Skip to main content

விடை 4184

இன்று காலை வெளியான வெடி:
பாடலில் இனிமை முழுமையாக வராமல் கடைசி அடி தரும் கலவையான சத்தம் (4) அதற்கான விடை: சந்தடி = சந்தம் - ம் + (அ) டி
சந்தம் = பாட்டிற்கு ஓசை நயத்தால் இனிமை தருவது

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4184 by வாஞ்சிநாதன்_ 
*************************
சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

சிந்தை இருக்குது
*சந்தம்* இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

(படம் : வறுமையின் நிறம் சிகப்பு :1980)
*************************
*சந்தம்* என்ற சொல்லுக்கு *_அழகு_ , _ஒலியின் வண்ணம்_* என்று பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் தன்மை சந்தமாகும். ஓசை அலை போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் *சந்தம்* என்ற பொருள் வந்தது என்று, _தமிழிசைக் கலைக் களஞ்சியம்_ குறிப்பிடுகின்றது. இதனைத் _தொல்காப்பியர்_ *வண்ணம்* என்கிறார் . *சந்தம்* என்ற சொல்  *வண்ணத்தைக்*  குறிக்கும்.
*************************
வைணவ இலக்கியமான *நாலாயிர திவ்விய பிரபந்தத்தில்* பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான *திருமழிசையாழ்வார்* பாடிய பாடல் *திருச்சந்த விருத்தம்* என்று அழைக்கப்படுகின்றது. இவை *சந்தமிக்க இனிய ஓசை* யுடையன. தாளக் கட்டமைப்புச் செறிவுடையன.
*************************
_பாடலில் இனிமை முழுமையாக வராமல் கடைசி அடி தரும் கலவையான சத்தம் (4)_

_பாடலில் இனிமை_
= *சந்தம்*

_முழுமையாக வராமல்_
= *சந்த(ம்) = சந்த*

_கடைசி அடி_
= *(அ)டி = டி*

_தரும்_ = *சந்த+டி*
= *சந்தடி*

= _கலவையான சத்தம்_
*************************
*பழமொழிகள்*

_திருமணச் சந்தடியில் தாலிகட்ட மறந்தது போல_ 

_குந்தினாயே குரங்கே, உன் சந்தடி அடங்கே._

_சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்._

*(சந்தடியோ சந்தடி 😂😂😂)*

_*சந்தம்* இல்லாக் கவிக்கு *அந்தம்* இல்லை._

(அந்தம்-அழகு.)
*************************
*காதல் பிரசவம்*

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்தாய்....

*சந்தடி* சாக்கில்
என்னுள் புகுந்து
*சந்த அடி* போட வைத்தாய்...

(நாகூர் கவி)
*************************
_நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள_
_வருத்தபடாத வாலிபர் சங்கம்_

_கண்ட இடத்துல வெத்தல போடுவோம்_
_காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்_
_சண்டை நடக்கையில் கட்டைய போடுவோம்_
_*சந்தடி* சாக்குல ஆட்டைய போடுவோம்_

_நாங்க_
_அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்_
_அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்_

_இதுக்கு மேல என்னத்த சொல்ல_
_வருத்தப்படாத வாலிபர் சங்கம்_
_இவிங்க வருத்தபடாத வாலிபர் சங்கம்_

(திரைப்படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்:2013)
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்