Skip to main content

விடை 4100

இன்றைய வெடி: கணவரை இறுதியாகத் தழுவி மயங்கும் மனைவி கடுங்குளிர் காலத்தில் காணலாம் (5) அதற்கான விடை: பனித்திரை = பத்தினி + ரை; பத்தினி = மனைவி ரை = (கணவ)ரை நீங்களெல்லாம் ரசித்து இங்கே கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னமும் உங்கள் ஆர்வத்தைத் தூண்ட கோடைக்காலத்திலும் கண‌வனிடம் மயங்கும் மனைவி என்றா அல்லது மனைவியிடம் மயங்கும் கணவன் என்றா எப்படிப் புதிரமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்புதிருக்கு வெளிவந்த விடைகளை இங்கே காணலாம். (Please copy and paste the following address in your web browser) https://docs.google.com/spreadsheets/d/1vwN4vSLfQJoPgE8jlwSX5K2eSMwQviKR9uLAnbBNJ6Q/edit?usp=sharing

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
************************* *பனித்திரை* 1961 
ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 
முக்தா ஸ்ரீநிவாசன் 
இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் 
ஜெமினி கணேசன், 
பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தந்தை, இயக்குநர் கே.சுப்ரமணியம் முக்தா சகோதர்கள் இருவரையும் அழைத்து, ‘சொந்தப் படநிறுவனம் தொடங்கும்படி’ அறிவுறுத்த, 1960-ல் உதயமானது ‘முக்தா பிலிம்ஸ்’.

முதல் தயாரிப்பு அர்த்தபூர்வமாகவும் வெற்றிப் படமாகவும் பெண்களைக் கவரும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார் சீனிவாசன். இதற்காக அண்ணனின் அனுமதியுடன், மீனா குமாரி நடிப்பில் வெளியாகி வெள்ளி விழா நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘அர்தாங்கினி’ (Ardhangini) என்ற இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்க உரிமையை விலைக்கு வாங்கி வாந்தார். தமிழுக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதிய சீனிவாசன், *‘பனித்திரை’* என்று தலைப்பிட்டு 1.4.1960-ல் முக்தா பிலிம்ஸின் முதல் தயாரிப்பின் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
********************
_கணவரை இறுதியாகத் தழுவி மயங்கும் மனைவி கடுங்குளிர் காலத்தில் காணலாம் (5)_  

_கணவரை இறுதியாக_
= (கணவ) *ரை*

_மனைவி_
= *பத்தினி*

_தழுவி மயங்கும்_
= anagram indicator for
*பத்தினி+ ரை*

= *பனித்திரை*

_கடுங்குளிர் காலத்தில் காணலாம்_
= *பனித்திரை*
********************
*பனித்திரை!, மனத்திரை!*

_பனி, புகைமூட்டம் போல் மிக அடர்த்தியானது. அதன் ஊடாக எதனையும் தெளிவாக பார்க்க முடியாது. இதனையே *பனித்திரை* என்பர்._

ஆனால் அப்படிப்பட்ட குழம்பிய
பனித்திரையானது சூரியனின் ஒளி பட்ட மாத்திரத்தில் மாயமாய் மறைந்துவிடும்.

_சூரியனைக் கணட பனி தூர ஓடல்போல்_

_சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்_

_சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்_

_அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே_ !"

*பாம்பாட்டிச் சித்தர்*

அந்த மாயத்திரை போலவே பாச பந்தங்களினால் சூழப் பட்டு, அதனில் திளைத்து குழம்பியிருக்கும் நமது மன நிலையானது, பரிசுத்த வஸ்துவான மேலான
பரம் பொருளை மனதில் நிறுத்திய மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல், பொய்யான சிற்றின்பங்களை உணர்ந்து, அதன் மாயைகளில் இருந்து அகன்று தெளிவடையும் என்கிறார்.

இவ்வாறு பனித்திரையின் மாயையை நீக்கும் சூரியனைப் போல, நம் மனத்திரையின் மாயையை நீக்கும் பரம்பொருளின் பேரானந்த நிலை அகன்றுவிடாமல் தொடர்ந்து பற்றியிருப்போம் என்று ஆடு பாம்பே, என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
********************
💐🙏💐
Raghavan MK said…
நாளை முதல் மீண்டும்
தென்றல் வீசும்!
*****************
தென்றல் வரும்
சேதி வரும்
திருமணம்
பேசும் தூது வரும்
மஞ்சள்
வரும்
சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்
************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 17-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மரியாதை தராத நிலவு தக்கார் தேய்ந்து சிதைந்தது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-08-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்-2010)
**********************
_*தக்கார்* தகவிலர் என்பது அவரவர்_

_எச்சத்தால் காணப் படும்_

(அதிகாரம்:
நடுவுநிலைமை 
குறள் எண்:114) 

பொழிப்பு
(மு வரதராசன்):

_ நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்_
**********************
என்னை *மதிக்காதவர்களை*
நானும் மதிப்பதில்லை

அதற்கு நீங்கள் வைக்கும்
பெயர் *தலைக்கனம்* என்றால்

நான் வைக்கும் பெயர் *தன்மானம்* ..
**********************
_மரியாதை தராத நிலவு தக்கார் தேய்ந்து சிதைந்தது (5)_

_நிலவு_ = *மதி*

_தக்கார் தேய்ந்து_
= *தக்கா[ர்]*
= *தக்கா*

_சிதைந்தது_
= anagram indicator for *மதி + தக்கா*
= *மதிக்காத*

= _மரியாதை தராத_
**********************
*"மதியாதார் தலைவாசல் மிதியாதே"*

_மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று_
_மிதியாமை கோடி பெறும்;_


_உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்_
_உண்ணாமை கோடி பெறும்;_


_கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு_
_கூடுதல் கோடி பெறும்;_
_கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்_
_கோடாமை கோடி பெறும்_
*(ஒளவையார் தனிப் பாடல்:42)*

ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும் 
பாேது நாலு காேடி பாடல்களை பாட  வேண்டும் என்று கூறினார்.ஒரே நாளில்  நாலு காேடி 
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல் 
புலம்பிக் காெண்டிருந்தனர்.
அப்பாேது 
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம் என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம் 
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில் அந்த பாடலை பாடி, மேலும் இது அவ்வையார் 
எழுதிய பாடல் என்பதையும் 
கூறினர்.
இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

*இந்த பாடலின் விளக்கம்:*
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

**************
இப்பாடலின் முதல் வரிசை .

மதியாதர் 
தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள
மனிதருக்கு அவ்வை சாென்னது

 என்று 
கண்ணதாசன் பாடல் வரிகளிலும் பிரபலம்....
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************
[8/17, 07:00] Ramarao திரைக்கதம்பம்: மதிக்காத

[8/17, 07:05] மீ.கண்ணண்.: மதிக்காத

[8/17, 07:30] sathish: மதிக்காத

[8/17, 07:33] Meenakshi: மீண்டும் புதிராடும்களம் கண்டு மகிழ்ச்சி.
இன்றையவிடை: மதிக்காத

[8/17, 07:36] prasath venugopal: மதிக்காத

[8/17, 07:37] chithanandam: மதிக்காத

[8/17, 07:46] Srikrupa: Srikrupa
மதிக்காத
மதி + (தக்கா~ர்~) க்காத

[8/17, 07:53] Bharathi: மதிக்காத

[8/17, 08:00] Viji - Kovai: 17.8.20 விடை
மதிக்காத
நிலவு=மதி
தக்கார் தேய்ந்து தக்கா
சிதைந்து_க்காத
மரியாதை தராத _மதிக்காத

[8/17, 08:05] sankara subramaiam: மதிக்காத

[8/17, 08:09] V N Krishnan.: மதிக்காத
[
[8/17, 08:14] Ramki Krishnan: Mathikkaatha

[8/17, 08:26] ஆர். நாராயணன்.: மதிக்காத

[8/17, 08:53] Sucharithra: மதிக்காத

[8/17,08:56] பாலூ மீ.: மிக்க மகிழ்ச்சி.
இன்றைய புதிர் விடை
மதிக்காத.

[8/17, 09:44] nagarajan: *மதிக்காத*

[8/17, 10:28] கு.கனகசபாபதி, மும்பை: மதிக்காத

[8/17, 10:46] Dr. Ramakrishna Easwaran: *மதிக்காத*
_மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்_ -
உலகநாதர் எழுதிய உலகநீதி வரி
_மதியாதார்_ __முற்றம் மதித்தொரு_ _கால்சென்று_
_மிதியாமை கோடி_ __பெறும்_ ;
ஔவையார்- தனிப்பாடல்

[8/17, 17:43] akila sridharan: மதிக்காத

[8/17, 19:41] balakrishnan: மதிக்காத😇🙏
**************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 18-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
செழுமை சூழ்ந்த தெரு முனை உயர்ந்தோங்கும் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-08-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்-2010)
**********************
*நிலாவுக்கு நெருக்கமான கிராமம்*

 சருகுமேல்
சருகு மெத்திக் கிடக்கும் காட்டில்
சட்டெனக் கண்டெடுத்த தங்கக் காசாய்
முழுநிலா மிளிரும்.
 
கண்ணுக்குத் தெரியாத *உயர்ந்தோங்கிய*
ஒரு காட்டுமரத்தில் பூத்த
ஒரு தனிப்பூவாய் ஒளிரும்.
 
காட்டுக்கு வகிடெடுத்தது போல்
அருகிலுள்ள குக்கிராமத்திலிருந்து
ஒரு ஒற்றையடிப் பாதை செல்லும்.
 
சிகிச்சைக்கு ஒரு ’சீக்காளியைப்’
பக்கத்து ஊருக்கு
தூளியில் சுமந்து கொண்டு
ஓடும் மனிதர் நிழல்கள்
ஓடும் ஒற்றையடிப் பாதையில்.
 
காடும் நிலா விளக்கைக்
கூடத் தூக்கிக் கொண்டு
முன் விரையும்.
 
நிலாவின் வெளிச்சத்தில் மட்டுமே
இரவில் வெளிச்சமாகும்
நிலாவுக்கு நெருக்கமான கிராமம் அது!

(கு.அழகிரிசாமி)
*************************
_செழுமை சூழ்ந்த தெரு முனை உயர்ந்தோங்கும் (4)_

_செழுமை_ = *வளம்*

_தெரு முனை_
= *( தெ)ரு = ரு*

_செழுமை சூழ்ந்த தெரு முனை_
= *வளம்* _சூழ்ந்த_ *ரு*
= *வளரும்*

= _உயர்ந்தோங்கும்_
**********************
*பகிர்தல்..!*

அன்பைப் பகிர்ந்தால் மனம் சிறக்கும்
அறிவைப் பகிர்ந்தால் மதி சிறக்கும்
இனபம்தன்னைப் பகிர்ந்திட்டால்
எல்லோர் வாழ்வும் நனிசிறக்கும்!

நல்ல பண்பைப் பகிர்ந்திட்டால்
நாட்டின் ஒழுக்கம் மிகச்சிறக்கும்
சொல்லைச் சுவையாய்ப் பகிர்ந்திட்டால்
சொந்தம் பந்தம் மிகச்சிறக்கும்!

_உண்மை நெஞ்சைப் பகிர்ந்திட்டால்_
_உலகில் வாய்மை *உயர்ந்தோங்கும்*_
_மென்மை உணர்வைப் பகிர்ந்திட்டால்_
_மேதினி அமைதி *உயர்ந்தோங்கும்!*_

மனிதநேயம் பகிர்ந்திட்டால்
மண்ணில் நிலவும் சமாதானம்
புனித கருணை பகிர்ந்திட்டால்
புவியில் என்றும் ஆனந்தம்!
(கே.பி.பத்மநாபன்)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************
[8/18, 07:01] Ramarao திரைக்கதம்பம்: வளரும்

[8/18, 07:04] V N Krishnan.: வளரும்

[8/18, 07:04] sankara subramaiam: வளரும்

[8/18, 07:05] sathish: வளரும்

[8/18, 07:07] N T Nathan: வளரும்

[8/18, 07:07] மீ.கண்ணண்.: வளம்+ரு—->வளரும்

[8/18, 07:10] akila sridharan: வளரும்

[8/18, 07:30] KB: கி.பா
வளரும்

[8/18, 07:33] prasath venugopal: வளரும்

[8/18, 07:42] உஷா, கோவை: வளரும்

[8/18, 07:43] Ramki Krishnan: VaLarum
VaLam around ru

[8/18, 07:47] chithanandam: வளரும்

[8/18, 07:48] Viji - Kovai: 18.8.20 விடை
வளரும்
செழுமை_வளம்
தெருமுனை_ரு
செழுமை சூழ்ந்த
வள ரு ம்
வளரும்

[8/18, 07:48] Dhayanandan: வளரும்

[8/18, 07:49] nagarajan: *வளரும்*

[8/18, 07:51] Venkat UV: வளரும் .
நலமும் பொலிவும் வளமும் வளரும் நல்விழைவுகளுடன் 🙏🏽

[8/18, 08:15] Bharathi: வளரும்

[8/18, 08:16] ஆர். நாராயணன்.: வளரும்

[8/18, 08:19] Meenakshi: விடை. வளரும்

[8/18, 09:10] Dr. Ramakrishna Easwaran: *வளரும்*
தெரு முனை= ரு
செழுமை= வளம்
வள(ரு) ம்
சூழ்ந்த= containment indicator
உயர்ந்தோங்கும்= definition

IMHO, it should have been தெரு முனையைச் சூழ்ந்த செழுமை for a 'container' type of clue to work. Actually, the clue, as is given, requires 'insertion' of 'ரு' into a synonym of செழுமை. சூழ்ந்த is not a happy choice as an insertion indicator. செழுமையில் நுழைந்த தெரு முனை ..... would work to indicate insertion

[8/18, 09:18] balakrishnan: 🙏. வளரும் 🤣🙏

[8/18, 10:53] வானதி: வளரும்
வளம் +ரு

[8/18, 10:58] Sucharithra: வளரும்

[8/18, 13:00] கு.கனகசபாபதி, மும்பை: வளரும்

[8/18, 18:36] பாலூ மீ.: வளம் + ரு = வளரும்.

*************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 19-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
கேட்டுப் பெற்ற நடுக்கடல் ஆயுதம் பிளக்கும் (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-08-20)
From *Vanchinathan's* archive-(தென்றல்-2010)
**********************
நின்னுக் *கோரி* வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

படம் : அக்னி நட்சத்திரம்
**********************
_கேட்டுப் பெற்ற நடுக்கடல் ஆயுதம் பிளக்கும் (3)__

_கேட்டு_ = *கோரி*

_நடுக்கடல்_
= *(க)ட(ல்) = ட*

_பெற்ற_ = anagram indicator for *கோரி+ட*
= *கோடரி*

= _ஆயுதம் பிளக்கும்_
= _பிளக்கும் ஆயுதம்_
= *கோடரி*
**********
[அரி = அறு.
கோடு ( கிளை ) + அரி
= கோடரி - கோடாரி - கோடாலி.]
**********************
*கோடரி – விறகு அடுப்புடன் ஒன்றிப் பிணைந்தது*

பன்நெடுங்காலமாக நம்மால் பயன்படுத்தப்படும் *கோடரி* பல்வேறு மாற்றுப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. அதாவது “கோடாலி”, “கோடாரி” என்பனவே. மரத்தை வெட்டுவதற்கு அல்லது பிளப்பதற்கு பயன்படும் கோடரி ஆரம்ப காலங்களின் யுத்தங்களின் போது ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரான வெட்டும் பகுதியையும் கொண்டது. கைப்பிடி மரத்தில் செதுக்கப்பட்டதாக இருக்கும் கூரான வெட்டும் பகுதி உலோகத்தால் ஆக்கப்பட்டது. 

தற்போதும் கிராமப்புறங்களில் விறகு பாவனை அதிகமாக உள்ளது. ஒவ்வோர் வீட்டிலும் கோடரி காணப்படும். தமக்கு தேவையான விறகை கொத்துவதற்கு அல்லது பிளப்பதற்கு கோடரி பாவிக்கப்படும். அடுப்பில் வைக்கக்கூடிய அளவில் ஒரு சீராக பிளக்கப்படும்.

இதைப்போல சிறிய அளவில் விறகை வெட்டுவதற்கு கைக் கோடரி பயன்பட்டது. இரு சிறிய அலகும் குறுகிய பிடியுடனும் அமைந்திருக்கும். நீண்ட மரக்குற்றியை ஒரு சீராக நேர்கோட்டில் பிளப்பதற்கு நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே முடியும். பிளக்கும் போது சில தடவைகள் நிலத்திலுள்ள கல்லில் பட்டு அலகின் முனை உடைவது அல்லது நெளிவதும் உண்டு. எது எவ்வாறாயினும் கோடரி என்றும் நம் வாழ்வில் ஒன்றிப் பிணைந்த ஒரு உபகரணமே.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/19, 07:00] Ramarao திரைக்கதம்பம்: கோடரி

[8/19, 07:01] மீ.கண்ணண்.: கோடரி

[8/19, 07:03] sathish: கோடரி

[8/19, 07:05] chithanandam: கோடரி?

[8/19, 07:06] sankara subramaiam: கோடரி

[8/19, 07:06] akila sridharan: கோடரி

[8/19, 07:07] Meenakshi: விடை:கோடரி.

[8/19, 07:14] ஆர். நாராயணன்.: கோடரி

[8/19, 07:20] stat senthil: கோடரி

[8/19, 07:26] prasath venugopal: கடன்

[8/19, 07:39] A D வேதாந்தம்: விடை=கோடரி/ வேதாந்தம்.

[8/19, 07:46] nagarajan: *கோடரி*

[8/19, 08:22] கு.கனகசபாபதி, மும்பை: கோடரி

[8/19, 08:59] Dhayanandan: கோடரி

[8/19, 08:59] balakrishnan: 🙏 வாழ்க வளமுடன்! கோடரி
👌🤣

[8/19, 09:09] கி.பா கோடரி
[
[8/19, 09:24] Dr. Ramakrishna Easwaran: *கோடரி*
நடுக்கடல்= கடல் என்ற சொல்லின் நடு எழுத்து, 'ட'
கேட்டு= கோரி
பெற்று= insertion indicator
பிளக்கும் ஆயுதம்= definition

[8/19, 10:42] பானுமதி: கோடரி

[8/19, 11:11] வானதி: கோடரி
கேட்டு பெற்ற =கோரி
கடல் நடுவே ட

[8/19, 12:15] siddhan submn: கோடாரி

[8/19, 16:17] லக்ஷ்மிமணியன் குன்னூர் : விடை.கோடரி.

[8/19, 18:44] ஆர்.பத்மா: கோடரி - ஆர்.பத்மா

[8/19, 20:10] Viji - Kovai: 19.8.20 விடை தாக்க
***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 20-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
இளைஞன் வான் சென்று உருக்குலைந்து பலி (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Muthu said…
This comment has been removed by the author.
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 20-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
உன் பார்வையில் 
*உருக்குலைந்து* 
போனேன் நான் ,…!!! 
உயிர் உள்ளவரை -என் 
உயிர் காதலி நீ ,...!!! 
மூச்சு காற்றில் உள்ளது 
என் உயிர் வாழ்க்கை ,,,!!
**********************
*உருக்குலைந்து அழகிழந்து*

ஒரு நாளும் ஓய்வின்றி ஓடிய நதியெல்லாம் 
*உருக்குலைந்து* அழகிழந்து ஆனது பாவம் 
செறுக்கு பெற்ற மனித குலம் செய்த தவறால் 
சேறும் சகதியும் மீனும் தவளையும் அழிந்தது மிச்சம் 
மனிதன் பார்வையிட்ட இடமெல்லாம் பாலையாய் மாற 
பகுத்தறிவு பெற்று மனிதன் வாழ்தல் சிறப்போ? 
அகில உயிரும் அழகு வாழ்க்கை பெற்றல் வேண்டும் 
ஆறு நீரால் அகமகிழ்ந்து ஓடல் வேண்டும். 
--- நன்னாடன்
**********************
*மெழுகுவத்தி*

_மெழுகை உடலாக்கி_ 
_திரியை உயிராக்கி_
_உலகிற்கு ஒளி கொடுக்க_ 
_உன்னையே அழித்துக் கொள்கிறாய்....._ 
_யாரை எண்ணி_ 
_நீ இப்படி உருகி_
_*உருக்குலைந்து* போகிறாய்??_ 
(தமிழ் முகில்)
**********************
_இளைஞன் வான் சென்று உருக்குலைந்து பலி (4)_

_உருக்குலைந்து பலி_
= _பலி_ *லிப*
_என உருக்குலைந்து_
= *லிப*

_வான் சென்று_
= _சென்று_ anagram indicator for *வான்+லிப*
= *வாலிபன்*

= _இளைஞன்_
**********************
*மறக்க முடியுமா? - உலகம் சுற்றும் வாலிபன்*

படம்: உலகம் சுற்றும் வாலிபன்
வெளியான ஆண்டு: 1973


எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்திற்கு, அப்போதைய ஆளும்கட்சியான, தி.மு.க., பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. அதை தகர்தெறிந்து, எம்.ஜி.ஆர்., வெற்றி வாகை சூடினார். 
**********************
*வாலிபன்*

சிக்னல் போட்டவுடன் வாலிபம் 
வருகிறது!

சாலையைக் கடக்கும் 
தாத்தாவுக்கு!😂😂
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/20, 07:00] Ramarao திரைக்கதம்பம்: வாலிபன்

[8/20, 07:00] மீ.கண்ணண்.: வாலிபன்

[8/20, 07:01] sathish: வாலிபன்

[8/20, 07:02] sankara subramaiam: வாலிபன்

[8/20, 07:03] V N Krishnan.: வாலிபன்!

[8/20, 07:04] akila sridharan: வாலிபன்

[8/20, 07:05] stat senthil: வாலிபன்

[8/20, 07:06] usha ( உ.வெ.): வாலிபன்

[8/20, 07:06] Meenakshi: விடை:வாலிபன்.

[8/20, 07:07] பாலூ மீ.: வாலிபன்

[8/20, 07:11] chithanandam: வாலிபன்

[8/20, 07:21] Venkat UV: வாலிபன் 🙏🏽

[8/20, 07:22] ஆர்.பத்மா: வாலிபன்

[8/20, 07:30] மாலதி: 🙏
வாலிபன் இன்றைய விடை

[8/20, 07:39] Srikrupa: வாலிபன்
வா (பலி —> லிப) ன்

[8/20, 07:39] prasath venugopal: வாலிபன்

[8/20, 07:41] குன்னூர் லக்ஷ்மிமணியன்: வாலிபன்

[8/20, 07:42] nagarajan: *வாலிபன்*

[8/20, 07:49] sridharan: வாலிபன்.

[8/20, 07:51] Ramki Krishnan: Vaaliban

[8/20, 07:55] ஆர். நாராயணன்.: வாலிபன்

[8/20, 07:56] Dr. Ramakrishna Easwaran: *வாலிபன்*

[8/20, 07:56] வானதி: வாலிபன்
வான் +பலி பிறழ்ந்து லிப

[8/20, 08:02] Viji - Kovai: 20.8.20 விடை
வாலிபன்

[8/20, 08:11] Dhayanandan: வாலிபன்

[8/20, 08:20] balakrishnan: 👌☝️ வாலிபன்

[8/20, 08:21] Bharathi: வாலிபன்

[8/20, 08:21] N T Nathan: வாலிபன்

[8/20, 08:49] KB: கி.பா வாலிபன்

[8/20, 08:58] பானுமதி: வாலிபன்

[8/20, 09:30] கு.கனகசபாபதி, மும்பை: வாலிபன்

[8/20, 15:19] balagopal: Sir,வாலிபன்.

[8/20, 15:29] A D வேதாந்தம்: விடை= வாலிபன்/ வேதாந்தம்
********************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 21-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
அருகில் குறைவாக நறுமணம் தரும் (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*அகில்*

திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது *அகில்* மரமாகும். இது *அகரு* மரம் என்றும் குறிக்கப்படுகின்றது. சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது; தமிழக மலைக்காடுகளில் தானே வளர்கின்றது. இதன் கட்டை மணமுடையது; சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கும்.
**********************
*நான்மணிக்கடிகை*

நல்ல மணமுள்ள அகில்கட்டை கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும். ஒளியுள்ள அரிதாரம் என்ற பொருள் மான் வயிற்றில் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலில் தோன்றும். அதுபோல் எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர் என்ற கருத்தில் அமைந்த, 

_கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்_
_மான்வயிற்றில்_ 
_ஒள்ளரி தாரம் பிறக்கும்_ _பெருங்கடலுள்_
_பல்விலைய முத்தம்_ _பிறக்கும் அறிவார்யார்_ 
_நல்லாள் பிறக்கும் குடி?_

(நான்.6)
என்னும் புகழ்பெற்ற பாடல் நான்மணிக்கடிகை எனும் இந்நூலில்தான் உள்ளது.
**********************
_அருகில் குறைவாக நறுமணம் தரும் (3)_

_அருகில் குறைவாக_
= *அருகில்* - _ஒரு எழுத்து குறைய வருவது_
= *அகில்*

= _நறுமணம் தரும்_
**********************
*கம்பராமாயணம்* பால காண்டம்/தாடகை வதைப் படலம்
***************
*_பாலை நிலத்தின் தன்மை_*
***************
_பேய் பிளந்து ஒக்க நின்று_ 
_உலர் பெருள் கள்ளியின்_
_தாய் பிளந்து உக்க கார்_
   _*அகில்களும்* தழை இலா_
_வேய் பிளந்து உக்க வெண்_
   _தரளமும். விட அரா_
_வாய் பிளந்து உக்க செம் மணியுமே._
   _வனம் எனலாம். 346._
 

பேய்  பிளந்து ஒக்க நின்று- பேயின் உடலைப் பிளந்ததை  ஒப்ப
நின்று;

 உலர்  பெருங்  கள்ளியின்  தாய் பிளந்து - உலர்ந்திருக்கும்
பெருங்கள்ளியின்   முதிர்ந்த  மரங்கள்  வெப்பத்தால் பிளவுப்பட்டுவிட;

உக்க  கார் *அகில்களும்* - அதிலிருந்து சிதறிய கரியநிறமுள்ள அகிற்
கட்டைகளும்;

 தழை இலாவேய் பிளந்து - தழைகளில்லாத மூங்கில்கள்
வெப்பத்தால்  பிளந்து  போய்; 

உக்க வெண் தரளமும் - அதிலிருந்து
சிதறிய  வெண்மையான  முத்துக்களும்;  

விட  அரா வாய் பிளந்து -
விடம்  உடைய  பாம்புகள் வேனில் வெப்பத்தால் வாய் பிளக்கப்பெற்று;

உக்க   செம்மணியுமே    -    அதிலிருந்து    சிதறிய   செவ்விய
ரத்தினங்களுமே; 

வனம் எலாம் - அப்பாலை வனமெல்லாம் நிறைந்து
கிடப்பனவாம்.
*******
கள்ளி  வயிற்றில்   அகில்  பிறக்கும்  -  நான்மணிக்கடிகை.. ஒக்க:
ஒத்திருக்க.   உலர்ந்த   பெரிய   கள்ளி   மரங்கள்  பேயின்   உடல்
பிளந்ததை  யொத்திருக்கிறதாம்.  காட்டில்  விரிந்து நிற்கும் கள்ளியைக்
கண்டவர்களுக்கு  இது   புலனாகும்.   முத்துப்  பிறக்கும்  இடங்களில்
மூங்கிலும்   ஒன்றென்பர்.   தரளம்:  முத்து செம்மணி: நாக மாணிக்கம் *அகில்கட்டைகளும்* .      முத்துக்களும்.     மணிகளும்    அப்பாலை
நிலமெங்கும் சிதறிக்
கிடக்கின்றனவாம்.         
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/21, 07:00] Ramarao திரைக்கதம்பம்: அகில்

[8/21, 07:02] V N Krishnan.: அகில்

[8/21, 07:02] Dr. Ramakrishna Easwaran: *அகில்*

[8/21, 07:06] usha ( உ.வெ.): அருகு

[8/21, 07:06] Meenakshi: விடை:அருகு

[8/21, 07:08] மீ.கண்ணண்.: வசம்

[8/21, 07:08] balagopal: Good morning sir.அகில்.

[8/21, 07:09] A D வேதாந்தம்: விடை= அகில்/ வேதாந்தம்

[8/21, 07:11] stat senthil: அகில்

[8/21, 07:16] akila sridharan: அகில்

[8/21, 07:21] sankara subramaiam: அகில்

[8/21, 07:22] prasath venugopal: அகில்

[8/21, 07:35] chithanandam: அகில்

[8/21, 07:37] ஆர். நாராயணன்.: அகில்

[8/21, 07:38] Srikrupa: வசம்
வாசம் குறைவாக
[
[8/21, 07:40] Bharathi: அகில்

[8/21, 07:50] sathish: அகில்

[8/21, 07:52] கு.கனகசபாபதி, மும்பை: அகில்

[8/21, 08:13] பானுமதி: அகில்

[8/21, 10:09] nagarajan: *அகில்*

[8/21, 10:21] வானதி: அகில்
அ. ~ரு~ கில்

[8/21, 10:33] balakrishnan: அகில்
வாழ்க வளமுடன்!🙏

[8/21, 12:37] shanthi narayanan: அகில்

[8/21, 13:22] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:அகில்.

[8/21, 17:35] siddhan submn: அகில் = அருகில் - ரு

[8/21, 18:29] Venkat UV: அகில் 🙏🏽

****************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 22-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
பின் புத்தி விலை அதிகம் என்றாலும் சுவை அலுக்காது (5)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 22-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*பெண் புத்தி பின் புத்தி*
பெண் புத்தி பின் புத்தி என்ற
பழமொழி ஏதோ பெண்மையை இழிவு படுத்துவதாக உள்ளதல்லவா?”

பழழொழி தவறில்லை நம்மவர்கள் விளங்கிவைத்திருப்பது தவறு..பெண்கள் எதிர்கால சிந்தனை திறன் மிக்கவர்கள். எனவே பெண்கள் சில முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் பிற்காலத்தில்..(பின்).. நடப்பதை பற்றி அதிககவனம் செலுத்துவார்கள்…
**********************
_பின் புத்தி விலை அதிகம் என்றாலும் சுவை அலுக்காது (5)_

_பின் புத்தி_
= *[புத்]தி = தி*

_விலை அதிகம்_
= *கட்டாது*

_சுவை அலுக்காது_
= *தி+கட்டாது*
= *திகட்டாது*
**********************
ஒளவையார் காக்கை பாடியனியார் போன்ற புலவர்கள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் போன்று ஒவ்வொரு பெண்ணும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான்.
ஒரு குடும்பத்தில் கணவனுக்கு மந்திரியைப் போல இருந்து ஆலோசனைகள் சொல்லி துன்பங்களிலிருந்து காப்பவள் இந்தப் பெண்.

எனவே தான், பெண் என்பவள் பின் வரும் நிலையை முன்கூட்டியே எடுத்துச் செல்லும் வலிமை பெற்றவள் இவள் என்ற பொருளை நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இந்தப் பழமொழி உண்டானது.

அதாவது பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்.

இதை உணர்த்தவே பெண்புத்தி பின்புத்தி என்று கூறி வைத்தனர்.

இதன் பொருள் நாளடைவில் மாறி மருவி விட்டது. 
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/22, 07:02] Ramarao திரைக்கதம்பம்: திகட்டாது

[8/22, 07:04] sathish: தித்திப்பு

[8/22, 07:04] akila sridharan: திகட்டாது

[8/22, 07:17] chithanandam: திகட்டாது

[8/22, 07:20] வானதி: திகட்டாது

[8/22, 07:20] பாலூ மீ.: தி+கட்டாது=திகட்டாது

[8/22, 07:45] Bharathi: திகட்டாது

[8/22, 07:54] Dr. Ramakrishna Easwaran: *திகட்டாது*

[8/22, 08:18] Dhayanandan: திகட்டாது

[8/22, 08:24] V N Krishnan.: திகட்டாது=சுவை அலுக்காது

[8/22, 08:25] ஆர். நாராயணன்.: திகட்டாது

[8/22, 08:29] Srikrupa: திகட்டாது

[8/22, 08:35] prasath venugopal: தித்திப்பு
பின் புத்தி - தி
விலை அதிகம் - மதிப்பு - ம

[8/22, 08:41] கு.கனகசபாபதி, மும்பை: திகட்டாது

[8/22, 10:28]KB:கி.பா -- திகட்டாது

[8/22, 11:45] nagarajan: *திகட்டாது*

[8/22, 11:53] siddhan submn: திகட்டாது

[8/22, 12:08] பானுமதி: திகட்டாது

[8/22, 14:06] shanthi narayanan: திகட்டாது

[8/22, 14:16] Viji - Kovai: 22.8.20 விடை
திகட்டாது
தி+கட்டாது

[8/22, 14:20] balakrishnan: திகட்டாது.🤣👌🙏

8/22, 15:10] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை: தித்திப்பு.

[8/22, 17:39] sankara subramaiam: திகட்டாது

[8/22, 20:11] மீ.கண்ணண்.: திகட்டாது
****************************
Raghavan MK said…
[8/22, 16:53] Meenakshi: இன்றையவிடை:
திகட்டாது.
[8/22, 21:03] Meenakshi: விடை பட்டியலில் என் பெயர் விடு பட்டிருக்கிறது!!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்