Skip to main content

விடை 3823

இன்று காலை வெளியான வெடி:
சோர்ந்து வசீகரத்துடன் பாம்பு வாழுமிடம் (6) 
அதற்கான விடை:  களைப்புற்று  = களை  (வசீகரம்) + புற்று

முன்பே ஒரு முறை செய்துள்ளபடி 'ப்' என்ற எழுத்து சந்தியாகத் தோன்றுவதால் அதற்குப் புதிரில் குறிப்புகள் இல்லாமல் அமைத்திருக்கிறேன். இனி இதை வழக்கமாகக் கொள்ளப் போகிறேன். ஆங்கிலச் சொல்லமைப்பில் இது கிடையாததால் முன்னுதாரணம்  ஏதுமில்லை. நாமே இப்படி செய்யலாம் என்று விதி வகுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இன்றைய விடைகளைக் காண இந்தப் பக்கத்திற்குச் செலவும்.

Comments

சந்தி இந்திய மொழிகளுக்கு மட்டுமே உடையது. இதற்க்கு நேர் வழிகாட்டுதல்கள் ஆங்கில புதிர்களில் இல்லை. ஆனால் ஆங்கில புதிர் விடைகளில் உச்சரிப்பு குறியீடுகள் (accent marks like cedilla acute grave, indications like apostrophe) இருந்தாலும் புதிரில் கட்டுமானம் கொடுப்பதில்லை. (Obejets D'art , seven O' clock, gâteux, illégitime, bâtard )

சந்தியை உச்சரிப்புக் குறியீட்டாக கொண்டு கட்டுமானத்தை விட்டு விடுதல் சரி என்றே தோன்றுகிறது.
Vanchinathan said…
நல்லது. ஆனால் சந்தியைப் பற்றிய குற்ப்பை வசதியாக இருக்கும் நேரத்தில் சேர்த்துக் கொள்வேன். அதாவது அதன் மூலம் திசை திருப்ப முடிந்தால்!
Muthu said…
சந்தி (புணர்ச்சியிலக்கணம்) பற்றி இந்தக் கட்டுரை படித்தேன்: https://tinyurl.com/y23o8h96
இந்த ஆசிரியர் கூற்றுப்படி இன்றையத்தமிழெழுதுவோர் எழுதுமிடத்திலெல்லாம் "சந்தி" சந்தி சிரிக்கிறது!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்