இன்று காலை வெளியான வெடி: வண்டலிடை நட்ட அரவிந்தம் காவியணிந்தோர் கையில் இருக்கும் (6) இதற்கான விடை கமண்டலம் = கமலம் + ண்ட ண்ட = வண்டல் இடை கமலம் = அரவிந்தம் இந்த வடமொழி சொற்கள் தமிழில் வடமொழியின் புணர்ச்சி விதிகளோடு அதிகமாகப் புழங்கி வந்தது, இப்போது குறைந்து விட்டது. கல்கி காலத்தில் "உங்கள் பாதாரவிந்தகளில் (அல்லது பாதக்கமலம்) சமர்ப்பிக்கிறேன்" (பாதம் + அரவிந்தம்) என்று எழுதி வந்தார்கள். சமஸ்கிருதத்தில் இருக்கும் தாமரைக்கான சொற்கள் சில இயல்பாக அக்காலத்தில் தமிழிலும் புழங்கின. அரவிந்தம், கமலம், பத்மம், பங்கஜம், ராஜீவம், உத்பல், நீரஜா(?). இதைப்பற்றி முன்பொருமுறை படித்தது: இந்திய மொழிகளில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் என்றால் நெருங்கிய பொருள்தான் இருக்குமே தவிர அதே பொருள் இருக்காது என்கிறார்கள். சில வருடங்கள் கழித்து parasol என்ற சொல் umbrella என்ற பொருளிலேயே இருப்பதாக எண்ணி அக்கருத்து சரியல்ல என்று ஒதுக்க நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது parasol வெயிலுக்குப் பயன்படுத்தப் படுவது (sol --> solar) என்றும் மற்றது வெயில், மழ...