Skip to main content

விடை 4089


இன்று காலை வெளியான வெடி:
 பூசாரி செய்வது நெருப்பு காணா தலை போகும் வேதனை (5)

அதற்கான விடை: தீபாராதனை  = தீ +  பாரா + தனை
தீ = நெருப்பு
பாரா= காணா
தனை = தலை போகும் வேதனை

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*சாமியே சைக்கிள்ள போக , பூசாரி புல்லட் கேட்டாராம்*
😌
பழமொழி
************************
_*வேதனைகள்* மட்டும் சோதனைகள் ஆகிப்போன வாழ்வில்_

_சாதனைகள் செய்ய துடிக்கும் இவள் வாழ்வில்_

_மீண்டும் சோதனைகள்தான்_
_வாழ்க்கையாகி போகுமா.?_

_விடை தெரியாதா பதிலாகி போன_
_என் வாழ்வில்_

_கேள்விகள் மட்டும் வர்க்கத்தில்_ _விரிகின்றது!_
(Joyros)
*************************
*தீபாராதனை*
இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.

_இறைவன் முருகனை அருணகிரிநாதர்,_
_"தீப மங்கள ஜோதி நமோ நம'_
_என்று போற்றுகிறார்.__
__மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை "ஒளி வளர் விளக்கே' என்றும்; "சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே' என்றும் பலவாறு போற்றியுள்ளார்._
_*ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது* .__
************************
_பூசாரி செய்வது நெருப்பு காணா தலை போகும் வேதனை (5)_

_நெருப்பு_ = *தீ*
_காணா_ = *பாரா*

_தலை போகும் வேதனை_
= _வேதனை யில் முதலெழுத்து போக_
= *தனை*
பூசாரி செய்வது
= *தீ+பாரா+தனை*
= *தீபாராதனை*
************************
தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப *ஆராதனையும்* ஒன்று.
*கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.* தீபத்தை இறவனுக்கு காட்டுவதற்கு முன்னால், ஒரு திரை போடப்படுகின்றது. தீபத்தை காட்டும் பொழுது திரை விலக்கப்படுகிறது. இதன் தத்துவம் என்னவென்றால், நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து, நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.
🙏🏼
************************
_*‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'*_

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. .

சிவன், காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.
இதனை, ‘ _ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்_ ’, தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 01-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
நெஞ்சம் நிறைந்து மரம் தானம் மெய்களின்றிச் சிதைந்தது (4)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 01-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
*********************
_நெஞ்சம் நிறைந்து மரம் தானம் மெய்களின்றிச் சிதைந்தது (4)_

_மரம் தானம் மெய்களின்றி_
= _மர[ம்] தான[ம்]_ _(மெய்யெழுத்தின்றி)_
= *மரதான*

_சிதைந்தது_
= Anagram indicator for *மரதான*
= *மனதார*
= _நெஞ்சம் நிறைந்து_
*********************
_விடையளித்த அன்பர்களுக்கு *மனதார* பாராட்டுகள்!_
********************

[6/1, 06:04] balakrishnan: மனதார👌🙏🏻🌷

[6/1, 06:04] Ramarao : மனதார

[6/1, 06:07] Dhayanandan: மனதார

[6/1, 06:09] மீ.கண்ணண்.: மனதார

[6/1, 06:11] akila sridharan: மனதார

[6/1, 06:11] பாலூ மீ.: மனதார.

[6/1, 06:16] sathish: மனதார

[6/1, 06:23] V N Krishnan.: VNK மனதார

[6/1, 06:26] Suba: Hello sir, மனதார

[6/1, 06:30] Viji - Kovai: 1.6.2020 விடை
மனதார
மரம்_ம் +தானம்_ம்
சிதைந்து
மனதார

[6/1, 06:33] Bharathi: மனதார

[6/1, 06:48] Meenkshi: விடை:மனதார

[6/1, 06:49] sankara subramaiam: மனதார

[6/1, 06:52] prasath venugopal: மனதார

[6/1, 07:00] N T Nathan: மனதார

[6/1, 07:02] A D வேதாந்தம்: விடை= மனதார

[6/1, 07:08] nagarajan: மனதார

[6/1, 07:35] ஆர். நாராயணன்.: மனதார

[6/1, 08:48] Dr. Ramakrishna Easwaran: மனதார

[6/1, 09:30] chithanandam: மனதார

[6/1, 11:03] shanthi narayanan: மனதார

[6/1, 13:38] Ramki Krishnan: Manathaara

[6/1, 14:04] Rajalakshmi Krishnan: Manàdhaara

[6/1, 19:37] *கு.கனகசபாபதி, மும்பை:* மனதார(நெஞ்சம் நிறைந்து)
மரம்—ம்+தானம்—ம்
************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 02-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
ஒரு பிரபந்தம் எழுத முக்கால் பக்கம் முன் பாத்திரம் வை (6)

**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 02-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**************
*_பிரபந்தங்கள்_*

சிற்றிலக்கியங்களை முதலில்  *பிரபந்தங்கள்* என்று வழங்கினர். பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு  *நன்கு வடிவமைக்கப்பட்டது* என்பது பொருள். இது அனைத்து இலக்கியங்களுக்கும் பொதுவானதே, ஆகவே காலப்போக்கில் சிற்றிலக்கியம் என்ற சொல்லே இவ்வகை இலக்கியங்களைக் குறிக்க நிலைபெற்றது.

சிற்றிலக்கியம் என்பதனுள் 96 வகையான இலக்கியங்கள் காணப்படுகின்றன என்று பொதுவாகக் கூறும் வழக்கம் உள்ளது. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய  *பிரபந்த மரபியல்* என்ற பாட்டியல் நூல் கூறுகின்றது. இந்நூல்,

_பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்_
_தொண்ணூற் றாறுஎன்னும்_ _தொகையதுஆம்_

என்கிறது.
**********************
*பேரிலக்கியமும் சிற்றிலக்கியமும்*

சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி என்பன போன்றவை  *பெருங்காப்பியங்கள்*.
உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்றவை  *சிறுகாப்பியங்கள்*.

இவை போன்ற இலக்கியங்களைப்  *பேரிலக்கியம்* என்று அழைப்பது மரபு ஆகும்.
தூது, உலா, பிள்ளைத்தமிழ், *_கலம்பகம்_*,கோவை, குறவஞ்சி, முதலியவற்றைச்  *சிற்றிலக்கியம்* 
என்பர்.
**********************
_ஒரு பிரபந்தம் எழுத முக்கால் பக்கம் முன் பாத்திரம் வை (6)_

_முக்கால் பக்கம்_
= _ப(க்)கம்..(4ல்3 எழுத்துகள்)_
= *பகம்*
_பாத்திரம்_ = *கலம்*
எழுத பாத்திரம் முன் வை
= *கலம் + பகம்*
= *கலம்பகம்*
= _ஒரு பிரபந்தம்_
**********************
*கலம்பகம்*

தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும்.
அதில் ஒன்று *கலம்பகம்.*
தமிழ் இலக்கியத்தில், 
கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான 
சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.
_தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும்._
**********************
*கலம்பகம்* என்பதற்குக் கலவை என்று ஒரு பொருள் உண்டு. சங்க இலக்கியங்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில்,

_பல் பூ மிடைந்த படலைக்கண்ணி_

*(பெரும்பாணாற்றுப்படை - 174)*

என்ற அடி இடம் பெற்றுள்ளது.

அடிக்கு உரை ஆசிரியராகிய நச்சினார்க்கினியர் பல வகையாகிய பூக்கள் கலந்து நெருங்கிய *கலம்பக மாலை* என்று பொருள் கூறுகிறார்.

கதம்பம் என்று ஒரு வகையான பூ மாலையை நாம் இப்பொழுதும் காண முடிகிறது. பல வகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையே கதம்பம் எனப்படுகிறது. கலம்பகம் என்பதே பேச்சு வழக்கில் கதம்பம் என்று மாறி வழங்கப்படுகிறது எனலாம்.

பல்வேறு மலர்கள் கலந்து தொடுக்கப்பட்ட மாலை கலம்பகம் என்று குறிப்பிடப்படுகிறது அல்லவா? அது போலப் பல்வேறு உறுப்புகளால் ஆன இலக்கிய வகை கலம்பகம் என்று கூறப்படுகிறது எனலாம்.
**************
💐🙏🏼💐
Raghavan MK said…
**************
*_கலம்பக மாலை தொடுத்தவர்கள்!_*
**************
[6/2, 06:23] Ramarao : கலம்பகம்

[6/2, 06:26] V N Krishnan.: VNK. கலம்பகம்

[6/2, 06:28] sathish: கலம்பகம்

[6/2, 06:29] Meenkshi: விடை:கலம்பகம்.

[6/2, 06:41] கு.கனகசபாபதி, மும்பை:
கலம்பகம்; கலம்+பக்கம்—க்

[6/2, 06:45] Dr. Ramakrishna Easwaran: கலம்பகம்
பாத்திரம்= கலம்
3/4 பக்கம்=ப,க,ம்
முன்னால் வைப்பது= கலம் என்பது "பகம்" என்பதற்கு முன்னால் வருவதைக் குறிக்கும்
கலம்+பகம் = கலம்பகம் (ஒரு வகை பிரபந்தம்)

[6/2, 06:45] N T Nathan: கலம்பகம்
[
[6/2, 06:45] மீ.கண்ணண்.: கலம்பகம்

[6/2, 06:45] balakrishnan: கலம்பகம்
🙏🏻🌷👌🤣

[6/2, 06:45] sankara subramaiam: கலம்பகம்

[6/2, 06:51] ஆர். நாராயணன்.: கலம்பகம்

[6/2, 06:54] Dhayanandan: கலம்பகம்

[6/2, 07:43] nagarajan: கலம்பகம்

[6/2, 08:18] Suba: Hello sir, கலம்பகம்

[6/2, 08:36] siddhan submn: கலம்பகம் (கலம்+பகம் = 3/4 பக்கம்)

[6/2, 10:11] prasath venugopal: கலம்பகம்

[6/2, 08:05] chithanandam: கலம்பகம்

[6/2, 14:07] A D வேதாந்தம்: விடை= கலம்பகம்/ வேதாந்தம்
*************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 03-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
தலை வார பாதி மரவுடை தைக்கச் சரிவு (5)

**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 03-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**************
*சரிவு*

சரிவுகள் சறுக்கி விழ அல்ல
சடுதியில் மீண்டும்
சாதிக்க!
****************************
தலை வார பாதி மரவுடை தைக்கச் சரிவு (5)

தலை வார= பின்ன
பாதி மரவுடை= மர/வுடை
= வுடை
தைக்க = Anagram indicator for பின்ன+வுடை
= பின்னடைவு
= சரிவு
****************************
பின்னடைவின்றி வெற்றிநடை போட்டவர்கள்.!
*****************************

[6/3, 06:01] Ramarao திரைக்கதம்பம்: பின்னடைவு

[6/3, 06:22] பாலூ மீ.: பின்னடைவு.

[6/3, 06:35] கு.கனகசபாபதி, மும்பை: பின்னடைவு(சரிவு)
பின்ன+வுடை

[6/3, 06:43] sridharan: பின்னடைவு

[6/3, 07:09] Meenkshi: விடை:பின்னடைவு

[6/3, 07:14] Suba: Hello sir, பின்னடைவு

[6/3, 07:23] மீ.கண்ணண்.: பின்னடைவு

[6/3, 07:51] nagarajan: பின்னடைவு

[6/3, 08:01] ஆர். நாராயணன்.: பின்னடைவு

[6/3, 08:36] Dr. Ramakrishna Easwaran: பின்னடைவு
தலை வார = பின்ன
பாதி மரவுடை = வுடை
தைக்க = பின்ன+ (வுடை)* இரண்டையும் இணைக்க
சரிவு= பின்னடைவு (பொருள்)

[6/3, 11:05] siddhan submn: பின்னடைவு (பின்ன+டைவு)

[6/3, 14:13] Dhayanandan: பின்னடைவு

[6/3, 15:36] balagopal: தென்றல்.
தலை வார.பின்ன
தைக்க. பின்ன
பாதி வுடை. வுடை.
பின்ன+வுடை. பின்னடைவு.
சரிவு.பின்னடைவு.
[
[6/3, 06:16] balakrishnan: பின்னடைவு🙏🏻
*****************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 04-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
ஒரு தானியம் நனைந்தது என்றாலும் தோரணையில் மிடுக்கு (5)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்d.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 04-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
*************************
*மரணத்திடம் கம்பீரம்…* _வாஜ்பாயின் கவிதை!_
*******
*மரணத்திடம் கம்பீரம்*

“மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.

கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரீட்சித்துப் பார்.”

*_மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது._*
************************
_ஒரு தானியம் நனைந்தது என்றாலும் தோரணையில் மிடுக்கு (5)_

_ஒரு தானியம்_
= *கம்பு*
_நனைந்தது என்றாலும்_
= *ஈரம்*

_தோரணையில் மிடுக்கு_
= *கம்பு+ஈரம்*
= *கம்பீரம்*
************************
_உழைப்பு தருகின்ற *கம்பீரம்* !_
_கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால்போட்டு_

_கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது_ _என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல,_

*_உழைப்பு தருகின்ற கம்பீரம்!_*

_கார், பணம், பதவி பார்த்து வருகின்ற மரியாதைகள்_
_அவை போனதும் அவைகளோடே போய்விடும்,_

_உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள்_ _உயிர்போனாலும் போவதில்லை!_

_கோவணத்தோடு நின்றாலும் குன்றின்_ _மீது ஏறி கர்வமாய் நிற்கக்கூடிய_

_தைரியம் கடவுளுக்கு பின் விவசாயிக்கு மட்டுமே இருக்கிறது!_ 

_படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட கடவுள் தொழில் தான்!!_

(படித்ததில் பிடித்தது)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
****************************
கம்பீரமாக வலம் வந்து விடையளத்தோர்!
***************************

[6/4, 06:38] Meenkshi: விடை :கம்பீரம்
கம்பு+ஈரம் தானியம் நனைந்தது.

[6/4, 06:49] பாலூ மீ.: கம்பு+ ஈரம் = கம்பீரம்

[6/4, 06:58] மீ.கண்ணண்.: கம்பீரம்

[6/4, 07:04] sathish: கம்பீரம்

[6/4, 07:07] balakrishnan: கம்பீரம்

[6/4, 07:07] prasath venugopal: கம்பீரம் ( கம்பு + ஈரம்)

[6/4, 07:08] sankara subramaiam: கம்பீரம்

[6/4, 07:17] Dhayanandan: கம்பீரம்

[6/4, 07:20] Bharathi: கமபீரம்

[6/4, 07:31] ஆர். நாராயணன்.: கம்பீரம்

[6/4, 07:34] akila sridharan: கம்பீரம்

[6/4, 07:44] V N Krishnan.: VNK கம்பீரம்

[6/4, 08:00] nagarajan: கம்பீரம்

[6/4, 09:22] Viji - Kovai: 4.6.2020 விடை
கம்பு+ஈரம்
கம்பீரம்

[6/4, 09:33] Ramki Krishnan: Gambeeram

[6/4, 10:44] siddhan submn: கம்பீரம் (கம்பு + ஈரம்)

[6/4, 11:33] Dr. Ramakrishna Easwaran: கம்பீரம்
தானியம்=கம்பு
நனைந்தது= ஈரம்
கம்பு+ஈரம் approximately =கம்பீரம்
Actually according to புணர்ச்சி விதி it should be கம்புயீரம்? Let a Tamil scholar clarify

[6/4, 12:13] Rajalakshmi Krishnan: Gambeeram

[6/4, 13:07] chithanandam: கம்பீரம்

[6/4, 14:39] A D வேதாந்தம்: விடை= கம்பீரம்/ வேதாந்தம்

[6/4, 07:00] Ramarao : கம்பீரம்

[6/4, 17:57] கு.கனகசபாபதி, மும்பை: கம்பீரம்
கம்பு+ஈரம்

[6/4, 18:28] balagopal: தென்றல்.
ஒரு தானியம். கம்பு.
நனைந்தது. ஈரம்.
கம்பு+ஈரம்.கம்பீரம்.
தோரணையில் மிடுக்கு.
கம்பீரம்.

[6/4, 18:45] Suba: Hello sir, கம்பீரம்
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 05-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
ரகுவம்சத்தில் தோன்றியவனின் வேறு அவதாரம் (4)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 05--06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
*************************
*வராகன்(பெ)*
பொருள்
1.பழங்காலத்தில் (மூன்றரை ரூபாய் மதிப்புள்ள) பன்றி 
முத்திரை கொண்ட  பொன் நாணயம்
2.வராகம்  ரூபியான 
*திருமால்*
*************************
*வராகஅவதாரம்* 
விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச்சென்ற 
ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
*********************
_ரகுவம்சத்தில் தோன்றியவனின் வேறு அவதாரம் (4)_

_ரகுவம்சத்தில் தோன்றியவன்_
= _ராமன்_
= *ராகவன்*
_வேறு ( வடிவம்)_
= *ராகவன் --> வராகன்*

_அவதாரம்_
= *வராகன்*
*************************
_விடையளித்தோர் பட்டியல்!_

[6/5, 07:00] Ramarao : வராகன்

[6/5, 07:03] chithanandam: வராகன்

[6/5, 07:11] Dhayanandan: வராகன்

[6/5, 07:17] prasath venugopal: வராகன் - ராகவனின் வேறு வடிவம்...

[6/5, 07:19] மீ.கண்ணண்.: வராகன்

[6/5, 07:20] ஆர். நாராயணன்.: வராகன்

[6/5, 07:24] Suba: Hello sir , வராகன்

[6/5, 07:28] akila sridharan: வாமனன்

[6/5, 07:36] Meenkshi: விடை: வராகன் (ராகவன் வேறு அவதாரம்)

[6/5, 07:39] nagarajan: வராகன்
ராகவன் வேறு விதத்தில் வராகன் (வராக அவதாரம்)

[6/5, 07:51] பாலூ மீ.: ராகவன் = வராகன்.

[6/5, 09:14] RamkiKrishnan:
Varaagan

[6/5, 09:50] V N Krishnan.: VNK. வராகன். (ராகவன் கலங்கி)

[6/5, 09:58] Rajalakshmi Krishnan: Varaagan

[6/5, 10:25] siddhan submn: வராகன் (ராகவன்) சிதைந்தது

**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 06-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
பற்றில்லாதவன் சேர்த்தது மூன்றிலொரு முத்து போன்ற மனைவி (3)
**************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 05--06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
***************************
எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும்.
***************************
எதுவும் இல்லாதவன் ஏழை. 
ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. 
***************************

பற்றில்லாதவன் சேர்த்தது மூன்றிலொரு முத்து போன்ற மனைவி (3)
சேர்த்தது மூன்றிலொரு
= indicator for taking one letter from each of the three words
முத்(து) போன்(ற) மனை(வி)
= துறவி
= பற்றில்லாதவன்
***************************
இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது.

உண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறுபவர்கள் அறியாமைக்குரியவர்களே.
***************************
விடையளித்தோர் பட்டியல்!
***************************
[6/6, 07:04] prasath venugopal: துறவி

[6/6, 07:05] sankara subramaiam: துறவி

[6/6, 07:06] Ramki Krishnan: ThuRavi

[6/6, 07:06] Ramarao : துறவி

[6/6, 07:17] nagarajan: துறவி

[6/6, 07:41] பாலூ மீ.: துறவி

[6/6, 07:51] ஆர். நாராயணன்.: (முத்) து (போன்)ற (மனை) வி , = துறவி = பற்றில்லாதவன்
[6/6, 07:56] Meenkshi: விடை :துறவி .
மூன்றில் ஒரு முத்து போன்ற மனைவிவிளக்கம் புரியவில்லை.
[6/6, 08:14] Meenkshi: புரிந்தது. முத் * து* போன்* ற* மனை *வி*

[6/6, 08:58] மீ.கண்ணண்.: துறவி

[6/6, 09:51] Rajalakshmi Krishnan: Thuravi

[6/6, 11:01] உஷா, கோவை: துறவி
***************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்