Skip to main content

விடை 3414


 இன்று காலை (29 ஆகஸ்டு 2018) வெளியான வெடி:

நூலிலிருந்து அறிந்ததும் பத்தும் பறந்துபோக எதிர்க்குமோர் ஆயுதம் (2)

இதற்கான விடை:  தடி

படித்தது = நூலிலிருந்து அறிந்தது
படித்ததும் = நூலிலிருந்து அறிந்ததும்
டித்தும் - பத்தும்  =  டித
எதிரித்து வர = தடி,  ஓர் ஆயுதம்

இன்று சரியான விளக்கத்துடன் கிட்டதட்ட  நாற்பது  பேர் விடைய‌ளித்திருக்கின்றனர். ஜூன் மாதத்தில் கடைசியாக விளக்கம் கேட்ட போது ஒருவர் மட்டுமே முழுமையான விளக்கத்தை அளித்திருந்தார். அதனால் இது முக்கியமான முன்னேற்றம்.

அதோடு  தவறான விடையாக ஆறு பேர் "வில்"  என்று குறிப்பிட்டிருந்தனர். நூலிலிருந்து அறிவது கல்வி என்ற வகையில் பொருந்தி வருகிறது.  பத்தும் பறந்து போகும் என்பதுடன் தொடர்பில்லையாதலால் அது சரியான விடையில்லை. ஆனாலும் கல்வியிலிருந்து வில் புறப்படும் என்று கவனித்ததற்கு அவர்களுக்கு நல்ல புதிரமைக்கும் திறமையும் இருக்கிறது என்று எண்ண வைக்கிறது. 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
....................👇🏽................
நன்னூல், *நூல்* என்ற பெயர் எப்படி உருவாகி அதற்குப் பொருந்துகிறது என்பதை விளக்குகிறது .

நூல் நூற்கும் பெண் பஞ்சால் தன் கைகளைக்கொண்டு கதிரால் நூல் நூற்கிறாள். அதுபோலப் புலவன் சொற்களால் தன் வாயைக்கொண்டு அறிவால் நூல் நூற்க குற்றமற்ற நூல் உருவாகிறது.

சொற்கள் பஞ்சாகவும், புலவன் நூல் நூற்கும் பெண்ணாகவும், புலவனின் வாய் அப்பெண்ணின் கையாகவும் , புலவனின் அறிவு நூல் நூற்கும் கருவியான இங்குக் கதிராகவும் கருதப்படுகிறது.

பஞ்சு நூலாக மாறுவது போல சொற்கள் நூலாக நூற்கப்படுவதால் *நூல்* என்னும் பெயர் அமைந்தது என்று நன்னூல் விளக்குகிறது.📖📚
*************************
_நூலிலிருந்து அறிந்ததும் பத்தும் பறந்துபோக எதிர்க்குமோர் ஆயுதம் (2)_

_நூலிலிருந்து அறிந்ததும்_
= *படித்ததும்*
(புத்தகத்திலிருந்து படித்து அறிவது)

_பத்தும் பறந்துபோக_
= _படித்ததும்-பத்தும்_
= *டித*
( _படித்ததும்_ என்ற சொல்லில் _பத்தும்_ என்ற சொல் நீங்க)

_எதிர்க்கும்_
= _டித_ வை திருப்பி எழுதுதல்(Reverse)
= *தடி*

ஓர் ஆயுதம்
= *தடி*
*************************
கைக்கெட்டும் தூரத்தில் கதவு பின்னே எப்போதும் ஒளிந்திருக்கும் *தடி* (கழி,கம்பு ,கோல்)பாம்பு அடிக்க, நாய் விரட்ட,திருடனை அடிக்க உதவும் சமயசஞ்சீவியான ஓர் ஆயுதம்!
************************
ஓர் பழமொழி!
*தடி* எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்!

ஓர் வசைமொழி!
நல்லத் *தடி* மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாயே !
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விளக்கத்துடன் விடை அளித்தவர்கள் (40):

1) 6:01:59 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2) 6:02:18 இரா.செகு
3) 6:02:24 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:01 லதா
5) 6:11:10 மீனாக்ஷி கணபதி
6) 6:12:26 ரவி சுப்ரமணியன்
7) 6:12:36 மீ கண்ணன்
8) 6:13:54 கி மூ சுரேஷ்
9) 6:15:53 பாலா
10) 6:24:43 மடிப்பாக்கம் தயானந்தன்
11) 6:27:38 மைத்ரேயி
12) 6:32:08 ராஜி ஹரிஹரன்
13) 6:36:36 கேசவன்
14) 6:39:39 KB
15) 6:40:25 ரவி சுந்தரம்
16) 6:42:47 மீனாக்ஷி
17) 6:43:19 கு.கனகசபாபதி, மும்பை
18) 6:46:31 முத்து சுப்ரமணியம்
19) 6:53:08 சுந்தர் வேதாந்தம்
20) 7:00:28 வானதி
21) 7:03:33 ராஜா ரங்கராஜன்
22) 7:06:32 Sandhya
23) 7:11:17 ஹரி பாலகிருஷ்ணன்
24) 7:13:23 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
25) 7:59:14 மு க பாரதி
26) 8:11:49 எஸ் பி சுரேஷ்
27) 8:37:27 கோவிந்தராஜன்
28) 9:16:17 திருக்குமரன் தங்கராஜ்
29) 9:37:14 சுபா ஸ்ரீநிவாசன்
30) 9:44:15 ரமணி பாலகிருஷ்ணன்
31) 9:50:24 ராதா தேசிகன்
32) 10:44:26 பா நடராஜன்
33) 11:58:37 அம்பிகா
34) 12:18:19 வி ன் கிருஷ்ணன்
35) 13:01:43 K.R.Santhanam
36) 14:06:59 மு.க.இராகவன்.
37) 14:31:59 மாலதி
38) 15:15:02 தேன்மொழி
39) 15:44:56 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
40) 19:32:05 சங்கரசுப்பிரமணியன்

**********************
விளக்கமின்றி விடை அளித்தவர்கள் (3):

1) 6:06:35 V.R. Balakrishnan
2) 6:11:59 ஆர்.நாராயணன்
3) 7:48:07 ராமராவ்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்! தடி ஏராளம்!!!
திரு வாஞ்சியின் மூளை 64 திக்கும் பாய்கிறது! எண்ணில் அடங்கா புதிர்களை வாரி இறைக்கின்றது!!! Hats Off!!!!!!

சிலம்பம் தடியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் சண்டைக்கலை.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்