Skip to main content

விடை 4101

இன்று காலை வெளியான வெடி:
காளை ஓட பெரிய பழுவேட்டரையரின் மனைவி பயத்தில் சூடிய மலர் (5)
அதற்கான விடை: அனிச்சம் = அச்சம் + நந்தினி- நந்தி
நந்தி = காளை
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையரின் மனைவி, நந்தினி.
விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*பெரிய பழுவேட்டரையர்* பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்
பட்டினங்களில்
சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார். வயது முதிர்ந்த காலத்தில்  *நந்தினி தேவியை* திருமணம் செய்து கொண்டு தனது இளையராணியாக்கினார். இவ்வாறு *பொன்னியின் செல்வனில்* செல்வாக்கு மிகுந்த கதாபாத்தரமாக பெரிய பழுவேட்டரையர் வலம் வருகிறார்.
**********************
_காளை ஓட பெரிய பழுவேட்டரையரின் மனைவி பயத்தில் சூடிய மலர் (5)_

_காளை_ = *நந்தி*

_பெரிய பழுவேட்டரையரின் மனைவி_
= *நந்தினி*

_காளை ஓட_
= *நந்தினி* யில் *நந்தி* ஓட
= *னி*

_பயத்தில்_ = *அச்சம்*
_சூடிய_
= indicator for *னி* inside *அச்சம்*
= *அனிச்சம்*
= _மலர்_
**********************
_மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து_ 

_நோக்கக் குழையும் விருந்து._ 

(அதிகாரம்:
விருந்தோம்பல்
 குறள் எண்:90)

*பொழிப்புரை:*
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
*************************
அனிச்ச மலர் மோந்தால் வாடும்; முகம் திரிந்து நோக்க விருந்தினர் வாடுவர் என்பது பாடலின் பொருள். 
' *முகந்திரிந்து நோக்க' என்றால் என்ன?*

விருந்தினர் உள்ளம் பூவினும் மென்மையானது.

அனிச்ச மலரானது மோந்தால் வாடிப் போகும்; விருந்தினரோ, விருந்தோம்புவான் முகம் வேறுபட்டு நோக்கவே சுருங்கிப்போவர். 
எல்லா மலருமே மென்மையானவை. அவற்றுள்ளும் மிக மென்மையானது அனிச்சப்பூ. இலக்கியங்களில் பெண்களின் மென்மைத் தன்மை அனிச்சத்தோடு ஒப்பிடப்பட்டது. அனிச்சமானது முகர்ந்த அளவிலேயே வாடிவிடும் இயல்பு கொண்டது. அனிச்சப்பூப் போலவே விருந்தினர் உள்ளமும் மிக மென்மையானது; எளிதில் புண்படக்கூடியது; விருந்து கொடுப்பவன் முகம் மலராது திரிந்து பார்த்தாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும் என்கிறது இப்பாடல். 
**********************
*அனிச்ச மலர் என ஒன்று உண்மையிலேயே இருந்ததா?* இப்போதும் உள்ளதா? 
சங்கத் தொகை நூலான பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு (62) குறிப்பிடும் 99 மலர்களுள் ஒன்றாக அனிச்ச மலர்
_"ஒன் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்"_ 
என்று பாடப்பட்டுள்ளது. கலித்தொகைப்
பாட்டில்(91)
_"அவிழ்நீலம் அல்லி அனிச்சம்"_
 என்று வருகிறது. மேலும்
_"பஞ்சியட ரனிச்ச நெருஞ்சியின்ற பழமாலென் றஞ்சு மலரடிகள்",_

_"அம்மெல் லனிச்சம் மலருன்னத் தூவியும்",_

_"அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி"_ 
என்று சிந்தாமணியிலும் பின்வந்த மற்ற இலக்கியங்களிலும் அனிச்சமலர் பற்றிக் குறிப்புகள் உள்ளன.
எனவே அனிச்சம் பூ என்று ஒன்று இருந்ததாகத் தெளிவடையலாம். ஆயினும் மேற்சொன்ன பாடல்களில் விளக்கமான வருணனை இல்லாததால் அனிச்சமலரின் நிறம், தோற்றம் பற்றி அறிய முடியவில்லை. அது எந்த வகைப் பூ -கொடிப் பூவா? கோட்டுப் பூவா? நீர்ப் பூவா? என்பதும் தெரியவில்லை. 
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 24-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
திருடன் ஆடுமிடத்து சரஸ்வதி (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*களவாணி*
களவாணி என்றால் திருடன் என்று பொருள். பொதுவாக பல கிராமங்களில் குறிப்பாக தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் புழங்கி வரும் ஒரு வார்த்தை அது. களவு என்றால் திருட்டு. ஒருவனைத் திட்டுவதற்கு "களவாணிப்பய" என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு.

கள்ளாமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் களவு செய்யாமல் இருக்க வேண்டிய அவசியத்தை நன்கு விவரிக்கிறார்.

_களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து_

_ஆவது போலக் கெடும்._

அதாவது ஒருவன் களவு செய்து பொருள் ஈட்டுவானேயானால் அந்தப் பொருள் அதிகம் சேர்ந்து விட்டதைப் போல் தோன்றி முழுவதுமாக அழிந்துவிடும் என்கிறார்.
ஆகவே, ஒருவன் களவு செய்பவனாக, அதாவது களவாணியாக இருப்பது அவனுக்கு அவமானத்தையும் பொருள் இழப்பையும் தரும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். 
**********************
_திருடன் ஆடுமிடத்து சரஸ்வதி (4)_
_ஆடுமிடம்_ = *களம்*
_சரஸ்வதி_ = *வாணி*

_திருடன்_
= *களம்+வாணி*
= *களவாணி*
**********************
*திருப்புகழ் 651 தாரணிக் கதி (காசி)*

_தார ணிக்கதி பாவி யாய்வெகு_
_சூது மெத்திய மூட னாய்மன_
_*சாத னைக்கள வாணி* யாயுறு ...... மதிமோக_

_தாப மிக்குள வீண னாய்பொரு_
_வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்_
_தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப்_

_பூர ணச்சிவ ஞான காவிய_
_மோது தற்புணர் வான நேயர்கள்_
_பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப்_

_பூசி மெய்ப்பத மான சேவடி_
_காண வைத்தருள் ஞான மாகிய_
_போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே_

_வார ணத்தினை யேக ராவுமு_
_னேவ ளைத்திடு போதுமேவிய_
_மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே_

_வாழு முப்புர வீற தானது_
_நீறெ ழப்புகை யாக வேசெய்த_
_மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே_

_கார ணக்குறி யான நீதிய_
_ரான வர்க்குமு னாக வேநெறி_
_காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா_

_கான கக்குற மாதை மேவிய_
_ஞான சொற்கும ராப ராபர_
_காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே._

*சொல் விளக்கம்*

*தார ணிக்கதி பாவியாய்* ... இந்த உலகிலேயே அதிக பாவியாய்,

*வெகு சூது மெத்திய மூட னாய் ...* மிக்க சூது நிறைந்த மூடனாய்,

*மன சாதனைக் களவாணியாய் ...* மனத்திலே அழுந்திய திருட்டுப்
புத்தியை உடையவனாய்,

*உறு மதிமோக தாப மிக்குள வீணனாய் ...* மிகுந்த காம
மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய்,

*பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் ...* போருக்கு உற்ற வேல்
போன்ற கண்களை உடைய பொது மகளிர்

*தாமுயச்செயும் ஏது தேடிய நினைவாகி ...* தாம் பிழைப்பதற்கு
உதவும் செல்வத்தை தேடித் தரும் நினைவையே கொண்டு,

*பூரணச்சிவ ஞான காவியம் ...* பரிபூரணமான சிவஞான நூல்களை

*ஓதுதற்புணர்வான நேயர்கள்* ... ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள
அன்பர்கள்

*பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனை ...* பூசுகின்ற மகிமை
வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய
(புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை

*பூசி மெய்ப்பதமான சேவடி ...* திருநீற்றைப் பூசவைத்து,
உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை

*காண வைத்தருள் ஞான மாகிய ...* தரிசனம் செய்வித்து
திருவருள்மயமான ஞானம் என்ற

*போத கத்தினையேயு மாறருள் புரிவாயே ...* தூய அறிவும்
எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக.

*வாரணத்தினையே கராவுமுனே ...* கஜேந்திரன் என்ற யானையை
முதலை முன்னொருநாள்

*வளைத்திடு போதுமேவிய ...* வளைத்து இழுத்த போது அங்கு வந்து
உதவிய

*மாயவற்கு இதமாக வீறிய மருகோனே ...* மாயவன் திருமாலுக்கு
மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே,

*வாழு முப்புர வீற தானது ...* பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின்
பொலிவெல்லாம்

*நீறெழப்புகையாக வேசெய்த ...* சாம்பலாகப் போகுமாறு புகை எழச்
செய்த

*மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே ...* சிறந்த
திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே,

*காரணக்குறி யான நீதியர் ...* யாவற்றிற்கும் மூல காரணனாகவும்,
இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான்

*ஆனவர்க்கு முனாகவே ...* சிவபிரானது சந்நிதிகளில்

*நெறிகாவியச்சிவ நூலை யோதிய கதிர்வேலா ...* அறநெறியை
ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக
அவதரித்து, ஓதின ஒளி வேலனே,

*கானகக்குற மாதை மேவிய ...* காட்டில் குறப்பெண் வள்ளியை
விரும்பி அடைந்த

*ஞான சொற்குமரா பராபர ...* ஞான மொழி பேசும் குமரனே,
யாவர்க்கும் மேலானவனே,

*காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே. ...* காசித்தலத்தில்
பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/24, 07:01] Ramarao திரைக்கதம்பம்: களவாணி

[8/24, 07:01] V N Krishnan.: களவாணி

[8/24, 07:02] மீ.கண்ணண்.: களவாணி

[8/24, 07:07] Dhayanandan: களவாணி

[8/24, 07:10] N T Nathan: களவாணி

[8/24, 07:12] sankara subramaiam: களவாணி

[8/24, 07:17] chithanandam: களவாணி

[8/24, 07:18] Meenakshi: இன்றையவிடை களவாணி.

[8/24, 07:23] Srikrupa: கலவாணி

[8/24, 07:24] A D வேதாந்தம்: விடை= களவாணி/ வேதாந்தம்

[8/24, 07:28] Viji - Kovai: 24.8.20 விடை களவாணி

[8/24, 07:38] பாலூ மீ.: விடை; களவாணி.

[8/24, 07:39] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:களவாணி.

[8/24, 07:54] கு.கனகசபாபதி, மும்பை: களவாணி

[8/24, 08:05] nagarajan: *களவாணி*

[8/24, 08:21] வானதி: களவாணி

[8/24, 08:33] Dr. Ramakrishna Easwaran: *களவாணி*

[8/24, 08:50] akila sridharan: கலைவாணி
(திருடன்- களவாணி)

[8/24, 08:59] Ramki Krishnan: KaLavaaNi

[8/24, 09:21] ஆர். நாராயணன்.: களவாணி

[8/24, 09:28] Bharathi: களவாணி
ஆடுமிடம்=களம்+
சரஸ்வதி=வாணி

[8/24, 09:39] sathish: களவாணி

[8/24, 11:46] prasath venugopal: களவாணி

[8/24, 13:08] siddhan submn: களவாணி

[8/24, 16:11] stat senthil: களவாணி

[8/24, 16:31] Sucharithra: களவும்

[8/24, 19:15] balakrishnan: களவாணி👌🙏

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 25-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தேய்ந்து சிதைந்த எளிமைக் கருடா உழவுக்குப் பயன்படாது (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*_ஒரு காலடி நாலிலைப் பந்தலடி !_ -ஔவையார் - கம்பர் பாடல்.*
கம்பர் ஒருமுறை 
ஔவையாரிடம் ஒரு விடுகதை சொல்கிறேன். புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் என்று கூறி'ஆரை' என்னும் கீரையைக் குறிப்பதாகப் பொருளை உள்ளடக்கி கீழ்க் கண்டவாறு சொன்னார்:-

*பாடல்*
_'ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி'_

இதை இவ்வாறு பிரித்து அமைத்துப் பொருள் காண்க !

அடி ஒரு கால்; அடி நாலிலைப் பந்தல்.

(பந்தல்) அடி(யில்)  ஒரு கால்;
அடி(போன்ற) நாலிலைகள் உடைய பந்தல்
*பொருள்:-*
தாங்கி நிற்கும் வகையில் அடியில் (கீழே)  ஒரு கால் (தூண்) இருக்கும் ! மேலே கால் அடியைப் போல வடிவம் கொண்ட நான்கு இலைகள் உடைய பந்தல் இருக்கும் (அது என்ன ?)
*சொற்பொருள்;-*
ஒரு காலடி = ஒரு கால் இருக்குமடி; 
நாலிலை = நான்கு இலைகள் உடைய ; 
பந்தலடி = பந்தல் போன்று இருக்குமடி! (அது என்ன?)

இதில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையாரை மதிப்புக் குறைவாக விளிக்கும் வகையில் இடக்கராக வைத்துப் புதிரைக் கூறினார்.
**********************
_தேய்ந்து சிதைந்த எளிமைக் கருடா உழவுக்குப் பயன்படாது (6)_

_எளிமைக் கருடா தேய்ந்து_
= *எ[ளி]மைக் கருடா*
= *எமைக் கருடா*

_சிதைந்த_ = anagram indicator for *எமைக் கருடா*
= *எருமைக்கடா*
= _உழவுக்குப் பயன்படாது_
**********************
*_ஔவையாரிடமா_* 
*_கம்பரின் இடக்கு செல்லுபடியாகும்?_*
சிலேடையாக இருபொருளில்
ஔவையார் உடனே பாடினார்:-
*பாடல்*
_எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,_

_மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்_

_கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,_

_ஆரையடா சொன்னாயடா!_

*பொருள்:- (01)*
அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே !  *எருமைக் கடாவே* ! கழுதையே !; 
குட்டி சுவரே !; 
குரங்கே !; நீ சொன்னது ஆரைக் கீரையைத் தானடா !
*சொற்பொருள்:-*
எட்டு = 'அ' : 
கால் = 'வ' ; 
எட்டேகால் லட்சணம் =அவலட்சணம்; 
எமன் ஏறும் பரி
= *எருமைக்கடா;* 
மட்டில் பெரியம்மை =மூத்ததேவி என்னும் மூதேவி;  
வாகனம் = கழுதை;  
மேல் கூரையில்லா வீடு =குட்டிச்சுவர்; 
குலராமன் தூதுவன் =குரங்கு

*பொருள் :-(02)*
விரைந்து நடக்கும் காலழகா ! எம் குலத்தவனே ! வளரும் செல்வமே ! 
தேவலோகம் போன்றவனே ! 
உயர்குல வேந்தன் இராமபிரானின் கதையை காவியமாக்கிய கவிஞனே ! ஆரைக் கீரையை உட் பொருளாக வைத்து நீ விடுகதையைச் சொன்னாய் ! ஆனால் என்னை நீ வெல்ல முடியாது !

சொற்பொருள்:-
எட்டு + கால் = எட்டுக்கால் =எட்டேகால் ; 
எட்டு = கால்களை எட்டிப் போட்டு நடக்கும், 
லட்சணமே = அழகனே ! (விரைவாக நடக்கும் வலிமை பொருந்திய கால்களை உடைய அழகனே !) 
எமன் = எம்முடைவன் (எம் குலத்தவனே !); 
ஏறும் பரியே = வளரும் செல்வமே !, 
முட்ட மேல் கூரை இல்லா வீடே = தலையில் முட்டும் அளவுக்குத் தாழ்வான மேற்கூரை இல்லாத ; வீடே (அதாவது தேவலோகம் போன்றவனே !)  
குலராமன் = உயர்குலத்தில் பிறந்த வேந்தனான இராமபிரானின்; 
தூதுவனே = இராமாயணம் என்னும் இராம காதையை இயற்றி, இராமனின் புகழ் பரப்பும் தூதனே ! 
ஆரை = ஆரைக் கீரையை; 
அடா= உள்ளடக்கி, 
சொன்னாய் = என்னிடம் விடுகதையைச் சொன்னாய் ; 
அடா = அடாது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/25, 07:00] Ramarao திரைக்கதம்பம்: எருமைக்கடா

[8/25, 07:01] sankara subramaiam: எருமைக்கடா

[8/25, 07:04] V N Krishnan.: எருமைக்கடா

[8/25, 07:05] balakrishnan: எருமைக்கடா 🙏🤣

[8/25, 07:07] மீ.கண்ணண்.: எருமைக்கடா

[8/25, 07:08] Venkat UV: எருமைக்கடா 🙏🏽

[8/25, 07:10] usha ( உ.வெ.): எருமைக்கடா

[8/25, 07:12] akila sridharan: எருமைக்கடா

[8/25, 07:16] sathish: எருமைக்கடா!

[8/25, 07:26] Meenakshi: விடை:எருமைக்கடா

[8/25, 07:33] A D வேதாந்தம்: விடை= எருமைக்கடா/ வேதாந்தம்

[8/25, 07:34] பாலூ மீ.: எருமைக்கடா.

[8/25, 07:37] prasath venugopal: எருமைக்கடா

[8/25, 07:49] Viji - Kovai: 25.8.20விடை
எருமைக்கடா

[8/25, 07:49] கு.கனகசபாபதி, மும்பை: எருமைக்கடா
.
[8/25, 07:54] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை: எருமைக்கடா
லக்ஷ்மி மணியன்.குன்னூர்.

[8/25, 07:59] ஆர். நாராயணன்.: எருமைக்கடா

[8/25, 07:59] nagarajan: *எருமைக்கடா*

[8/25, 08:05] KB ...கி.பா -------
எருமைக்கடா

[8/25, 08:10] stat senthil: எருமைக்கடா

[8/25, 08:29] Bharathi: எருமைக்கடா

[8/25, 08:53] Dr. Ramakrishna Easwaran: *எருமைக்கடா*

[8/25, 08:56] மாலதி: இன்று விடை எருமைக் கடா

[8/25, 08:59] siddhan submn: எருமைக்கடா

[8/25, 09:23] உஷா, கோவை: எருமைக்கடா?
எருமைக் கிடா அல்லவா?

[8/25, 09:43] வானதி: எருமைக்கடா

[8/25, 09:45] N T Nathan: எருமைக்கடா

[8/25, 10:13] chithanandam: எருமைக்கடா

[8/25, 12:08] shanthi narayanan: எருமைக்கடா

[8/25, 13:03] பானுமதி: எருமைக்கடா

[8/25, 16:26] Dhayanandan: எருமைக்கடா

[8/25, 17:07] balagopal: உருப்படாது.

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 26-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தங்க முனையிட்ட கை அலுமினியம் போல்தான் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*
( 26-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*தகர கூண்டு விளக்கு!!*

ஏன் வள்ளலார் தகர கூண்டு விளக்கு ஏற்றி வைக்க சொன்னார்? கண்ணாடியில் கூண்டு எதுக்கு? மரக்கட்டையில் செய்து இருக்கலாமே?
ஏன் குத்து விளக்கு காமாட்சி விளக்கு ஏற்ற சொல்ல வில்லை? ஏன் கதவை நீக்கி ஜோதியை தூண்டி விடும் அமைப்பு உள்ளது? ஆத்ம ஜோதியை தூண்ட நாம் என்ன செய்ய வேண்டும்?

*வள்ளல் பெருமான்* தர்ம சாலை, மேட்டுகுப்பம் இன்னும் பல இடங்களில் தம் திருக்கரத்தால் ஏற்றிய தீபம் 150 ஆண்டுகளாக இன்றளவும் ஒளி விட்டு பிரகாசிக்கும் படி அன்பர்கள் பாதுகாக்கிறார்கள்.

வள்ளல் பெருமான் அன்பர்களிடம் மண் அகல்விளக்கு ஏற்றி அது அணையாமல் இருக்க *தகர கண்ணாடி கூண்டு* உள் வைத்து வழிபடக் கூறியருளினார்!   
**********************
_தங்க முனையிட்ட கை அலுமினியம் போல்தான் (4)_

_தங்க முனையிட்ட_
= *த[ங்க] = த*

_கை_ = *கரம்*

_அலுமினியம் போல்தான்_
= *த+கரம்*
= *தகரம்*
**********************
_சத்யா ஞான சபையின் சிறு வடிவமே தகர கண்ணாடி விளக்கு!!_
தகர கண்ணாடி விளக்கின் உள்ளே விளக்கு இருக்கிறது! நாம் வெளியே பார்க்கிறோம் தெரிகிறது! ஏன்? கண்ணாடிகூண்டு அதனால் தானே?
திரை போட்டோ, மரக் கதவோ மறைந்திருந்தால் உள்ளே உள்ள ஜோதி தெரியாதுயல்லவா?! இதையும் வள்ளலார் நமக்கு ஞானம் விளங்கவே விளக்கவே அமைத்து வழிபடச்சொன்னார்! எப்படி? இந்த கண்ணாடி கூண்டு விளக்கு தான் நம் கண் அமைப்பு! நம் சிர நடு உள் ஆத்ம ஜோதி உள்ளது 
உள் உள்ள அகல்விளக்கு போல! வெளியே தெரிவது கண்ணாடி வழியாக! இது தான் ஞான ரகசியம்!!?
நம் கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரம் உள்ளது அது கண்ணாடி போன்ற மெல்லிய ஜவ்வால் மூடி இருக்கிறது. தகர கூண்டு விளக்கை தூண்ட கண்ணாடிகதவை திறந்து தூண்டனும். அதுபோல நம் உள் உள்ள ஜோதியை தூண்ட கண்ணை மூடிஇருக்கும் மெல்லிய ஜவ்வை திறக்க வேண்டும்
இதுவே எழு திரை என்றும் மும்மலம் என்று வழங்கப்படுகிறது. 

_நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் கண் ஒளி பெருகும் கண்மணி திறக்கும் ஒளி உள்புகும் ஆத்ம ஜோதி ஒளிரும்!_

ஆஹா எப்படிப்பட்ட அற்புத விளக்கம் இது தெரியுமா? வள்ளல் பெருமான் என் உள் இருந்து உரைப்பது! இதுவே ஞான நிலை! 
**********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************
[8/26, 07:00] மீ.கண்ணண்.: தகரம்

[8/26, 07:00] Ramarao திரைக்கதம்பம்: தகரம்

[8/26, 07:00] sathish: தகரம்

[8/26, 07:01] V N Krishnan.: தகரம்

[8/26, 07:01] akila sridharan: தகரம்

[8/26, 07:03] Dhayanandan: தகரம்

[8/26, 07:04] prasath venugopal: தகரம்

[8/26, 07:08] Dr. Ramakrishna Easwaran: *தகரம்*

[8/26, 07:10] Suba: Hello sir, தகரம்

[8/26, 07:12] chithanandam: தகரம்

[8/26, 07:32] sankara subramaiam: தகரம்

[8/26, 07:15] Meenakshi: விடை:தகரம்

[8/26, 07:15] siddhan submn: தகரம்

[8/26, 07:21] A D வேதாந்தம்: விடை= தகரம்/ வேதாந்தம்

[8/26, 07:21]கி.பா ----------தகரம்

[8/26, 07:25] Ramki Krishnan: Thakaram

[8/26, 07:32] Srikrupa: தகரம்

[8/26, 07:32] ஆர். நாராயணன்.: தகரம்

[8/26, 07:32] sankara subramaiam: தகரம்

[8/26, 07:38] balakrishnan: தகரம்🙏👌🤣

[8/26, 07:49] பாலூ மீ.: தகரம்.

[8/26, 07:51] Bharathi: தகரம்

[8/26, 07:58] குன்னூர் லக்ஷ்மிமணியன்: தகரம்.
லக்ஷ்மி மணியன்.குன்னூர்.

[8/26, 08:07] வானதி: தகரம்

[8/26, 08:07] nagarajan: *தகரம்*

[8/26, 08:44] கு.கனகசபாபதி, மும்பை: தகரம்

[8/26, 11:21] Viji - Kovai: 26.8.20 விடை: தகரம், த+கரம்

[8/26, 13:41] மாலதி: விடை: தகரம்

[8/26, 16:33] balagopal: தங்க முனை. த
கை.கரம்.தகரம்.

[8/26, 16:49] Sucharithra: தகரம்

[8/26, 19:04] Venkat UV: தகரம்🙏🏽


***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 27-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

திண்டாடிச் சிக்கித் துன்புற்ற உதவித் தலைமையாசிரியை (4)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_என் விழி தீண்டலில் *திண்டாடி* நிற்கும்_
_உன் மௌன மொழி உரைகாமல்   உரைகின்றது_ 
_என்மீதான உன் காதலை._

_ஒரு கணம் என் காதல் உரைத்து_
_உன் வளைக்கரம் பற்றி என் விரல்களுக்குள்_ 
_புதைத்து கொள்ள  விரும்புகிறேன்_

(முத்துலெட்சுமி சுப்பிரமணியன் - )
**********************
_ஹேய் காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற ஹேய் சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்குற_

_என்னாடி விட்டுபுட்டா ரொம்ப பேசுற கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற_

*_திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குறேன்…_*
_அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி_
(Movie: Maayavi)
**********************
_திண்டாடிச் சிக்கித் துன்புற்ற உதவித் தலைமையாசிரியை (4)_

*விடை புதிரில் மறைந்துள்ளது!!*

_சிக்கித் துன்புற்ற_
= indicator for answer inside உதவித் தலைமையாசிரியை
= _(உ) **தவித்த* (லைமையாசிரியை)_
= *தவித்த*

= _திண்டாடி_
**********************
*திருக்குற்றாலக் குறவஞ்சி* 
_சிங்கனின் மகிழ்ச்சி_

திரிகூடமலை, இது திருக்குற்றால நாதருடைய மலை. திருக்குற்றால நாதர் தேவாரம் பாடித் தொண்டு புரிந்த சுந்தரரின் நண்பர். இத்தகைய திரிகூட நாதரின் திருக்குற்றால மலையில் சிங்கன் சிங்கியைக் காண்கிறான். கண்டு மகிழ்கின்றான். அவன் மகிழ்ச்சி எப்படி உள்ளது. தேனை உண்டு மயக்கம் கொண்ட வண்டைப் போல் சிங்கியைப் பாராட்டிக் கூத்து ஆடுகின்றான்.

சிங்கன் தன் மனைவி சிங்கியைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றான். சிங்கன் மகிழ்ச்சி அடைந்ததைக் காட்டும் பாடல் இதோ.

_தொண்டாடும் சுந்தரர்க்குத் தோழர்_ _திரிகூட வெற்பில் *திண்டாடி* நின்ற சிங்கன் சீராடும்_

_சிங்கிதனைக் கண்டு ஆடித் துள்ளாடிக் கள் ஆடும்தும்பியைப் போல்_

_கொண்டாடிக் கொண்டாடிக் கூத்து ஆடிக்கொண்டானே_

(பாடல் 124)

(தொண்டாடும் 
= தொண்டு புரிந்த; 
*திண்டாடி நின்ற* 
*= தவித்து* நின்ற; துள்ளாடி 
= துள்ளிக் குதித்து; 
கள் = தேன்; 
ஆடும் 
= ஆடுகின்ற; 
தும்பி 
= வண்டு; 
கொண்டாடி = பாராட்டி)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/27, 07:00] Ramarao திரைக்கதம்பம்: தவித்த

[8/27, 07:02] V N Krishnan.: தவித்த

[8/27, 07:06] siddhan submn: தவித்த

[8/27, 07:08] பாலூ மீ.:
திண்டாடி = உ தவித்த லைமையாசிரியை
விடை தவித்த.

[8/27, 07:08] prasath venugopal: தவித்த

[8/27, 07:12] Srikrupa: தவித்த

[8/27, 07:13] வானதி: தவித்த

[8/27, 07:14] akila sridharan: தவித்த

[8/27, 07:17] Meenakshi: விடை:தவித்த

[8/27, 07:21] sankara subramaiam: தவித்த

[8/27, 07:29] balakrishnan: தவித்து🙏

[8/27, 07:34] Viji - Kovai: 27.8.20விடை
தவித்த

[8/27, 07:35] Ramki Krishnan: Thaviththa (hidden word)

[8/27, 07:39] A D வேதாந்தம்: விடை= தவித்த/ வேதாந்தம்

[8/27, 07:46] மீ.கண்ணண்.: தவித்த

[8/27, 07:51] கு.கனகசபாபதி, மும்பை: தவித்த

[8/27, 07:56] ஆர். நாராயணன்.: தவித்த

[8/27, 08:02] மாலதி: தவித்த

[8/27, 08:07] nagarajan: *தவித்த*

[8/27, 08:13] பானுமதி: தவித்த

[8/27, 08:23]கி.பா ----------தவித்த

[8/27, 08:36] N T Nathan: தவித்த

[8/27, 08:50] Bharathi: தவித்த

[8/27, 11:34] Dhayanandan: தவித்த

[8/27, 15:15] balagopal: தவித்து.

[8/27, 15:41] Dr. Ramakrishna Easwaran: *தவித்த*
Telescopic
உ தவித்த லைமை....

***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 28-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
உள்ளே தோண்டி வெயிலுக்குப் பாதுகாப்பு மருந்து தொடங்கவில்லை (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*
( 28-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_உள்ளே தோண்டி வெயிலுக்குப் பாதுகாப்பு மருந்து தொடங்கவில்லை (4)_

_வெயிலுக்குப் பாதுகாப்பு_
= *குடை*

_மருந்து தொடங்கவில்லை_
= *[மரு]ந்து = ந்து*

( _தொடங்கவில்லை_ is indicator to denote the omission of beginning letters in this word. Asy the answer is 4 letters and already we have 2 letters in *குடை* and we remove the first two letters, to have *ந்து)*

_உள்ளே தோண்டி_
= *குடை+ந்து*
= *குடைந்து*
**********************
*திருப்பாவை - பாடல் 13*
*குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*

_புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்_
_கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்_ _போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்_
_வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று_
_புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்_
*_குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே_*
_பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்_
_கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்_

*விளக்கம்*

இந்த பாடலில் குறிப்பிடப்படும் சிறுமி அழகான கண்களை உடையவள் போலும். தனது கண்களின் அழகில் மயங்கி கண்ணன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் திளைக்கும் இந்தச் சிறுமி, படுக்கையில் கிடந்தவாறே, வெளியில் இருந்த சிறுமிகளை நோக்கி, நீங்கள் அனைவரும் கண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றீர்கள், தன்னைத் தேடி கண்ணன் வருவான் என்று இறுமாப்புடன் இருக்கும் இவளுக்கு, கண்ணனை விடவும் இராமபிரான் உயர்ந்தவராக தோன்றினார் போலும். அதனால்தான் கண்ணனைப் பாடும் நீங்கள் இராமபிரானைப் புகழ்ந்து பாடவில்லையா என்று வினவினாள் போலும். அதற்கு விடை கூறும் முகமாக, வெளியே இருந்தவர்கள் நாங்கள் கண்ணனைப் புகழ்ந்தும் பாடினோம். இராமபிரானைப் புகழ்ந்தும் பாடினோம் என்று அளித்த பதிலுடன் இந்த பாடல் தொடங்குகின்றது. இந்த பாடல் மூலம் இராமபிரானே கண்ணனாக அவதரித்தவன் என்பது உணர்த்தப்படுகின்றது.

*பொழிப்புரை*

பறவையின் உருவம் எடுத்து வந்த பகாசுரனின் வாயினைக் கிழித்து அவனை அழித்தவனும், பொல்லாத அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் அறுத்து எறிந்தவனும் ஆகிய நாராயணனின் கீர்த்திகளை பாடியவாறு, சிறுமிகள் பலரும் பாவை நோன்பு நோற்கப்படும் இடத்தில் குழுமி உள்ளார்கள். வானில் விடியலில் தோன்றும் சுக்கிரன் தோன்றி உச்சிக்கு வந்து விட்டது, அதன் முன்னர் இருந்த வியாழம் மறைந்துவிட்டது;

பறவைகள் தாங்கள் இரை தேடிச் சென்ற இடங்களில் செய்யும் ஆரவாரங்கள் எங்களுக்கு கேட்கின்றன; குவளை மலர் போன்று அழகிய கண்களை உடைய பெண்ணே, கண்ணனோடு சேர்ந்து இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நோன்பு நோற்கப்படும் இந்த நல்ல நாளில், உடலும் உள்ளமும் குளிர்ந்து சுனையில் முழுகி நீராடாமல் படுக்கையில் கிடந்தது புரளுதல் தகுமா. படுக்கையில் படுத்துக் கொண்டு, தனியாக கண்ணனைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து கிடக்கும் உனது கள்ளத்தனத்தை விட்டொழித்து, எங்களுடன் வந்து கலந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவாயாக. நாம் அனைவரும் சேர்ந்து கண்ணனின் புகழினைப் பாடலாம்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/28, 07:00] Ramarao திரைக்கதம்பம்: குடைந்து

[8/28, 07:03] akila sridharan: குடைந்து

[8/28, 07:21] stat senthil: குடைந்து

[8/28, 07:22] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:குடைந்து ..
[
[8/28, 07:26] A D வேதாந்தம்: விடை= குடைந்து/ வேதாந்தம்

[8/28, 07:31] chithanandam: குடைந்து

[8/28, 07:46] nagarajan: *குடைந்து*

[8/28, 07:49] பாலூ மீ.: வெயிலுக்கு பாதுகாப்பு = குடை + (மரு) ந்து குடைந்து.

[8/28, 07:56] வானதி: குடைந்து

[8/28, 07:56] Srikrupa: குடைந்து

[8/28, 08:03]கி.பா ---- குடைந்து

[8/28, 08:07] Ramki Krishnan: Kudainthu

[8/28, 08:09] Viji - Kovai: 28.8.20விடை
குடைந்து

[8/28, 08:21] Sucharithra: குடைந்து

[8/28, 08:42] கு.கனகசபாபதி, மும்பை: குடைந்து

[8/28, 08:52] sankara subramaiam: குடைந்து

[8/28, 09:03] Meenakshi: விடை: குடைந்து.

[8/28, 08:57] Dr. Ramakrishna Easwaran: *குடைந்து*

[8/28, 09:09] V N Krishnan.: குடைந்து!
[
[8/28, 09:31] balakrishnan: KUDAINDHU. 🙏

[8/28, 09:38] ஆர். நாராயணன்.: குடைந்து
[
[8/28, 07:31] chithanandam: குடைந்து

8/28, 18:13] Venkat UV: குடைந்து
🙏🏽
[
[8/28, 18:27] ஆர்.பத்மா: குடைந்து- ஆர்.பத்மா


***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 29-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
அங்காடிக் கதவிருக்கும் அடிமட்டம் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 29-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மனிதர்களுக்கு முதன்மை மீது ஒரு தீராத பற்றும்,கடைசி என்ற *கடைநிலை* மீது ஒரு வெறுப்பும்,பயமும் உள்ளது
தான்,தன்னை சார்ந்த ஆட்கள்,தான் விரும்பும் விஷயம் என அனைத்தும் முதலில் இருக்கவேண்டும் என்று நினைப்பது ஒருவித obsession. நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை.யாரோ ஒருவர் கடைநிலையில் இருந்தாக வேண்டும் என்பதே இயற்கையின் விதி,அதை தவிர்க்க போராடுவதே மனிதனின் வாழ்க்கை.
**********************
*கடைநிலை* , 
பெயர்ச்சொல்.

புறவாயில்
முடிவு
ஈற்றெழுத்து , விகுதி
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
ஒரு புறத்துறை , சான்றோர் தம் வரவினைத் தலைவனுக்கு உணர்த்துமாறு வாயிற்காவலற்குக் கூறுவது
**********************
_அங்காடிக் கதவிருக்கும் அடிமட்டம் (4)_

_அங்காடி_ = *கடை*
_கதவு_ = *நிலை*

_அங்காடிக் கதவிருக்கும்_
= *கடை+நிலை*
= *கடைநிலை*
= _அடிமட்டம்_
**********************
புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில்   *கடைநிலை* என்பதும் ஒன்று. இது பாடாண் திணையின் துறை.
_கடைநிலையைத் தொல்காப்பியம் நெடுந்தொலைவிலிருந்து வரும் வருத்தம் நீங்க அரசனுக்கு எடுத்துரைக்குமாறு வாயில் காவலனை வேண்டுவது எனக் குறிப்பிடுகிறது._ 
**********************
*புறநானூறு - 392.* _அமிழ்தம் அன்ன கரும்பு!_

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண்.
*துறை: கடைநிலை.*

*பாடல்*
மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான்
பசலை நிலவின் பனிபடு விடியல்,
பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ, 5
உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து,
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து,
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்,
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி,
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் 10
வைகல் உழவ! வாழிய பெரிது எனச்
சென்றுயான் நின்றனெ னாக, அன்றே,
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் 15
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன 20
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

*விளக்கம்*
அதியர் குடி மன்னன் ஒருவன் வானத்து அமிழ்தம் போன்ற கரும்பைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிட்டான். எழினி அவன் மரபில் வந்தவன். எழினி, அதியர் குடியைச் சேர்ந்த மக்களின் அரசன். அவன் தன் கையில் வளைந்திருக்கும் பூண் அணிந்திருந்தான். முழுமதியம் போன்ற வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து ஆட்சி செலுத்தினான். பனி கொட்டிக்கொண்டிருந்த விடியற்கால வேளையில் இளநிலா ஒளியில் அவன் கோட்டை வாயிலில் நின்றுகொண்டு நான் என் ஒருகண் மாக்கிணையை முழக்கினேன். அச்சம் தரும் மன்னர் கோட்டைகளை அழித்து, குருதியால் ஈரம் பட்டுப் பேய்கள் திரியும் போர்க்களத்திலெல்லாம் வெள்ளை வாயை உடைய கழுதைகளை ஏரில் கட்டி உழுது வரகும் கொள்ளும் நாள்தோறும் விதைக்கும் உழவனே, நீ பெருவாழ்வு வாழவேண்டும் என்று அவன் புகழைப் பாடி வாழ்த்தினேன். கேணியில் மிதக்கும் பாணி ஓல் என் ஆடை அழுக்கேறிக் கிடந்தது. அதனைக் களைந்துவிட்டு, நுண்ணிய நூலாலான ஆடையை உடுத்திவிட்டான். பலநாள் கடுப்பேறிக் கிடந்த கள்ளை உண்ணத் தந்தான். கோள்மீன் போன்ற பொற்கிண்ணத்தில் தந்தான். உணவும் எதனை முன்னர் உண்ணவேண்டும், எதனைப் பின்னர் உண்ணவேண்டும் என்று உணவு உட்கொள்ளும் முறை [கோள்-முறை] அறிந்து வரிசையாக வழங்கினான். அரசனே [இறை] உடனிருந்து வழங்கினான்.
*********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/29, 07:05] பாலூ மீ.: கடைநிலை.

[8/29, 07:06] Ramarao திரைக்கதம்பம்: கடைநிலை

[8/29, 07:06] prasath venugopal: கடைநிலை

[8/29, 07:07] sankara subramaiam: கடைநிலை
[
[8/29, 07:09] V N Krishnan.: கடைநிலை

[8/29, 07:10] மீ.கண்ணண்.: கடைநிலை

[8/29, 07:12] akila sridharan: கடைநிலை

[8/29, 07:17] stat senthil: கடைநிலை

[8/29, 07:24] Meenakshi: இன்றையவிடை:கடைநிலை

[8/29, 07:26] chithanandam: கடைநிலை

[8/29, 07:28] Viji - Kovai: 29.8.20 விடை
கடைநிலை
[
[8/29, 07:29] A D வேதாந்தம்: விடை= கடைமடை/ வேதாந்தம்

[8/29, 07:52] ஆர். நாராயணன்.: கடைநிலை

[8/29, 08:09] nagarajan: *கடைநிலை*

[8/29, 09:29] Dr. Ramakrishna Easwaran: *கடைநிலை*
Clue type: Charade.
அங்காடி= *கடை*
கதவிருக்கும் (இடம்)= *நிலை*
Definition: அடிமட்டம்

Appreciation to the clue for its brevity and correctness of cryptic grammar!

[8/29, 09:44] கி.பா---------கடைநிலை

[8/29, 11:43] balakrishnan: கடைநிலை 🙏

[8/29, 15:17] N T Nathan: கடைநிலை

[8/29, 17:25] கு.கனகசபாபதி, மும்பை: கடைநிலை

************************
Vanchinathan said…
சுருக்கமான குறிப்பினைவிட‌ எனக்கு மிகவும் பிடித்தது முழுமையான வாக்கியமாக அமைந்த குறிப்புகளே. அதன் முழுமை எதையோ சொலதாக மாயத்தோற்றம் அளிக்கும். அதனால் இந்த அடிமட்டம் போன்ற குறிப்புகள் வாக்கியமாக அமையாததால் அதன் செயற்கைத் தன்மை வெளிப்படையாகத் தெரிந்து அதை எளிதாகத் தனித்தனியாகப் பார்த்து விடை கண்டுவிட முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது (தமிழோ ஆங்கிலமோ)

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்