தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:09:53 சுந்தர் வேதாந்தம்
2) 6:11:08 ரவி சுந்தரம்
3) 6:16:37 மீனாக்ஷி கணபதி
4) 6:32:31 சதீஷ்பாலமுருகன்
5) 6:32:57 ராஜா ரங்கராஜன்
6) 6:34:54 மாதவ்
7) 6:35:33 உஷா
8) 6:42:08 ராஜி ஹரிஹரன்
9) 6:49:44 லக்ஷ்மி ஷங்கர்
10) 6:54:34 முத்துசுப்ரமண்யம்
11) 6:58:29 ராமராவ்
12) 7:00:43 மீ கண்ணன்
13) 7:01:55 மீனாக்ஷி
14) 8:04:17 லதா
15) 8:04:39 சுபா ஸ்ரீநிவாசன்
16) 8:05:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 8:05:41 பினாத்தல் சுரேஷ்
18) 9:21:24 கி மூ சுரேஷ்
19) 10:14:23 வானதி
20) 10:23:03 ஆர். பத்மா
21) 11:50:57 கோவிந்தராஜன்
22) 14:14:27 சாந்தி நாராயணன்
**********************
_கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு_
__ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே_
_ஆட விட்டான் இந்த கடலினிலே__
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்_
💐💐💐💐💐💐💐💐
அப்சரஸ் பெயர் காரணம்
தேவலோக மங்கையரை அப்சரஸ் என கூறுவார்கள்
அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் கூட இருக்கிறது. "அப்ஜம்" என்றால் தாமரை என்று பொருள், "சரஸ்" என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் பெறுகிறது.
💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼
கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில்
“கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக்
கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள்
இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ
என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று
எழுதியிருந்தார்.
எனக்கும்தான் சிற்பி வாஞ்சியாரைப்பற்றி தோன்றியது!
உதிரிவவெடிகளை நாளும் வெடிக்கும் மகாசிற்பி,
நம் உள்ளத்தில் உறையும் வாஞ்சியார் என்றும் போற்றுதற்குரியவரே!
----------💐🙏🏼💐