Skip to main content

விடை 4178

இன்று காலை வெளியான வெடி:
பதலைச் சுழி இடைக் கச்சை கடை வஞ்சி (3)
அதற்கான விடை: உச்சி = உ +ச் +சி
உ = சுழி
ச் = இடைக் கச்சை
சி = கடை வஞ்சி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
உச்சியைத் தொடும் உன்னதமான கட்டமைப்பு!
வாழ்த்துகள்!
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4178 வாஞ்சிநாதன்_ 
*************************
_*உச்சி* வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி_ _பச்சமலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க_

_மேயுதுன்னு சொன்னதில_ _நியாயமென்ன கண்ணாத்தா!_

_*உச்சி* வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி_

படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
*************************
*_உச்சியில் உதித்த சொற்கள்_ !*

உச்சிக்கரண்டி
உச்சிமாநாடு 
உச்சிவேளை
உச்சிப்பொழுது
உச்சிக்கால பூஜை
உச்சிமுகர்
உச்சிகுளிர்
உச்சிவானம்
உச்சிக்கொண்டை
உச்சிக்கிளை
உச்சிக்குடுமி
*************************
*உச்சிக்குழி*
பிறந்த குழந்தையின் தலையில், இரண்டு குழிகள் இருக்கும். ஒன்று, *உச்சிக்குழி* . இரண்டாவது தலையின் பின் பக்கத்தில் இருக்கும். முன் குழி சிறிது சிறிதாக மூட, 18 மாதமும், பின் குழி, 9 - 12 மாதங்களில் மூடிவிடும்.
*************************
_தலைச் சுழி இடைக் கச்சை கடை வஞ்சி (3)_ 

_சுழி_ = *உ*

_இடைக் கச்சை_
= _க[ச்]சை_ = *ச்*

_கடை வஞ்சி_
= _வஞ்[சி]_
= *சி*
_தலை_ = *உ+ச்+சி*
= *உச்சி*
*************************
_மலைக்கோட்டை  *உச்சிப்பிள்ளையார்*_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம்.

அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.

எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. *இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.*

தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.

உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.
உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின்  நடுப்பகுதியில்
தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். *மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார்.*

*தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.*
************************
💐🙏🏼💐

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்