Skip to main content

விடை 4104

இன்று காலை வெளியான வெடி
தினமும் மணக்கும் தோள் துடிக்கப் புகும் (5)
அதற்கான விடை: நாள்தோறும் = நாறும் + தோள்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
**********************
A peek into today's riddle!
**********************
*தோள் கண்டேன் தோளே கண்டேன்*

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தனது இராமாயண மஹா காவியத்தில் ஸ்ரீ ராமனின் அழகை வர்ணிக்கும் விதமாக,

_தோள்கண்டார் தோளே கண்டார்_
_தொடுகழல் கமலம் அன்ன_
_தாள்கண்டார் தாளே கண்டார்_
_தடக்கை கண்டாரும் அஃதே_
_வாள்கொண்ட கண்ணார் யாரே_
_வடிவினை முடியக் கண்டார்_
_ஊழ்கொண்ட சமயத்து அன்னான்_
_உருவுகண் டாரை ஒத்தார்._

எனும் பாடல் மூலமாக அவன் மிதிலை நகர் வீதி வழியே நடந்து செல்கையில் அவன் அழகை அங்குள்ள மங்கையர் ரசித்ததை எடுத்துரைக்கிறார்.

ராமபிரானின் தோள்கள், கழல் எனும் ஆபரணத்தை அணிந்த தாமரை மலரையொத்த பாதங்கள், திடமான கைகள் என ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்த பெண்கள் அவ்வங்கத்தை விட்டுப் பார்வையை நீக்க விரும்பாத அளவு அதன் வனப்பால் ஈர்க்கப் பட்டதால் வேறோர் அங்கத்தைப் பார்க்கவில்லையாதலால் அவர்களுள் யாரும் ராமனின் முழு உருவத்தையும் ரசிக்க இயலாத நிலையிலிருந்தனராம்.

இவ்வாறு பெண்கள் ஒரு ஆடவனின் அழகை ரசித்தது போல் ஒரு ஆடவன் தன் மனம் கவர்ந்த பெண்ணொருத்தியின் அழகை ரசித்து மகிழும் சூழ்நிலைக்குத் தக்க பாடல் ஒன்றை இயற்ற வேண்டியிருந்த தருணத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைத்து, அவற்றின் சாற்றைப் பிழிந்து தனது பாடல்களில் அள்ளித்தந்த கவியரசர் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தியின் இப்பாடலை மனதில் கொண்டு இதே பாணியில் எழுதியதோர் இனிய பாடல்:

திரைப் படம்: இதயக் கமலம்

_தோள் கண்டேன் தோளே கண்டேன்_
_தோளிலிரு கிளிகள் கண்டேன்_
_வாள் கண்டேன் வாளே கண்டேன்_
_வட்டமிடும் விழிகள் கண்டேன்_

_கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்_
_எட்டாத நிலவு எட்டி வந்த போது எட்டி வந்த போது_

_தோள் கண்டேன் தோளே கண்டேன்_
*********************
_தினமும் மணக்கும் தோள் துடிக்கப் புகும் (5)_ 

_மணக்கும்_ = *நாறும்*

_தோள் துடிக்க_
= _தோள்-->_ *ள்தோ*

_புகும்_ = indicator to place *ள்தோ* inside *நாறும்*
= *நாள்தோறும்*

= _தினமும்_
**********************
பத்தாம் பத்து - நான்காம் திருவாய்மொழி - பாடல் 6
நம்மாழ்வார் அருளியது.
*****
_நாகத்து அணையானை *நாள்தோறும்* ஞானத்தால்_ 

_ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை_ 

_மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்_ 

_பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே_     

*பொருள்:*

ஆதிசேஷனாகிய நாகத்தைப் படுக்கையாகக் கொண்டவர் எம்பெருமான், அவரைத் தினந்தோறும் ஞானத்தால் உள்ளத்தில் வைத்து அனுபவிப்பவர்களுக்கு அருள்செய்கிற அம்மான், வானத்திலுள்ள பிறைச்சந்திரனைத் தன்னுடைய திருச்சடையிலே வைத்திருக்கும் சிவபெருமானைத் தன் திருமேனியின் ஒரு பகுதியாகக் கொண்டவர், அவருடைய திருவடிகளை நான் வணங்குகிறேன். 🙏
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தவறின்றி திருப்பித் திட்டு பொறி பின்வரும் (4)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*பொறி(* பெ)

தோல், கண்,   *காது* , மூக்கு, வாய்முதலியன (ஐம்பொறி)

வீட்டில் எலிகளைப் பிடிக்க உதவும் கூண்டு, எலிப்பொறி
**********************
_தவறின்றி திருப்பித் திட்டு பொறி பின்வரும் (4)_

_திட்டு_ = *சபி*
_திருப்பி_
= *சபி---> பிச*

_பொறி_ = *காது*
_பின்வரும்_ = indicator for placing *காது* after *பிச*
= *பிசகாது*
= _தவறின்றி_
**********************
_பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து_

_ஆள்வினை இன்மை பழி_
(அதிகாரம்:ஆள்வினையுடைமை 
குறள் எண்:618) 

உறுப்புக் குறை எவர்க்கும் குற்றமாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயலாமை குற்றம் என்பது பாடலின் பொருள்.

*பொறி' குறிப்பது என்ன?*

உடல் ஊனம் யார்க்கும் குற்றம் ஆகாது. அறியுமளவும் அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே குற்றமாகும்.

உடல் உறுப்புக் குறை ஒருவர்க்கு பழியன்று; உடலுரம் இருந்தும், அறிய வேண்டியனவற்றை அறிந்து செயல் செய்து ஆள்வினையின்றி அதாவது முயற்சி இல்லாமல் வாழ்வதே பழியாகும் என்கிறார் வள்ளுவர்.

பிறவியிலோ பின்னிலையிலோ உடல் ஊனமாகிவிட்டால் தம் நிலை எண்ணி, மனம் நோவாமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இக்குறள் அமைந்துள்ளது. இருக்கும் உறுப்புக்களைக் கொண்டு முயன்று முன்னேறாவிட்டால் அது பழியாகும் என்கிறது இப்பா. உயர்நிலை மட்டும் வற்புறுத்தி, உலகநிலை கூறாது விடுபவரல்லர் வள்ளுவர். உடல் ஊனம் மாந்தர் ஆற்றலுக்கு உட்படாச் செயல். உடற்குறையை மாந்தர் எவரும் பழியாகக் கொள்ளார். 
_உருவு கண்டு எள்ளாமை வேண்டும்..._ (குறள் 667 பொருள்: உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது....)
என அறிவுறுத்துபவர் வள்ளுவர்.

*'பொறி'* என்பது இங்கு உடல் உறுப்பு குறித்தது.

உடல் உறுப்புகளின் ஊனம் எவர்க்கும் குற்றமாகாது; அறிவினால் அறியப்படுவன அறிந்து முயற்சி செய்யாமையே குற்றம்.
*************************
Raghavan MK said…
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************
[9/14, 07:10] Ramarao திரைக்கதம்பம்: பிசகாது

[9/14, 07:16] V N Krishnan.: பிசகாது

[9/14, 07:38] Sucharithra: பிசகாது

[9/14, 07:42] Meenakshi: விடை:பிசகாது.

[9/14, 07:53] akila sridharan: பிசகாது.
திட்டு - சபி, பொறி - காது. திருப்பித் திட்டு - பிச. பிசகாது - தவறின்றி

[9/14, 07:55] மீ.கண்ணண்.: திரிப்பி திட்டு பிச பொறி காது விடை பிசகாது

[9/14, 07:57] வானதி: பிசகாது

[9/14, 08:09] N T Nathan: பிசகாது

[9/14, 08:12] siddhan submn: பிசகாது

[9/14, 08:28] Venkat UV: திருத்தி 🙏🏽

[9/14, 08:33] Srikrupa: பிசகாது

[9/14, 09:56] மாலதி: பிசகாது

[9/14, 10:16] ஆர். நாராயணன்.: பிசகாது

[9/14, 12:12] பானுமதி: பிசகாது

[9/14, 13:18] sridharan: பிசகாது

[9/14, 14:10] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:திருட்டு

[9/14, 14:20] கு.கனகசபாபதி, மும்பை: பிசகாது

[9/14, 15:08] nagarajan: *பிசகாது*

[9/14, 15:18] A D வேதாந்தம்: விடை= பிசகாது/ வேதாந்தம்

[9/14, 16:02] Viji - Kovai: 14.9.20 விடை
தீதின்றி

***********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
இடை பற்றி நீங்கிப் பிடுங்கு (2)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_குழுஉக்குறி_

ஒவ்வொரு கூட்டத்தார் யாதாயினும் ஒரு காரணம் பற்றி ஒரு சொற்குறியை ஒழித்து, அதனை வேறொரு சொற்குறியால் சொல்லி வந்தமையாலும் சொல்வழக்குகள் பெருகலாயின. இவ்வழக்குக்குக் குழுஉக்குறி' என்பது. பெயர். *_பொற்கொல்லர் பொன்னைப் பறி" என்றும்,* யானைப்பாகர் ஆடையைக் காரை' என்றும், வேடர் கள்ளைச் சொல் விளம்பி_ ’ என்றும் வழங்கும் இவை முதலானவை குழுஉக்குறி என்பர், நன்னூலார். ஆடை விற்பவர் வாங்குவோர்க்கு விளங்காமல் தம்முள் பேசும் சொற்களும் பலவாகும். இவ்வாறே ஒவ்வொரு குழுவின ரும் பிறர் உணராத வகையில் பேசும் சொற்கள் தேவை பற்றி உண்டான வையாகும்.
*********************
_பூக்களைப் பறிக்காதீர்கள்_

"பூக்களைப் பறிக்காதீர்கள்"
என்ற பலகையைக் காட்டி
நீ பறித்த பூவை
உன்னிடமிருந்து பறித்த
தோட்டக்காரனிடம் நான்
சொல்ல நினைத்தது ஒன்றுதான் 

"பூக்களைப் பிரிக்காதீர்கள்"

(நிலவை.பார்த்திபன்)
*********************
_இடை பற்றி நீங்கிப் பிடுங்கு (2)_
_இடை பற்றி_ = *ற்*
_நீங்கி_ = *பற்றி-ற்*
= *பறி*
= _பிடுங்கு_
**********************
நீ....பூக்களை பறிக்கும் போது...
உன் விரல்களை இலைகளின் மீது படாமல் பாரததுக் கொள் . ஏன் என்றால்...
உன் வீரல் பட்டால் இலைகளும் பூக்க ஆரமபித்து விடும் உன் மென்மையான பாசத்தைக் கண்டு....
**********************
நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் – 
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
– ப்ரியன்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************

[9/15, 07:00] Ramarao திரைக்கதம்பம்: பறி

[9/15, 07:01] A D வேதாந்தம்: விடை= பறி/ வேதாந்தம்

[9/15, 07:01] Sucharithra: பறி

[9/15, 07:01] sankara subramaiam: பறி

[9/15, 07:02] sathish: பறி

[9/15, 07:03] akila sridharan: பறி

[9/15, 07:04] Meenakshi: விடை: பறி.

[9/15, 07:06] பாலூ மீ.: விடை : பறி.

[9/15, 07:06] siddhan submn: பறி

[9/15, 07:13] V N Krishnan.: பறி

[9/15, 07:17] Viji - Kovai: 15.9.20 விடை
பறி
[9/15, 07:18] balakrishnan: பறி🙏
(நேற்று. காது கண்டேன் சபிக்கவில்லை. வடை போச்சே!☹️)

[9/15, 07:20] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:பறி.

[9/15, 07:29] Srikrupa: பறி
[
[9/15, 07:33] balagopal: Good morning sir.
விடை.பறி.

[9/15, 07:33] கு.கனகசபாபதி, மும்பை: பறி

[9/15, 07:36] nagarajan: *பறி*

[9/15, 07:37] வானதி: பறி

[9/15, 07:46] Venkat UV: பறி 🙏🏽

[9/15, 07:46]கி.பா ------
-- பறி

[9/15, 08:10] N T Nathan: பறி

[9/15, 08:20] ஆர். நாராயணன்.: பறி

[9/15, 08:20] மாலதி: பறி

[9/15, 08:51] sridharan: பறி.

[9/15, 10:07] கோவிந்தராஜன் korea: பறி

[9/15, 10:14] usha chennai :பறி

[9/15, 12:10] பானுமதி: பறி

[9/15, 12:51] மீ.கண்ணண்.: பறி

[9/15, 13:03] ஆர்.பத்மா: பறி

[9/15, 13:03] shanthi narayanan: பறி

***********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
நிச்சயம் இலங்கை நகரம் பின்னே குறையான கலிப்பா மாற்றியெழுதப்படும் (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_வெற்றி *நிச்சயம்* இது வேத சத்தியம்_
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

படம்:அண்ணாமலை
**********************
_நிச்சயம் இலங்கை நகரம் பின்னே குறையான கலிப்பா மாற்றியெழுதப்படும் (6)_

_இலங்கை நகரம்_
= *கண்டி*
_குறையான கலிப்பா_
= *கப்பா*
_மாற்றியெழுதப்படும்_
= *கப்பா ---> ப்பாக*
_இலங்கை நகரம் பின்னே_
= *கண்டி* பின்னே *ப்பாக*
= *கண்டிப்பாக*
= _நிச்சயம்_
**********************
தமிழ்ச் செய்யுள்கள் நான்கு வகைப்படும். அவை, வெண்பா, ஆசிரியப்பா, *கலிப்பா* , வஞ்சிப்பா ஆகியவை ஆகும்.
 
இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.
**********************
உன்னிடம் நீ இழந்த அனைத்தும் ஒரு நாள் உன் காலடி தேடி *நிச்சயம்* வந்தடையும் அதற்கு நீ செய்யும் ஒன்றே ஒன்று உன் நம்பிக்கையை இழக்காமல் இருந்தாலே போதும்.
(Manoj)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
விடையளித்தோர் பட்டியல்
**********************

[9/16, 07:00] Ramarao திரைக்கதம்பம்: கண்டிப்பாக


[9/16, 07:01] V N Krishnan.: கண்டிப்பாக

[9/16, 07:03]கி.பா ******* கண்டிப்பாக

[9/16, 07:04] bala: விடை: கண்டிப்பாக
- பாலா

[9/16, 07:04] மீ.கண்ணண்.: கண்டிப்பாக

[9/16, 07:04] balakrishnan: 🙏. கண்டிப்பாக

[9/16, 07:05] akila sridharan: கண்டிப்பாக

[9/16, 07:07] பாலூ மீ.: விடை கண்டி + ப்பா = கண்டிப்பா

[9/16, 07:11] A D வேதாந்தம்: விடை= கண்டிப்பாக/ வேதாந்தம்.

[9/16, 07:14] sankara subramaiam: கண்டிப்பாக

[9/16, 07:18] Meenakshi: இன்றையவிடை: கண்டிப்பாக

[9/16, 07:37] Venkat UV: கண்டிப்பாக 🙏🏽

[9/16, 07:39] prasath venugopal: கண்டிப்பாக
[9/15, 07:17] Viji - Kovai: 15.9.20 விடை
பறி
[9/16, 07:44] Viji - Kovai: 16.9.20 விடை
கண்டிப்பாக

[9/16, 07:48] sathish: கண்டிப்பாக

[9/16, 07:52] N T Nathan: கண்டிப்பாக

[9/16, 07:57] ஆர். நாராயணன்.: கண்டிப்பாக

[9/16, 08:17] கு.கனகசபாபதி, மும்பை: கண்டிப்பாக

[9/16, 08:23] nagarajan: *கண்டிப்பாக*

[9/16, 08:59] வானதி: கண்டிப்பாக

[9/16, 09:03] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கண்டிப்பாக

[9/16, 09:06] Srikrupa: கண்டிப்பாக

[9/16, 09:41] மாலதி: கண்டிப்பாக

[9/16, 10:34] ஆர்.பத்மா: கண்டிப்பாக

[9/16, 10:45] Bharathi: கண்டிப்பாக

[9/16, 14:56] shanthi narayanan: கண்டிப்பாக

[9/16, 15:16] sridharan: கண்டிப்பாக

[9/16, 15:54] Ramki Krishnan: கண்டி + (கலிப்பா - லி)*


[9/16, 16:41] balagopal: Good afternoon sir.விடை.கண்டிப்பாக..
இலங்கை நகரம்.கண்டி.
குறைந் கலிப்பா.கப்பா.
கண்டி+கப்பா.கண்டிப்பாக.
உறுதியாக.கண்டிப்பாக.

[9/16, 16:54] Sucharithra: கண்டிப்பாக


***********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
விறகடுப்பை நன்றாக எரியச் செய்ய குண்டாகு (2)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
எனக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து என் பள்ளிப் பருவம் வரை வீட்டில் விறகு அடுப்புதான். அப்போதெல்லாம் விறகுகளை வெட்டி, கட்டுகளாக்கி விற்பார்கள். விறகுகளில் சவுக்கு மரம்தான் நிதானமாக எரியும். அதனால் மரத்தொட்டிக்குச் (விறகுக் கடை) சென்று அதை வாங்கி வந்து, காய வைத்து, அடுக்கி வைத்துக் கொள்வோம்.

விறகு அடுப்பைப் பற்ற வைக்க ‘வரட்டி’ அல்லது ‘எருமுட்டி’ என்றழைக்கப்படும் ஒன்று தேவைப்படும். சாணியை உருட்டி, வைக்கோல் தூள் கலந்து, பின் சுவற்றில் தட்டி காய்ந்தபின் எடுத்து உலர்த்தி விற்பனை செய்வார்கள். ஒவ்வொரு வரட்டியும் இரு கை அளவுக்கு இருக்கும். அதை உடைத்து, அதில் சிறிது கெராசினை ஊற்றி பற்ற வைப்பார் அம்மா. அதற்குப் பிறகு அதில் இரு விறகுக் கட்டையை வைப்பார். நன்கு பற்றிக் கொண்ட பின் விறகு எரிய ஆரம்பிக்கும். அம்மா வெளியே சென்றிருக்கும் நேரத்தில் விறகை சற்று உள்ளேத் தள்ளி வைப்பது எங்கள் வேலையாக இருக்கும்.
🙂
**********************
_விறகடுப்பை நன்றாக எரியச் செய்ய குண்டாகு (2)_

_விறகடுப்பை நன்றாக எரியச் செய்ய_
= *ஊது*

_குண்டாகு_ = *ஊது*
**********************
*விறகு அடுப்பில்* சில நுணுக்கங்கள் உண்டு. ஈர விறகாக இருந்தால் எரியாது. சாதமோ, பாலோ பொங்கி வழிந்து விறகில் பட்டு விட்டாலும் எரியாது. அது போன்ற நேரங்களில் ஒரு பேப்பரை எடுத்து அடுப்புக்குள் விறகின் மேல் வைத்து, ஊதுகுழலால் விறகு பற்றிக் கொள்ளும் வரை ஊத வேண்டும். புகை கிளம்பி, நம் கண்களில் எரிச்சலெல்லாம் ஏற்படும். இது ஒரு கஷ்டமான, சிக்கலான வேலை.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
********
விடையளித்தோர் பட்டியல்
********

[9/17, 07:00] Ramarao திரைக்கதம்பம்: ஊது

[9/17, 07:00] மீ.கண்ணண்.: ஊது
[
[9/17, 07:01] V N Krishnan.: ஊது

[9/17, 07:03] பானுமதி: ஊது

[9/17, 07:03] N T Nathan: ஊது
.
[9/17, 07:05] A D வேதாந்தம்: விடை= ஊது/ வேதாந்தம்.

[9/17, 07:09] Srikrupa: ஊது

[9/17, 07:10] balakrishnan: ஊது. 🙏

[9/17, 07:13] ஆர். நாராயணன்.: ஊது

[9/17, 07:14] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:ஊது

[9/17, 07:20] Sucharithra: ஊது
[
[9/17, 07:20] akila sridharan: ஊது

[9/17, 07:23] Meenakshi: விடை:ஊது

[9/17, 07:24] Viji - Kovai: 17.9.20 விடை
ஊது

[9/17, 07:28] sankara subramaiam: ஊது

[9/17, 07:44] sridharan: ஊது

[9/17, 07:44] chithanandam: ஊது

[9/17, 08:02] பாலூ மீ.: ஊது.

[9/17, 08:04] வானதி: ஊது

[9/17, 08:10] கு.கனகசபாபதி, மும்பை: ஊது

[9/17, 08:11] கோவிந்தராஜன் korea: ஊது
[
[9/17, 08:33] nagarajan: *ஊது*

[9/17, 08:33] மாலதி: ஊது
[
[9/17, 08:42] ஆர்.பத்மா: ஊது

[9/17, 09:27] siddhan submn: ஊது

[9/17, 11:24] கி.பா ------
---ஊது

[9/17, 13:21] prasath venugopal: ஊது

[9/17, 13:24] shanthi narayanan: ஊது

[9/17, 14:05] Ramki Krishnan: ஊது (double definition)

[9/17, 15:35] Venkat UV: ஊது 🙏🏽

[9/17, 18:34] sathish: ஊது

[9/17, 19:38] balagopal:தென்றல்.
பரு.

****
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

திருக்குறளை ஆதிமுதல் அந்தம்வரை அனுபவி (2)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே_
_அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம்_

_நாம் காணும் உலகம் கையில் வராமல் வாலிபம் எதற்காக_
_இங்கு கடவுள் படைத்த கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக_
( _அழகிருக்குது_ )

_பசுமையான பார்வையோடு புதுமையான_
_பாவை ரெண்டு போகுதே_
_அருமையான நேரம் என்று இளமையான_
_காளை ரெண்டு ஏங்குதே_

_பார்வையை பார்த்து வைப்போமா_
_கேள்வியை கேட்டு வைப்போமா_
_தருவதை வாங்கிக் கொள்வோமா_
_(அழகிருக்குது)_

(படம்: *அனுபவி ராஜா அனுபவி* -1967)
**********************
*"அனுபவி"*

_என்ன ஒரு வார்த்தை!!!!?_

வாழ்வில் அனைத்து பாக்கியத்தையும் பெற்று நிம்மதியாக மகிழ்ச்சி பொங்க சுகமாக வாழ்பவனை *நல்லா "அனுபவிக்கிறான்"*
 என்று சொல்லுவோம்.

அதே போல, அடுத்த வேளை  உணவு கூட எப்போது எங்கே இருந்து வரும் என்று  தெரியாமல் நோய்வாய்ப்பட்டு செத்தால் போதும் என்று பரிதாபமாக இருப்பவனை கூட *நல்லா "அனுபவிக்கிறான்"* என்று தான் கூறுவோம்.

*அனுபவி..*

_ஒரு வார்த்தை எதிர் புதிரான அர்த்தங்கள்._
**********************
_திருக்குறளை ஆதிமுதல் அந்தம்வரை அனுபவி (2)_

_ஆதிமுதல் அந்தம்வரை_
= _முதலும் கடைசியும்_

_திருக்குறளை ஆதிமுதல் அந்தம்வரை_
= _*தி* [ருக்குற] *ளை*_
= *திளை*
= _அனுபவி_
**********************
ஒரு வரிக்
கவிதை அவள் !
உலா வரும்
உவகை அவள் !
தவிப்பில்
*திளைக்க* விடுபவள்!
சிலிர்ப்பில்
சிந்திக்க வைப்பவள்!
பார்வையில்
பாதிஉயிரை எடுப்பவள் !

(பிரியா)
**********************
மழையே நீ என்னுள் வந்து ஊடுருவி என்னை நனைப்பது ஒருபுறம் என்றால்  உன்னால் நான் கவிதை என்னும் தமிழ் வார்த்தைகளில் மூழ்கி *திளைத்து* மகிழ்ந்து நனைவது மறுபுறம்.

(By Jano )
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[9/18, 07:00] Ramarao திரைக்கதம்பம்: திளை

[9/18, 07:00] Sucharithra: திளை
[
[9/18, 07:01] balakrishnan: திளை👍🙏

[9/18, 07:04] chithanandam: திளை
🙏
[9/18, 07:06] akila sridharan: திளை

[9/18, 07:07] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:திளை.

[9/18, 07:08] Viji - Kovai: 18.9.20 விடை
திளை

[9/18, 07:09] stat senthil: திளை

[9/18, 07:11] பாலூ மீ.: தி(ருக்குற)ளை திளை. விடை

[9/18, 07:14] V N Krishnan.: திளை

[9/18, 07:15] ஆர். நாராயணன்.: திளை

[9/18, 07:16] Meenakshi: விடை:திளை

[9/18, 07:17] sathish: திளை

[9/18, 07:19] sankara subramaiam: திளை

[9/18, 07:20] A D வேதாந்தம்: விடை= திளை/ வேதாந்தம்

[9/18, 07:27] Venkat UV: திளை 🙏🏽

[9/18, 07:29] மீ.கண்ணண்.: திளை
9/18, 07:43] Srikrupa: திளை

[9/18, 07:44] Bharathi: திளை

[9/18, 07:45] sridharan: திளை

[9/18, 07:49] கு.கனகசபாபதி, மும்பை: திளை

[9/18, 08:02] வானதி: திளை

[9/18, 08:09] prasath venugopal: திளை
[
[9/18, 08:14] மாலதி: திளை

[9/18, 08:44] siddhan submn: திளை

[9/18, 08:52] Suba: Hello sir, திளை

[9/18, 08:52] N T Nathan: திளை

[9/18, 11:08] shanthi narayanan: திளை

[9/18, 11:18] பானுமதி: திளை

[9/18, 12:37] Ramki Krishnan: திளை from தி(ருக்குற)ளை

[9/18, 14:30]
கி.பா --------- திளை

[9/18, 20:28] nagarajan: *திளை*

********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

மாற்றாக, கணவன் தலையின்றிக் குலுக்கு (5)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சில திரைப்படங்கள் காலம்தோறும் மாறிவரும் மக்களின் ரசனையைத் துல்லியமாக கணித்து உருவாக்கப்பட்டவை. அவை ‘ட்ரென்ட் செட்டர்கள்’ என்ற முன்னோடிகளாக விலங்கி, திரையுலகில் புதிய போக்கையே உருவாக்கக்கூடியவை.

புராண நிகழ்வுகள், ராஜா ராணி கதைகள் மட்டுமே திரைப்படமாக எடுக்கப்பட்டு வந்த கால கட்டத்தில், வங்களா மொழியில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் இந்தி, தமிழ்,தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘தேவதாஸ்’அப்படிப்பட்ட ட்ரெண்ட் செட்டர்தான்.

தமிழ்த் திரை உலகை சினிமா தோன்றிய காலம் முதல் ஆட்சி செய்து வந்த புராண, பக்தி படங்களுக்கு *மாற்றாக,* சமூக அவலங்களைப் படமாக்க வெகுகாலம் வரை எவரும் துணியவில்லை. அத்தருணத்தில், சிவாஜி கணேசன் எனப் பின்னர் சரித்திரத்தில் இடம் பெற்ற வி.சி கணேசன் என்ற இளைஞனின் ஆவேச நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட சமூக கதையைப் படமாக்கிய ‘பராசக்தி’, தமிழ்த் திரை உலகின் ட்ரெண்ட் செட்டராக விளங்கி , சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை துணிவுடன் பேசத்தொடங்கிய பல படங்கள் அடுத்தடுத்து வர அடிகோலியது.

(எஸ்.எஸ்.வாசன்)
**********************
_மாற்றாக, கணவன் தலையின்றிக் குலுக்கு (5)_

_கணவன்_ = *பதி*

_தலையின்றிக் குலுக்கு_
= _[கு] லுக்கு_
= *லுக்கு*

_மாற்றாக_
= *பதி+லுக்கு*
= *பதிலுக்கு*
**********************
*பதிலுக்கு பதில்!!!*

சோம்பேறி குணம் படைத்த துறவி ஒருவர், உணவை எதிர்பார்த்து காத்திருந்தார். மூதாட்டி ஒருத்தி சோற்று மூடையுடன் எதிர்ப்பட்டாள். அவளிடம் தனக்கு உணவை அளிக்கும்படி துறவி கேட்க, அவளும் சம்மதித்தாள். கடமை உணர்வு மிக்கமூதாட்டி, “சுவாமி! ஆற்றுக்கு சென்று நீராடி வாருங்கள். அதற்குள் உணவை தயாராக எடுத்து வைக்கிறேன்” என்றாள். ஆனால், துறவிக்கு குளிக்க மனமில்லை. “ஒன்றும் கவலையில்லை அம்மா.... எப்போதும் கோவிந்த நாமத்தை ஜெபிப்பவன் நான். இந்த நாமத்தைச் சொல்பவர் யாராக இருந்தாலும் அவரது உள்ளமும், உடலும் எப்போதும் தூய்மையாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். *‘கோவிந்தேதி சதாஸ்நானம்’* என்று இதைச் சொல்வர்” என்றார்.

ஏதுமறியாத பாமரப்பெண் போல இருந்தாலும், பக்தியில் சிறந்த மூதாட்டி சாஸ்திர ரீதியாக பதிலளித்தாள்.

“ராம நாமத்தைச் சொன்னால் போதும். அதுவே உணவுக்கு ஈடானது. *‘ராம நாமாமிர்தம் சதா போஜனம்’* என்பார்கள் பெரியவர்கள். அதாவது ராமநாமம் என்னும் உணவை எப்போதும் உண்ணுங்கள் என்பது இதன் பொருள். அதனால் நீங்களும் சாப்பிட்டதாக கருதி புறப்படலாம்” என
விளக்கினாள். மூதாட்டியின் பதிலைக் கேட்ட துறவி, குளிப்பதற்கு ஆற்றை நோக்கி நடந்தார்.😂😂
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[9/19, 07:01] Ramarao திரைக்கதம்பம்: பதிலுக்கு

[9/19, 07:04] V N Krishnan.: பதிலுக்கு

[9/19, 07:12] பாலூ மீ.: கணவன் பதி தலையின்றி கு லுக்கு விடை பதிலுக்கு.

[9/19, 07:18] sankara subramaiam: பதிலுக்கு

[9/19, 07:19] Meenakshi: விடை:பதிலுக்கு

[9/19, 07:21] prasath venugopal: பதிலுக்கு

[9/19, 07:23] akila sridharan: பதிலுக்கு
பதி + (கு) லுக்கு = மாற்றாக

[9/19, 07:41] siddhan submn: பதிலுக்கு (பதி + (கு)லுக்கு)

[9/19, 07:47] N T Nathan: பதிலுக்கு

[9/19, 07:48] A D வேதாந்தம்: விடை= பதிலுக்கு/ வேதாந்தம்

[9/19, 08:01] Venkat UV: பதிலுக்கு 🙏🏽

[9/19, 08:35] nagarajan: *பதிலுக்கு*

[9/19, 09:01] மீ.கண்ணண்.: பதிலுக்கு

[9/19, 09:16] ஆர். நாராயணன்.: பதிலுக்கு

[9/19, 09:55] +91 94442 22388: இன்றைய புதிர் விடை= பதிலுக்கு

[9/19, 10:20] shanthi narayanan: பதிலுக்கு

[9/19, 10:25] கு.கனகசபாபதி, மும்பை: பதிலுக்கு

[9/19, 11:59] மாலதி: பதிலுக்கு

[9/19, 13:52] ஆர்.பத்மா: பதிலுக்கு

[9/19, 14:09] வானதி: பதிலுக்கு

[9/19, 14:09] Srikrupa: பதிலுக்கு

[9/19, 16:19] Viji - Kovai: 19.9.20 விடை
பதிலுக்கு

[9/19, 17:06] பானுமதி: பதிலுக்கு

[9/19, 17:52] கி.பா -----பதிலுக்கு

[9/19, 19:16] balakrishnan: 🙏 பதிலுக்கு

********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்