இன்று காலை வெளியான வெடி
தேவைப்படாத நாமின்றி மங்கல வாத்தியத்தைச் சூழ்ந்து தீப்பிடிக்கத் தோன்றும் (5)
அதற்கான விடை:
பயனற்ற = பற்ற (தீப்பிடிக்க) + நாயனம் - நாம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
தேவைப்படாத நாமின்றி மங்கல வாத்தியத்தைச் சூழ்ந்து தீப்பிடிக்கத் தோன்றும் (5)
அதற்கான விடை:
பயனற்ற = பற்ற (தீப்பிடிக்க) + நாயனம் - நாம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
**********************
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமீபத்தில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. மக்கள் செல்ல பொது போக்குவரத்துக்கு பேருந்து, மெட்ரோ ரயில் ஓடும், மால்கள் திறக்கப்படும், கோயில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என
அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தளர்வு குறித்து *கவிஞர் வைரமுத்து* தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அட்டகாசமான கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்:
ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.
மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!
_இது *தீப்பிடித்த* காடு_
_பறவைகளே! பத்திரம்._
இந்த கவிதை பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
**********************
_தேவைப்படாத நாமின்றி மங்கல வாத்தியத்தைச் சூழ்ந்து தீப்பிடிக்கத் தோன்றும் (5)_
_மங்கல வாத்தியம்_
= *நாயனம்*
_நாமின்றி மங்கல வாத்தியம்_
= _நாமின்றி நாயனம்_
= *நாயனம்-நாம்*
= *யன*
_தீப்பிடிக்க_ = *பற்ற*
_சூழ்ந்து_ = indicator for the word *பற்ற* , *யன* _வைச் சூழ_
= *ப+(யன)+ற்ற*
= *பயனற்ற*
= _தேவைப்படாத_
**********************
நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம், *நாயனம்* என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது.
இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப பல வகைப்படுகின்றன.
முகவீணை, *திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம்* என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
*********************
*இசை உலகின் கலை பொக்கிஷம்!*
கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை திருக்கோயிலான ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது *கல் நாதஸ்வரம்* ஒன்று.
சிற்பியின் கை வண்ணத்தில் கல் நாதஸ்வரமாக பிறந்து, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும் இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும் இந்த. கல் நாதஸ்வரம் உருவாகி ஆண்டுகள் பல நூறு இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து !
************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 26-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
அன்னம் அது முயல் தலையிட வரும் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*தமிழுக்கும் அமுது தந்தவர்!*
' *அமுது* ' என்பதற்கு உயிர்தரு மருந்து என்றும், நீர் என்றும், இனிமை என்றும் பொருளாம் (பிங்கலநிகண்டு). பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்று பேச்சு வழக்கையும் அமுது வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
மண்ணில் உயிர்கள் வாழ வானம் தரும் அமுது மழையாம். கடவுளுக்கும் அமுது படைக்கிறார்கள். _"வானோர் அமுதம் புரையுமால்''_ என்பது தொல்காப்பியம்.
*தமிழ், உயிர்தரு மருந்தாக - அமுதாக இருக்கிறதென்று பாடி, தமிழுக்கு அமுதாகப் பாடல்களையும் இலக்கியங்களையும் படைத்துத் தந்திருக்கிறார் பாரதிதாசன்.*
_தமிழுக்கும் *அமுதென்று* பேர் - அந்தத்_
_தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்_
_தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்_
_தமிழ் எங்கள் சமுகத்தின்_ _விளைவுக்கு நீர்_
_தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்_
_தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்_
_தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்_
_தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!_
(ஆசிரியர் : கவிஞர் *பாரதிதாசன்* .)
**********************
_*அமுதும்* தேனும் எதற்கு நீ_
_அருகினில் இருக்கையிலே எனக்கு_
_அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்_
_அதுவும் சுடுநீராகும் நமக்கு_
_அமுதும் தேனும் எதற்கு நீ_
_அருகினில் இருக்கையிலே எனக்கு_
*படம்:*
*தை பிறந்தால் வழி பிறக்கும் : 1958*
**********************
_அன்னம் அது முயல் தலையிட வரும் (3)_
_அது_ = *அது*
_முயல் தலையிட_
= _முயலின் முதலெழுத்து_
= *மு*
_வரும்_ = indicator for anagram of *அது+மு*
= *அமுது*
= _அன்னம்_
**********************
_*அமுதைப்* பொழியும் நிலவே நீ_
_அருகில் வராததேனோ_
_அருகில் வராததேனோ_
_இதயம் மேவிய காதலினாலே_
_ஏங்கிடும் அல்லியைப் பாராய்_
_புதுமலர் வீணே வாடிவிடாமல்_
_புன்னகை வீசி ஆறுதல் கூற_
_அருகில் வராததேனோ_
_அமுதைப் பொழியும் நிலவே நீ_
_அருகில் வராததேனோ_
*திரைப்படம்: தங்கமலை ரகசியம் :1957*
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/26, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அமுது
[10/26, 07:02] thiru subramanian: அமுது
[10/26, 07:04] மீ.கண்ணண்.: அமுது
[10/26, 07:07] akila sridharan: அமுது
[10/26, 07:08] sathish: அமுது
[10/26, 07:09] Ramki Krishnan: அமுது
[10/26, 07:13] Sucharithra: அமுது
[10/26, 07:14] Meenakshi: விடை:அமுது
[10/26, 07:15] Dr. Ramakrishna Easwaran: அமுது
[10/26, 07:17]
அமுது -------கி.பா(KB)
[10/26, 07:17] ஆர். நாராயணன்.: அமுது
[10/26, 07:20] மாலதி: அமுது
[10/26, 07:23] balakrishnan: அமுது. 👌🙏
[10/26, 07:30] nagarajan: *அமுது*
[10/26, 07:33] Bharathi: அமுது
[10/26, 07:34] உஷா, கோவை: அமுது
[10/26, 07:37] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:அமுது
[10/26, 07:41] V N Krishnan.: அது+மு=அமுது=அன்னம்
[10/26, 07:52] A Balasubramanian: அமுது
[10/26, 07:58] பாலூ மீ.: அமுது.
[10/26, 08:03] chithanandam: அமுது
[10/26, 08:08] Viji - Kovai: 26.10.20 விடை
முதம்
சாதம்_சா+மு=முதம்
முத்து
(வாத்து_வா+மு=முத்து)
[10/26, 08:10] Venkatesan M: இன்றைய விடை = அமுது
[10/26, 08:15] N T Nathan: அமுது
[10/26, 08:15] prasath venugopal: அமுது
[10/26, 08:17] Usha Chennai: அமுது
[10/26, 09:39] ஆர்.பத்மா: அமுது
[10/26, 09:49] sankara subramaiam: அமுது
[10/26, 09:58] கு.கனகசபாபதி, மும்பை: அமுது
[10/26, 10:23] Bhanu Sridhar: அமுது
[10/26, 10:41] balagopal: Good morning sir. விடை. அமுது.
[10/26, 12:05] shanthi narayanan: அமுது
[10/26, 12:45] பானுமதி: அமுது
[10/26, 15:03] வானதி: அமுது
[10/26, 07:33] Dhayanandan: அமுது
*இன்றைய உதிரிவெடி!*( 27-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஆட்டத்தில் ஈடுபட்டு முளைக்காத போட்டி முனை (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*விடுகதை*
_நிலத்தில் *முளைக்காத* புல்_
_நிமிர்ந்து நிற்காத புல். அது என்ன?_
விடை:
*தலைமுடி*
**********************
*கண்ணதாசன் பாட்டில் குற்றம்*
கண்ணதாசன் பாட்டுகளில் நிறைய இலை மறைவு காய்மறைவாய் குறும்புகள் கொப்பளிக்குமாம்.
அப்படி ஒரு பாடல்
*"கட்டோடு குழலாட ஆட ஆட*
*கண்ணென்ற மீனாட ஆட ஆட"*
இப்படி பாட்டு எழுதியவர் ஒரு சிறுவனிடமோ, இசையமைப் பாளரிடமோ சிக்கிக் கொண்டாராம்
*முதிராத நெல்லாட ஆட ஆட*
*முளைக்காத பல்லாட ஆட ஆட*
என்று எழுதி வைத்திருக்கிறார்.
அதைப் படித்தவர் கேட்டாராம், முளைக்காத பல் எப்படி ஆடும்? அப்படி பல் ஆடினால் முதியோர்கள் அல்லவா!
பல் இளங் குழந்தைக்கும் ஆடும் ஆனால் முளைக்காத பல் ஆடாது என்பது சரி தான் என்று கூறி, ‘ *முதிராத நெல்லாட ஆட ஆட*
*முளைக்காத சொல் ஆட ஆட*
என்று மாற்றினாராம்.
என்ன இருந்தாலும் கவியரசர் அல்லவா தான் செய்தது தவறு என்று யார் சொன்னாலும் அது உண்மையெனில் உணர்ந்து திருத்திக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்ததால் தான் கவியரசர் ஆனாரோ. 😌
_கட்டோடு குழலாட ஆட-ஆட_
_கண்ணென்ற மீனாட ஆட-ஆட_
_கொத்தோடு நகையாட ஆட-ஆட_
_கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)_
_பாவாடை காற்றோடு ஆட-ஆட_
_பருவங்கள் பந்தாட ஆட-ஆட_
_காலோடு கால்பின்னி ஆட-ஆட_
_கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு)_
*_முதிராத நெல்லாட ஆட-ஆட_*
*_முளைக்காத சொல்லாட ஆட-ஆட_*
_உதிராத மலராட ஆட-ஆட_
_சதிராடு தமிழே நீ ஆடு! (_ _கட்டோடு_ )
(படம்: பெரிய இடத்து பெண் 1963)
**********************
_ஆட்டத்தில் ஈடுபட்டு முளைக்காத போட்டி முனை (4)_
_முளைக்காத_
= *விளையா*
_போட்டி முனை_
= *[போட்] டி = டி*
_ஆட்டத்தில் ஈடுபட்டு_
= *விளையா+ டி*
= *விளையாடி*
**********************
_மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே_
_வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே_
_நதியில் *விளையாடி* கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே_
_வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே_
( *பாசமலர்* :1961)
**********************
கொஞ்சி *விளையாடி*
கோபமாய் சண்டை இட்டு ……..
என்னையும் மிஞ்சிய ……
உன் அன்புக்கு காதல் ….
என்றே பட்டம் சூட்டினேன்…..
காலமோ காத்திருக்க வைத்தது ……
காரணம் புரியாமலே !!!!!!
(Unkwown)
**********************
*_தரையில் விளையாடிய காலம் மறந்து திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …_* 🤔🤔🤔
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/27, 07:00] திரைக்கதம்பம் Ramarao: விளையாடி
[10/27, 07:04] Sucharithra: விளையாடு
[10/27, 07:08] akila sridharan: விளையாடி.
முளைக்காத - விளையா
போட்டி முனை - டி
[10/27, 07:08] siddhan subramanian: விளையாடி (விளையா + டி )
[10/27, 07:09] மீ.கண்ணண்.: விளையாடி
[10/27, 07:12] Meenakshi: விடை: விளையாடி
[10/27, 07:15] balakrishnan: விளையாடி. 🙏
[10/27, 07:16] பாலூ மீ.: விளையா+டி = விளையாடி
[10/27, 07:19]
விளையாடி--------கி.பா(KB)
[10/27, 07:22] Viji - Kovai: 26.10.20 விடை
விளையாடி
[10/27, 07:26] A D வேதாந்தம்: விடை= விளையாடி/ வேதாந்தம்.
[10/27, 07:32] chithanandam: விளையாடி
[10/27, 07:35] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:விளையாடி
முளைக்காத(விளையா)போட்டிமுனை=டி
[10/27, 07:40] பானுமதி: விளையாடி
[10/27, 07:41] ஆர். நாராயணன்.: விளையாடி
[10/27, 07:47] nagarajan: *விளையாடி*
[10/27, 08:14] Bharathi: விளையாடி
[10/27, 09:40] Dhayanandan: விளையாடி
[10/27, 09:53] Dr. Ramakrishna Easwaran: *விளையாடி*
முளைக்காத= விளையா
போட்டி முனை= டி
[10/27, 13:25] கு.கனகசபாபதி, மும்பை: விளையாடி
[10/27, 15:05] shanthi narayanan: விளையாடி
[10/27, 18:13] sankara subramaiam: விளையாடி
[10/27, 19:00] N T Nathan: விளையாடி
[10/27, 20:44] Ramki Krishnan: விளையாடி
************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மறக்காமல் வாரவிடுமுறை தொடக்கத்தில் கபமாக புரட்டிக் கொண்டு வரும் (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
உறங்கமறுத்து
உன்னையே நினைக்கிறேன்!-அந்த
காதலே இல்லையென
மறுத்தபோதும்
உன்னை *மறக்காமல்*
நான்
தவிக்கிறேன்!
**********************
_மறக்காமல் வாரவிடுமுறை தொடக்கத்தில் கபமாக புரட்டிக் கொண்டு வரும் (5)_
_வாரவிடுமுறை_
= *ஞாயிறு*
_தொடக்கத்தில்_
= _ஞாயிறு முதலெழுத்து_
= *ஞா*
_கபமாக புரட்டிக் கொண்டு வரும்_
= _கபமாக_ --> _வை புரட்டினால் வருவது_
= *பகமாக*
_மறக்காமல்_
= *ஞா+பகமாக*
= *ஞாபகமாக*
*********************
_உன்னை *மறக்காமல்* இருப்பதால்_
_இறக்காமல் இருக்கிறேன்_
_என் இமைகள் மூடும் போதும்_
_உன் முகம் பார்க்கிறேன்_
படம் :யுவன் யுவதி
**********************
_மறக்க சொல்கிறாய் எதை மறப்பது_
_உன்னுள் தொலைந்த என்னையா..._
_இல்லை என்னுள் தொலையாமல்_ _இருக்கும்_
_உன் நினைவுகளையா..._
**********************
மறக்க
வேண்டுமென்று மீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லை என்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை!!!
( நவின்)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/28, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ஞாபகமாக
[10/28, 07:01] Sucharithra: ஞாபகமாக
[10/28, 07:03] மீ.கண்ணண்.: ஞாபகமாக
[10/28, 07:03] N T Nathan: ஞாபகமாக
[10/28, 07:03] balakrishnan: 🙏ஞாபகமாக
[10/28, 07:05] V N Krishnan.: ஞாபகமாக
[10/28, 07:08] Meenakshi: விடை:ஞாபகமாக
[10/28, 07:08] prasath venugopal: ஞாபகமாக
10/28, 07:10]
ஞாபகமாக-------கி.பா( KB)
[10/28, 07:12] A Balasubramanian: ஞாபகமாக
A.Balasubramanian
[10/28, 07:13] Ramki Krishnan: ஞாபகமாக
[10/28, 07:13] A D வேதாந்தம்: விடை= ஞாபகமாக/ வேதாந்தம்.
[10/28, 07:23] கு.கனகசபாபதி, மும்பை: ஞாபகமாக
[10/28, 07:23] Bhanu Sridhar: ஞாபகமாக
[10/28, 07:26] பாலூ மீ.: ஞாபகமாக.
[10/28, 07:28] chithanandam: ஞாபகமாக
[10/28, 07:34] Dr. Ramakrishna Easwaran: *ஞாபகமாக*
[10/28, 07:36] sankara subramaiam: ஞாபகமாக
[10/28, 07:39] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:ஞாபகமாக
[10/28, 07:42] akila sridharan: ஞாபகமாக
[10/28, 07:52] nagarajan: *ஞாபகமாக*
[10/28, 08:03] Bharathi: ஞாபகமாக
[10/28, 08:21] Dhayanandan: ஞாபகமாக
[10/28, 08:45] stat senthil: ஞாபகமாக
[10/28, 08:46] Viji - Kovai: 28.10.20 விடை
ஞாபகமாக
[10/28, 11:27] பானுமதி: ஞாபகமாக
[10/28, 11:42] வானதி: ஞாபகமாக
[10/28, 12:04] shanthi narayanan: ஞாபகமாக
************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மூக்கறுப்பு மூன்றறுப்பால் சுருக்கத்தால் தெரிவது (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 29-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*மூக்கறுப்புப் போர்*
கி.பி. 1656ல்,
70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை,மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்குள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார்
திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையும் அறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கு மூக்குப்பரி என்ற பட்டம் வழங்கினார்.
***********************
_மூக்கறுப்பு மூன்றறுப்பால் சுருக்கத்தால் தெரிவது (3)_
_மூக்கறுப்பு மூன்றறுப்பால்_
= _*மூக்கறுப்பு*_ இச்சொல்லில் 3 எழுத்துகள் அறுத்தால் வருவது_
= *மூ(க்கறு)ப்பு*
= *மூப்பு*
= _சுருக்கத்தால் தெரிவது_
**********************
*தேவாரம்*
பன்னிரண்டாம் திருமுறை
தில்லைவாழந்தணர் சருக்கம் திருநீலகண்ட நாயனார் புராணம்
🌺🌺🌺🌺🌺🌺🌺 _இளமையின் மிக்கு ளார்கள்_
_இருவரு மறிய நின்ற அளவில்சீ ராணை போற்றி_
_ஆண்டுகள் பலவுஞ் செல்ல_
_வளமலி யிளமை நீங்கி_
_வடிவுறு *மூப்பு* வந்து_
_தளர்வொடு சாய்ந்தும் அன்பு_
_தம்பிரான் திறத்துச் சாயார்_
*பொழிப்புரை:*
இளமை மீதூர்ந்த திருநீலகண்டரும் அவர் மனைவியாரும் தாம் இருவரும் ஒருங்கு ஏற்று நின்ற அளவில்லாத சீர்மை மிகுந்த திருவாணையைப் போற்றி ஒழுக, ஆண்டுகள் பலவும் சென்றன. வளம் மிக்க இளமைப் பருவம் கழிந்த பின், உடம்பின் கண் மிக்க *மூப்புப் பருவம்* வந்து மிக இளைத்த பொழுதும், தாம் இது காறும் சிவபெருமானிடத்து வைத்த அன்பினின்றும் நீங்காராயினார்.
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/29, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மூப்பு
[10/29, 07:01] பானுமதி: மூப்பு
[10/29, 07:01] V N Krishnan.: குறள்
குறள்=சிறுமை மூக்கறுப்பு =இழிவு
[10/29, 07:01] chithanandam: மூப்பு
[10/29, 07:02] balakrishnan: 🙏மூப்பு.
[10/29, 07:03] மீ.கண்ணண்.: மூப்பு
[10/29, 07:05] akila sridharan: மூப்பு
[10/29, 07:06] Ramki Krishnan: மூப்பு
[10/29, 07:11] பாலூ மீ.: மூப்பு.
[10/29, 07:12] sankara subramaiam: மூப்பு
[10/29, 07:14] A D வேதாந்தம்: விடை= மூப்பு/ வேதாந்தம்.
[10/29, 07:15] Dr. Ramakrishna Easwaran: மூப்பு
[10/29, 07:20] sathish: மூப்பு
[10/29, 07:21] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:மூப்பு
[10/29, 07:43] ஆர். நாராயணன்.: மூப்பு
[10/29, 08:05] மாலதி: மூப்பு
[10/29, 08:08] கு.கனகசபாபதி, மும்பை: மூப்பு
[10/29, 08:11] prasath venugopal: மூப்பு
[10/29, 08:12]
மூப்பு-------கி.பா(KB)
[10/29, 08:15] Bharathi: மூப்பு
[10/29, 08:49] Usha Chennai: மூப்பு
[10/29, 09:29] Srikrupa: மூப்பு
[10/29, 09:29] வானதி: மூப்பு
[10/29, 09:31] Bhanu Sridhar: மூப்பு
[10/29, 09:49] Dhayanandan: மூப்பு
[10/29, 11:32] shanthi narayanan: மூப்பு
[10/29, 12:11] nagarajan: *மூப்பு*
[10/29, 14:28] Meenakshi: விடை:மூப்பு.
[10/29, 15:16] Viji - Kovai: 29.10.20 விடை
மூப்பு
[10/29, 16:18] balagopal: Good morning sir.
விடை: மூ(க்கறு)ப்பு. மூப்பு.
************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
உயரம் குறைத்துக் குழப்பிய விதி செல்வம் தரும் (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*செல்வம்*
_‘திரைகடல் ஓடியும்_
_*திரவியம்* தேடு’__
என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் போற்றப்படுகிறது. _திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும்._ கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு என்பதே இப்பழமொழியின் பொருள். இந்த உலகில் செல்வம் இல்லாதவனை யாரும் மதிக்கமாட்டார்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும் என்று பல அறிஞர்கள் பாடியுள்ளனர்.
*குமரகுருபரர்* தாம் எழுதிய *நீதி நெறி விளக்கம்* என்ற நூலில் பொருள் வைத்திருப்பவனின் சிறப்பை விளக்குகிறார். இனிய சொல்லும் அடக்கமும் உடையவனாய் இருந்தாலும் ஏழையானால் அவனைக் கடுஞ்சொல் கூறி ஏசும் உலகம். ஆனால், கையில் காசு வைத்துள்ளவன் கடுஞ்சொல் சொன்னாலும்கூட,
அவன் கீழ் அடிமை வேலை செய்யவும் தயாராய் இருப்பார்கள் அனைவரும்! என்னே இந்த உலகின் இயல்பு என வியக்கிறார் அவர்.
` _இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்_
_வன்சொல்லின் அல்லது வாய்திறவா_
_என்சொலினும்_
_கைத்துடையான்_ _கால்கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம்_
_பித்துடைய அல்ல பிற.’_
**********************
_உயரம் குறைத்துக் குழப்பிய விதி செல்வம் தரும் (5)_
_உயரம் குறைத்து_
= *[உ]யரம் = யரம்*
_விதி_ = *விதி*
_குழப்பிய_ = anagram indicator for *விதி+யரம்*
= *திரவியம்*
= _செல்வம்_ ( _தரும்_ )
**********************
பொருளில்லாதவரை நல்லவராக இருந்தாலும் எல்லோரும் ஏளனம் செய்வார்கள். தீயவராக இருந்தாலும் பொருள் இருப்பவர்களுக்குச் சிறப்புச் செய்வதே உலக இயல்பு. இந்த உலக இயல்பைப் புரிந்துகொள்வதே யதார்த்த அறிவு.
_`நிறைபொருள் உடையவர் நிந்தை சொல்லினும்_
_முறையுறு வழக்கென மொழிந்து போற்றுவர்_
_வறுமை மிக்குடையவர் வழங்கும் வாய்மொழி_
_அறமொழி ஆகினும் அதனை எள்ளுவர்’_
- என்கிறது *விவேக சிந்தாமணி*
****
பொருள் இல்லாதவனை மனைவி மட்டுமல்ல, பெற்ற தாயும்கூட ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்கிறார் ஔவையார். நல்வழிகாட்டும் அந்த நேரிசை வெண்பா, ஔவையாரின் *நல்வழி* என்ற நூலில் உள்ளது.
_`கல்லானே யாயிடினும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்_
_எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர் -_ _இல்லானை இல்லாளும் தான்வேண்டாள்_ _ஈன்றெடுத்த தாய் வேண்டாள்_
_செல்லா தவன்வாயிற் சொல்'_
*****
*'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’* என்றொரு திரைப்பாடல். 'அன்னை’ என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி, சந்திரபாபு பாடி நடித்த பாடல். அதில் வரும் இரண்டு வரிகள் சிந்தனையைத் தூண்டுபவை:
_`பணம்படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்_
_பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்!’_
******
ஈட்டி எட்டிய மட்டில்தான் பாயும். பணம் பாதாளம் வரை பாயும்! எனவே *`திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!’* என்று கொன்றை வேந்தனில் ஔவையார் சொன்னது அனுபவ பூர்வமான வாக்கியம்தானே?
********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/30, 07:00] திரைக்கதம்பம் Ramarao: திரவியம்
[10/30, 07:01] sathish: திரவியம்
[10/30, 07:01] மீ.கண்ணண்.: திரவியம்
[10/30, 07:01] chithanandam: திரவியம்
[10/30, 07:02] Bhanu Sridhar: திரவியம்
[10/30, 07:02] A Balasubramanian: திரவியம்
A.Balasubramanian
[10/30, 07:10] balakrishnan: திரவியம். 🙏
[10/30, 07:14]
திரவியம்-------கி.பா(KB)
[10/30, 07:18] Ramki Krishnan: திரவியம்
[10/30, 07:20] பாலூ மீ.: திரவியம்.
[10/30, 07:23] Meenakshi: விடை:திரவியம்
[10/30, 07:32] stat senthil: திரவியம்
[10/30, 07:33] A D வேதாந்தம்: விடை= திரவியம்./ வேதாந்தம்.
[10/30, 07:34] sankara subramaiam: திரவியம்
[10/30, 07:35] akila sridharan: திரவியம்
[10/30, 07:52] nagarajan: *திரவியம்*
[10/30, 07:58] மாலதி: திரவியம்
[10/30, 07:59] ஆர். நாராயணன்.: திரவியம்
[10/30, 08:06] Viji - Kovai: திரவியம்
[10/30, 08:12] prasath venugopal: திரவியம்
[10/30, 08:20] N T Nathan: திரவியம்
[10/30, 09:07] Dr. Ramakrishna Easwaran: திரவியம்
[திரை கடல் ஓடியும் தேடியது!!
[10/30, 09:56] ஆர்.பத்மா: திரவியம்
[
[10/30, 10:20] siddhan subramanian: திரவியம் (யரம் + விதி)
[10/30, 12:28] shanthi narayanan: திரவியம்
[10/30, 14:10] Dhayanandan: திரவியம்
[10/30, 14:13] வானதி: திரவியம்
[10/30, 15:41] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:திரவியம்
[10/30, 18:54] கு.கனகசபாபதி, மும்பை: திரவியம்
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 31-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
பிஞ்சு நிலை போக இறுதியாக வெங்காயம் வந்தது நடு வீடு (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 31-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*முற்றம் - ஒரு சிறு அறிமுகம்*
_பேச்சுவழக்கில் முத்தம் அல்லது மித்தம்_ .
ஆங்கிலத்தில் courtyard... பின்னர் அதன் உட்பிரிவுகளாக inner courtyard and outer courtyard. முற்றம் இரு வகைப்படும் - உள்முற்றம், வெளி முற்றம்.
முற்றம் (Courtyard) என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீட்டுகளின் மையத்தில் உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே இருக்கும். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாகவும் இருக்கும். இந்த முற்றத்தால் வீட்டில் இயற்கை வெளிச்சம் புகவும் காற்றோட்டமாக இருக்கவும் உதவும்வகையில் அமைந்திருக்கும். சிலர் இந்த முற்றத்தில் துளசி மாடத்தை வைத்திருப்பர்.
**********************
*என் வீட்டு முற்றம்*
வண்டாடும் மலர்கள் வீசும் வாசம்,
வந்தாடும் என்வீட்டு வாசல் கொம்பை,
கொண்டாடும் முல்லைக் கொடியில் பூத்த,
சிந்தாத தேன்கொண்ட சின்னப் பூவை,
கண்டே தான்வந்து சிறகை யாட்டி,
திண்டாடும் ஓர்சிட்டுக் குருவி ஒன்றை,
கண்டேன் நான்இமை யாத கண்களாலே
(எழுதியவர் : கவி இராசன் )
**********************
*நிலா முற்றம்*
காதலிக்க நினைத்தேன்
காதலி கிடைக்கவில்லை
காதலையே காதலித்தேன்
காதலியாய் கவிதை வந்தாள்
நெஞ்சைவிட்டு நீங்கவில்லை
நிலா முற்றத்து இந்த உறவுக்கு
ஒரு நாளும் முற்றுப் புள்ளியில்லை !
(கவின் சாரலன்)
**********************
_பிஞ்சு நிலை போக இறுதியாக வெங்காயம் வந்தது நடு வீடு (4)_
_பிஞ்சு நிலை போக_
= *முற்ற* (முத்த)
_இறுதியாக வெங்காயம்_
= _[வெங்காய]ம்_ = *ம்*
_வந்தது நடு வீடு_
= *முற்ற+ம்*
= *முற்றம்*
(பேச்சுவழக்கு சொல் முத்தம் - இவ்விடையும் சரியே)
**********************
*நாலு கோடி பாடல்*
சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘ *நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்* ’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
_மதியாதார் *முற்றம்* மதித்தொரு_ _கால்சென்று மிதியாமை கோடி பெறும்;_
_உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார்_ _தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்;_
_கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு_
_கூடுதல் கோடி பெறும்;_
_கோடானு கோடி கொடுப்பினும்_ _தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்._
*(ஒளவையார் தனிப் பாடல்:42)*
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
_நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் *முற்றத்தை* மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்._ (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/31, 07:01] திரைக்கதம்பம் Ramarao: முற்றம்
[10/31, 07:03] balakrishnan: முற்றம்🙏
[10/31, 07:04] sathish: முற்றம்
[10/31, 07:07] thiru subramanian: முற்றம்
[10/31, 07:08] பாலூ மீ.: முற்ற+ம் = முற்றம்
[10/31, 07:09] Sucharithra: முற்றம்
[10/31, 07:09] Bhanu Sridhar: முற்றம்
[10/31, 07:12] மீ.கண்ணண்.: முற்றம்
[10/31, 07:13] A D வேதாந்தம்: விடை= முற்றம்/ வேதாந்தம்.
[10/31, 07:16] Dhayanandan: முற்றம்
[10/31, 07:17] ஆர்.பத்மா: முற்றம்
[10/31, 07:24] Ramki Krishnan: முற்றம்
[10/31, 07:24] V N Krishnan.: முற்ற+ம்=முற்றம். நடுவீடு
[10/31, 07:30] N T Nathan: முற்றம்
[10/31, 07:31] Meenakshi: விடை: முற்றம்
[
[10/31, 07:44] Venkatesan M: இன்றைய விடை = முற்றம்
[10/31, 07:49] ஆர். நாராயணன்.: முற்றம்
[10/31, 07:50] nagarajan: *முற்றம்*
[10/31, 07:51]
முற்றம்------கி.பா(KB)
[10/31, 08:34] கு.கனகசபாபதி, மும்பை: முற்றம்
[10/31, 08:38] chithanandam: முற்றம்.
[10/31, 08:39] sridharan: முற்றம்
[10/31, 08:45] மாலதி: முற்றம்
[10/31, 09:05] siddhan subramanian: முத்தம்
[10/31, 09:32] வானதி: முற்றம்
[10/31, 10:31] Dr. Ramakrishna Easwaran: *முற்றம்*
[10/31, 13:38] shanthi narayanan: முற்றம்
[10/31, 15:30] Viji - Kovai: 31.10.20 விடை
முற்றம்
***************************