Skip to main content

விடை 3830

இன்று காலை வெளியான வெடி
பாராட்டுச் சொல் பெற துடிக்கும் இளையவன் விட்டுவிட்டு வரலாமா? (5)
இதற்கான விடை:  பிரமாதம் = தம்பி (இளையவன்) + ரமா (லாமா)
இன்றைய புதிருக்கு   அனுப்பப்பட்ட விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

Comments

Raghavan MK said…
*****************
புதிராசியருக்கு ஒரு பாராட்டுச் சொல் ..
பிரமாதம்!! 💐
அருமையான கோர்வையுடன் அமைந்துள்ள புதிர்!
மீண்டும் ஒரு பாராட்டுச் சொல் ...
சபாஷ்!!💐
*****************
பாராட்டுச் சொல் பெற துடிக்கும் இளையவன் விட்டுவிட்டு வரலாமா?(5)
இளையவன்
= தம்பி
_விட்டுவிட்டு வரலாமா_
= [வ] ர [லா] மா
= ரமா
பெற = தம்பி ரமா வைப் பெற_
_துடிக்கும்= அசையும் , anagram indicator for தம்பி ரமா
= பிரமாதம்
= பாராட்டுச் சொல்
*****************
Muthu said…
பிரமாதம்! பலே ஜோர்!! சபாஷ்!!! அற்புதம்!!!!
M k Bharathi said…
சுவையோடுச் சொல்லாடும்
"உதிரிவெடி" களத்தில்
பூக்கின்றப் புதிர்களில்,
புதுமையானதின்று
பிரமாதம் விடைத்தந்த
புதிரின்று "பிரமாதம்"

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்