Skip to main content

விடை 4198

ஞாயிறு அன்று காலை வெளியான வெடி:
வயலில் வளையில் வாழும் இடையிடை இடை காண்க (3)
அதற்கான விடை: நண்டு
= நடு + ண்
நடு = இடை
ண் = இடை காண்க
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*உதிரிவெடி 4198*
*************************
*"இடை யிடை இடை"* ... என்று மூன்று இடைகளில் விளையாடி புதிரமைத்துள்ள
ஆசிரியருக்கு பாராட்டுகள்! 💐
*************************
*இடைவேளை*

எத்தனையோ கவிஞர்கள் இடையைப் பற்றி இடையறாது பாடிவிட்டு போய்விட்டார்கள். இவர்களுக்கிடையே ஒரு இடைத்தேர்தல் வைத்தால் அதில் வெற்றி வாகைச் சூடுவது கண்ணதாசன்தான்.
சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.

கவிஞன்  *‘மெல்லிடை’* என்றான்.  *‘கொடியிடை’* என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து  *‘நூலிடை’* என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில்  *“இடையே இல்லை”* என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.
*நடையா இது நடையா – ஒரு* *நாடகமன்றோ நடக்குது*
*இடையா? இது* *இடையா? – அது*
*இல்லாததுபோல் இருக்குது.*
என்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம்.
*************************
_வயலில் வளையில் வாழும் இடையிடை இடை காண்க (3)_

_இடை காண்க_
= _mid letter in காண்க_
= *ண்*

_இடையிடை_
= _*நடு* இடை_
= _To place *ண்* inside *நடு*_
= *நண்டு*

= _வயலில் வளையில் வாழும்_
*************************
இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.

*“இல்லை என்று சொல்வதுந்தன்*
*இடையல்லவா* –
*மின்னல்*
*இடையல்லவா”*
******
*ஒடிவது போல் இடை இருக்கும்”* என்ற கேள்வி பிறக்க   *இருக்கட்டுமே* ”என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.

*மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!*
*முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்*
*சின்ன இடை வளைந்தாடும்*
*வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!”*

என்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார்
******
கண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’  *அன்புள்ள மன்னவனே!* என்று தொடங்கும் காதற் கடித பாடல்.  

*இளையகன்னியின் இடை மெலிந்ததோ*
*எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?”*

என்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப

*இடை மெலிந்தது இயற்கை அல்லவா*
*நடை தளர்ந்தது நாணம் அல்லவா”*

என்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘ *இடை* ’ வருணனை?
*************************
*'எடைக்கு எடை’* நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு *‘இடைக்கு இடை’* ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்