Skip to main content

விடை 4210

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி:
கூடை பருத்தியில் தோன்றியதா? கையைவெட்டி ஒட்டிவை (5)
அதற்கான விடை: பஞ்சாரம் = பஞ்சா + (க) ரம்
பஞ்சு = பருத்தியிலிருந்து தோன்றுவது
பஞ்சா = பருத்தியிலிருந்து தோன்றியதா
பஞ்சாரம் = கூடை; இதைக் கவிழ்த்துப் போட்டுக் கோழிகளை அடைத்து வைப்பதுமுண்டு
படத்தைக்காண இங்கே செல்லவும்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
************************
*உதிரிவெடி 4210 (அக்டோபர் 23, 2022) வாஞ்சிநாதன்*
************************
*பஞ்சாரம்* பெயர்ச்சொல் (வட்டார வழக்கு)
கோழிகளை அடைத்து வைக்கும் (மூங்கில், பிரம்பு போன்றவற்றால் ஆன) பெரிய *கூடை* போன்ற கூண்டு.

நாட்டுக்கோழிகளுக்கு உயிர்ப்பும், துடிப்பும் வழங்கிய முன்னோர்களின் ' *பஞ்சாரம்* ' தற்போது, நினைவு சின்னமாகியுள்ளது.
************************
_போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று_ _கண்ணீர் விட்டு_
_தண்ணீரும் சோறும் தந்த_ 
_மண்ணை விட்டு_
_பால் பீச்சும் மாட்ட விட்டு_
_*பஞ்சாரத்துக்* கோழியை விட்டு__
_போறாளே பொட்டப் புள்ள_ 
_ஊரை விட்டு_

(திரைப்படம் கருத்தம்மா-1994)
************************
1940-களில் நகர்ப்புற நாகரிகம் எட்டிப்பார்க்காத, பேருந்து போக்குவரத்து இல்லாத, எப்போதாவது கரி அடுப்பில் ஓடும் லாரிகள் மட்டும் வந்துபோகும் ஒரு மிகச் சிறிய கிராமத்தில் மாலை ஆறு மணிவாக்கில் முற்றத்தில் *பஞ்சாரத்தைக்* கவிழ்த்து, ஒரு பக்கத்தை மட்டும் சிறிது உயர்த்தி "ba, ba, ba" என்று அழைத்தால் தாய்க்கோழி தயங்கித் தயங்கி முன்னே வர,குட்டிக்குஞ்சுகள் குடுகுடுவென்று பின்னே ஓடிவந்து கூடைக்குள் அடையப் பஞ்சாரத்தைக் கவிழ்த்து உச்சியில் சாக்கைப்போட்டு மூடிவைத்திருக்கிறேன். பஞ்சரம் என்பது இலக்கிய வழக்காக இருக்கலாம்.நாம் இப்பொழுது சும்மாடு என்று சொலவது சங்க இலக்கியத்தில் சுமடு எனப்படுகிறது. இதைப் போன்று இதுவும் இருக்கலாம். வேறு தென்னிந்திய மொழிகளிலும் இது காணப்படுவதால் இது தமிழ்ச் சொல் என்பதற்கு வாய்ப்புகள் மிகுதி. எங்கள் ஊரில் அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி) 'மண்ணெண்ணெய்' கிடையாது - சீமத்தண்ணி-தான். 'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான்.  அந்த ஊரில் வடசொல் வந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

(ப.பாண்டியராஜா-
வலைதளத்தில்)
************************
_கூடை பருத்தியில் தோன்றியதா? கையைவெட்டி ஒட்டிவை (5)_

_பருத்தியில் தோன்றியதா?_
= *பஞ்சா*

_கை_ = *கரம்*
_கையைவெட்டி_
= ( *க)ரம் = ரம்*

_ஒட்டிவை_
= *பஞ்சா+(க)ரம்*
= *பஞ்சாரம்*

= _கூடை_
************************
*வஞ்சகப் பூசை*

அனைவரும் அஞ்சத் தக்க ஒலியெழும்படி இராமன் வில்லின் நாணை அதிர்த்து ஒலியெழச் செய்தான். கேட்ட விராதன் சிறிது கலக்கமுற்றுப் பின் பூனை வாயில் அகப் பட்ட கூண்டுக்கிளிபோல் கதறிக் கொண்டிருந்த சீதையை விடுத்து, ஏதோ எண்ணிப் பார்த்து இராமனோடு போர் தொடுக்க லானான்.

' _வஞ்சகக் கொடிய பூசை நெடு_
_வாயில் மறுகும் *பஞ்சரக் கிளி* எனக் கதறு பாவையை விடா நெஞ்சு உளுக்கினன் எனச் சிறிது கின்று கினையா_
_அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா’ (24)_

பூசை = பூனை. *பஞ்சரம் = கூண்டு* . விடா = விட்டு; அழலா = அழன்று - இவை இரண்டும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அஞ்சனக் கிரி அனான் = கரிய மலை போன்ற இராமன். பாவை = சீதை.

( *கம்ப ராமாயணம்/ஆரணிய காண்டம்/1-விராதன் வதைப் படலம்–)*
************************
💐🙏🏼👆🏽
மிக அருமை விளக்கம்....

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்