இன்று காலை வெளியான வெடி
உணர்ச்சியில்லாத நடிகன் இரண்டாவதாக வந்து வெயிலில் நாடுமிடம் (5)
அதற்கான விடை:
மரத்தடி = மரத்த + டி
ஆவலுடன் மீண்டும் தினசரி இப்புதிர்களை வெளியிடும்படி கேட்டவர்க்கு நன்றி. இன்னமும் சில மாதங்கள் இப்படித்தான் நேரம் நெருக்கடியாக இருக்கும். பின்னர் யோசிக்கிறேன்.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
உணர்ச்சியில்லாத நடிகன் இரண்டாவதாக வந்து வெயிலில் நாடுமிடம் (5)
அதற்கான விடை:
மரத்தடி = மரத்த + டி
ஆவலுடன் மீண்டும் தினசரி இப்புதிர்களை வெளியிடும்படி கேட்டவர்க்கு நன்றி. இன்னமும் சில மாதங்கள் இப்படித்தான் நேரம் நெருக்கடியாக இருக்கும். பின்னர் யோசிக்கிறேன்.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*********************
*மரத்தடி பிள்ளையார்*
ஆலயங்களில் உள்ள பிள்ளையார்கள் பெரும்பாலும் மரங்களின் கீழே வீற்றிருப்பதை நாம் காண முடியும். அந்தப் பிள்ளையாரை எல்லாம், அரச மரத்தடிப் பிள்ளையார், வேப்ப மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடிப் பிள்ளையார் என்றெல்லாம் சொல்லி அழைத்து வழிபாடு செய்வார்கள். தாவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரிடம்,
“தா! வரம்” என்று கேட்டால், உடனடியாக தந்து விடுவார். நாவால் பாடி துதித்தால் நற்பலன்களை அள்ளி வழங்குவார்
🙏
*******
புத்தனுக்கு போதி மரத்தடி
என்னை போன்ற பித்தனுக்கு ஆலமரத்தடி !!
ஆயிரம் ஆயிரம் பட்சிகளுக்கு
உணவளித்து உறைவிடம் தருகின்ற தரு நீ
உனக்கு நீர் ஊற்றவில்லை இங்கு யாரும்
ஏனைய செடி கொடி மரங்கள் எல்லாம்
படர்ந்து வாழும் பக்க மரமொன்றை பற்றி வாழும்
நீ மட்டும் எப்படி உயர்ந்து நின்றாய்
(மாசி)
**********************
_உணர்ச்சியில்லாத நடிகன் இரண்டாவதாக வந்து வெயிலில் நாடுமிடம் (5)_
_உணர்ச்சியில்லாத_
= *மரத்த*
_நடிகன் இரண்டாவதாக வந்து_
= _"நடிகன்" இரண்டாவது எழுத்து_
= *டி*
_வெயிலில் நாடுமிடம்_
= *மரத்த+டி*
= *மரத்தடி*
**********************
கற்பக மரம் அல்லது
கற்பக விருட்சம்
*_மரத்தடியில்_* நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
தன் நெஞ்சுக்கு நீதி கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
நெஞ்சே! உன் தலையெழுத்துப் படிதான் எல்லாம் நடக்கும். நீ ஆசைப்பட்டதெல்லாம் உனக்குக் கிட்டாது. அரிதின் முயன்று *கற்பக மரத்தடிக்குச்* சென்று நீ ஏதேதோ ஆசைப்படும்போது அந்த மரம், உண்டால் சாகும் நச்சுத்தன்மை வாய்ந்த எட்டிக்காயை (காஞ்சிரங்காயை) தருமேயானால் அது நீ முற்பிறவியில் செய்த தீவினையின் பயன் என எண்ணிக்கொள்க.
_எழுதிவா றேகாண் இரங்குமட நெஞ்சே_
_கருதியவா றாமோ மருமம் - கருதிப்போய்க்_
_கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்_
_முற்பவத்தில் செய்த வினை. ]_
மூதுரை என்னும் வாக்குண்டாம் - பாடல் 22
**********************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 19-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சுழன்று வீசு மரியாதைக்குப் பொருந்துவது உடல்நலக்குறைவு (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*'நோய் நொடி இல்லாமல் நுாறாண்டு காலம் வாழ்க'*
என்று திருமணத் தம்பதிகளை வாழ்த்துவர்.
_நோய் என்றால் உடல் *சுகவீனம்* என்பதை அறிவோம்._ _நொடி என்றால் என்ன என்பது பலருக்கு தெரியாது._
*'நொடி' என்றால் மன பலவீனம்.*
வியாபாரம் நடக்கவில்லை என்றால் 'நொடித்துப் போய் விட்டது' என்று சொல்கிறோமல்லவா!
"தேக வலிமையோடு மன தைரியம் பெற்று வாழ்க' என்பதே 'நோய் நொடி இல்லாமல் வாழ்க' என்பதன் பொருள்.
**********************
_சுழன்று வீசு மரியாதைக்குப் பொருந்துவது உடல்நலக்குறைவு (5)_
_மரியாதைக்கு_
= *கனம்*
_சுழன்று_
= Anagram indicator for *வீசு + கனம்*
= *சுகவீனம்*
= _உடல்நலக்குறைவு_
**********************
உன் அழகால் எல்லோரையும் பலவீனம் ஆக்குகிறாய்! என் அன்பால் உன்னை மட்டும் நான் பலம் ஆக்கி என்னை *சுகவீனம்* ஆக்கிக்கொண்டேன்.
( செந்தில்குமார்)
**********************
*என் சுகவீனம் என்னோடு –*
என் சுகவீனம் என்னோடு
சில நாட்கள்
மருத்துவமனை வாசம்
ஆம்.. இன்னும் உடலில் அவ்வாசம்
உலகில் என்ன நடந்தது
எனக்குத் தெரியாது
என் சுகவீனம் என்னோடு
வீடுதிரும்பினேன்
பலநாள் தினசரி
இறைந்து கிடந்தது
நாட்காட்டி கிழிபடாமலிருந்தது.
என் சுகவீனம் என்னோடு
வீடெங்கும் குப்பை கூளம்
ஏன் என்றேன்
கண்தெரிகிறது என்றாள் மகள்
சுத்தப்படுத்தாத வீட்டினிலே
ஒருவித வாடை
ஏன் என்றேன்
வாசனை தெரிகிறதென்றாள் மனையாள்,
அவளும் இளைத்திருந்தாள்
இப்போதுதான் பார்த்தேன்
என் சுகவீனம் என்னோடு
என்னறை என்னை
அந்நியனாய்ப் பார்த்தது
நான்விட்டுச்சென்றது
அப்படி அப்படியே…
படித்த புத்தகபக்கங்கள்
காற்றில் பறந்தது
என் சுகவீனம் என்னோடு
என்னைக் கிள்ளிப்பார்த்தேன்
வலித்தது இன்னமும்
கண்மூடவில்லை
என்ன நடந்தது
எனக்கு யாரும்
பதில் சொல்லத் தயாரில்லை
என் சுகவீனம் என்னோடு
(ராவெசு)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/19, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சுகவீனம்
[10/19, 07:02] V N Krishnan.: சுகவீனம்
[10/19, 07:06] sathish: சுகவீனம்
[10/19, 07:08]
சுகவீனம் ------கி.பா(KB)
[10/19, 07:12] Meenakshi: விடை:சுகவீனம்
[10/19, 07:17] balakrishnan: 🙏 சுகவீனம்
[10/19, 07:20] ஆர்.பத்மா: சுகவீனம்
[10/19, 07:24] Dr. Ramakrishna Easwaran: *சுகவீனம்*
மரியாதைக்குரிய= கனம்
(வீசு+கனம்)*
சுழன்று= anagrind
[10/19, 07:25] பாலூ மீ.: சு+வீ + கனம் (கோர்ட்டார்...) = சுகவீனம்.
[10/19, 07:28] மீ.கண்ணண்.: சுகவீனம்
[10/19, 07:45] siddhan subramanian: சுகவீனம் = வீசு + கனம்
[10/19, 07:51] prasath venugopal: சுகவீனம்
[10/19, 07:57] வானதி: சுகவீனம்
[10/19, 08:11] stat senthil: சுகவீனம்
[10/19, 08:18] nagarajan: *சுகவீனம்*
[10/19, 08:29] A D வேதாந்தம்: விடை= சுகவீனம்/ வேதாந்தம்
[10/19, 08:30] ஆர். நாராயணன்.: சுகவீனம்
[10/19, 08:51] Sucharithra: சுகவீனம்
[10/19, 10:34] உஷா, கோவை: சுகவீனம்
[10/19, 11:29] பானுமதி: சுகவீனம்
[10/19, 12:25] Viji - Kovai: 19.10.20 விடை
சுகவீனம்
[10/19, 13:18] கு.கனகசபாபதி, மும்பை: சுகவீனம்
[10/19, 14:31] shanthi narayanan: சுகவீனம்
[10/19, 14:57] chithanandam: சுகவீனம்
[10/19, 18:29] sankara subramaiam: சுகவீனம்
********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
உங்களுக்கும் எனக்கும் உரிய கனி கடை வெல்லம் என ஏற்கலாம் (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*யாரை நம்பி நான் பொறந்தேன்*
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
(எங்க ஊர் ராஜா:1968)
**********************
_உங்களுக்கும் எனக்கும் உரிய கனி கடை வெல்லம் என ஏற்கலாம் (5)_
_உங்களுக்கும் எனக்கும்_
= *நம்*
_உரிய கனி_ = *பலா*
_கடை வெல்லம்_
= _கடைசி எழுத்து in வெல்லம்_
= *ம்*
_ஏற்கலாம்_
= *நம்+பலா+ம்*
= *நம்பலாம்*
**********************
_யாரைத்தான் *நம்புவதோ* பேதை நெஞ்சம்?_
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
(பறக்கும் பாவை:1966)
**********************
*_நம்பினோர் கெடுவதில்லை_* நான்குமறைத் தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையற்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!"
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
(திரைப் படம்: ராமு)
**********************
வரம் தர இறைவன் வரவேண்டு மென்றால் முறுகிய பக்தியும், உருகிய உணர்வும், உள்ளார்ந்த நம்பிக்கையும் அவசியம் தேவை அதனால் தான் பாரதியார் பாடுகின்றார்.
நம்பினோர் கெடுவதில்லை!
நான்கு மறைத் தீர்ப்பு !
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிகவரம் பெறலாம் !
‘கல்’ என்று கடவுளைச் சொல்கிறார்கள் சில பேர். ஆனால் அந்தக் கல் எனும் சொல் பெயர்ச் சொல் அல்ல! வினைச் சொல்! ஆம்! கடவுளைக் கற்க, கற்க பார்வை விசாலமாகும். புவி எல்லாம் பரம் பொருளின் விலாசமாகும்.
**********************
*யாரை நம்புவது என்ற கேள்விற்கு அனுபவத்தின் மூலம் விடை தெரிவதற்குள் பாதி வாழ்நாளே முடிந்து விடுகிறது.*
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/20, 07:00] Sucharithra: நம்பலாம்
[10/20, 07:00] திரைக்கதம்பம் Ramarao: நம்பலாம்
[10/20, 07:04] chithanandam: நம்பலாம்
[10/20, 07:10] பாலூ மீ.: நம்பலாம்.
[10/20, 07:16] Dr. Ramakrishna Easwaran: நம்பலாம்
நம்-பலா-ம்
[10/20, 07:22] மீ.கண்ணண்.: நம்பலாம்
[10/20, 07:33] உஷா, கோவை: நம்பலாம்
[10/20, 07:47] Meenakshi: விடை: நம்பலாம்.
[10/20, 07:48] Ramki Krishnan: நம்பலாம்
[10/20, 08:06] nagarajan: *நம்பலாம்*
[10/20, 08:08] balakrishnan: பழக்கம்🙏
[10/20, 08:09] பானுமதி: நம்பலாம்
[10/20, 08:26]
நம்பலாம்-------கி.பா(KB)
[10/20, 08:38] ஆர். நாராயணன்.: நம்பலாம்
[10/20, 08:51] Viji - Kovai: 20.10.20 விடை இனிக்கும்
[10/20, 07:56] குன்னூர் லக்ஷ்மிமணியன்: புதிர் விடை:பழக்கம்
[10/20, 09:54] குன்னூர் லக்ஷ்மிமணியன்: பழக்கம் அல்ல.பழகலாம்
[10/20, 13:59] கு.கனகசபாபதி, மும்பை: நம்பலாம்
[10/20, 13:59] ஆர்.பத்மா: நம்பலாம்
[10/20, 16:29] N T Nathan: எமக்கும்
********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கனமாடி? அசைப்பது சுலபமில்லையோ? (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*சுலபமில்லையோ-*
எதுவும் சுலபமில்லை!
ஆனால் எல்லாம்
எளிது தான்
மனமிருந்தால்!
**********************
_கனமாடி? அசைப்பது சுலபமில்லையோ? (4)_
_அசைப்பது_
= anagram indicator for *கனமாடி*
= *கடினமா*
= _சுலபமில்லையோ_
**********************
_அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்_
_வற்றல் மரந்தளிர்த் தற்று._
*குறள் 78*
அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை என்பது, *கடினமான* பாறையிலும் வெப்பத்திலும் மரம் துளிர்வதைப் போன்றது.
**********************
மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே. *கடினமான* இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது .
(Manoj)
**********************
*_புரிந்து கொள்ள கடினமான வரிகள் “கவிதைகள்”_*
*_புரிந்து கொள்ளவே முடியாத கவிதைகள் “பெண்கள்”_*
**********************
💐🙏🏼😂
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/21, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கடினமா
[10/21, 07:00] Ravi Subramanian: கடினமா
[10/21, 07:01] akila sridharan: கடினமா
[10/21, 07:02] balakrishnan: கடினமா. 🙏
[10/21, 07:04] மீ.கண்ணண்.: கடினமா
[10/21, 07:04] Ramki Krishnan: கடினமா
[10/21, 07:07] Dr. Ramakrishna Easwaran: கடினமா?
கேள்விக்குறியும் விடையே!
விடை கேட்கும் கேள்விக்கு பதில்: இல்லை!
அதாவது இப்புதிர் கடினமா- இல்லை🤣🤣
[10/21, 07:07] V N Krishnan.: கடினமா?
[10/21, 07:08] Sucharithra: கடினமா
[10/21, 07:15] பாலூ மீ.: கடினமா?
[10/21, 07:20] A D வேதாந்தம்: விடை= கடினமா / வேதாந்தம்
[10/21, 07:20] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கடினமா
[10/21, 07:22] மாலதி: கடினமா
[10/21, 07:25] Meenakshi: விடை:கடினமா?
[10/21, 07:26] sankara subramaiam: கடினமா
[10/21, 07:34] siddhan subramanian: கடினமா
[10/21, 07:36] prasath venugopal: கடினமா
[10/21, 07:44]
கடினமா------- கி.பா(KB)
[10/21, 07:51] stat senthil: கடினமா
[10/21, 07:56] chithanandam: கடினமா?
[10/21, 08:05] nagarajan: *கடினமா* isn't this suppose to be கடினமோ? nga asir?
[10/21, 08:38] ஆர். நாராயணன்.: கடினமா ?
[10/21, 08:39] bala: கடினமா?
-பாலா
[10/21, 08:51] sathish: கடினமா
[10/21, 09:30] வானதி: கடினமா
[10/21, 10:10] கு.கனகசபாபதி, மும்பை: கடினமா
[10/21, 10:44] பானுமதி: கடினமா?
[10/21, 11:41] Bharathi: கடினமா?
[10/21, 13:14] Viji - Kovai: 21.10.20 விடை
கடினமா
[10/21, 13:51] ஆர்.பத்மா: கடினமா
[10/21, 13:58] shanthi narayanan: கடினமா
********************
*இன்றைய உதிரிவெடி!*( 22. -10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மேலே செல்ல பின்னர் தாழ துல்லியமில்லை (6)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 22-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_மேலே செல்ல பின்னர் தாழ துல்லியமில்லை (6)_
_மேலே செல்ல_ = *ஏற*
_தாழ_ = *குறைய*
_பின்னர்_ = indicator to place *குறைய* after *ஏற*
= *ஏற+குறைய*
= *ஏறக்குறைய*
= _துல்லியமில்லை_
**********************
*துல்லியம்*
_கவிதை என்பதை *துல்லியம்* என்றும் சொல்லலாம்._
நாம் பார்க்காத கோணம் என்றும் சொல்லலாம், மிகப் பெரியதை மிகச் சிறியதில் சொல்வது என்றும் கூறலாம். வசீகரத் தத்துவம் என்று சொல்லலாம்.
“பனித்துளியில் தெரியும் பனைமரம்” என்று சுந்தரராமசாமியை துணைக்கு அழைக்கலாம்.
மொழி தீப்பிழம்பாகும் தருணம் என்றும் சொல்லலாம். மொழியின் பாலைவனத்தில் ஒற்றைக் கண்ணீர்த் துளி என்றும் கவிதையைச் சொல்லலாம்.
நாம் வாசித்த பழந்தமிழ் இலக்கியம், குறள், மத்தியகால சமயக் குறவர்களின் பாடல், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள், பாரதியின் கவிதைகள், மரபுக் கவிதைகள், நவினக் கவிதைகள் என எதுவாக இருந்தாலும் அது *துல்லியமாக* , கூர்மையாக, மிகுந்த அழகியலோடு இருக்க வேண்டும். அதுவே கவிதைக்கான எக்காலத்திற்குமான விதி.
*அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை*
*அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்*
*வெந்து தணிந்தது காடு - தழல்*
*வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ?*
*தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.*
சிறிய நெருப்பை அக்கினிக் குஞ்சென்று சொல்வதற்கு ஒரு மகத்தான கவிஞன் தேவைப்படுகிறான். தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ? என்று சொல்லும் பொழுது கடவுளுக்கு நிகராக ஆகிவிடுகிறான் கவிஞன். நெருப்பில் இளைய நெருப்பு வயதான நெருப்பு என்று உண்டா? 🤔
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[
[10/22, 07:07] திரைக்கதம்பம் Ramarao: ஏறக்குறைய
[10/22, 07:08] chithanandam: ஏறக்குறைய
[10/22, 07:11] sankara subramaiam: ஏறக்குறைய
[10/22, 07:12] balakrishnan: ஏறக்குறைய🙏
[10/22, 07:13] பாலூ மீ.: ஏறக்குறைய.
[10/22, 07:14] பானுமதி: ஏறக்குறைய
[10/22, 07:22] A D வேதாந்தம்: விடை= ஏறக்குறைய/ வேதாந்தம்.
[10/22, 07:31] akila sridharan: ஏறத்தாழ
[10/22, 07:31] Ramki Krishnan: ஏறக்குறைய
[10/22, 07:32] கு.கனகசபாபதி, மும்பை: ஏறக்குறைய
[10/22, 07:33] V N Krishnan.: ஏறயிரங்க
[10/22, 07:39] prasath venugopal: ஏறக்குறைய
[10/22, 07:42] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை: ஏறக்குறைய
[10/22, 07:43] மீ.கண்ணண்.: ஏறக்குறைய
[10/22, 07:52] N T Nathan: ஏறக்குறைய
[10/22, 07:59] nagarajan: *ஏறக்குறைய*
[10/22, 08:13] Dr. Ramakrishna Easwaran: *ஏறத்தாழ*
[10/22, 08:26] Bharathi: ஏறயிறங்க
[10/22, 08:29] மாலதி: ஏறக்குறைய
[10/22, 08:46] Viji - Kovai: 22.10.20 விடை
கூடக்குறைய
[10/22, 08:51] Bhanu Sridhar: ஏறத்குறைய
[10/22, 08:57] Meenakshi: விடை:ஏறக்குறைய
[10/22, 11:03] siddhan subramanian: ஏறக்குறைய
[10/22, 13:28] shanthi narayanan: ஏறக்குறைய
[10/22, 13:44] Sucharithra: ஏறக்குறைய
[10/22, 14:06] வானதி: ஏறக்குறைய
********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
முயல் இல்லாமல் முகத்தினை பயமுறுத்தக் காட்ட உதவும் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
அழகான *முயல்* ஒன்று கண்டேன்
வெள்ளை பனிக்குவியலாகக் கண்டேன்
துள்ளி தாவும் குட்டியைக் கண்டேன்
பஞ்சுப் பொதியலாகக் கண்டேன்
ஓடி ஆடும் அழகைக் கண்டேன்
புல்லைச் சுவைக்கும் பாங்கைக் கண்டேன்
மிரளும் பார்வையைக் கண்டேன்
மிரண்டு ஓடும் நேரம் அச்சத்தைக் கண்டேன்
அழகு முயலின் அழகில் மயங்கினேன்
மயங்கிய நிலையில் மகிழ்வுற்றேன்
மகிழ்ந்த போது என் நிலை மறந்து
பரவசமானேன் குட்டி முயலைக் கண்டு
(மீனா சோமசுந்தரம்)
**********************
_முயல் இல்லாமல் முகத்தினை பயமுறுத்தக் காட்ட உதவும் (3)_
_முயல்_
= (Not me..🐰) _முயற்சி செய்_
= *முனை*
_முயல் இல்லாமல் முகத்தினை_
= _முகத்தினை - முனை_
= *கத்தி*
= _பயமுறுத்தக் காட்ட உதவும்_
**********************
*பிரிந்து செல்ல முனைதல்*
வெறுப்பும் ஆங்காரமும் தன்னிரக்கமும்
இழந்த மனம்
பொருளிழந்தலையும்
பாலிதீன் பை போல
நிலையற்றதிர்கிறது
உன் சொல்லிலா நாட்கள்
சுவையிலா உணவு
நகையிலா உரையாடல்
நானிலா நான்
நான் எனும் வெறுமையை
நான் நான் நான் என
பதறி நிரப்புகிறாய் நீ
நீ எனும் முழுமையை
நீ நீ நீ என
சொல்லியே அழிக்கிறேன் நான்
உன் நினைவற்றுழைக்க
உன் துணையற்றுறங்க
எத்தனை இனிமைகளை நான் மறுக்க வேண்டும்
எத்தனை புன்னகையை நான் மறக்க வேண்டும்
எத்தனை அசைவுகளை நான் ஒதுக்க வேண்டும்
உப்பும் கன்னங்களில்
திரும்பிச் சிரிக்கும் குழவிகளில்
திக்கலில்
விக்கலில்
பரிசுத்தமான கண்ணீரில்
புலரியின் தனிமையில்
உச்சியின் தகிப்பில்
உடலறியா இருப்பென நிற்கும்
உயிரென
ஒவ்வொரசைவிலும்
கலந்து விடுகிறாய்
-(சுரேஷ்)--
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/23, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கத்தி
[10/23, 07:11]
கத்தி----- கி.பா(KB)
[10/23, 07:12] மீ.கண்ணண்.: கத்தி
[10/23, 07:17] balakrishnan: 🙏 கத்தி
[10/23, 07:18] A Balasubramanian: கத்தி
[10/23, 07:20] குன்னூர் லக்ஷ்மிமணியன்: கத்தி.மு(கத்தி)னை.முயல்= முனை
[10/23, 07:24] Meenakshi: விடை: கத்தி
[10/23, 07:35] chithanandam: கத்தி
[10/23, 07:53] கு.கனகசபாபதி, மும்பை: கத்தி
[10/23, 07:55] வானதி: கத்தி
[10/23, 07:57] Viji - Kovai: 23.10.20 விடை கத்தி
முகத்தினை _முனை
[10/23, 08:06] மாலதி: கத்தி
[10/23, 08:08] nagarajan: *கத்தி*
[10/23, 08:11] பாலூ மீ.: கத்தி.
[10/23, 08:15] ஆர். நாராயணன்.: கத்தி
[10/23, 08:19] N T Nathan: கத்தி
[10/23, 08:30] prasath venugopal: கத்தி
[10/23, 09:05] Ramki Krishnan: கத்தி
[10/23, 10:35] பானுமதி: கத்தி
[10/23, 07:54] Dr. Ramakrishna Easwaran: *கத்தி*
_முயல்_ = முனை (இரண்டும் வினைச்சொல்லாக, முயற்சி செய் என்ற பொருளில்)
( _முகத்தினை_ ) என்பதில் _முனை_ இல்லாமல்,
[10/23, 11:33] Bharathi: கத்தி
[10/23, 11:51] sathish: கத்தி
[10/23, 12:03] ஆர்.பத்மா: கத்தி
[10/23, 13:22] shanthi narayanan: கத்தி
********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சைவ மாறுபாட்டால் புகழ் இல்லை (2)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய_
_வாழ்வாரே வாழா தவர்_
(அதிகாரம்:புகழ்
*குறள் எண்:240* )
பொழிப்பு :
*தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.*
*************
தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே வாழ்பவர்; புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்பது பாடலின் பொருள்.
' *வசையொழிய வாழ்வாரே வாழ்வார்'* என்னும் உடன்பாட்டுக் கருத்து ' *இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்'* என்னும் எதிமறைக் கருத்தால் மிகத் தெளிவு பெறுகிறது. இதனாலேயே ஒரு கருத்து நன்கு தெளிவுற இருவகை நடைகளையும் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
வசை ஒழிய வாழ்வார் உயர்வெய்துவர், இசை ஒழிய வாழ்வார் இழிவுறுவர். வாழ்தலும் வாழாமையும் புகழில் அமைந்து கிடக்கிறது என்பது இக்குறள் கூறும் செய்தி.
தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே உயிரோடு வாழ்பவர்; புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்பது இக்குறட்கருத்து.
**********************
_சைவ மாறுபாட்டால் புகழ் இல்லை (2)_
_சைவ மாறுபாட்டால்_
= " *சைவ* " , மாற்றியெழுத வரும் சொல்
= *வசை*
= _புகழ் இல்லை_
**********************
*புறநானூறு 10*
பாடல்
_வழிபடுவோரை வல் அறிதீயே;_
_பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;_
_நீ மெய் கண்ட தீமை காணின்;_
_ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி ;_
_வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,_
_தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே_
_அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்_
_வருநர்க்கு வரையா *வசை இல் வாழ்க்கை*_
_மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்_
_மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப!_
_செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,_
_நெய்தலங்கானல் நெடியோய்!_
_எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!_
***********
நெய்தலங்கானல் நெடியோய்!
உன்னை வாழ்த்தி வேண்டுகிறேன்.
வழிபடுவோர் உன்னை எதற்காக வழிபடுகின்றனர்
என்பதை உடனே தெரிந்துகொள்.
பிறன்மீது பழி கூறுபவர்களின் சொல்லை நம்பாதே.
நீ ஒருவனிடம் உண்மையாகவே தீமையைக் கண்டால்
ஒத்திட்டு ஆராய்ந்து தக்க தண்டனை வழங்கு.
அவர் தன் தவற்றை உணர்ந்து
உன் காலடியில் வணங்கி நின்றால்
பண்டைய தண்டனையைக் குறை.
மகளிர் அமிழ்தம் போலச் சமைத்து,
வந்தவர்க்கெல்லாம் வழங்கும்
குற்றமற்ற வாழ்க்கையை உடையவர்கள் மகளிர்.
அவர்கள் தழுவுதல் அன்றி,
போரிடும் மள்ளர் யாரும் தழுவ முடியாத
கல்மலை போன்ற மார்பினை உடையவன் நீ.
செய்துவிட்டு வருந்தாத நற்செயல்களைப் புரிபவன் நீ.
அதனால் உன் புகழ் விளங்குகிறது.
நெய்தலங்கானல் நிலத்தெய்வம் (நெடியான்) நீ.
உன்னை நாடி வந்திருக்கிறேன்.
பலவாகப் பாராட்டிப் புகழ்கிறேன்.
பரிசில் வழங்க வேண்டும் என்பது சொல்லெச்சம்.
************
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
காலம் : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)
*************************
_இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை_
_நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை_
_*வசை* வருமே பாண்டி நாட்டினிலே இறைவா_
*_வசை வருமே பாண்டி நாட்டினிலே_*
_குழலி மணவாளனே உனது வீட்டினிலே_
_உயிர் மயக்கம் நாத பாட்டினிலே_
_வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ_
_இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை_
படம்: திருவிளையாடல்
************************
💐🙏🏼💐
**********************
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/24, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வசை
[10/24, 07:00] sathish: வசை
[10/24, 07:00] thiru subramanian: வசை
[10/24, 07:01] balakrishnan: வசை🙏
[10/24, 07:02] N T Nathan: வசை
[10/24, 07:03] Sucharithra: வசை
[10/24, 07:03] sankara subramaiam: வசை
[10/24, 07:05] stat senthil: வசை
[10/24, 07:06] V N Krishnan.: வசை
[10/24, 07:07] prasath venugopal: வசை
[10/24, 07:07] கு.கனகசபாபதி, மும்பை: வசை
[10/24, 07:08] akila sridharan: வசை
[10/24, 07:08] A Balasubramanian: வசை
A.Balasubramanian
[10/24, 07:09] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை: வசை
[10/24, 07:13] மீ.கண்ணண்.: வசை
[10/24, 07:14] பானுமதி: வசை
[10/24, 07:17] Dr. Ramakrishna Easwaran: வசை
[10/24, 07:18] பாலூ மீ.: வசை.
[10/24, 07:19] Meenakshi: விடை: வசை
[10/24, 07:21] A D வேதாந்தம்: விடை= வசை/ வேதாந்தம்
[10/24, 07:21] ஆர்.பத்மா: வசை
[10/24, 07:27]
வசை------- கி.பா( KB)
[10/24, 07:30] Ramki Krishnan: வசை
[10/24, 07:32] Bharathi: வசை
[10/24, 07:32] மாலதி: வசை
[10/24, 07:45] Usha Chennai: வசை
[10/24, 07:57] nagarajan: *வசை*
[10/24, 08:13] ஆர். நாராயணன்.: வசை
[10/24, 08:25] Bhanu Sridhar: வசை
[10/24, 08:28] Srikrupa: வசை
[10/24, 08:40] chithanandam: வசை
[10/24, 13:33] shanthi narayanan: வசை
[10/24, 16:53] siddhan subramanian: வசை
[10/24, 19:54] Viji - Kovai: 24.10.20 விடை
வசை
********************