இன்று காலை வெளியான வெடி:
சுரத்தையிழந்த எருமைத் திருட்டு பெரிதில்லை (5)
இதற்கான விடை கடுகளவு = பகடு-ப + களவு
பகடு = எருமை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
சுரத்தையிழந்த எருமைத் திருட்டு பெரிதில்லை (5)
இதற்கான விடை கடுகளவு = பகடு-ப + களவு
பகடு = எருமை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
**********************
*மடுத்தவா யெல்லாம் பகடன்னான்*
குறள் 624
_மடுத்தவா யெல்லாம் *பகடன்னான்* உற்ற_
_இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து_
பொருள்:
மடுத்த என்றால் இடையூறு ஏற்படுதல் என்று பொருள். வாய் என்றால் வழி என்று பொருள். *பகடு என்றால் எருது என்று பொருள்.* வழியேல்லாம் மேடு பள்ளம் என்று இடையூறு ஏற்பட்டாலும் ஒரு எருது அல்லது மாடு அல்லது காளை எவ்வாறு அதனை பொருட்படுத்தாமல் தான் தூக்கிக்கொண்ட சுமையை சுமந்து சென்றுக்கொண்டே இருக்கிறதோ அதே போன்று ஒரு மனிதன் வாழ்வில் ஒரு வினையை செய்யும் பொழுது துன்பங்களும் இடர்களும் வரும்பொழுது அவ்விடர்ப்பாடுகளை தாண்டிச் சென்று அவற்றை உடைத்துச் சென்று இலக்கை அடைய வேண்டும்.
எருது இழுக்கும் வண்டிப்பாரத்தை வாழ்க்கைச் சுமைக்கு ஒப்பாய் சொன்னது,
சங்கப்பாடல்கள் தொட்டு, இன்றுவரை தொடர்வது.
**********************
*பகடு நடந்த கூழ்*
_“துகள் தீர் பெருஞ் செல்வம்_ _தோன்றியக்கால் தொட்டு_
_பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க_
_அகடு உற யார் மாட்டும் நில்லாது செல்வம்_
_சகடக்கால் போல வரும்"_
( *நாலடியார்* )
🌺🌺🌺🌺🌺🌺
விளக்கம்:
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ் செல்வம் உண்டான காலம் தொடங்க எருதுகளைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளை பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம் போல மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறி வரும்.
**********************
_சுரத்தையிழந்த எருமைத் திருட்டு பெரிதில்லை (5)_
_எருமை_ = *பகடு*
_சுரம்_ = *ப*
_சுரத்தையிழந்த எருமை_
= *பகடு minus ப*
= *கடு*
_திருட்டு_
= *களவு*
_பெரிதில்லை_
= *கடு+களவு*
= *கடுகளவு*
**********************
_வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு_ _*ஐயவி* அனைத்தும்_
_ஆற்றாது ஆகலின்_
– *புறம் 358/3,4*
உலகியலாகிய இல்லறத்தையும் தவ வாழ்வாகிய துறவறத்தையும் சீர் தூக்கினால் தவத்துக்கு வையம் சிறு *கடுகளவும்* நேர்படாதாம்
(ஐயவி = கடுகு.
ஐயவி என்பது கடுகின் வகைகளில் வெண்சிறுகடுகு ஆகும்.
**********************
*கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்!*
**********************
💐🙏🏼💐