இன்று காலை வெளியான வெடி
வெட்டு இரு பாதி கொண்டு உண்டாகு (5)
அதற்கான விடை: கருத்தரி = கத்தரி (வெட்டு) + ரு (= 1/2 இரு )
முதலில் ஒரு மணி நேரத்திற்கு புதிரில் 4 எழுத்து என்று தவறாக இருந்தது. அது பலருக்கும் குழப்பத்தையளித்திருக்கிறது.
விடைகளின் பட்டியலை இங்கே சொடுக்கிப் பார்க்கவும்.
ரவி சுப்ரமணியன் கடந்த சில நாட்களாக வந்த மூன்றெழுத்து விடை கொண்ட புதிர்களை ரசித்ததாகக் கருத்துரையளித்துள்ளார். நன்றி. 'விழல், பாதிரி, மாவிலை" என்பதைக் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
பாதிரி என்ற சொல் சைவர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமானது என்று சொல்வது சரியில்லை. ஸ்பானிய மொழியில் Padre என்பது தந்தை என்று பொருள். அதைத்தான் தமிழில் பாதிரி என்று எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது. விவரமறிந்தவர்கள் இதை விளக்குங்கள்.

Comments