Skip to main content

விடை 4170

நேற்று காலை வெளியான வெடி:
இலக்கணத்தில் அன்றும், இன்றும் என்றும் முந்தி இருக்கும் அடையாளம் இடையில் இல்லை (3)
அதற்கான விடை: குறில் = குறி + ல்
குறி = அடையாளம்
ல் = இடையில் இல்லை
அன்றும், இன்றும், என்றும் என்பதில் முந்தி வரும் எழுத்துகளான அ, இ, எ இவையெல்லாம் குறில்கள்.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4170 வாஞ்சிநாதன்_ 
*************************
*_நேற்று இன்று நாளை......_*
_Puthir of the day_.._or.._
_Puthir of the year !!__
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*அன்றும், இன்றும் என்றும்*
_இணையிலா உதிரிவெடிகள் படைத்து,_
_எம்மை பரவசமடைய செய்த புதிராசிரியருக்கு வாழ்த்துகள்!_ 💐💐💐
*************************
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் *குறில்* எழுத்து அல்லது குற்றெழுத்து என்றும் நீண்ட ஓசையுடைய எழுத்துகள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும்.
 *************************
_அன்று கண்ட உலகம் இன்று காண வழியில்லை_ 
_இன்று காணும் மாயை நாளைய உலகமாய் மாறும்_ 
_எல்லாம் மாற்றம் என்னும் வலையில் சிக்கிய மீனாய்..._ 
_அன்றும் இன்றும் என்றும்_

(பிரகதி)
**********
_உன் நினைவுகளில் என் நினைவுகள் இல்லாது போனாலும் …_ _என் நினைவுகளில் உன் நினைவுகள்_ 
_அன்றும் .இன்றும் .என்றும் .!!!_ 

(பழனிச்சாமி)
************************
_இலக்கணத்தில் அன்றும், இன்றும் என்றும் முந்தி இருக்கும் அடையாளம் இடையில் இல்லை (3)_

_அடையாளம்_
= *குறி*
_இடையில் இல்லை_
= _*இ[ல்]லை* = *ல்*_

_*முந்தி* இருக்கும் (அடையாளம்)_
= _indicator to place *குறி* before *ல்*_
= *குறி+ல்*
= *குறில்*
= _இலக்கணத்தில் அன்றும், இன்றும் என்றும்_
= தமிழ் இலக்கணத்தில்,
இங்கு அடைப்புகுறிக்குள் உள்ள எழுத்துகள் அனைத்தும் *குறில்* எழுத்துகள்.
*(அன்றும், இன்றும் என்றும்)*
*************************
_வா வா_
_அன்பே அன்பே_
_காதல் நெஞ்சே நெஞ்சே_

_கண்ணன் வந்து துஞ்சும்_
_கட்டில் இந்த நெஞ்சம்_
_கானல் அல்ல காதல் என்னும்_
_காவியம்_

_அன்றும் இன்றும் என்றும்_
_உந்தன் கையில் தஞ்சம்_
_பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்_

_காற்றில் வாங்கும் மூச்சிலும்_
_கன்னி பேசும் பேச்சிலும்_ _நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது_

( *படம்:* *அக்னிநட்சத்திரம்* *1988* )
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்