இன்று காலை வெளியான வெடி ஒரு விலங்கிடம் கருணை காட்டும் குணம் (4) இதற்கான விடை: மானிடம் மானுடம் என்றும் என்றும் இது எழுதப்படுகிறது. நம் புதிர் மான் இடம் போயிருப்பதால் அதுதான் பொருத்தம். (இன்னொருநாள் மானுடம்தான் சரியான விடையென்று அது போல் புதிராக்கும் உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!) பாகுபாடில்லாமல் மனிதர்கள் தெரியாதவர்களுக்கும் கருணை காட்டி உதவும்போது மானிடம் (மனிதத்தன்மை) அங்கே வெளிப்படுகிறது என்கிறார்கள். மதம், இனம், மொழி போன்ற பாகுபாடில்லாமல் செய்யப்படும் காரியத்திற்கே இச்சொல் பயன்பட்டாலும், அது கருணையினால் உதவும்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ("நானும் மனிதன்தானே எனக்கும் எல்லோரையும் போல் ஆசையிருக்காதா" என்று சொல்லும்போது அதை மனிதத்தன்மை/மானிடம் என்று குறிப்பிடுவதில்லை). வலையில் தேடிய போது ஒரு கவிதை அகப்பட்டது , உதாரணத்துக்கு என்னுடைய வெண்பாவையே அளிப்பதற்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு இது. கவிஞர் ஹரிகிருஷ்ணன் நடத்தும் ஈற்றடி என்றும் இனிப்பு என்ற வாட்ஸப்குழுவில் முணுக்கென்றால் முப்பது வெண்பாவை வடிக்கும் ஆஸாத், சங்கரச...