இன்று காலை வெளியான வெடி:
கேட்போருக்கு இனிமை தரும் மெலிதான வலியுடன் சத்தம் (4)
இதற்கான விடை: சந்தம்
முந்தாநாள் புதிர் மூலம் சந்தி அதாவது வலிமிகுதல் பற்றிய விளக்கம் வந்தது. இன்று வலிகுறைதல், அதாவது வல்லினம் மெல்லினமாக வருவது அடிப்படையில் புதிர் அமைக்கப்பட்டிருக்கிறது. "சத்தம்" என்பதில் "த்" என்பது "ந்"
என்று மெலிதாக "சந்தம்" துள்ளிக் கொண்டு வரும். சந்தம் இருந்தால் பாட்டில் கேட்போருக்கு இனிமையைத் தரும்.
இப்புதிருக்குச் சரியான விடையைக் கண்டுபிடித்த கதிர்மதி, மாதவ், மீ கண்ணன் ஆகியோருக்குப் பாராட்டுகள். வந்த அனைத்து விடைகளையும் இங்கே காணலாம்.

Comments
முனகல் என விடைக்கான விளக்கம்
*************************
_கேட்போருக்கு இனிமை தரும் மெலிதான வலியுடன் சத்தம் (4)_
_கேட்போருக்கு இனிமை தரும்_
= *முனகல்*
வாய்திறவாது
மென்மையாகப் பாடலை முனகும்போது, கேட்போருக்கு இனிமை தரும் !(Humming )
_மெலிதான வலியுடன் சத்தம்_
= *முனகல்*
*************************
தமிழ் முனகல் யின் அர்த்தம்
முனகல்
பெயர்ச்சொல்
1
வலி, காய்ச்சல் போன்றவற்றால் எழுப்பும் மெல்லிய ஒலி.
புலம்பல் , வேதனைக்குரல் , அழுகை , தேம்புதல் ,கரைவு ,
‘குழந்தையின் முனகலைக் கேட்டு விழித்துக்கொண்டாள்’
2. வாய்திறவாது மென்மையாகப் பாடலை முனகுதல் , முனகல் ஓசை எழுப்புதல் .
*************************