏

[10/12, 07:03] Ravi Subramanian: மந்தாரை

[10/12, 07:03] sankara subramaiam: மந்தாரை

[10/12, 07:04] பானுமதி: மந்தாரை

[10/12, 07:04] மீ.கண்ணண்.: மந்தாரை

[10/12, 07:05] N T Nathan: மந்தாரை

[10/12, 07:06] Sucharithra: மந்தாரை

[10/12, 07:07] chithanandam: மந்தாரை

[10/12, 07:11] பாலூ மீ.: மந்தாரை.
.
[10/12, 07:12] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை: மந்தாரை

[10/12, 07:12] Meenakshi: விடை;மந்தாரை

[10/12, 07:13] akila sridharan: மந்தாரை

[10/12, 07:14] K B :
மந்தாரை------கி.பா

[10/12, 07:15] மாலதி: மந்தாரை

[10/12, 07:18] உஷா, கோவை: மந்தாரை

[10/12, 07:28] Viji - Kovai: 12.10.20 விடை
மந்தாரை

[10/12, 07:28] ஆர்.பத்மா: மந்தாரை

[10/12, 07:36] A D வேதாந்தம்: விடை= மந்தாரை/ வேதாந்தம்.

[10/12, 07:56] stat senthil: மந்தாரை

[10/12, 07:57] siddhan subramanian: மந்தாரை

[10/12, 08:01] Dr. Ramakrishna Easwaran: மந்தாரை
(செந்தாமரைக்கு minus செக்கு) anagram

[10/12, 08:02] prasath venugopal: மந்தாரை

[10/12, 08:08] nagarajan: *மந்தாரை*

[10/12, 08:18] ஆர். நாராயணன்.: மந்தாரை

[10/12, 08:18] வானதி: மந்தாரை

[10/12, 08:46] Usha Chennai: மந்தாரை

[10/12, 10:17] Bharathi: மந்தாரை

[10/12, 11:17] shanthi narayanan: மந்தாரை

[10/12, 19:50] Ramki Krishnan: மந்தாரை
************************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
நீராடுவதை இந்த ஊரில் பார்க்கலாமோ? (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************


Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*குளித்தலை* :

 தமிழ் நாடு திருச்சி ஈரோடு பாதையில் உள்ளது இத்தலம்.
*குளித்தலை* கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது.
தற்போது மக்கள் வழக்கில் குழித்தலை, *குளித்தலை* என வழங்கப்படுகிறது. கல்வெட்டில் இவ்வூர் *'குளிர் தண்டலை '* என்று காணப்படுகிறது.
*********************?
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக *கடம்பவனம்* எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி " *குளிர் தண்டலை* " என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் *"குளித்தலை"* என்றாகியது.
*********************
பொன்னியின் குளிர்ந்த அலைகள் கரையை மோதி நீர்த்திவிலைகளை காற்றில் மிதக்க விட்டு மேலும் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன.அதனால் இந்த இடத்திற்கு *குளிர்தண்அலை* என்றும், குழித்த சோலைகளை உடையதால் *குழித்தண்டலை* என்றும், கடம்ப மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் *கடம்பந்துறை, கடம்பை,கடம்பவனம், கடம்பர்கோயில்* என்றும், தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் வடக்கு பார்த்த சன்னதி கொண்ட ஒரே தலமான படியால் *தக்ஷிணகாசி* என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
**********************
_நீராடுவதை இந்த ஊரில் பார்க்கலாமோ? (5)_

_நீராடுவதை_
= *குளித்தலை*

_இந்த ஊரில் பார்க்கலாமோ?_
= *குளித்தலை*
**********************
_அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை -_

  *தல சிறப்பு:*
 இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 65 வது தேவாரத்தலம் ஆகும்.   

*தல வரலாறு:*
தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள்.
அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.

அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/13, 07:00] திரைக்கதம்பம் Ramarao: குளித்தலை

[10/13, 07:00] sathish: குளித்தலை

[10/13, 07:01] balakrishnan: 🙏குளித்தலை

[10/13, 07:01] மீ.கண்ணண்.: குளித்தலை

[10/13, 07:02] chithanandam: குளித்தலை

[10/13, 07:04] Meenakshi: விடை:குளித்தலை.

[10/13, 07:05] Ravi Subramanian: குளித்தலை

[10/13, 07:05] Sucharithra: குளித்தலை

[10/13, 07:06] பாலூ மீ.: குளித்தலை.

[10/13, 07:06] பானுமதி: குளித்தலை

[10/13, 07:10] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:குளித்தலை

[10/13, 07:10] Viji - Kovai: 13.10.20 விடை
குளித்தலை

[10/13, 07:10] V N Krishnan.: குளித்தலை

[10/13, 07:10] sankara subramaiam: குளித்தலை

[10/13, 07:12] K.B. :
குளித்தலை-------கி.பா

[10/13, 07:17] Bharathi: குளித்தலை

[10/13, 07:22] A D வேதாந்தம்: விடை= குளித்தலை/ வேதாந்தம்.

[10/13, 07:28] மாலதி: குளித்தலை

[10/13, 07:32] வானதி: குளித்தலை

[10/13, 07:41] akila sridharan: குளித்தலை

[10/13, 07:53] N T Nathan: குளித்தலை

[10/13, 08:05] nagarajan: *குளித்தலை*

[10/13, 08:11] Venkatesan M: இன்றைய விடை = குளித்தலை - வெங்கடேசன் மீ

[10/13, 08:17] ஆர். நாராயணன்.: குளித்தலை

[10/13, 09:31] Dr. Ramakrishna Easwaran: *குளித்தலை*

[10/13, 10:44] கு.கனகசபாபதி, மும்பை: குளித்தலை

[10/13, 16:04] prasath venugopal: குளித்தலை

[10/13, 19:37] Ramki Krishnan: குளித்தலை


************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
செந்தில்நாதா கஷ்டம் ஆரம்பிக்க அனுபவத்தில் பெற்றது புரட்டுகிறதே (4)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************


Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத *பாடத்தை* ஒரு நாளில் நாம் பெறும் *அனுபவம்* கற்றுத் தந்து விடுகிறது. தோல்விகளில் நாம் பெறும் அனுபவப் படிப்பினைகளே, வெற்றியை நோக்கிய நம் பயணத்தை விரைவுபடுத்துகின்றன.
வெற்றியில் பெற்றதை விட, தோல்வியில் கற்றது கல்லில் செதுக்கிய எழுத்தாய் நமக்குள் ஆழப்பதிகிறது. எனவே அனுபவ ஆசானிடம் அனுதினமும் பாடம் படிப்போம்.🙏🏼
**********************
_செந்தில்நாதா கஷ்டம் ஆரம்பிக்க அனுபவத்தில் பெற்றது புரட்டுகிறதே (4)_

_கஷ்டம் ஆரம்பிக்க_
= _க[ஷ்டம்]_ = *க*

_அனுபவத்தில் பெற்றது_
= *பாடம்*

_புரட்டுகிறதே_
= _anagram indicator for *(க+பாடம்)*_
= *கடம்பா*

= _செந்தில்நாதா_
**********************
திருச்செந்தூரின் கடலோரத்தில் *செந்தில்நாதன்* அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
(திரைப்படம் : தெய்வம்)
**********************
*கடம்பன்* :
கடம்ப மலர்களை அணிந்தவன் ஆதலால் கடம்பன் என்று அழைக்கப்படுகிறான்.

*கடம்பன்* என்று சங்க நூல்களில் - அதாவது சிலம்பு, மணிமேகலையில் *முருகன்* வணங்கப்படுகிறான். 
**********************
திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்

_பாடல் 82 ... தகட்டில் சிவந்த_

தகட்டிற் சிவந்த *கடம்பையு* நெஞ்சையுந் தாளிணைக்கே
   புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
      முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
         பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.

......... *சொற்பிரிவு* .........

தகட்டில் சிவந்த *கடம்பையும்* நெஞ்சையும் தாள் இணைக்கே
   புகட்டிப் பணியப் பணித்து அருளாய் புண்டரீகன் அண்ட
      முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்திரலோகத்தை முட்டவெட்டிப்
         பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூரபயங்கரனே.

......... *பதவுரை* .........

இலைகளோடுகூடிய சிவந்த நிறமுள்ள *கடம்ப* மலர்களாலான
மாலையையும் அடியேனின் மனத்தையும் தேவரீருடைய இரு
திருவடிகளிலேயே சேர்த்து வைத்து வணங்குமாறு அடியேனுக்குக்
கட்டளையிட்டு அருள்வீராக! தாமரை மலர் மீது வீற்றிருக்கும்
பிரம்மதேவனது உலகத்தின் வாயிலைப் பிளந்து அதுவரை ஓங்கி
நின்ற அமராவதியாகிய இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று
ஆண் யானைபோல் போர்புரிந்த கொடூரமான குணமுடைய
சூரபன்மனுக்கு பயங்கரமானவரே! 
**********************
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

*கடம்பா போற்றி* கந்தா போற்றி!
வெற்றி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/14, 07:03] திரைக்கதம்பம் Ramarao: கடம்பா

[10/14, 07:04] V N Krishnan.: கடம்பா. க+பாடம் கலங்க கடம்பா

[10/14, 07:07] balakrishnan: 🙏. கடம்பா

[10/14, 07:08] Ravi Subramanian: கடம்பா

[10/14, 07:08] Meenakshi: இன்றையவிடை: கடம்பா

[10/14, 07:09] Sucharithra: கடம்பா

[10/14, 07:11] chithanandam: கடம்பா!

[10/14, 07:11] sathish: கடம்பா

[10/14, 07:15] sridharan: கடம்பா க+பாடம்

[10/14, 07:16] Viji - Kovai: விடை : க+பாடம்_கடம்பா

[10/14, 07:18] பாலூ மீ.: கடம்பா.

[10/14, 07:27] Suba: Hello sir , கடம்பா

[10/14, 07:28] A D வேதாந்தம்: விடை= கடம்பா/ வேதாந்தம்.

[10/14, 07:28] Srikrupa: கடம்பா

[10/14, 07:29] வானதி: கடம்பா

[10/14, 07:34] akila sridharan: கடம்பா

[10/14, 07:47] ஆர்.பத்மா: கடம்பா

[10/14, 07:53] stat senthil: கடம்பா

[10/14, 07:53] sankara subramaiam: கடம்பா

[10/14, 08:02] மீ.கண்ணண்.: கடம்பா

[10/14, 08:02] Dr. Ramakrishna Easwaran: *கடம்பா* !
க (பாடம்)*

[10/14, 08:04] nagarajan: *கடம்பா*

[10/14, 08:15] K B :
கடம்பா-----------கி.பா

[10/14, 08:15] prasath venugopal: கடம்பா

[10/14, 08:15] siddhan subramanian: கடம்பா (க + பாடம் )

[10/14, 08:20] கு.கனகசபாபதி, மும்பை: கடம்பா

[10/14, 08:32] Bharathi: கடம்பா

[10/14, 09:37] ஆர். நாராயணன்.: கடம்பா

[10/14, 10:39] shanthi narayanan: கடம்பா

[10/14, 13:59] மாலதி: கடம்பா

[10/14, 16:57] Ramki Krishnan: கடம்பா

*********************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கவனமில்லாத கடல் வறண்டு கசிய அலட்டல் புரண்டது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தன்னை நாடியே அனைத்து நதிகளும் வரவேண்டும் என்பது இயற்கை நிகழ்வாகவே இருந்தாலும், அதற்காகச் சற்றும் ஆணவம் கொள்ளாதிருக்கிறது கடல். நதிகள் வந்து சேர்ந்துவிட்டதால் அது தன் பரப்பை விஸ்தரிப்பதில்லை. அதேபோல நதிகள் தன்னை வந்து சேராவிட்டாலும் அதற்காக *கடல் வறண்டு* போய்விடுவதும் கிடையாது. 
**********************
_கவனமில்லாத கடல் வறண்டு கசிய அலட்டல் புரண்டது (5)_

_வறண்டு_ = _indicator for நீக்கல்_

_புரண்டது_ = _indicator for பிறழ்சொல் ( anagram)_

_கடல் வறண்டு கசிய அலட்டல்_
= " _கசிய அலட்டல்_ " இதில் " _கடல்_ " நீங்க
= [க] *சிய அலட்* [டல்]
= *சியஅலட்*

_புரண்டது_
= *சியஅலட்* புரள
= *அலட்சிய*

= _கவனமில்லாத_
**********************
எவ்வளவு பிடித்தவராக இருந்தாலும்..
மனம் நொறுங்கத்தான் செய்கிறது…
நம் அன்பை *அலட்சியம்* செய்யும்போது…!!!
**********************
தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல; நேசிக்கும் மனதை *அலட்சியம்* செய்வதும் அலைக்கழிப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றம் தான்..
**********************
‘ *அலட்சியம்* ’ என்கின்ற சொல் அனைவராலும்  அறியப்பட்டதுதான்.  ஆனால் அச்சொல்லின் ஆழ்ந்த பொருளை ஒரு சிலரே அறிந்திருப்பர். துன்பத்தை யாரும் விரும்புவது இல்லை.  எப்போதுமே இன்பமே விரும்பப்படுகின்றது.  துன்பத்தை விரும்பாத மனிதன் துன்பம் அளிக்கின்ற அலட்சியத்தைப் பற்றி  அறிந்து அலட்சியமில்லாமல் விழிப்போடு இருக்க வேண்டுமல்லவா?!

அலட்சியம் என்பது என்ன?  அலட்சியம் என்பது மனிதனின்  தன்மைகளில் ஒன்று.  ஆனால் அலட்சியம் என்பது எதிர்மறைத் தன்மை (negativity). அது விரும்பத்தகாதது (undesirable one).

_‘அலட்சியம்’ என்பதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்தவர்களில் ஒரு சாரர் ‘அலட்சியம்’ விரும்பத்தகாதது என்று விழிப்போடு அலட்சியம் செய்யாமல் இருப்பர்._

*வேறு சிலரோ அலட்சியம் என்பதன் பொருளை அறிந்திருந்தாலும் அலட்சியத்துடனே செயல்கள் புரிவர்.*

_‘அலட்சியம்’ என்பதன் ஆழ்ந்த பொருளை உணராதவர்களோ, அது பற்றி ஏதும் அறியாதிருப்பர்._

*அலட்சியம் பற்றி அறிந்தவர்  அலட்சியம் காட்டுபவராகக்கூட இருக்காலம்.*


‘அலட்சியம்’ என்கின்ற
சொல்லின் பல பொருட்களைக் காண்போம்.

*அலட்சியம்:*

1) அக்கறையின்மை
2) பொருட்படுத்தாத தன்மை
3) உதாசீனம்(lacking interest, showing no interest)
4) முகத்தில் கர்வம், கண்களில் கர்வம்.(through body languages)
5) மதியாமை, அவமரியாதை

இவ்வாறாக பல பொருட்களில் அலட்சியம் என்கின்ற வார்த்தை கையாளப்படுகின்றது.  ஐந்து பொருளுமே விரும்பத்தகாததையே
(undesirables) தெரிவிக்கின்றன.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/15, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அலட்சிய

[10/15, 07:01] N T Nathan: அலட்சிய

[10/15, 07:03] Sucharithra: அலட்சிய

[10/15, 07:06] Meenakshi: விடை:அலட்சிய

[10/15, 07:06] akila sridharan: அலட்சிய

[10/15, 07:06] Dr. Ramakrishna Easwaran: *அலட்சிய*
( _கசிய அலட்டல்_ ) minus _கடல்_ = (சிய அலட்)*
_வறண்ட_ : deletion indicator
_புரண்டது_ : anagram indicator
_கவனமில்லாத_ : definition

[10/15, 07:08] பாலூ மீ.: அலட்சிய.

[10/15, 07:10] மீ.கண்ணண்.: அலட்சிய

[10/15, 07:17] வானதி: அலட்சிய

[10/15, 07:18] chithanandam: அலட்சிய

[10/15, 07:27] Ravi Subramanian: அலட்சிய

[10/15, 07:29] prasath venugopal: அலட்சிய

[10/15, 07:37] sankara subramaiam: அலட்சிய

[10/15, 07:42] balakrishnan: 🙏 அலட்சிய.

[10/15, 07:52] siddhan subramanian: அலட்சிய (சிய + அலட்)

[10/15, 07:58] மாலதி: அலட்சிய

[10/15, 08:00] nagarajan: *அலட்சிய*

[10/15, 08:18] கு.கனகசபாபதி, மும்பை: அலட்சிய

[10/15, 09:21] ஆர். நாராயணன்.: அலட்சிய

[10/15, 13:41] பானுமதி: அலட்சிய

[10/15, 14:18] ஆர்.பத்மா: அலட்சிய

[10/15, 17:43] Ramki Krishnan: அலட்சிய

[10/15, 18:58] V N Krishnan.: அலட்சிய

*********************
Raghavan MK said…
பட்டியலில் விடுபட்டது!
🤔

[10/15, 08:12] K B :
அலட்சிய ------கி.பா(KB)
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தூளாக்கிய பாதி இடை முத்தம் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர்*

மேனி 
அரிக்க
சொறிசிரங்கு 
அப்பி –
தலைமுடியை ஆற்றங்கரையில் நாவிதன்
மழித்த
மொட்டையின் மேல்
தகிக்கச்
சூரியன்-
திறந்து விடப்பட்ட தண்ணீர் தயங்கி ஓடும் கூடலாற்றில்
மூழ்கியெழ
நனைந்த டிரவுசரைக் கழற்றி
பொக்கு பிரியாத
சிரங்கின்
பொக்கு பிரிய
வலியில் அலறி
*அரைத்த* *சந்தனத்தை* மொட்டையில் தேய்த்துப் பின்
சர்க்கரைச் சொம்பில்
சூடம் கொளுத்தி 
நிவேதிக்கும்
தந்தை தோள் மேல் அமர்ந்து
திசை நோக்கி-
பொற்குதிரையேறிப் பொலிந்து
தண்புனலில் இறங்கி வரும்
கள்ளழகர் கண்டளவில்
இமைக்காமல்
பரவசத்தில் 
ஒன்றி

உள்ளம் கொள்ளை கொண்டு உலகளந்தோன் கடக்க என்னை-
இன்னொரு முறை காணேனோ என்றேக்கம் மீதுற
இன்றளவும் ஏக்கம் தீர்ந்திலேன்
பின் –
பல சித்திரைகள் அவனைக் கண்டும் போற்றியும்-

என்று இன்னொரு முறை பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர் 
தந்தையின் தோளேறிக் கண்டேன் நான் இன்றளவும் 
தீராத அந்த ஏக்கம் 
தீர?

(அழகர்சாமி குருசாமி)
**********************
_தூளாக்கிய பாதி இடை முத்தம்(4)_

_பாதி_ = *அரை*

_இடை முத்தம்_
= [மு] *த்த* [ம்]
= *த்த*

_தூளாக்கிய_
= *அரை+த்த*
= *அரைத்த*
**********************
எப்போதும் *அரைத்த மாவையே அரைத்துக்* கொண்டிருக்காமல் புதிதாகச் சிந்தியுங்கள். எந்த வேலையாக இருந்தாலும், வார நடுவில் சலிப்பு தட்டுவதற்குக் காரணம் அதன் பழைமையே. புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை அது தவறாக முடிந்தாலும், 'சரி இன்று ஏதோ ஒரு புது முயற்சி செய்தோம்' என்கிற திருப்தியாவது மிஞ்சும். 
*************
செய்ததையே செய்து கொண்டிருந்தால் கிடைத்ததேதான் கிடைத்துக் கொண்டிருக்கும். போட்டி நிறைந்த மார்க்கெட்டிங் உலகில் இருக்கும் இடத்தில் இருக்கவே வேகமாக ஓட வேண்டும். இந்த லட்சணத்தில் பழையதை கட்டிக்கொண்டு, செய்தையே செய்துகொண்டு *அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால்* புளித்து போகவேண்டியது தான். புரிந்துகொள்ளுங்கள்!
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/16, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அரைத்த

[10/16, 07:02] sankara subramaiam: அரைத்த

[10/16, 07:03] balakrishnan: 🙏அரைத்த

[10/16, 07:04] sathish: அரைத்த

[10/16, 07:07] V N Krishnan.: அரைத்த

[10/16, 07:19] Dr. Ramakrishna Easwaran: *அரைத்த*
பாதி= அரை
முத்தம் இடை= த்த
தூளாக்கிய= அரைத்த

[10/16, 07:22] chithanandam: அரைத்த

[10/16, 07:23] வானதி: பொடித்த

[10/16, 07:28] மாலதி: பொடித்த

[10/16, 07:31] Meenakshi: விடை:அரைத்த

[10/16, 07:48] பாலூ மீ.: அரைத்த.

[10/16, 07:49] N T Nathan: அரைத்த

[10/16, 07:52] மீ.கண்ணண்.: அரைத்த

[10/16, 07:56] மாலதி: அரைத்த

[10/16, 08:01] Viji - Kovai: 16.10.20 விடை பொடித்த

[10/16, 08:03] siddhan subramanian: அரைத்த (அரை = பாதி + த்த)

[10/16, 08:10] stat senthil: அரைத்த

[10/16, 08:20] nagarajan: *அரைத்த*

[10/16, 08:25] ஆர். நாராயணன்.: அரைத்த

[10/16, 08:53] Srikrupa: அரைத்த

[10/16, 09:06] கு.கனகசபாபதி, மும்பை: அரைத்த

[10/16, 09:22] வானதி: அரைத்த

[10/16, 10:50] பானுமதி: அரைத்த

[10/16, 11:04] akila sridharan: பொடித்த

[10/16, 11:33] prasath venugopal: அரைத்த

[10/16, 15:59] shanthi narayanan: பொடித்த

[10/16, 16:29] akila sridharan: அரைத்த

[10/16, 18:19] A D வேதாந்தம்: விடை= பொடித்த/ வேதாந்தம்

*********************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கொஞ்சம் அளிந்த தலை பரிமாற்றங்களால் குமுறு (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_கொக்கரக் கொக்கரக்கோ சேவலே_
*_கொந்தளிக்கும் நெஞ்சிலே_*
_கொண்டிருக்கும் அன்பிலே_
_அக்கறை காட்டினாத் தேவலே_ 

_குப்பையைக் கிளறிவிடும் கோழியே_
_கொண்டிருக்கும் அன்பிலே_
_ரெண்டும் உண்டு என்று நீ_
_கண்டதும் இல்லையோ வாழ்விலே_

_கொக்கரக்கோ கொக்கரக்கோ_
_கொக்கரக்கோ-கோ-கோ!_ 

திரைப்படம் :
*பதி பக்தி* (1958)
**********************
_கொஞ்சம் அளிந்த தலை பரிமாற்றங்களால் குமுறு (4)_

_தலை பரிமாற்றங்களால்_
= முதலெழுத்து பரிமாற ---> *கொ* ஞ்சம் *அ*
ளிந்த
= *கொளிந்த*
= _anagram of கொளிந்த_
= *கொந்தளி*
= _குமுறு_
**********************
வெகுளி என்றால் சினம் என்பார்கள். சினம் என்றால் தணியாக் கோபம் என்றும், பெருங்கோபம் என்றும், பிரமிப்புடன் சுட்டிக் காட்டுவார்கள். கோபமாகிய உடல் எரிச்சலும், சினமாகிய மன வெறுப்பும்தான் ஒருவருக்கு வெகுளித் தீயை உக்கிரமமாகப் பற்ற வைக்கிறது. அந்த ஆலவாய்த் தீயானது, ஆன்மத் தீயாகப் பற்றித் தீய்த்துவிடும்.

அதனால்தான் வள்ளுவர், கோபமும், சினமும் கொள்ளாத வெகுளாமையுடன் வாழ வேண்டும். என்று விரும்புகிறார்.

உள்ளத்திற்கு அமைதி தருவது உண்மை. உள்ளத்தைக் காயப்படுத்துவது பொய்மை.
பொய் பேசுபவருக்குக் குழப்பம் அதிகரிக்கும். வார்த்தைகள் தடுமாறும்,

_நீதிக்குப்புறம்பாக நெஞ்சம் *கொந்தளிக்கும்* ._ _நெருப்புப் பொறியாக நினைவுகள் *கொந்தளிக்கும்* ._

வெகுளி எனும் தீ, தன்னையே எரித்துக் கொண்டு, தான் இருக்கும் இடத்தையும் எரித்து அழித்து விடும். ஆகவே, வாய்மையானது, வெகுளாமையை வளர்த்து, வற்றாத இன்பத்தில் நீராட்டுவதால், வாய்மையின் பின் வெகுளாமையை வள்ளுவர் வைத்திருக்கிறார்.
💐🙏🏼💐
***********************
*Dr. Ramakrishna Easwaran* *அவர்களின்அருமையான விளக்கம்* 👇🏽

பரிமாற்றங்கள் is used very nicely in the plural. It indicates 2 operations.

1. Exchange of first letters
2. Anagram indicator of (ளிந்த)

*அளிந்த* is also a rarely heard word.
அளி= வண்டு / தேனீ
அளி புகுந்த/ கடித்த பழம் --> அளிந்த பழம். நன்றாகக் கனிந்த பழத்ததில் தான் வண்டு இருக்கும் என்பதால், அளிந்த என்றால் நன்கு பழுத்த / கனிந்த கனியைக் குறிக்கும்.

_திருவருட்பாவில் வடலூரடிகள் கூற்று_

அருளே பழுத்த சிவதருவில் *அளிந்த*
பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே

பொருள்: தெளிவே உருவாகிய திருச்சிற்றம்பலத்தை உடையவனே! அடியவனாகிய என்னை அருளாகிய கனிகள் பழுத்துள்ள சிவமாகிய மரத்தில் முற்றக் கனிந்த பழத்தைத் தந்து, நினக்கு என்னை நினக்குரிய செல்வப் பிள்ளை யாக்கினாய்
**********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/17, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கொந்தளி5

[10/17, 07:05] sathish: கொந்தளி!

[10/17, 07:06] Meenakshi: விடை:கொந்தளி

[10/17, 07:11] பானுமதி: கொந்தளி

[10/17, 07:15] Sucharithra: கொந்தளி

[10/17, 07:19] balakrishnan: கொந்தளி. 🙏

[10/17, 07:23] sankara subramaiam: கொந்தளி

[10/17, 07:40] மீ.கண்ணண்.: கொந்தளி

[10/17, 07:43] கு.கனகசபாபதி, மும்பை: கொந்தளி

[10/17, 07:50] பாலூ மீ.: கொந்தளி.

[10/17, 07:59] nagarajan: *கொந்தளி*

[10/17, 08:49] siddhan subramanian: கொந்தளி (கொஞ்சம் - அ(ளிந்த)

[10/17, 09:26] chithanandam: கொந்தளி

[10/17, 09:30] Dr. Ramakrishna Easwaran: *கொந்தளி*
_கொஞ்சம் தலை_ = கொ
_அளிந்த தலை_ = அ
தலை _பரிமாற்றியதால்_ --> கொ(ளிந்த)*--> கொந்தளி

[10/17, 12:28] Bharathi: கொந்தளி

[10/17, 13:11] ஆர்.பத்மா: கொந்தளி

[10/17, 13:36] Viji - Kovai: 17.10.20 விடை
கொந்தளி

[10/17, 14:45] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கொந்தளி.

[10/17, 17:51] N T Nathan: கொந்தளி

[10/17, 20:29] Ramki Krishnan: கொந்தளி
*********************

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்