Skip to main content

விடை 3831 சறுக்கலும் சப்பைக் கட்டும்

  சொற்களைப் பல துறைகளிலிருந்து எடுத்து புதிர்கள் அமைக்க  வேண்டும் என்று அவ்வப்போது மாற்றிப் புதிரமைக்க முயல்கிறேன்.   இதில் சங்கடம் என்னவென்றால்  அரையேஅரைக்கால்குறை  இசையறிவைக்  கொண்டு   இசை தொடர்பான சொற்களைக் கையாள்வது.    இசையையறிந்தவர்கள் விவரமாகப் பட்டியலிட்ட இணைய பக்கங்கள் உதவியுடன் அவ்வாறு புதிர் பல சமயம் அமைத்திருக்கிறேன்.

இன்று அப்படித்தான் மிகவும் சாமர்த்தியமாக  ஒரு புதிரைச் செய்ததாக நினைத்தேன்.  இதில் இருக்கும் ஓட்டையை மாலை நான்கு மணி வாக்கில் கதிர்மதி சுட்டிக் காட்டிய பின்தான் என் தவறை  அறிந்தேன்.

இன்றைய புதிர்:  சிவனை அலங்கரிப்பதில் மூன்றாவது இல்லையாம், மூன்றாவது இல்லாமலே தொடங்கு (3) 

தொடங்கு = ஆரம்பி; அதில் மூன்றாவது (எழுத்து) இல்லையென்றால் கிடைக்கும் "ஆரபி" (என்ற ராகம்)  இதற்கான  விடை.

சிவனை அலங்கரிப்பது "சங்கராபரணம்" எனலாம். அது  ஏழு ஸ்வரங்களையுங் கொண்ட  ராகம் ஒன்றின் பெயருங்கூட. அந்த ராகத்தின் மூன்றாவது ஸ்வரத்தை   நீக்கினால் வருவது "ஆரபி" என்பது  என்னுடைய அரை குறைப் புரிதலால் விளைந்த விபரீதம்.  இன்னொரு ஸ்வரத்தையும் நீக்க வேண்டும்.  இரண்டிலும் மூன்றாவதை நீக்குதல் என்ன அழகான உத்தி என்று  அகமகிழ்ந்து சரியான தகவலைத் தெரிந்து கொள்ளாமல்  நான் அவசரப்பட்டதால், பலருக்குப் புதிருக்கு விடையளிக்கும் வாய்ப்பு தட்டிப் போயிருக்கும்.

அதனால் இனிமேல் இசை பற்றிய புதிர்க் குறிப்புகள் இனிமேல் இடம்பெறாது என்று கூறப்போவதில்லை. இன்னமும் கவனமாக அதைக் கையாளுவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.
 இப்புதிருக்கு வந்த விடைகளை இங்கே காணலாம். 





Comments

Raghavan MK said…
My first choice of answer for today's riddle was " *ஆரபி* " , as explained below :
However the answer *ஆரபி* could not be properly linked by me with the first half of clue except _ஆரபி_ ragam comes under the _சங்கராபரணம்_ ragam and the word *சங்கராபரணம் denotes ornaments adorned by Lord Siva!*

_This is the only link and as l couldn't satisfy myself and l didn't post this answer !_
*************************
_சிவனை அலங்கரிப்பதில் மூன்றாவது இல்லையாம், மூன்றாவது இல்லாமலே தொடங்கு (3)_ 

_சிவனை அலங்கரிப்பது_
= *சங்கராபரணம்*
_மூன்றாவது இல்லையாம்_
= *?????*

_தொடங்கு_
= *ஆரம்பி*
_மூன்றாவது இல்லாமலே_
= _மூன்றாவது எழுத்து இல்லாமலே_
_"ஆர(ம்)பி"_
= *ஆரபி*
*************************
Later l tried the possibility of *another answer* and came across the word *சூலம்* and posted it!

The funny part of it is , this answer though linked the first half ,couldn't get linked *directly* with the second half of the clue.!
You can read my explanation below :
*************************
_சிவனை அலங்கரிப்பதில் மூன்றாவது இல்லையாம், மூன்றாவது இல்லாமலே தொடங்கு (3)_ 

_சிவனை அலங்கரிப்பது_
= *திரிசூலம்*
_மூன்றாவது இல்லையாம்_
= *திரிசூலம் - திரி*
= *சூலம்*

_மூன்றாவது இல்லாமலே தொடங்கு_
= _*சூலம்* இல்லாமல் பயணம் தொடங்கு_
*************************
_திரி_
tiri s. three, *மூன்று* ; 2. adj. three fold, treble, triple.
*திரிமூர்த்தி,* Hindu Triad: Brahma, Vishnu and Siva.
*திரிகோணம்,* a triangle.
*************************
பொதுவாக *சூலம்* என்றால் பிரயாணம் தொடங்க பார்க்கப்படுவது என்று பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
*************************
_To conclude,l feel there is certain possiblity of missing links in the riddle._
_Nor it may be possible that _" *மூன்றாவது இல்லையாம்"*_ _may lead to some karnatic music links , *the nuances of which l failed to explore*!_
_Thank you!_
💐🙏🏼💐
But for the technical error the clue was very ingenious.
Muthu said…
முயற்சி சிறந்த ஒன்றே. பாராட்டுகள்! புதிரை அவிழ்க்கத் தொடங்கிய் (ஆரம்பித்த) உடனே தோன்றியது "ஆரபி". ம்....ஆனால், எனக்கு சில இராகங்களின் பெயர் (பெயர் மட்டுமே) தெரியும். ஆகவே, அடியேனும் ராகவன் சார் போல, விளக்கம் சரிவராததினால் விடை அனுப்பவில்லை.
நானும் அரை குறை இசை அறிவு கொண்டவன்தான். ஆரபி என்று ஒரு ராகம் இருப்பதே தெரியாது. இருந்தாலும் இது மிகவும் நூதனமான அமைப்பு. ஆகவே இசையை அறவே தள்ளிவிடாமல், ஒருமுறை கேட்டு தெரிந்துகொண்டு புதிரில் அமைக்கலாம். புதிராக கேட்காமல் சும்மா விக்கியில் ஆரபி ராக சுரங்கள் என தேடி தெளிவு செய்து அமைக்கலாம்.

இசை வேண்டும், இதற்கு இசைய வேண்டும்.
Chittanandam said…
ஆரபி விடை எனக்கும் புதிரைப் படித்தவுடனேயே கிடைத்தது. சிவனுடன் தொடர்புபடுத்தத்தான் முடியவில்லை. நன்கு அமைக்கப்பட்ட புதிர்தான்.
சதீஷ்பாலமுருகன் said…
நானும் ஆரபியை நினைத்து மூன்றாவது இல்லை என்பதில் குழம்பி பதிலளிக்கவில்லை. ஆனால் இப்பொழுது யோசிக்கும் போது, மூன்றாவது இல்லை என்று இல்லாமல் மூன்றாவது இல்லையாம் என்று இருப்பது, மூன்றாவது இல்லை, வேறு சிலவும் இல்லாமல் போகலாம் என பொருள்கொள்ளலாம் போல் இருக்கிறது.
Vanchinathan said…
நன்றி சதீஷ்; அப்படியும் தப்பித்துக் கொள்ள வாயப்பிருக்கிறதா? னாலும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் நான் மறைக்க முடியாது.

@ரவிசுந்தரம்: விக்கிபீடியாவில் தேடிக் கிடைத்த பக்கத்தை பாதி படித்தவுனேயே புதிரை அமைத்ததுதான் பிசகு.
suresh said…
I was in my son's music class when I tried to solve this so i got the connection. I had half a mind to ask the teacher but didnt want to interrupt the class :-) I assumed Vanchi would be right. But looks like I went with aaram in the end. Distracted data entry:-)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்