Skip to main content

சரவெடிக்கான விடைகள்

தீபாவளிச் சரவெடி இரண்டு தவணைகளாக  வந்த பின்னரே கட்டத்தை வெளியிட்டேன். முதலிலேயே கட்டத்தை அளித்து விட்டால் சில விடைகள் சில்லறையாக யோசிக்காமல் வந்து விழுந்து புதிர் வீணாகிவிடக்  கூடாது என்பதே இதன் நோக்கம். இதில் எல்லோருக்கும் உடன்பாடுதான்  என்று நினைக்கிறேன்.

விடைகள்:
3836. படுக்கை ஓரங் கிழிய முள் முனை குத்த மங்கலகரமான கிழங்கு (4)
 மஞ்சள்  = மஞ்சம் - ம் + (மு) ள்
3837. மாட்டாமல்  வந்த   ஊர்வசிக்கா மல்லேஸ்வரனைப் பிடித்திருக்கிறது?  (5) சிக்காமல்  = ஊர்வசிக்கா மல்லேஸ்
3838. தென்னமெரிக்க நாட்டில் வாழும் மதிப்பிற்குரியவர்கள்? (6) பெருமக்கள் (பெருநாட்டில் வாழ்பவர்கள்)
3839. கன்னத்தின் ஓரம்  வெளியே உரசி வெற்று மினுமினுப்பு (4) பகட்டு = பட்டு + க(ன்னத்தின்)
3840. திருடன் போரிடுமிடத்திலுள்ள சரஸ்வதி ? (4) களவாணி = களத்திலிருக்கும் சரஸ்வதி
3841. செழிப்புடைய காட்டு உள்ளே  இளமாலை தழை பறித்தது (4)  வளமான = வன + இளமாலை - இலை [= தழை]
3842. முடியாத துக்கம் சுற்றி அணையின் கதவு வைத்த டாஸ்மாக் (5)  மதுக்கடை = துக்க (ம்) + மடை
3843. கட்டிடத் தொழிலாளர் நிற்குமிடத்தில் கடைசியாக உள்ள ஜன்னல் (4) சாளரம் = சாரம் + (உள்) ள
3844. மரவுரி  அணிந்தவன் கொடியொடு  அஞ்சலி 1,2,3,4 கடிகார ஓசை (4) மணியொலி, முதலிலிருக்கும் நான்கு வார்த்தைகளிலும் முறையே, 1,2,3,4ஆம் எழுத்துகளைக் கொண்டு கோக்கவும்.
3845. தீக்கிரையாக  கதையின் அம்சம் கதை  ஆரம்பத்துடன் வந்தது (3) கருக = கரு + க(தை) 

3846. "நிலவுதான் அவள்" -- ஆசிரியர் விடைத்தாளில் எழுதியது! (5) மதிப்பெண்!
3847. கட்டாயமாய்க் கொடுக்க வாய் தடுமாற நாலு மாவில் பாதி விழுங்கப் பட்டது (4) நாலு மா = பாரதியார் கேட்ட ஒரு காணி நிலம்; பாதி காணி = ணி
             விடை: திணிக்க = திக்க + ணி
3848. விஜயன் செய்வித்த மழை துளி வெள்ளரி இட்டு கலந்த ரசமா? (4) விஜயன் = அர்ஜுனன்; விடை: சரமாரி = ரசமா + ரி
3849. முற்பிறவியில் சிகண்டி கைலி மாற்றிக் கட்டிக்கொண்ட அவள் சகோதரி (5) அம்பாலிகை = அம்பா + கைலி
3850. கை கூப்பும்  முடிவுகளால் அழுக்கு முகம் அலம்பி பொட்டிட்டு  பொலிவுறும் (5)  கும்பிடும் = அழுக்கு முகம் அலம்பி பொட்டிட்டு பொலிவுறும் இவ்வைந்து சொற்களின் கடை சி எழுத்துகள்.
3851.  சோகக்கதையாக 3849இல் இருப்பவளின் சகோதரியின் கணவனைக் காதலித்தவள்? (5)  அமரவாதி;  "அம்பாலிகை"யின் சகோதரி "அம்பிகா". அம்பிகாவின் கணவன் "அம்பிகாபதி". அவனைக் காதலித்த சோகக்கதைக் காரி "அமராவதி"
3852. ஒரு ஸ்வரத்துக்கு பதிலாக இரண்டைக் கொண்ட தத்துவம் பெற்ற பெருமை (6) "தத்துவம்" என்பதில் "த" நீக்கி ""ம', 'க' என்ற ஸ்வரங்கள் இட "மகத்துவம்"


ஹரிபாலகிருஷ்ணனின் தளத்தில் விடைகளனைத்தும் கட்டங்களுடன் பதிவாகியுள்ளது. அதை இங்கே சென்று பார்க்கலாம்.

முதல் நாள் கூகிள் படிவ விடைகள் இங்கே.

இரண்டாம் தவணை கூகிள் படிவ விடைகள் இதோ.https://docs.google.com/spreadsheets/d/1TGmSfTJyyccksKnac5gFZjvocC5DsQDDCikS80uh314/edit?usp=sharing

Comments

Raghavan MK said…
அருமையான தீபாவளிச் சரவெடிகளை தந்து மகிழ்வுற செய்தமைக்கு ஆசிரியருக்கு நன்றி!
பல புதிய உத்திகளை கையாண்டு புதிர்களை அமைத்துள்ளது எம்போன்றோர்க்கு சவாலாக இருந்தது.

மிகவும் ரசித்த புதிர்கள் சில......

1 மரவுரி அணிந்தவன்

2 நிலவுதான் அவள்" --

3 சோகக்கதையாக ...... சகோதரியின் கணவனைக் காதலித்தவள்?
4 ஒரு ஸ்வரத்துக்கு பதிலாக....

மீண்டும் தைப்பொங்கலுக்கு எதிர்பார்க்கலாமா?

வாழ்த்துகள்!
💐💐💐👍🏼👍🏼💐💐💐
Vanchinathan said…
நன்றி.
தீபாவளிக்கு கல்லூரியில் நான்கு நாட்கள் விடுமுறை. அதனால் நேரம் ஒதுக்கி வலைக் கட்டப் புதிர் தயாரிக்க முடிந்தது. பொங்கலுக்கு எவ்வளவு விடுறை என்று பார்க்க வேண்டும். கிடைத்தல் செய்துவிடலாம்.
Muthu said…
மிகவுமிரசித்து அனுபவித்த சர வெடி. திசை திருப்புவது எதிர்பார்க்கப் பட்டாலும், கம்பன் வீட்டு சோகக் கதைக்கும் மகா பாரதத்துக்கும் முடிச்சுப் போட்டுத் திணறடித்து விட்டீர்கள். கும்பிடுவதும் மணியொலியும் இதுவரை நான் பார்த்திராத நூதன யுக்திகள்! ஹரி பாலகிருஷ்ணன் - எங்கள் ஊர்க்காரர்(!) - அமைத்த புதிர்மயம் கட்டங்களைப் பல ஆண்டுகளாகப் பயன் படுத்தி வந்துள்ளேன். சம்ர்த்துக் கைபேசியும், வாட்ஸப்பும் வந்த பின் கணினியில் கட்டம் பார்த்துப் புதிர் விடை நிரப்பக் "கட்டப்"படுபவரே பலர். இப்பொழுது ஹரி அவர்கள் அதே மென் பொருளைக் கைபேசி/டாப்லடில் செயல் படுத்தி இருப்பதும், தமிழ் ஃபாண்ட் இல்லாதோரும் தமிழில் தட்டச்சு செய்து கட்டங்களை நிரப்ப ஹேதுவாகவும் அமைத்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இந்தத் தீபாவளி போல் இன்னும் பல தீபாவளிகளும் எல்லோரையும் மகிழ்விக்க புதிர் போடும் வாஞ்சி சார் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்றேன்.
Nathan NT said…
அருமையான புதிர்கள், வாஞ்சிநாதன்!
இவ்வளவு சிரமம் எடுத்து எங்களை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
எல்லாம் தரமான புதிர்கள். ஓரிரு புதிர்களைக் கட்டவலை இல்லாமல் அவிழ்க்க இயலவில்லை. நன்றி.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்