Skip to main content

விடை 3824


இன்று காலை வெளியான வெடி:
சொல்லிக் கொடுத்து வைரம், புஷ்பராகம் இவற்றின்மேல் வரும் பைத்தியம்? (5)
அதற்கான விடை:  கற்பித்து = கல் + பித்து
நேற்றைய புதிரில் சந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன். இன்று சந்தியல்லாத வேறொரு புணர்ச்சி விதியையொட்டி அமைக்கப்பட்ட புதிர்.

கடல்+ பாசி = கடற்பாசி,  மணல் + பாங்கு = மணற்பாங்கு , பல் + பசை  = பற்பசை.
இவ்வாறு 'ல்' தொடர்ந்து பகர வர்க்கம் வரும்போது அது "ற்" எனத் திரியும்  என்பதும் புணர்ச்சி விதியில் ஒன்று. 
இவ்விதி சில வடமொழிச் சொற்கள் தமிழில் கையாளப்படும்போதும்  எட்டிப் பார்க்கிறது: கல்பனா  தமிழில் கற்பனை ஆகிறது.
(அடடா கல்லாலான பனை மரம் என்று என்று புதிரமைக்கும் வாய்ப்பை நானே அம்பலப்படுத்திக் கெடுத்துக் கொண்டேன்).

அவ்வகையில் இன்று " கல்பித்து" என்பது "கற்பித்து" என்றாகிறது.
புதிரில் ஆர்வமுள்ள சொற்பித்தர்களுக்கு இதைக் கொண்டு அமைக்கப்பட்ட புதிர் ஒன்றும் கடினமில்லை என்பது இன்றைய பட்டியலின் நீளத்தைப் பார்த்தாலே தெரிகிறது.







Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்