Skip to main content

விடை 3814

இன்று காலை வெளியான புதிர்:
இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3)

 இதன் விடை :  விழல் = வில் (சிலை ) + ழ (குழந்தையில் இரண்டாம் எழுத்து)
கம்பராமாயண காலத்தில் சிலை என்ற சொல் வில்லுக்குப் பயன்படுத்தப்பட்டது.

பொதுவாக விழலுக்கு நீர் இறைப்பதைத்தான் பயனில்லா வேலை என்று கூறுவார்கள்.  நான் விழலையே பயனற்றது என்று இங்கே சொல்லிவிட்டேன்.

இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

வில் சிலையெனப்பட்டதற்கு ஓர் இலக்கிய உதாரணம் அல்லது ஆதாரம்
காட்டினால் நன்றாயிருக்கும்.
அன்புடன்
கனகசபாபதி
Vanchinathan said…
சரிதான். ஆனால் ஒரு தகவல் தந்து (பொதுவும் எளிதில் கிடைக்காத விஷயம் குறித்து) எழுதினால் அதைப்படித்தேன் தெரிந்து கொண்டேன், என்று கருத்துரைகள் வராததால் இங்கே வரும் வாசகர்கள் நல்ல அறிஞர்கள் எதையும் அவர்கள் தானாகவே கண்டு பிடித்துவிடுவார்கள் என்று விட்டுவிட்டேன்.
இதனை ஒரு அறியாதவனுக்கு அறிஞர் தந்த பதிலாக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் 

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்