Skip to main content

விடை 4219

இன்று காலை வெளியான வெடி:
வண்டலிடை நட்ட அரவிந்தம் காவியணிந்தோர் கையில் இருக்கும் (6)
இதற்கான விடை கமண்டலம் = கமலம் + ண்ட
ண்ட = வண்டல் இடை
கமலம் = அரவிந்தம்
இந்த வடமொழி சொற்கள் தமிழில் வடமொழியின் புணர்ச்சி விதிகளோடு அதிகமாகப் புழங்கி வந்தது, இப்போது குறைந்து விட்டது. கல்கி காலத்தில் "உங்கள் பாதாரவிந்தகளில் (அல்லது பாதக்கமலம்) சமர்ப்பிக்கிறேன்" (பாதம் + அரவிந்தம்) என்று எழுதி வந்தார்கள்.
சமஸ்கிருதத்தில் இருக்கும் தாமரைக்கான சொற்கள் சில இயல்பாக அக்காலத்தில் தமிழிலும் புழங்கின. அரவிந்தம், கமலம், பத்மம், பங்கஜம், ராஜீவம், உத்பல், நீரஜா(?). இதைப்பற்றி முன்பொருமுறை படித்தது: இந்திய மொழிகளில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் என்றால் நெருங்கிய பொருள்தான் இருக்குமே தவிர அதே பொருள் இருக்காது என்கிறார்கள்.
சில வருடங்கள் கழித்து parasol என்ற சொல் umbrella என்ற பொருளிலேயே இருப்பதாக எண்ணி அக்கருத்து சரியல்ல என்று ஒதுக்க நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது parasol வெயிலுக்குப் பயன்படுத்தப் படுவது (sol --> solar) என்றும் மற்றது வெயில், மழை இரண்டுக்கும் பயன்படும் என்கிறார்கள்.
பொருள்களுக்கு மட்டுமல்ல. எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய கதையொன்று திரைப்படமாக்கப்படும்போது அதற்கு கண்ணதாசன் பாடல் எழுதுவதைக் கண்டு வியந்து கேட்டதைப் பற்றி எழுதியுள்ளார். எதுகை மோனை சொல் நீளத் தேவைக்கேற்ப தமிழில் பலவற்றிலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்குக் கொள்ளலாம் என்று கண்ணதாசன் கூறினாராம். சீதை, மைதிலி, கடவுளின் ஆயிரத்தெட்டுப் பேரை உச்சரித்து வழிபடுவதுதான் நமக்கு மரபாயிருக்கிறதே.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்