Skip to main content

விடை 3832

இன்று காலை வெளியான வெடி:
சர்வதேசப் பதவியில் இப்போது இல்லாத முள் நீக்கித் தைக்கப் பட்டு (5)  

அதற்கான விடை:   ப‌ன்னாட்டு; பதவியில் இப்போது இல்லாத = முன்னாள்; முள் நீக்கிட "ன்னா".
பட்டில் இதைத் தைக்க, "பன்னாட்டு " = சர்வதேச.


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்


Comments

Raghavan MK said…
நேற்றைய சறுக்கலுக்கு ஈடு கட்டும் வகையில் இன்று ஏற்றமுடன் அமைந்துள்ளது புதிர்!

அருமையான திசை திருப்பும் உத்திகளுடன் அமைந்த புதிர்!

1."சர்வதேசப் பதவியில்"
இரு சொற்களையும் சேர்த்து விடை காண இயலாமல் பதவி இழந்த பிறகே விடை காண முடிந்தது.

2."தைக்கப் பட்டு"
Note the ப் here!
இங்கும் தையற்காரரால் உடை தைக்க முடியவில்லை!

அழகான கட்டமைப்பு!
ஆசிரியருக்கு பாராட்டுக்கள்! 💐
**************************
சர்வதேசப் பதவியில் இப்போது இல்லாத முள் நீக்கித் தைக்கப் பட்டு (5)  

பதவியில் இப்போது இல்லாத
= முன்னாள்
முள் நீக்கி= முன்னாள்-முள்
= ன்னா
தைக்கப் பட்டு
= பட்டில் தைக்க (நுழைக்க)
= ன்னா inside பட்டு
= பன்னாட்டு
= சர்வதேச
**************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்