இன்று காலை வெளியான வெடி:
கடைக்கண் இடைக்கண் வைத்தாள் பார்வதி நம்பலாம் (3)
அதற்கான விடை: உண்மை = உமை + ண்
உமை = பார்வதி
ண் = கடைக்கண்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
கடைக்கண் இடைக்கண் வைத்தாள் பார்வதி நம்பலாம் (3)
அதற்கான விடை: உண்மை = உமை + ண்
உமை = பார்வதி
ண் = கடைக்கண்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
தென்றல் Archive வில் இருந்து வாஞ்சிநாதனின் இரண்டு பழைய புதிர்கள், தினமும் புதிராடுகளம் Whatsapp groupல் பதிவிடுகிறோம்.
விடையளித்து பங்குபெற whatsappல் 90087 46624 அணுகவும்.
நன்றி!
மு க இராகவன்
*************************
_உதிரிவெடி 4187 by வாஞ்சிநாதன்_
*************************
_கண்ணில் காதலியர் *கடைக்கண்* காட்டி விட்டால்;_
_மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்..!_
பாரதிதாசன்
*************************
*கடைக்கண் பார்வை*
_அவ்வப்போது *கடைக்கண்* பார்வை ஒன்றை வீசு !_
_என் கவிதை பட்டாம்பூச்சிகள்_
_உன்னைச்சுற்றி நிறையவே பறக்கும் !_
கவிஞர் முபா
*************************
_கடைக்கண் இடைக்கண் வைத்தாள் பார்வதி நம்பலாம் (3)_
_கடைக்கண்_
= *ண்*
_பார்வதி_
= *உமை*
_கடைக்கண் இடைக்கண் வைத்தாள்_
= *உ[ண்]மை*
= *உண்மை*
_நம்பலாம்_
= *உண்மை*
*************************
*நாலடியார் - 390.கற்புடை மகளிர்*
_அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று_
_பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்_
_*கடைக்கண்* அனையம்நாம் ஊரற்கு அதனால்_
_*இடைக்கண்* அனையார்க்கு உரை._
🌹🌹🌹🌹🌹🌹🌹
பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையாரிடம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். 'மறுமையிலாவது தலைவனின் அன்பைப் பெறவேண்டும்' எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்றின் தலைவி கூறும் கருத்து இந்தப் பாடலுடன் ஒப்பிடத் தக்கது).
*************************
💐🙏🏼💐